What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம் 2

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 2

பார்
ரீசனின் தனியறை

மழைக்கு ஒதுங்கிய பால்கனி பூவாட்டம் ரீசனின் நெஞ்சில் சாய்ந்து கிடந்த காரிகையவளை எப்படியாவது பேசி சமாளித்து அங்கிருந்து கூட்டிச் செல்லவே பார்த்தான் ஹீரோ.

''ஏய்.. குஞ்சாய்.. வா.. வீட்டுக்கு போகலாம்..''

''ஹுஹும்.. நான் வர மாட்டேன்..''

என்றவள் தலையை ஆணவனின் நெஞ்சில் முட்டிக் கொண்டே அவனை பின்னோக்கி தள்ளினாள்.

''வா சயாங்!! அடம் பண்ணாமே!!''

கொஞ்சலான கெஞ்சல் கொண்டான் பார் ஓனர்.

''டேய் பூனை!! பிதிக்கிருவேண்டா உன்னே தக்காளி மாறி!! நான்தான் வேணாங்கறேன்லே!!''

''கந்தா என்ன காப்பாத்தேன்!! எல்லாம் அந்த மாட்டுக்கார வேலனே சொல்லணும்!! பொண்ணு வளர்த்துருக்கான் பாரு பொண்ணு!! சாத்தான்!! சாத்தான்!!''

போதை தலைக்கேறி நின்றவளோ, அவன் தலை தொடங்கி முகம் வரை இருக்கரங்களால் அடித்தாள்.

''ஏய்!! யாருடா சாத்தான்!! ஆர்ஹ்ஹ்!! யாரு சாத்தான்!! நானா!! நானா!!''

அவளை தடுத்தவனோ முகம் சுளித்தான் கத்திக் கொண்டே.

''ஏய்!! குஞ்சாய்!! வலிக்குதுடி!! ஆர்ஹ்ஹ்!!!

''போடா திருட்டு பூனை!! நான் டான்ஸ் ஆட போறேன்.. ஸ்டேஜ்லே..''

என்ற விசாகவோ மேடை நோக்கி ஓடிட, பின்னோக்கி ஓடிய ரீசனோ தலையில் அடித்துக் கொண்டே அவளை துரத்தி போனான்; மப்பும் மந்தாரமுமாய் ஆடிக் கொண்டிருந்த மனித மந்தைக்குள் நுழைந்து.

''சயாங்!! நில்லு!! சயாங்!!''

அவனை திரும்பி பார்த்து சிரித்தவளோ, இருக்கர விரல்களையும் புழுவாய் நொண்ட விட்டு அழைத்தாள் அவனை கிட்ட வர சொல்லி மழலை மொழியில்.

''பா!! பா!! இங்க பா!!''

மோகன பார்வையோடு சைகையால் உதடு குவித்து முத்தம் வைத்தாள் மார்க்கமாய் உடல் வளைய வனிதையவள் ரீசனை பார்த்து.

''முருகா!! ஒரு குடும்ப பொம்பள பண்ற ரியாக்ஷனாடி இது!! அதுவும் பார்லே!!''

''பண்ணுவேன்!! பண்ணுவேன்!! நான் பண்ணுவேன்!!''

அலசினாள் அங்கும் இங்கும் அம்மணியவள். உள்ளே இறக்குமதி அதிகம், அதான் அந்த கரகாட்டம் மேடம்க்கு.

தலையில் அடித்துக் கொண்டவனோ பேரிளம்பெண்ணவளை நெருங்கி கையிழுக்க, வலி தாங்காத தாரகையோ அவன் கை உதறி; ஓங்கி ஒரு அறை விட்டாள் வளர்ந்த நெட்டையன் அவனின் கன்னம் பழுக்க.

''என்னடி குஞ்சாய் இப்படி பொசுக்குன்னு பப்ளிக்லே அறைஞ்சிட்டே!!''

உதடு பிதுக்கினான் கன்னத்தில் கை வைத்து நின்ற ரீசன் பரிதாபமாக.

''ஆமாடா!! இப்படித்தான் அடிப்பேன்!! இங்கையும் அடிப்பேன்!! பப்ளிக்லையும் அடிப்பேன்.. பிரைவேட்டாவும் அடிப்பேன்!!''

இன்னொரு பளார் அவன் கன்னத்தில் விழ, இம்முறை இன்னும் பாவமான தொனியிலேயே கேட்டான் ரீசன் கன்னங்களை உள்ளங்கைகளால் காத்து.

''என்னம்மா.. வீட்டுல அடிக்கற மாதிரி இங்கையும் அடிக்கறே.. புருஷன் நான் பாவமில்லையா!!''

''இல்லே!! இல்லே!! இல்லே!! இல்லே போ!!''

''நீயில்லாமே நான் எங்கம்மா போறது..''

என்றவனோ கூத்தடிக்கும் குடும்ப குத்து விளக்கவளைத் தூக்கி தோளில் போட்டான், விக்ரமாதித்தனின் வேதாளம் போல.

''டேய் திருட்டு பூனை விடுடா என்ன!! விடு!!''

கைப்பைக் கொண்டு ரீசனின் முதுகில் நலுங்கு வைத்தாள் விசாகா.

''ஆர்ர்ஹ்.. குஞ்சாய்.. அப்படியே கொஞ்சம் லெஃப்ட் வாயேன்.. அங்கதான் வலிக்குது.. அங்க குத்து..''

சொல்லிய வாக்கில் லிஃப்ட்டை நோக்கி நடையை கட்டிய ரீசன் கன்ணசைக்க, ஆணவனின் கைக்கு வந்து சேர்ந்தது கோக் கேன் ஒன்று.

பார் டெண்டரின் கேட்ச்சை மிக சரியாய் பற்றினான் முதலாளியவன்.

''இறக்கி விடுடா பூனை!!''

மழலையாய் அவள் கெஞ்சிட, கொஞ்சல் தொனியில் சொன்னான் ரீசன்.

''செக் போஸ்ட் வந்த உடனே இறக்கி விட்டுடறேன் குஞ்சாய்..''

''அது எப்போ வரும்!!''

''இப்போ அங்கதான் போறோம் சாயாங்..''

என்றவன் லிஃப்டுக்குள் ஏறினான் அவளோடு.

மூன்று மாடி கட்டிடம் அது. கீழ் போர்ஷன் ரெஸ்டூரண்ட். இரண்டாவது மாடியோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொள்ளும் பார் கிளப். மேல் தளமான கடைசியோ ரீசனின் ஆபிஸ் அறைகள் கொண்ட மாடியாகும்.

கணக்கு வழக்கெல்லாம் அங்குதான். அவனுக்கென்று தனியொரு அறையும் அங்குண்டு. அங்குதான் இப்போது போதைக்காரியை தூக்கி வந்து கொண்டிருக்கிறான் ஹீரோ.

''டேய் விட்றா என்ன!! எங்கடா தூக்கிட்டு போறே திருட்டு பூனை!!''

''என்னடி பேரிது திருட்டு பூனை!! இருட்டு பூனைன்னு!! இதுவரைக்கும் என்னே நீ இப்படி கூப்பிட்டதே இல்லையே.. ரொம்ப புதுசா இருக்கே!!''

சந்தேக வேள்வி கொண்ட ரீசன் பெண்ணவள் தோளிலிருக்க மின்தூக்கியிலிருந்து வெளியேறினான்.

''டேய் திருட்டு பூனை.. நாமே எங்க போறோம்..''

என்றவளோ குதிக்கால் செருப்புகளை நடைப்பாதை வீதியில் கழட்டி போட்டாள் காலாலேயே வேண்டுமென்று. பாவப்பட்ட ஜீவன் ரீசனோ அதை பொறுக்கியெடுத்து வைத்துக் கொண்டான்.

''என்னடி இவ்ளோ தூக்கா இருக்கு.. எப்போ வாங்கனே இதை..''

ஆறு இன்ச் ஹீல்ஸை நோட்டமிட்டு கேட்டவனோ, நுழைந்தான் அவனறைக்குள் ஆயந்தியவளோடு.

''மாட்டுக்காரன் பெத்த மவளே!! செத்தடி!!''

சில்மிஷ தொனியில் சொன்னவனோ, குண்டுக்கட்டாக தூக்கி வந்தவளை ஒரே போடாக போட்டான் மஞ்சத்தில்.

அவனின் டி-ஷர்டை கழட்டி ஓரம் போட்டவனோ, தெரிவையவளை நெருங்க; பின்னோக்கி கட்டில் விளிம்போரம் போனாள் குடியை போட்டிருந்த விசாகா.

''என்ன பண்ணே போறோம் திருட்டு பூனை..''

ஆள்காட்டி விரலை வாயில் வைத்தப்படி கேட்டாள் குழந்தை குரலில் குமாரியவள்.

''ஹ்ம்ம்.. அப்பம்மா விளையாட்டு விளையாட போறோம்..''

என்றவன் மாயோள் அவளை மார்க்கமாய் பார்க்க தலை தொடங்கி, டக்கென்று முகம் மாறியது ரீசனுக்கு ஆணவனின் விழிகள் மங்கையவளின் நெஞ்சில் நிறுத்தம் கொள்ள.

''தாலி எங்கடி..''

ரீசன் அழுத்தமாய் கேட்க, அவன் கேள்விக்கு பதிலாய் நயனங்களை சிமிட்டினாள் மப்பில் இருந்த மதங்கியவள்.

''அடியே உன்னத்தான்டி!! பத்து பவுனுடி!! எங்கடி போட்டே!!''

''எங்க போட்டேன்.. யார் தாலி..''

திரும்ப அவனையே கேட்ட கோதையோ, தோள்களை குலுக்கி உடலை ஆட்டினாள் குட்டி பாப்பாவாட்டம்.

''எங்கடி வெச்சே.. ஹேண்ட் பேக்லையா..''

என்றவன் பதற்றத்தோடு வஞ்சியவளின் கைப்பையை எடுக்க போக, அவனோடு சேர்ந்து சாய்ந்தவளோ மொத்தமாய் அவன் மீது சரிந்தாள்.

''தாலி எங்கம்மா..''

பாவிப்பயல் அதிலே நிற்க, விசாகாவோ உதடுகள் பிதுக்கினாள்.

''தெரியலே..''

நீண்ட பெருமூச்சு விட்டவனோ, சலிப்போடு சொன்னான்.

''சரி விடு.. புதுசு வாங்கிக்கலாம்.. இதையாவது தொலைக்காமே இரு..''

சொன்னவன் நகர போக, சரியென்று தலையாட்டியவளோ அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். அவன் நெஞ்சில் தலைசாய்த்து கொண்டாள் விழிகள் மூடி.

விசாகாவின் உச்சந்தலையில் முத்தமிட்டவனோ வழக்கம் போல் கேட்டான்.

''நைட்டி மாத்திக்கிரியா குஞ்சாய்..''

அவன் முழங்கையில் தலை சாய்த்துக் கிடந்தவளோ, அவன் கன்னத்தை பிடித்தாட்டி கேட்டாள்.

''நீ மாத்தி விடறியா திருட்டு பூனை..''

என்றவளோ முட்டிக்கால்கள் போட்டவாக்கில், ரீசனை எம்பி கட்டிக் கொண்டாள்.

''என்னடி உன் நடவடிக்கையே சரியில்லே..''

கட்டியணைத்தப்படி ரீசன் கேட்க, கவர்ச்சி உடையில் சிக்கென்றிருந்த சுந்தரியவளோ முன்னழகு ஹீரோவை இடிக்க ஒட்டியுரசி ஏறெடுத்தாள் அவனை.

''அழகா இருக்கே..''

சொன்னவள் அதோடு நிறுத்தாமல் அவனுதட்டில் அவளுதட்டை ஒற்றியெடுத்தாள். ஹீரோக்குத்தான் போதையேறி போனது தண்ணியே அடித்திடாமல் அவளின் செயலில்.

''லவ் யூ குஞ்சாய்..''

என்ற ரீசனோ பெண்ணவள் நெற்றியிலிருந்து தொடங்கினான் அவனின் தேடலை அவளுக்குள்.

காதலையே இதுவரை வாழ்வில் பார்த்திராதவள் காமத்தை இன்று மனதார ஏற்றுக் கொண்டாள் ரீசனோடு.

என்னவோ அவனின் பார்வை தொடங்கி பேச்சு வரை கொண்ட தீண்டல் எல்லாம் விசாகாவை அவன் மீது ஆசைக்கொள்ளவே வைத்தது.

வெட்கி சிவந்து முனகளில் கிடந்த ஆடவளோ மெதுவாய் சொன்னாள்.

''பா.. பா.. பாப்..''

முயங்கலில் எங்கே குழந்தைப்பேறு வந்திடுமோ என்று அருணியவள் முன்னெச்சரிக்கை கொண்டு கேட்க, ஏமாந்துக் கொண்டிருந்தவனோ உள்ள புள்ளையை பற்றி சொன்னான்.

''பாப்பா.. அம்மா வீட்டுல இருக்காமா..''

என்றவனோ அவன் வேலையில் கண்ணுங் கருத்துமாய் இருக்க, பஞ்சணையின் விரிப்பை இறுக்கிப் பற்றியவளின் கண்ணோரமோ கண்ணீர் வடிக்காலின்றி ஓடியது.

''வலிக்குதா குஞ்சாய்..''

''ஹ்ம்ம்..''

என்றவள், மிழிகள் மூடியப்படி தலையாட்டிட; தன்னவளை முத்தமிட்டவனோ கீரிடையில் வேகம் கூட்டினான்.

''நீ கேனடாலருந்து வந்த பிறகு எத்தனை தடவே கெஞ்சியிருப்பேன்.. ஒரு தடவையாவது கன்சிடர் (consider) பண்ணியாடி குஞ்சாயி.. ஒரு வாரம் காயபோட்டதுக்கு பதிலா அப்பவே ரெயின்போ பார்த்திருந்தா.. இப்போ.. இப்படி வலிச்சிருக்காதுலே..''

ரீசன் பெண்ணவளின் இதழ்களை ஆக்ரமிக்க தன்னவள் என்ற காதலோடு, ஆணவனை இறுக்கமாய் கட்டிக் கொண்ட விசாகா குட்டியோ முதல் முறை கன்னி கழிந்தாள் தீனரீசனால்.


*

ரீசனின் இல்லம்


மதியம் மூன்று.

''டேய்!!! என்னடா பண்றே!! இவ்ளோ நேரம்!!! ஜல சமாதியாக போறியா என்னே!!''

குஞ்சாயியின் குரல் காதை கிழிக்க, பாத் டாப்புக்குள் கண்களை மூடி நடந்தவைகளை ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டிருந்த ஹீரோவோ சமாளித்தான் கட்டியவளை.

''வறேன்மா.. வறேன்.. வறேன்.. இரு..''

''எவ்ளோ நேரம்டா..''

குளியலறை கதவில் பல்லியாட்டம் ஒட்டிக் கொண்டு துணைவியவள் கொஞ்சல் தொனி கொள்ள, ஏடாகூடமாய் சம்பவம் நிகழ்த்தி வந்திருந்த ரீசனுக்கோ ஐயோ என்றிருந்தது.

தெரியாமல் நடந்தேறிய தவறது எப்படியான விஷ்வரூபம் எடுக்குமென்று ரீசனால் கற்பனைக் கூட செய்திட முடியவில்லை, அதுவும் தேவகுஞ்சரி அறிந்தால், அவ்வளவுதான் பிடாரி ரீசனை பொலி போட்டிடுவாள்.

கட்டினால் தீனரீசனைத்தான் கட்டுவேன் இல்லையேல், கிழவியாகியே சாவேன் என்று அப்பனுக்கு ஒத்தை ரோசாவாய் பிறந்த மகளவள் பிடிவாதமான சபதம் கொண்டள்ளவா அவனை திருமணம் செய்துக் கொண்டாள்.

எந்த வம்பு தும்பும் வராது இருக்கணும் முருகா, என்று குளியலறைக்குள் மனமுருகி கடம்பனிடத்தில் மனு போட்டு பாரத்தையும் அவனிடத்தில் இறக்கி வைத்தான் அப்பனுக்கு பாடம் சொன்ன அச்சுப்பனின் பெயர் கொண்ட தீனரீசன்.

பாரின் தனியறையில் அவன் அம்போ என்று கழட்டி விட்டு வந்தவள் கிழம் இருப்பாளா இல்லையா என்ற யோசனையோடு பாத்ரூம் கதவைத் திறந்தான் ரீசன்.

ஒரு வாரத்து தகிப்பு, கூடவே காலை நடந்தேறிய சண்டை என்று எல்லா கணக்கையும் ஒருசேர பஞ்சணையில் விரதம் கலைத்து சரி செய்திட ஏங்கிக் கிடந்தாள் ரீசனின் குஞ்சாயவள்.

பசையாட்டம் கதவில் ஒட்டி கிடந்தவள், மொத்தமாய் முன்னோக்கி கணவனின் மாரில் சரிந்தாள்.

துளியும் வெட்கம் கொள்ளாத விருந்தனை அவளோ, பொண்டாட்டி என்ற உரிமைக் கொண்டு துஷ்பிரயோகம் செய்தாள் புருஷனவனின் ஈரமான தேகத்தை கரங்களாலும் இதழ்களாலும்.

''என்ன சீனியர்.. இன்னைக்கு கவனிப்பு ரொம்ப பலமா இருக்கு..''

என்றப்படி கேட்டு, கோதையவளை நிறுத்தாது; அவளிடை பற்றியப்படி முன்னோக்கி நடந்தான் ரீசன்.

''ஏன்டா ஜூனியர் புடிக்கலையா..''

கம்பீரம் குறையாத குரலில் கேட்டு முதுகை மஞ்சத்திற்கு தாரம் வார்த்த தாரமவள், இருக்கரங்களையும் ரீசனின் கந்தரத்தில் மாலையாய் கோர்த்துக் கட்டிக் கொண்டாள்.

''சீனியரோட கவனிப்பு புடிக்காமே இருக்குமா..''

என்றவனோ அவன் காதல் மனைவியின் இதழை நெருங்கிட, தடுத்தவளோ ஆசைக் கொண்டு சொன்னாள்.

''நான் ரெடி..''

விரித்த விழிகளை இமைக்காது இயமானியவள் உள்ளத்தின் உண்மையை உரைத்திட, ஆளானோ புரியாது கேட்டான்.

''எதுக்கு..''

நாணியவள் கணவனவனை காணாது விலோசனங்களை அவன் மார்பில் பதித்து சொன்னாள் அவனுக்கு விளங்கும் படி.

''குட்டி ரீசனுக்கு..''

பத்தினியின் இத்தனை நாளான பத்திய சாப்பாட்டிற்கு இனி ஒரு விடிவு காலம் பிறந்ததென்று ஆனந்தம் கொண்டான் ரீசன்.

''அப்பாடா!! இனி கொண்டோம் (Condom) யூஸ் பண்றே அவசியம் இல்லே!! கூடவே.. அவதியா போதியா வாஷ் ரூம் போக வேண்டியதும் இல்லே..''

என்றவன் கரங்களை மல்லாக்க விரித்து, வல்லபியின் பக்கத்தில் திரும்பி படுத்தான்.

''டேய் ஜூனியர் அப்போ இத்தனை நாளா உனக்கு பிடிக்காமத்தான் அதை யூஸ் பண்ணியா ரெயின்போ பார்க்கும் போது..''

புருஷனின் நெஞ்சில் கரங்களை மெத்தையாக்கி, அவனின் குமட்டில் குத்தி கேட்டாள் தேவகுஞ்சரி முஷ்டி விரல்களால்.

''பிடிக்கலன்னு சொன்னா மட்டும் என்னாகிடும்.. அதை எனக்கு பிடிக்கறே வரைக்கும் என்கூட சண்டை போடுவே.. தேவையா அது..''

என்று சொல்லிக் கொண்டு மெதுவாய் மங்கையை மெத்தையில் கவிழ்த்தவன் தொடர்ந்தான்.

''அந்த சண்ட போடறே கேப்லே.. எவ்ளோ ரெயின்போ பார்த்துடலாம்லே.. அதான்..''

என்ற புருஷனின் கையும் வாயும் ஆயிழையை ஆட்கொள்ள, தன்னை விட வயதில் குறைவான ஜூனியர் பையனை காதலித்து கரம் பிடித்த தேவகுஞ்சரியோ; முனகிட ஆரம்பித்தாள் இன்னமும் சலிக்காது ரீசனின் பெயரை, கல்யாணமாகி ஆறு வருடங்கள் கடந்த பின்னும்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
 

Author: KD
Article Title: அத்தியாயம் 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top