- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் 103
களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு.
“ரீசன்!”
என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள்.
“ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...”
என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து மண்டியிட்டது மெத்தையில்.
“விசா!
என்று கத்தி நெஞ்சம் துடிக்க நிம்மதியிலான பெருமூச்சின் நடுவில் ஓடோடி வந்த ப்ரீதனோ,
“விசா! விசா! இங்கபாரு! இங்கபாரு! ஒன்னுமில்லடா! ஒன்னும் இல்ல! நான் வந்துட்டேன்டா! நான் வந்துட்டேன்!”
என்றவளின் முகத்தை இருகைகளில் பற்றி சமாதானம் செய்தான்.
“ப்ரீதன்!”
என்று கத்தியவளோ ஒப்பாரி கொண்டாள் நெஞ்சம் பிளக்கும் அளவிற்கு.
“நான் வந்துட்டேன்டா! ப்ரீதன் வந்துட்டேன்டா!”
என்றவனோ மனைவி அவளை நெஞ்சோடு இறுக்கி உச்சியில் முத்தமிட்டான்.
“ஆஹ்ஹ்... ம்ம்ம்... ஆஆஆ...”
என்ற குஞ்சரி புருஷனின் வலக்கையோ இறுக்கியிருந்த ஹாக்கி மட்டையை தன்னிச்சையாக தவற விட்டது.
ப்ரீதனோ பொண்டாட்டியவளின் கைகால் கட்டுகளை அவிழ்த்து விட ஆரம்பித்திருந்தான்.
மஞ்சத்தில் மல்லாக்க கிடந்த விசாவோ விரித்த அம்பகங்களால் தலை தூக்கி மேல் பார்க்க பாவையவள் நிடலத்திலோ உதிர சொட்டுகள் துளிர்த்தன ரீசனின் நெஞ்சிலிருந்து கீழ்நோக்கி
வழிந்திறங்கி .
அகலமாய் விழிகள் விரித்த விசாவோ பேயறைந்தவளாட்டம் ரத்தம் வழிய அசராது நின்றிருந்த ரீசனையே வெறிக்க,
“ரீசன்! ரீசன்!”
என்ற குஞ்சரியோ நின்றிருந்தவன் தடுமாறிய பதற்றத்தில் தவித்து பின்னாலிருந்து முன்னால் வந்தாள் வீல் சேரில்.
“குஞ்சரி... குஞ்சரி...”
என்ற ரீசனின் விழிகளோ மங்கிட ஆரம்பித்தன.
விசாவை காப்பாற்ற கயவனை ரீசன் ஹாக்கி மட்டையால் அடித்த பொழுது அவன் கையிலிருந்த கூர்மையான உடைந்த கண்ணாடியோ தீயவனவன் திரும்பிய வேகத்துக்கு ஒரே சொருகாய் சொருகி இழுத்துக் கொண்டு போய் கிழித்திருந்தது குஞ்சரியவள் தஞ்சம் கொண்டிருந்த தீனரீசனின் இதயத்தை.
அதீத ஆழமாய் பதம் பார்த்திருந்த கண்ணாடி காயம் குருதியை அளவில்லாமல் கொட்டிட வைத்தது.
“குஞ்சரி... கீத்து... குஞ்சரி...”
என்று பினாத்திட ஆரம்பித்தான் ரீசன் தலையெல்லாம் கிர்ரென்றிட.
“குஞ்சரி...”
என்றவனோ மொத்தமாய் மெத்தையில் சரிந்தான்.
“ரீசன்! ரீசன்!”
என்ற ப்ரீதனோ பஞ்சணையெங்கும் ரத்தம் பரவி கிடப்பதைப் பார்த்து பதறிப்போய் அவனை உலுக்க, ஆணவனோ மென்முறுவல் கொண்டு பற்றினான் விசா புருஷனின் கையை.
“நான் விசாக்காக எதுவுமே பண்ணதில்ல... இது... இது... உனக்காக... விசா... நல்லாரு...”
என்றவனோ அவனின் செம்புனல் படர்ந்த உள்ளங்கையை மங்கையவள் தலையில் பதித்து முகம் தொட்டிறங்கினான்.
சிகையெல்லாம் சிவப்பாகிக் கிடக்க அரண்டு போயிருந்தவளோ எச்சில் விழுங்காது குத்த வைத்தே அமர்ந்திருந்தாள்.
“ஜூனியர் உனக்கு... உனக்கு ஒன்னுமில்லடா! பாரு! என்ன பாரு! குஞ்சரி பாரு!”
என்றவளோ கணவனின் முகத்தை கரங்களுக்குள் அடக்க மஞ்சத்தில் கிடந்தவனின் தலையை மடியினில் சுமந்திடக் கூட முடியா அபலையாய் அவள் நிலையிருக்க கண்ணீர் அருவியாய் பெருக்கெடுத்தது பெண்டு அவளுக்கு.
கணவனின் டி-ஷர்டை அணிந்தபடி அமர்ந்திருந்த விசாவோ கிலி பிடித்தாற்போல அமர்ந்திருந்தாள் எதுவும் பேசாது.
“ஃபோன்! ஃபோன்! இங்க எங்கையுமே ஃபோன் இல்லையா? யாருக்கிட்டையுமே ஃபோன் இல்லையா?”
என்ற ப்ரீதனோ கனத்த இதயத்தோடு அலசினான் அறையை ஏதாவது அலைபேசி சிக்குகிறதா என்று தேடி.
தேடியவன் ஓடினான் கீழ் தளம் நோக்கி. ஏற்கனவே, போய் சேர்ந்தவன் ஒருவன் அனாதையாய் வரவேற்பறையில் கிடக்க அவனின் பாக்கெட்டை துளாவி வெளியில் எடுத்தான் அலைபேசியை பிரீதன்.
வழிந்திறங்கியது ஆண் அவன் முழங்கையிலிருந்தும் ரத்தம் கண்ணாடி குத்தியதில். ஆனால், ரீசன் அளவிற்கு ஆழமெல்லாம் இல்லை. சமாளிக்க கூடிய அளவிலான காயமே.
போட்டான் ஃபோனை மூன்று ஒன்பதுகளுக்கு ப்ரீதன். கத்தி குத்து நெஞ்சில் என்பதால் முடிந்தவரை ரீசனை அசையாமல் இருக்கவே உத்தரவிட்டனர் ஃபோனை எடுத்த நல்லுள்ளங்கள்.
பிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டிகளை தூக்கிக் கொண்டு மேலே ஓடினான் ப்ரீதன். தரையில் கிடந்த இரண்டு தலையணை உறைகளை கழட்டினான்.
ஒன்றில் ஐஸ்கட்டிகளை நிரப்பி ரீசனின் நெஞ்சில் வைத்து அழுத்தினான்.
“குஞ்சரி கெட்டியா புடிச்சிக்கோங்க! ரீசன் அசையக்கூடாது! புரிஞ்சுதா! ரீசன் அசையக்கூடாது!”
என்றவனோ அவன் கையில் மற்றொரு ஐஸ்கட்டி நிரப்பலை கட்டிக்கொண்டான்.
“ஐயோ! ரீசன்! ரத்தம்! என் ரீசன் நெஞ்சுலருந்து ரத்தம்! ஐயோ! என்னாச்சு! என் ரீசனுக்கு என்னாச்சு! ரீசன்!”
கதறினாள் ஆவேசம் கொண்டு குஞ்சரி இப்போதுதான் வேறொரு சிந்தனையிலிருந்து விடுபட்டவளாய் மஞ்சத்தை நனைத்த குருதியைக் கண்டு.
“ப்ரீ... ப்ரீதன்... கீத்து... கீத்து... கீத்து... கீழே கிச்சன் கேபினட் உள்ள...”
என்றவனோ மகளவளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சொல்லி அவளை காப்பாற்றிட சொல்லாமல் சொன்னான் ப்ரீதனிடம்.
“ரீசன் நோ! நோ! நோ! அசையாதீங்க பிளீஸ்! பிளீஸ்! ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணிட்டேன்... கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஆம்புலன்ஸ் வந்திடும்!”
என்றவனோ ப்ரீதனின் கையை இறுக்கிய ரீசனின் முகத்தை ஏறெடுத்து விழிகளை உற்று நோக்க,
“கீத்து...”
என்றான் தந்தையவன் சிவந்த விழிப்படலங்கள் மங்கிய நிலையில் வெளிர் நிறத்தை வெளிகாட்டிடும் நிலையில்.
“ஐயோ! கீத்து! கீத்து! நான்! நான் போறேன்! போய் கூட்டிக்கிட்டு வரேன்! ப்ரீதன் நீ! நீ என் ரீசன ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போ! ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வெயிட் பண்ண முடியாது! நீ கூட்டிக்கிட்டு போ!”
என்ற குஞ்சரியோ அலறினாள் கதறலின் ஊடே ப்ரீதனை விரட்டி.
“குஞ்சரி பிளீஸ்! ரீசன நாம ஒன்னுமே பண்ண முடியாது! கண்ணாடி எவ்ளோ ஆழத்துக்கு கிழிச்சிருக்குனு நமக்குத் தெரியாது! நாம ஏதாவது பண்ண போய் அது அவர் உயிருக்கே ஆபத்தாயிட்டா?”
“நோ! நோ! நோ! ஏன் அபசகுனமா பேசற? கொன்னுடுவேன் உன்ன! கொன்னுடுவேன்! என் கண்ணு முன்னுக்கு நிக்காது போ! போ! போ!”
என்ற குஞ்சரியோ குலுங்கி கதறினாள் கணவனவன் மேனி காய்ச்சல் கொண்டது போல் சூடுக்கொண்டிருக்க.
“என் ரீசனுக்கு ஒன்னும் இல்ல! நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்காது! என் ரீசன் ஸ்ட்ராங் மேன்! எனக்கு தெரியும்!”
என்றவளோ மூக்குறுஞ்சிக் கொண்டாள்.
“ப்ரீதன்... கீத்து... பிளீஸ்...”
என்ற ரீசனோ கண்ணாலேயே வேண்டி நின்றான் ப்ரீதனின் உதவியை.
“போறேன்!”
என்றவனோ எழுந்த வேகத்துக்கு திரும்ப,
“குஞ்சரிய விட்... டுடாதே... பிளீஸ்...”
என்றவனின் சிவந்த கண்களோ மெதுவாய் மூடிடப் போக அதை புரிந்தவனாக கண்களை மூடி திறந்த ப்ரீதனோ அங்கிருந்து நகர்ந்தான் கீழ் தளம் நோக்கி.
ஆணவனின் மிழிகள் முதல் முறை துளியும் சம்பந்தமில்லாத ஒருவனுக்காய் கலங்கியது. கண்களை துடைத்துக் கொண்டவனோ வேக வேகமாய் ஓடினான் கிச்சன் நோக்கி.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 103
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.