What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 81

நடந்தவைகளை மெதுவாய் அசைப்போட்ட ரீசனோ சத்தமின்றி எழுந்து ஜன்னலோரம் சென்றான். மாமனாரின் பங்களாக்களுள் இதுவும் ஒன்று. ரொம்பவே பாதுகாப்பானதும் கூட.

மின்சார கிரில் கேட் கொண்ட மாளிகை இதுக்கு தனியார் செக்கியூரிட்டி என்று யாருமில்லை. இருந்தும் 360 பாகையில் கண்காணிக்கும் சி.சி.டிவி. கேமராக்கள் மனையை சுற்றி எப்போதும் பணியில் இருக்கும்.

யாராவது பங்களாவை நோட்டமிடுகிறார்களா என்று பார்த்தான் திரைசீலைகளுக்கு பின்னால் நின்றிருந்த ரீசன். பதினைந்து நிமிடங்களுக்கு மேற்பட்டு எவ்வித நடமாட்டமும் அங்கில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டவன் நேராய் அங்கிருந்து அடுக்களை சென்றான்.

காஃபி கலக்கியவன் மீண்டும் வந்து சேர்ந்தான் குஞ்சரியிருக்கும் அறைக்கு. மென்மையாய் வருடிக் கொடுத்தான் கணவனவன் துணைவியவளின் தலையை.

காஃபி கப் கையிலிருக்க குஞ்சரியின் முன்னாள் அறையதை சுற்றி முற்றி பார்த்தான் ரீசன். சுவரெங்கும் அவர்களின் நினைவுகளே. ஆணவனின் கலங்கிய கண்ணீரோ காஃபியில் துளிர்த்தது.

ஒவ்வொரு படத்திலும் சிரித்த முகமாய் இருந்த குஞ்சரியை தொட்டு பார்த்தவனின் விரல்கள் மெதுவாய் தரையிறங்கின அழகு கேபினெட்டின் மீது.

அங்கோ ரீசனின் சைட் பேக் இருந்தது. அதற்குள் கையை விட்டவன் வெளியில் எடுத்தான் அவன் அண்ணன் தீனவானனின் டைரியை.

சில மிடறுகள் வைத்த காஃபி கப்பை கேபினெட்டின் மீது வைத்து டைரியோடு சென்றமர்ந்தான் ரீசன் நடைப்பிணமாய் கிடந்த ஊடையவளின் அருகில்.

பக்கங்களை திருப்பியவன் படித்திட ஆரம்பித்தான் அவனுக்கு அவனே எழுதி வைத்துக் கொண்ட குற்றப்பத்திரிகையை.

என்றைக்கு குஞ்சரியின் மூலம் அண்ணி மயிலினிக்கு நடந்த சித்ரவதைகளை அறிந்தானோ அன்றைக்கே பாவ கணக்கின் முதல் பக்கத்தை திறந்து அ முதல் அஃகு வரை ஒன்று விடாது எழுதி விட்டான்.

தொடர்ந்து அண்ணனின் வாழ்க்கையை முடித்து வைத்த அவனின் தவறுகளையும் வரிசையாய் எழுதியவன் பின்னாளில் விசாவிற்கு அவனால் நேர்ந்த இழப்புகளையும் எழுதிடாமல் இல்லை.

செய்த குற்றங்கள் அத்தனையையும் கணக்கிட்டு எழுதிய ரீசன் எப்போதெல்லாம் உயிர் பயம் கொள்கிறானோ அப்போதெல்லாம் இந்த டைரியை எடுத்து படித்து பாவ புண்ணிய தர்மத்திற்கு அவனை தயார்படுத்திக் கொண்டான்.

அதுவும் குஞ்சரிக்கு நோய் முத்தி போன சில காலங்களிலேயே கர்மாவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான் ரீசன் மனசை பக்குவப்படுத்தி.

குஞ்சரிக்கூட பல நேரங்களில் தெய்வத்தை வைதிடுவாள். ஆனால், ஒல்லிக்குச்சி கண்ணனோ நடப்பதெல்லாம் செய்த பாவத்திற்கான சன்மானமே என்று வாய் பொத்தி கொண்டான்.

கர்மா குஞ்சரி விஷயத்தில் கருணையை எக்ஸ்குலூடட் (excluded) செய்திருந்தாலும் சுந்தரியவளை பொருத்தமட்டில் அவள் அக்மார்க் நல்லவளே.

புருஷனை அதீதமாய் காதலிக்கும் எந்த பெண்ணும் இந்தளவுக்குத்தான் இறங்கி போவார்கள் என்பது அவளின் வாதமாகும்.

கண்ணோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவனோ டைரியை ஓரமாய் வைத்து ஒருகாலத்தில் துள்ளி குதித்தோடிய அவனின் குஞ்சரியையே வெறிக்க வெறிக்க பார்த்தான்.

காரிகையின் கிழிந்த உதடு காய்ந்து கிடக்க, உடல் அங்கங்களோ ஆங்காங்கே காயங்கொண்டு கன்றி கிடந்தன வீங்கி. கண்ணீர் வழிய அவளை நெருங்கியவனோ மொத்தமாய் அள்ளியெடுத்துக் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் காதல் வதுகையவளை.

நிசப்தமான அந்நேரத்தை ரீசனின் சைட் பேக்கிற்கு கீழ் ஒளிந்திருந்து பின் சரிந்து தரை இறங்கிய மகள் கீத்துவின் தங்க வளையல்கள் கலைத்தன.

சத்தம் போட்ட வளையல்களை ஓரக்கண்ணால் பார்த்தவனின் மனமோ புரிந்துக் கொண்டது அவைகளின் நகைப்பை‌.

இருக்காதா பின்னே, மயிலினியின் தங்க வளையல்கள்தானே அவை.

விடலை விசா அக்கா மயிலினியை பிணமாக கண்ட நேரத்தில் மரித்தவளின் புன்னகைக்கு பதிலாக தங்கைக்கு தமக்கையிடமிருந்து கிடைத்ததென்னவோ பொன்நகை மட்டும்தான்.

நினைவு சின்னமதை அத்தனை காலமும் பத்திரப்படுத்தி வைத்திருந்த வதனியவள் அவளுக்கென்ற காலம் வருகையில் தவழ விட்டாள் வஞ்சியவள் மறவாது வளையல்களை.

அந்நான்கிலிருந்த ரெண்டைத்தான் அன்றைக்கு கீத்துக் குட்டி கேட்க சின்னவளின் கைகளில் அணிவித்து விட்டாள் விசா பாரமான மனதோடு.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 81
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top