What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம் 3

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 2

பார்
ரீசனின் தனியறை

''பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்..''

அலைப்பேசி அலறியது. மென்மையான பாடலென்றாலும் சத்தம் என்னவோ நாலுருக்கு கேட்கும் வண்ணமே இருந்தது.

''வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்..''

நெஞ்சை வருடும் பாட்டு வரி தந்த போதையில், நித்திரையில் லயித்து கிடந்த விசாகாவின் மூடிக்கிடந்த இமைகளுக்கு விரிந்திட தோன்றவேயில்லை.

''தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு..''

பாட்டது ஓடிக்கொண்டேத்தான் இருந்தது நிறுத்தாது.

குப்பிற படுத்துக் கிடந்த டாஃபி ரோஜாவின் இரு கெண்டை கால்களோ போர்வைக்குள்ளிருந்து விடுதலை பெற்று கொண்டன. செங்குத்தாய் சிலிர்த்தடங்கா நின்ற கால்களை, ஆட்டிய அருணியவளோ; அம்பகங்களை மெல்லமாய் திறந்தாள்.

''உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்..''

மஞ்சம் எங்கும் அவனின் வாசம். இயமானியின் இதழோ பாடல் வரிகளை கேட்டு உதட்டோரம் மெல்லிய முறுவலை கொண்டது நாணம் பீறிட, நேற்றைய இணைவிழைச்சலை எண்ணி.

போர்வைக்குள் கொலு கொண்டிருந்த கோதையவள் மேனி நிர்வாண கோலம் கொண்டிருக்க, காரிகையின் முகத்திலோ சிறு அச்சம் கூட பிரதிபலித்திடவில்லை.

மாறாக, மங்கையவள் வெட்கமே கொண்டாள். விழிகளை சுழல விட்டவள் ஆடையை கைப்பற்றி எடுத்து அணிந்துக் கொண்டாள்.

பக்கமிருக்க வேண்டியவனோ எங்கே என்று அலசிட, அறை முழுதும் தளவாடங்களோ அவளின் வினாக்கு பதிலாகிப் போயின.

குளியலறை, கழிவறை, பால்கனி என்று ஒரு இடம் விடாமல் விறலியவள் மனசையும் உடலையும் சேர்த்துக் கொள்ளைக் கொண்டவனை தேடிட எங்கும் அவனைக் காணோம்.

இருந்தும் சிக்கியது சிறு அட்டை ஒன்று, டாஃபி தேவதை அவளின் கையில்.

''தீனரீசன்..''

வாய் விட்டு ஆணவனின் பெயரை படித்தவள், சிறு புன்னகையோடு உதடுகளை ஈரமாக்கி கொண்ட அடுத்த நொடியே நயனங்களை நடனமாட விட்டு கனவு கண்டிட ஆரம்பித்தாள்.

''விசாகா தீனரீசன்..''

சொல்லி சிரித்தவள் அவ்வறையிலிருந் வெளியேறினாள்.

மின்தூக்கியிலிருந்து வெளியேறிய விசாகா, குனிந்த தலை தூக்காது குடுகுடுவென யாரும் பார்த்திட வண்ணம் எஸ்கேப் ஆகிட பார்த்தாள். முயங்கல் கொண்ட அறைக்குள் வராத பயமும் பதற்றமும் இப்போதுதான் லேசாய் தலைதூக்கிட ஆரம்பித்தது அம்மணிக்கு.

ஆனால், பூவையவளின் துரதிஷ்டம், மாயோள் அவளைக் கண்டுக்கொண்ட வேலைக்காரர்களோ சகஜமாய் மானினியவளுக்கு குட் ஈவினிங்கை வைத்தனர் சிரித்த முகத்தோடு.

பேந்த பேந்த முழித்த பெண்டு அவளோ, சமாளித்தாள் பல் தெரியா அதர இளிப்பை மட்டும் அவர்களுக்கு விடையாக்கி.

''சார் முதல்லையே கிளம்பிட்டாரு மேடம்..''

பார் டெண்டர் பையன் எதார்த்தமாய் சொல்லிட, இளமை ததும்பும் தாரகையோ அவன் தகவலை தவறாய் புரிந்துக் கொண்டாள்.

''தினா வேறே ஏதாவது சொன்னாரா..''

மனம் தினாவின் ஏக்கத்தில் பெருமூச்சு கொள்ள, அவனை அடுத்ததாய் எப்போது சந்திப்பது என்ற ஆவலில் கேட்டாள் காந்தாரியவள்.

''இல்லையே மேடம்..''

''ஓஹ்.. ஓகே..''

பார் பையனின் பதிலில் ஏமாற்றத்தை கொண்ட யுவதியோ, பச்சையாய் அதை அவள் குரல் வழி வெளிப்படுத்தி அங்கிருந்து வெளியேறினாள்.

பாவம் விசாகா குட்டியவள்.

கண்டதும் காதல் கொண்ட காஃபிகலர் அலரவள் அறியவில்லை, ஆயிழையவள் படுக்கையை பகிர்ந்த ஆண்மகன் அனுபவசாலியென்று.


*

நடந்தது என்ன
முந்தைய நாள்

மதியம் பதினொன்று.

பிரதான சாலையின் தாரை கிழித்துக் கொண்டு லெஃப்ட் வாங்கியது ஹீரோவின் கார். ஏசி காரில், ஸ்விமிங் கம்மை வாயில் குதப்பி; வானொலியில் ஒலித்த பாடலுக்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டே வந்தான் ரீசன்.

பாடல்: எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க..

''நான் எப்படா என் எல்லைய மீறினேன்!!''

நொந்த தொனியில் சொன்னான் ரீசனவன்.

பாடல்: ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க..

''நான் எங்கடா சொன்னேன்!! அவதானே சொன்னா!!''

காதல் சொன்ன காரிகையின் அன்றைய சம்பவம் கண் முன் வந்து போக, கார் ஓட்டிய மன்மதனின் முகம் ஜோக்கரை போலானது.

பாடல்: மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது...

''நான் எங்கடா பேசறேன்!! எனக்கும் சேர்த்தே அவதானே பேசறா!!''

நாயகன் இவன், அமைதியெல்லாம் இல்லை. இருந்தும், நங்கையவள் உடனிருந்தால் மெய்யாலுமே ஊமைதான் தீனரீசன். அவ்வளவே.

பாடல்: தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது..

''அடேய்!! படுத்தாதிங்கடா!! நான் எங்கடா தட்டி பேசறேன்!! கையில கிடைக்கற அத்தனையையும் தூக்கி போட்டு என்ன தட்டுறது அவதானடா!!''

காமெடி டோனில் சொன்னாலும், ரீசன் சொல்வதென்னவோ உண்மைத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்டது சத்தம் ஒன்று.

வேறென்னே 'டமார்!!!' தான்.

முன்னே வந்த காரும் ரீசனின் காரும் முத்தம் கொடுத்துக் கொண்டன.

தென்னை ஓலைகளை ஒன்றாக்கி இறுக்கினால் வரும் சைசில் இருந்த ஹீரோ இறங்கினான் காரை விட்டு அதிரடியாய் முனகிக் கொண்டே.

''கொய்யாலே!! கண்ணு என்ன மூக்குலையா இருக்கு!!''

எதிர் கார்க்காரியும் இறங்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திட; ஜெக ஜோதியாய் பற்றிக் கொண்டது சண்டை நெருப்பு கடுப்போடு.

முனகினான் ஆணவன், நெற்றியில் அடித்துக் கொண்டு.

''பின்னாலையே வால் புடிச்சுக்கிட்டு வா!! இப்போதானே அங்கிருந்து தப்பிச்சு வந்தேன்!!!''

வாயுக்குள் மந்திரம் ஓதியவன் ஓரக்கண்னால் அவளைப் பார்த்திட, கூலிங் கிளாஸை கழட்டியப்படி சொடக்கிட்டவளோ; கோபமாய் எகிறினாள் ரீசனை நெருங்கி.

''கண்ணு என்ன பொடனிலையா இருக்கு!!''

''இல்ல சாயாங்... முகறையிலே இருக்கு!!''

அவன் பதிலில் கடுப்பானவள், முறைத்தப்படி பல்லை நறநறவென்று கடித்து காரின் இடிப்பட்ட முன் பக்கத்தை பார்த்து திரும்பினாள்.

''அதுக்குள்ள உங்கப்பன் உனக்கொரு புது கார் வாங்கி கொடுத்திட்டானா!!! போன மாசம்தானே ஒன்னு வாங்கிக் கொடுத்தான்!! சொப்பு அடிக்காரன் போலே!! அவனுக்கு மட்டும் எங்கிருந்துதான் காசு வருமோ!!''

என்றுக் வாயுக்குள் மாவரைத்தவன், நெற்றி நீவி அவளை நெருங்கினான்.

''என்னடி குஞ்சாய்.. வாசம் தூக்குது.. புது வரவோ..''

ஆணவனோ, அவளின் பரிட்சியமான வாசனை இதுவல்ல என்பதை நுகர்ந்து கேட்டான்.

''ஆர்ர்ஹ்ஹ்!! மாட்டு கோமியத்துல குளிச்சிட்டு வந்திருக்கேன் போதுமா!!''

ரீசனின் வார்த்தைகள் வெறியேத்த, அவன் முகத்தை ஏறெடுத்து சொல்லிய வஞ்சியவளோ; மீண்டும் விடுக்கென்று திரும்பிக் கொண்டாள் கார் நோக்கி.

இடை இறுக்கி சிரித்தவன் கேட்டான் நக்கலாய்.

''அடிக்கடி உங்கப்பா ஒரு மாட்டுக்கார வேலங்கிறதே நிரூபிக்கறே சயாங்!!''

உதட்டை பிதுக்கியவளோ, திடிரென்று காளியம்மா அவதாரம் எடுத்தாற்போல அலறினாள் நெஞ்சில் அடித்துக் கொண்டு.

''ஐயோ!! ஐயோ!! என்ன இப்படி உடைஞ்சு போச்சு!! என் புது காரு!!''

''அடியே குஞ்சாய்!! ஏன் இப்படி அலறே!! டெலிவரி பண்ற மாதிரி!!''

ஓமப்புடி அவனின் வரம்பு மீறிய வாக்கியத்தில், சினங்கொண்ட சின்ன வயதுக்காரியோ கண்களை இறுக்கமாய் மூடி; காரின் பேனட்டை ஒரு அடி அடித்தாள்.

ஆணவனோ வதுகையவளை வேள்வியோடு நோக்கிட, திரும்பிய வேகத்தில் ஆவேசமாய் டயலாக் விட்டு அவனை நெருங்கினாள் டாஃபி ரோஸ் கலர்க்காரி.

''ஏய்!! என்ன!! அர்ஹ்ஹ்!! என்ன!!''

பெதும்பை அவளோ, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவனை முன்னோக்க; வந்த சிரிப்பை அடக்கியவன் சமாளித்தான்.

''ஓகே!! ஓகே!! சோரி!! சோரி!!''

போலீசிடம் வசமாய் மாட்டிக் கொண்ட திருடனைப் போல இருக்கரங்களையும் நெஞ்சுக்கு முன் கொண்டு வந்தவனோ, பின்னோக்கியவாறே சென்று சடன் பிரேக் போட்டான்.

''ஆர்ஹ்ஹ்!! சொல்லிட்டேன்!! ஒழுங்கா இருந்துக்கோங்க!! வார்த்தை ரொம்ப ஓடுது!''

புரிந்துக் கொண்டான் ரீசன். அவளுக்கு பிடிக்காது. நிஜமாகவே பிடிக்காது. பொது இடத்தில் இப்படியான உரிமையான உரையாடல்களும் ஊடல்களும்.

சொந்தக்காரியின் கெடுபிடியான செல்ல கோபத்தை, இமைக்காது முறுவலித்து ரசித்தான் ரீசன்.

இடது கரம் நெற்றியோரமும் வலது கரம் இடையிலும் பதிந்திருக்க உச்சுக் கொட்டி கவலைக் கொண்டாள் மங்கையவள்.

''புது கார்.. இன்னைக்குத்தான் முதல் தடவ வெளிய எடுத்து வந்தேன்!!''

கும்மென்ற காரிகை அவளோ, வராத கண்ணீரை வலுக்கட்டாயமாக கண்ணை கசக்கி வர வைக்க முயற்சித்து; மண்டியிட்டு அமர்ந்தாள் காரின் முன்பக்கத்தை உற்று நோக்கி தொட்டு பார்த்து.

இருக்காத பின்னே, ஆடி (Audi) காரென்றால் சும்மாவா. சிறு கீறல் என்றாலும் பணம் நீராய் கரைந்திடுமே.

''சரி! சரி! விடுமா! தப்பென்னவோ உன் மேலதான்.. இருந்தாலும்.. நான் பெரிய மனசு பண்ணி உன்ன மன்னிச்சு விட்டறேன்.. பொழச்சு போ!''

ரீசன் சிரித்துக் கொண்டே சொல்லிட, பெண்ணவள் பொங்கி எழுந்து அடுத்த டயலாக்கை சொல்லிடும் முன்; இருவரின் கார் சண்டையாலும் சாலை நெரிசலில் சிக்கிக் கொண்டவர்கள் ஹார்ன் அடித்து அவர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

''செல்லங்களா!! உங்க குடும்ப சண்டையெல்லாம் வீட்டுக்கு போய் வெச்சுக்கோங்க!!''

எங்கிருந்தோ கேட்டது அண்ணன் ஒருத்தரின் கிண்டலான கட்டளை.

''Hoi!! Balik la!!''
(ஹோய்!! கிளம்புங்களா!!)

பல்லின மக்கள் வாழும் ஊரென்றால் இப்படித்தான் பன்மொழி இடியாய் தாக்கும் காதை வேண்டாத நேரத்தில்.

''என்னம்மா நீ!! தப்பா வந்து யூ-டர்ன் பண்ணிட்டு... ரோட்ட மறச்சு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க!!''

தமிழ் பெண்ணொருத்தி வேறு வசைப்பாட, மிழிகளை உருட்டினாள் விசாகா.

தவறிழைத்த அம்மணிக்கு மணியடித்தது மூளைக்குள். அவள் மீதுதான் தவறென்று உணர்ந்தவள், அப்படியே ஓடிடலாம் என்றெண்ணி, காருக்குள் சென்று புகுந்து எடுத்தாள் ஒரு ரிவர்ஸ்; பறந்தாள் அவ்விடத்திலிருந்து.

ரீசனோ வசைகளுக்கு தலைவணங்கி, ஆயந்தியவளை திரும்பி தேட; பழுப்பு குயிலவள் எப்போதோ பறந்து போய் விட்டாள் என்று புரிந்துக் கொண்டான்.

''எங்க போயிட போறே!! மிஞ்சி மிஞ்சி உங்கப்பன் வீட்டுக்குத்தானே!!''

என்றப்படி தலையை ஆட்டிக் கொண்டே அவன் காரை நோக்கினான் ரீசன்.

ட்ராபிக் பிரச்சனையும் முடிவுக்கு வந்து, நெரிசலில் சிக்கியவர்கள் அவரவர் காரை கிளப்பிக் கொண்டு கிளம்பினர்.

விசிலோடு ரீசன் கார் கதவை திறக்க, ஆணவனின் அலைப்பேசியோ அலறியது.

பாவம் ரீசன். அழைப்பை எடுத்ததுதான் குத்தம் என்பது போல, போனை காதில் வைத்த அடுத்த நொடியே ஒரே புகைதான்.

''என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்!!''

''யா..''

யாரென்று கேட்க வந்தவனை, அவனின் மம்மி அம்பாள் பேசவே விடவில்லை.

''பச்சை மண்ணு என் பேத்தி!! பசிக்குதுன்னு ஸ்டேட்டஸ் போட்ருக்கா!! அவளை கூட பார்க்காமே அப்படி என்னத்தான் பண்றிங்க புருஷனும் பொண்டாட்டியும்!!''

மவராசன் அவனோ போனை புளூடூத்தில் இணைத்து கார் முழுக்க, மம்மி அம்பாளின் அர்ச்சனையை ஒலிக்க விட்டான்.

''பிள்ளைய பெத்துட்டா மட்டும் போதுமா!! அதை ஒழுங்கா வளர்க்க வேணாமா!!''

''சரிம்மா!! சரிம்மா!! போனை வைமா!! முன்னுக்கு சர்கார் (police) நிக்கறான்!!''

''இங்க பாரு ரீசன்.. உங்களால கீர்த்துவ பார்த்துக்க முடியாட்டி.. ஒழுங்கா கொண்டு வந்து இங்க விட்டுடு!!''

''ஆஹ்ஹ்!! சரிம்மா!! சரிம்மா!! உன் அறுந்த வாலு பேத்தியா உன்கிட்டையே கொண்டு வந்து கொடுத்துடறேன்!!''

என்றவன் அவன் அம்மா அம்பாளை, இல்லாத போலீசை காரணங் காட்டி கழட்டி விட்டான்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முன்னாடி அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம் 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top