- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஆறு
நுழைந்தான் தீனரீசன் அவனுக்கு சொந்தமான மசாஜ் ஸ்பாவிற்குள் அஜயின் நண்பனாக.
அங்கிருப்போருக்கு அவனை நன்றாக தெரியும் என்பதால் அவனின் வருகையை யாரும் பெரிதாய் கேள்வி கொள்ளவில்லை.
கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தவாறு மசாஜ் அறைகளின் நடைப்பாதையில் விசிலோடு நடைப்போட்டான் ரீசன்.
அங்கு தனியறைகளில் ஸ்பெஷல் மசாஜில் லயித்திருப்போருக்கு அவ்வப்போது உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுப்பது வழக்கமாகும்.
சிலர் எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பர். ஆகவே, டோர் லோக்கில் இருக்கும். பலர் அதையெல்லாம் கண்டுக் கொள்ளவதில்லை வந்த வேளையில் சுகம் கண்டிருக்க.
மசாஜ் பெண் சிறப்பு விருந்தினர்களுக்கு மதுபானம் கொண்டு வர, சிரித்த முகமாய் எதர்ச்சையாய் குறுக்கே வந்த ரீசனோ அவளிடத்தில் பேச்சு வார்த்தை கொண்டான் பெண்ணவள் வி.ஐ.பி. அறைகளிருக்கும் முதன்மை வாயிலில் நுழையும் முன் அஜய் அவளை அழைத்ததாய் சொல்லி.
குஜிலி அவளுக்கோ தலைகால் புரியவில்லை அஜய் அவளை அறைக்கு அழைக்கிறான் என்று ரீசன் சொல்ல. மதுவை அவரவர் கையில் தந்துவிட்டு ஓடோடி போக நினைத்தாள் வஞ்சியவள் ஸ்பா ஓனர் அஜயை நோக்கி.
பேசியே வசிய வைக்கும் அஜய் அவ்வளவு சுலபத்தில் எந்த மீனுக்கும் வலை வீசிட மாட்டான். அதேவேளையில் அவனும் சட்டென மாட்டிடாது தப்பித்திடும் சாதுர்யனே.
அப்படியிருக்க அவனாகவே ஆயிழையவளை அழைக்க சும்மா அங்கு நின்றிட முடியுமா தாய்லாந்து தாரகையால் என்னே. உண்மையில் அவள் என்னவோ கைப்படாத தாமரையே.
அப்படியான வேலைகளுக்கு தனியாட்களே. சோம்சாய் டிபார்ட்மெண்ட் அது. இடமும் வேறு விலையும் வெவ்வேறு. பேரை கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு ரீசன் முட்டாளில்லை. பினாமி அஜயும் தற்குறியல்ல.
அஜயை பார்த்திட துடியாய் துடித்த தெரிவையவளை ரீசனோ பெருந்தன்மையாக அனுப்பி வைத்தான் உல்லாசமாய் இருக்க அறையில் இல்லாத அஜயோடு.
அரிவை அவள் நகர ரீசனோ மதுபான தட்டோடு வி.வி.ஐ.பி. க்கான மசாஜ் அறைக்குள் நுழைந்தான். பாக்கெட்டிலிருந்து வெளியெடுத்தான் ரீசனவன் முதலில் சோம்சாய் அவனிடத்தில் கொடுத்த விஷத்துகளை.
விழிகளில் வெறியேறி கிடந்தது குஞ்சரியின் புருஷனுக்கு. மனைவியவளின் ஒவ்வொரு நொடியும் நரகமாய் கழிந்த தருணங்கள் கண் முன் வந்து போக ரீசனின் நேத்திரமோ கண்ணீரை வழிய விட்டது.
குஞ்சரியின் கதறல்களும் மறக்க முடியா சம்பவத்தின் நினைவலைகள் கொண்ட அலறல்களும் ரீசனின் மிழிகளை சிவக்க வைத்தன.
ஒல்லிக்குச்சனின் தேகமோ வன்மத்தில் தெனவெடுக்க ஆணவனின் ஆங்காங்கே தெரிந்த பச்சை நரம்புகளோ புடைத்துக் கொண்டு நின்றன விடுதலைக்கோரி யாரையாவது அடித்து துவைத்தால் ஒழிய அடங்குவேன் என்ற நிலையில்.
முழு முகத்தையும் மாஸ்க் கொண்டு மூடிக்கொண்டவன் கைகளில் கையுறைகளையும் அணிந்துக் கொண்டான்.
பொடி வடிவம் கொண்ட உயிர்கொல்லியான பேசிலஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) எனப்படும் நுண்ணுயிர் கொண்ட பாக்கெட்டைத்தான் உள்ளங்கையில் வைத்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன்.
இந்த நுண்ணுயிர் மண்ணில் மட்டுமே வாழும் ஒன்றாகும். அதே வேளையில் ஆந்த்ராக்ஸ் என்பது ஒரு தீவிர தொற்று நோயும் ஆகும்.
நுண்ணிய வித்துகளை கொண்டிருக்கும் இதை பொடி மற்றும் ஸ்ப்ரேவாகவும் உணவு மற்றும் தண்ணீரில் கலந்திடலாம்.
அளவில் சிறியதாக இருப்பதால் அவற்றைப் பார்க்கவோ, அதன் மணத்தை நுகரவோ ஏன் அதை சுவைக்கவோ கூட முடியாது.
இதை உண்போர் சுவாசிப்போர் என்று யாராக இருந்தாலும் சாவு நிச்சயம். ஒவ்வொருத்தரின் ஆன்ட்டிபோடியை பொறுத்தே அவர்களின் இறப்புக்கான நாட்கள் தள்ளி போகும். மற்றப்படி எப்படி பார்த்தாலும் சங்கு கன்போர்ம்தான்.
ஒருக்கால் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சைக்கு முந்தினால் லக்கில் பிழைத்துக் கொள்ளலாம் அதுவும் விஷம் எவ்வழியாய் உடம்புக்குள் நுழைந்ததென்பதை தீர ஆராய்ந்த பிறகே அதற்கான சாத்தியங்களை யோசித்திட முடியும்.
வழக்கமான கெடு என்னவோ ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை மட்டுமே.
கொதித்த உள்ளத்தின் எரிமலையான சினத்தை தீர்த்துக் கொண்டான் தீனரீசனவன் சிறிய பையிலிருந்த ஆந்த்ராக்ஸ் துகள்களை நான்கு கிளாஸ் மதுபானத்திலும் சம அளவில் கொட்டி.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 136
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.