What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 82

ஹார்ன் சத்தம் இணையவிருந்த இதழ்களை இணைசேர விடா எமனாகி போனது.

அதரங்கள் சாஷ்டாங்கமாய் விலகிக் கொள்ள இருவரின் முகங்களும் கூட உடலோடு சேர்த்து பின்னோக்கிக் கொண்டன.

''ஆர்ஹ்ஹ்.. மணியாகுது விசா.. முதல்லே போய் பப்பிஸ்க்கு சாப்பாடு வெச்சிட்டு வந்திடுவோம்.. பாவம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பானுங்க..''

என்றவனோ ஹெல்மட்டை எடுத்து தலையில் கவிழ்க்க, காரிகையவளுமே வேறொன்றும் பேசாது அமைதியாகவே இருந்துக் கொண்டாள்.

இம்முறை முதலில் இருந்தாற்போன்றதோ நெருக்கம் இல்லை அவர்களிடத்தில். விசா தள்ளியே அமர்ந்திருந்தாள் இடைவெளி விட்டு.

''நல்லா புடிச்சிக்கோ.. விழுந்திட போறே..''

என்றவனோ சொன்னான் எட்டியிருந்தவளிடம்.

ஆனால், ஆயிழையின் எண்ணமெல்லாம் எங்கே இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிட முடியாத நிலை வந்திடுமோ என்ற குழப்பத்திலேயே உழன்றது.

விசாவிற்கு பேபி சீட்டரை பிடிக்கும். ரொம்பவே. சொல்லவே வேண்டாம். வயது வித்தியாசங்கள் தாண்டி அவன் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அது பார்க்க பாவையவளுக்கு மிக பிடிக்கும்.

மிகவும் தன்மையானவன். கோபம் இதுவரை அவனிடத்தில் அவள் கண்டதில்லை. அனைவரையும் மரியாதையை நிமித்தமாய் நடத்துபவன். சரிசமம் அவனுக்கு மிக பிடித்த ஒன்று.

தொழில் கைதேர்ந்தவன். அவனுக்கான தேவைகளை அவனே பூர்த்தி செய்துக் கொள்ளும் திறமைசாலியும் கூட. சமையல் வரை. விடுமுறைகளில் அவன் விரும்புவது தாயின் மடியில் தலை சாய்ப்பது.

ஆனால், அது இப்போது மாறியிருக்கிறது. அடிக்கடி குட்டி தினாவை காண ஓடி வந்து விடுகிறான். புதல்வனுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து செய்பவன் பெற்றவளை அதற்கும் மேலாகவே கவனித்து விடுவான்.

''புடுச்சிக்கோ விசா.. விழுந்திடவே..''

என்றவன் மறுபடியும் சொன்னான் பைக்கின் ஸ்பீட்டை கூட்டி.

''ம்ம்ச்ச்.. விழுந்திடுவே புடிச்சிக்கோன்னு சொன்னா..''

என்றவனோ அவனாகவே இழுத்து பத்திரப்படுத்திக் கொண்டான் கதாநாயகியின் கைகளை நெஞ்சினில்.

''பயப்படாதே விசா.. விழுந்திட மாட்டே.. நான் இருக்கேன்.. விழ விட்டிடுவேனா..''

என்ற ப்ரீதனின் ஒவ்வொரு வார்த்தையும் வேறு மாதிரியான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் அர்த்தங்கள் என்று பெண்டு அவளுக்கு புரியாமல் இல்லை.

இருப்பினும், அச்சம் அக்கப்போர் புரிந்தது நாயகியின் நெஞ்சுக்குள். மீண்டுமொரு காதல் வேண்டாமென்றது. ஆனால், மூளையோ இதற்கு முன்னாள் ரீசனிடத்தில் அருணியவள் கொண்டது மெய்யாலுமே காதலா என்று வேள்விக் கொண்டது.

புத்தி சித்தி இரண்டிற்கும் நடுவில் மாட்டி விழித்தாள் பெதும்பையவள். குழப்பத்தின் ஊடே மறுபடியும் கேட்டது ப்ரீதனின் குரல்.

''தைரியமா புடிச்சுக்கோ விசா என்னே.. பயப்படவே பயப்படாதே.. நிச்சயமா நான் உன்னே விட மாட்டேன்.. ஐ மீன் எப்போதுமே விழவே விட மாட்டேன்..''

என்றவனின் கரங்கள் கோமகளின் கரங்களை மேலும் அழுத்திக் கொண்டது நெஞ்சுக்கூட்டில்.

''தெரியும் ப்ரீதன்.. இருந்தாலும்..''

இழுத்தாள் விசா. எவ்வளவு நேரம்தான் சும்மாவே வருவது. அவளுமே ஏதாவது பேசித்தானே ஆகணும்.

உண்மையில் அவளுக்குமே விருப்பம்தான் ப்ரீதனின் மீது. இருந்தும் என்செய்ய முன் அனுபவம் தந்த அனுபமோ இம்முறை கொஞ்சம் விட்டு பிடிக்க சொன்னது.

ஏமாற்றம் தந்த பாடத்திலிருந்து நிறையவே கற்றுக் கொண்டாள் விசா. அதில் முதலாவது காதலின் அடிப்படையான அன்பு கெஞ்சி கூத்தாடி வருவதில்லை என்ற நிதர்சனத்தை.

மாறாக அது சுயமாய் மனதிலிருந்து வரவேண்டிய ஒரு புனிதமான உணர்வாகும் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

இன்னமும் அவளால் மறக்க முடியவில்லை ரீசனிடத்தில் கெஞ்சிய பொழுதுகளையும் அவன் அவளை அற்பமாய் புறந்தள்ளிய சூழ்நிலைகளையும்.

ஏன் அவனின் மனைவி குஞ்சரி நடுரோட்டில் விசாவிற்கு இழைத்த அவமானத்தையும் கூட சின்னவள் அவள் சிந்தையிலிருந்து அகற்றிடவில்லை.

அதுவெல்லாம் கடந்த காலமாகி போக உண்மையான நேசம் எப்படியிருக்கும் என்பதை கண்டு தெளிந்து உணர்ந்தவள் அதற்கான கொடுக்கல் வாங்கல்களையும் சரிவர கற்றுக் கொண்டாள்.

காதலில் அளவற்ற அன்புக்கு பின் சுயமரியாதையென்பது கட்டாயம் இருக்க வேண்டும் என்று தொடங்கி அது மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதிக் கொண்டாள் மதங்கியவள்.

முன்னாளில் அவளுக்கு ரீசனின் மீது ஏற்பட்டது வெறும் ஈர்ப்பு மட்டுமே என்பதை கொஞ்ச நாட்களிலேயே விளங்கிக் கொண்டாள் விசா. கரீபியன் நாட்டுக்கு சென்றதும் சுந்தரியவளுக்கு நடந்த முதல் நல்ல விஷயமே இதுதான்.

அந்தத் தெளிவுதான் இன்றைக்கு இவளை கட்டிப்போட்டு இழுக்கிறது காத்திருந்து பெரு என்ற ஆலோசனையோடு உணர்ச்சிகளை அடக்கி.

குவலயத்தில் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. அதன் அடிப்படையில் இம்முறை விசாவை சுற்றியிருந்த ஆட்களெல்லாம் ப்ரீதனை சார்ந்த நல்லுள்ளங்களே.

அனைவரும் மனதளவில் கூட மாயோள் அவளை வேதனைப்படுத்திட விரும்பாத ஜீவராசிகளே. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல மாசுப்பட்டிருந்த விசாவும் மாதங்கள் கடக்க பரிசுத்தமாகிப் போனாள்.

அக்காவின் இறப்பில் தொடங்கி அப்பாவின் சாவு பின் அவளின் நரக வாழ்க்கையின் கொடூர உட்சம் போன்ற அத்தணை துன்பங்களையும் ஒருசேர அவளில் சுமந்திருந்த மானினியவளுக்கு நிவாரணையாக வந்த ப்ரீதனை எங்கணமும் பிரிந்திடக்கூடாதென்று அதிகமாகவே இறைவனை வேண்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் யுவதியவள்.

''நம்பு விசா.. ப்ரீதன் விட்டுடே மாட்டேன்னு நம்பு.. அப்படியே ரொம்ப பயமா இருந்தா கண்ணே மூடிக்கோ.. தலையே சாய்சிக்கோ.. இந்த தோள் எப்போதுமே உன்னே தாங்கிடும்..''

ஆணவன் சொல்லி முடிக்க அதைப்போலவே விசா அவனின் தோளில் தலைசாய்த்தாள்.

''ப்ரீதன்.. விட்டுடே மாட்டால்லே..''

என்றவளின் கேள்விக்கு பதிலாக ப்ரீதனோ கோதையவள் கரமிழுத்து இருவரின் நெருக்கத்தையும் பசையின்றி ஒட்ட வைத்தான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 82
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top