What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
WhatsApp Image 2024-10-13 at 4.40.58 PM.jpeg

அத்தியாயம் 21

நிகழ்காலம்
இன்ஸ்பெக்ட்டர் அன்பின் காவல் நிலையம்


இன்ஸ்பெக்ட்டர் கதிர்காமன் மூலம் நடந்திருந்த கூத்தை அறிந்துக் கொண்ட அன்போ அடுத்தடுத்து நடக்க வேண்டிய விடயங்களை துரிதப்படுத்தினான்.

அட்சரா என்ற கோப்பில் தவறாக சொருகப்பட்டிருந்த படத்தை கதிரிடமிருந்த வாங்கி வைத்திருந்தவன், அதோடு காவல் நிலையத்தின் ஹெட் குவார்ட்டர்ஸ் விரைந்தான்.

தேவையான விபரங்களை சரியான டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த அதிகாரிகள் மூலம் கண்டறிந்தவன், அட்சராவின் அண்ணன் இந்தருக்கு போனை போட்டான்.

தங்கை காணாது போன விடயத்தை பற்றி துப்பு துலக்கியவன் மறுமுனையில் இந்தர் சொன்ன வார்த்தைகளில் கடுப்பாகி போனான்.

''ஓடிபோனவே ஓடிப்போனவளாவே இருக்கட்டும் சார்! இனி அவளே பத்தி கேட்டு எனக்கு போன் பண்ணாதீங்க ப்ளீஸ்!''

எரிச்சலோடு பதிலளித்தான் இந்தர் மறுமுனையில் இருப்பது போலீஸ் என்பதை மறந்து.

''என்ன பேசறீங்க இந்தர் நீங்க?! உங்க வீட்டு பொண்ணு காணாமல் போயிருக்காங்க, நீங்க என்னான்னா ஓடிப்போனவன்னு அசால்டா சொல்றீங்க?! ஏன், நீங்கதான் அட்சராவே அனுப்பி வெச்சீங்களா எங்கையாவது போன்னு?! இல்லே, நீங்களே உங்க தங்கச்சியே எங்கையாவது மறைச்சு வெச்சிட்டு நாடகமாடறீங்களா?!''

காட்டமாய் அவனை வறுத்தெடுத்தான் அன்பு காண்டோடு.

''எனக்கு எதுக்கு சார் அந்த தேவையில்லாதே வேலை! வேணும்னா, அவளோட புருஷன் வேதாவே போய் கேளுங்க! ஏன்னா, அவுங்க ரெண்டு பேரும்தான் எங்கம்மாவோட கட்டாயத்தாலே கல்யாணம் பண்ணிக்கிட்டவுங்க! அப்போ, விரும்பாதே பொண்ணே போயிட்டு வான்னு அனுப்பி வைக்க என்னே விட தாலி கட்டின புருஷன் அவனுக்குத்தானே வாய்ப்புகள் அதிகம்!''

எங்கே பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமாகி மொத்தமும் தன் தலையில் வந்து விடிந்திடுமோ என்று பயந்த இந்தரோ, அலேக்காய் தங்கை புருஷனை கோர்த்து விட்டான் இன்ஸ்பெக்ட்டர் அன்பிடம்.

''மிஸ்ட்டர் இந்தர், தேவை இல்லாத விஷயங்களை பத்தி பேசாதீங்க! கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! அட்சராவே யார், என்ன பண்ணி இருப்பாங்கறதை போலீஸ் நாங்க கண்டுபுடிச்சுக்கறோம்! நீங்களா கற்பனை பண்ணி எதையும் உளற வேண்டாம்! அப்பறம் கேஸை திசை திருப்ப பார்க்கறீங்கன்னு சொல்லி உங்களே தூக்கி உள்ளே வெச்சிடுவேன்! புரிஞ்சுதா?!''

எச்சரிக்கை விடுத்தான் அன்பு, அண்ணன் என்ற பெயரில் உருப்படியற்றவனாய் இந்தர் காணாது போன அட்சராவின் மேல் துளியும் அக்கறை கொள்ளாதிருக்க.

''சோரி சார், எனக்கு தோணுனதைத்தான் சொன்னேன்! நிஜமாவே அட்சராவுக்கு கல்யாணத்துலே விருப்பம் இல்லே சார்! இதுனாலே என்கிட்டையும் என் மனைவிகிட்டையும் கூட பேசறதையே நிறுத்திட்டா!''

தம்பதிகளின் சங்கதி அறியாதவனோ, பழசை நினைவில் கொண்டு முடிந்தவைகளை கிளறிட ஆரம்பித்தான்.

''கல்யாணம் புடிக்கலன்னா, உங்க கூட ஏன் பேசறதை நிறுத்தணும்?!''

புரியாது வினவினான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு.

''நான் நிலாவே, அதாவது வேதாவோட தங்கச்சியை காதலிச்சதாலே எங்கம்மா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கற மாதிரி எங்களோடே திருமணத்தை முடிவு பண்ணிட்டாங்க சார்! சின்ன வயசுலருந்தே அட்சராவோட விருப்பத்துக்கு நேர் எதிராத்தான் எங்கம்மாவோட பல முடிவுகள் இருந்துச்சு! ஒருக்கால், அதனாலதான் சொல்லாமல் கொள்ளாமல், எதுவுமே வேண்டாம்னு போயிட்டாளோன்னு எனக்கொரு எண்ணம்! வேறே ஒன்னும் இல்லே சார்! வேதாவும் ரொம்ப நல்ல மனுஷன் சார்! அதான், என் தங்கச்சு பிளான் ஏதும் போட்டு, அவளுக்கு அவர் உதவி பண்ணிருப்பாரோன்னு நினைச்சுட்டு முதல்லே அப்படி சொல்லிட்டேன்!''

இப்படி இந்தர் சொல்ல, மேலும் அவன் வாயை புடிங்கி அட்சராவை பற்றி பல தகவல்களை தெரிந்துக் கொண்டான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு.

அதே சமயம், இந்தரிடமிருந்து அவன் உத்தமன் என்று சர்டிபிகேட் கொடுத்த வேதாவின் புதிய அலைபேசி எண்ணையும் வாங்கி அதை சப் இன்ஸ்பெக்ட்டருக்கு அனுப்பி வைத்தான்.

கோப்பில் வேதா கொடுத்திருந்த பழைய நம்பரோ உபயோகத்தில் இல்லாமல் இருந்த காரணத்தாலேயே, அன்பின் அழைப்பு நேராய் அட்சராவின் அண்ணன் இந்தருக்கு போனது என்பது காவல்துறை மட்டுமே அறிந்த விடயமாகும்.


***********************************


நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை

வேதாவின் மீது அட்சராவிற்கு ஏற்பட்டு இருக்கின்ற உணர்வுக்கு என்ன பெயரென்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால், அது காதல்தான் என்று பார்க்கும் படங்களும் கேட்கும் பாடல்களும் பாவை அவளுக்கு உணர்த்தின.

அதேப்போல் தெரியிழை அவள் மீது வேதா கொண்டிருக்கும் அக்கறையும் கவனிப்பும் கூட வழக்கத்தை மீறிய ஒன்றாகவே இருந்தது, அவளை பொறுத்த மட்டில்.

கெட்ட சொப்பனம் கொண்டு ஆணவன் மார்பில் புதைந்து காரிகையவள் ஒப்பாரி கொள்ளும் போதெல்லாம் ஆறுதலாய் அவளை அரவணைத்து தூங்க வைத்திடுவான் ஆடவன் அவன்.

முழங்கை பற்றி தரையில் அவனோடு துயில் கொண்டவள், காலப்போக்கில் உரிமையோடு ஆடை கொண்டவனின் நெஞ்சில் தலை சாய்த்திட ஆரம்பித்திருந்தாள்.

சுகமான சங்கடமாய் அது இருந்த போதிலும், இருவரில் ஒருவரும் அதை வேண்டாமென்று தவிர்த்திடவில்லை. மாறாய், கட்டிலுக்கு ஷிபிட்டாகி இன்னும் வாசதியாகவே படுத்துறங்கிட தொடங்கினர்.

உறக்கம் வராத பொழுதுகளில் என்னதான் அவனுக்கு அசதியில் கண்ணை கட்டினாலும், மாயோள் அவள் மனம் நோகக்கூடாதென்று தூங்கி விழுந்தாலும் சமாளித்து விடிய விடிய படம் பார்ப்பது தொடங்கி அவள் பேசுவதையும் கேட்டான் வேதா.

அதேப்போல், பசிக்கிறது என்று தாரகை அவள் நள்ளிரவில் எழுப்பினாலும் சளிக்காது அடுக்களை விரைந்து வேண்டியதை செய்து கொடுத்தான்.

சில சமயங்களில், அம்மணிக்கு பழசு ஞாபகம் வர, அவள் கூற்றை நிரூபிக்கும் வண்ணம் முற்றிழையை கார் ஓட்டிட சொல்வதும், நீச்சல் குளம் கூட்டிப்போய் நீந்த வைப்பதும், படங்கள் வரைந்திட சொல்வதென்றும் அவளின் தினசரி வேலைகளை தங்கு தடையின்றி நடத்திட வழிவகுத்தான்.

திறன்களை எல்லாம் இப்படியே கண்டுக்கொண்ட நாயகியின் எண்ணத்திலோ இப்போதைய இன்பங்களே நிரம்பி வழிந்தன.

அவைகளை மட்டுமே அனுபவித்து காலம் முழுக்க வேதாவோடே பயணித்திட விரும்பினாள் வல்வியவள்.

மனதார வேதாவை காதலிக்க ஆரம்பித்திருந்தாள் சுயம் மறந்த நங்கையவள்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 21
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top