- Joined
- Jul 10, 2024
- Messages
- 433
அத்தியாயம் 84
நல்ல பனி.
குளிர் நன்றாகவே நங்கையவளை நடுங்க வைத்தது.
''விசா அப்படியே இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா காஜல் மாதிரி ஒரு வணக்கம் வையேன்!''
என்றவனோ நக்கலாய் சிரிக்க,
''ப்ரீதன்!''
என்றவளோ அவனின் இருப்பக்க இடையில் குத்தோ குத்தென்று குத்தி செல்ல கோபத்தை காண்பித்தாள்.
ஆனால், மானினியவள் அறியவில்லை மகடூ அவளின் கைப்பட்டு ப்ரீதனின் அலைபேசி அடைந்து போய் விட்டதென்று.
பாவம் அமராவதி. தம்பி ப்ரீதனுக்கு பலமுறை அழைத்து சோர்ந்து போயிருந்தாள். இப்படியான சம்பவம் நடந்தால்தானே அவளுக்கான லைன் கிளியர் ஆகும்.
''ஏய்! மூக்கு சளி விடுடி! ஏய்! விசா! பைக்கே விட்டுடுவேன்! விசா! ஏய்! போதும்! வேணா!''
என்றவனோ சிரித்தவாக்கில் சமாளித்தான் அவளின் உரிமையான சீண்டலில்.
காற்றுபுகா இடைவெளியில் இடையாளவளின் குளிர் கொண்ட தேகம் கிடுகிடுக்க கண்டான் ப்ரீதன். பாவையவள் துயில் கொள்ளாதிருக்க ஆணவனோ பெண்ணவளை நக்கல் நையாண்டி செய்தான்.
என்னவோ தெரியவில்லை விசாவிற்கும் இப்படியான ஊடல் ரொம்பவே பிடித்திருந்தது. இதையெல்லாம் நுண்ணிடையாளவள் விழி மூடா நனவில் மட்டுமே என்னி பார்த்த விடயங்கள் ஆகும்.
படிக்கையில் அவளும் மற்ற பெண்களை போல் ஆசைக்கொண்டாள் ராஜா குமாரன் வருவான். வந்தவளை காதல் கொள்வான். தந்தையோடு சண்டைக் கொள்வான்.
காரிகையவளை உள்ளங்கையில் தாங்குவான். ஊரறிய திலகமிடுவான். கந்தரத்தில் முடிச்சிடுவான். காலில் மிஞ்சிடுவான். ராவில் பள்ளிக் கொள்வான்.
பஞ்ச பூதங்கள் பொறமைக் கொள்ள காதல் செய்வான். கொஞ்சியே கொள்வான். மிஞ்சியே வெல்வான். பெண்மையை உணர செய்வான். பத்து மாதத்தில் தந்தையாகி மகிழ்ந்திடுவான்.
தாயாகிய விசாவை அவனின் முதல் குழந்தையாய் நெஞ்சில் சுமந்திடுவான் என்ற ஓராயிர கனவுகள் சூழ பட்டாம் பூச்சியாய் வளம் வந்தவளின் சிறகெல்லாம் உதிர்ந்து போனது தவறான மலரில் தேனுண்ட காரணத்தால்.
தன்மானம் இழந்தவள் அன்பை வேண்டி நிற்க அவளுக்கு கிடைத்ததெல்லாம் என்னவோ அவமானங்களும் காயங்களும்தான்.
மயிலினியின் காதல் விவகாரத்தில் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்த தேவேந்திரனோ செல்ல தந்தை போஸ்ட்டிலிருந்து ஸ்ட்ரீக்ட்டப்பா என்ற பதவிக்கு உயர்ந்திருந்தார்.
புதல்வியவளுக்கு ஒரு போனில்லை டிவியில்லை ஏன் ரேடியோ கூட இல்லை. அவளை சுற்றி எப்போதுமே புத்தகங்களே. அதுவும் காதல் கதைகளுக்கு தடாத்தான். இருந்தும், விதியை மதியால் வென்றிட முடியுமா. கடவுளின் திருவிளையாடலை தடுத்திடத்தான் இயலுமா.
அடித்தான் பார் ஆண்டவன் ஆப்பொன்றை தலைகால் புரியாது கொட்டமடித்து திரிந்த விசாவிற்கு ரீசனின் மூலமாய்.
அன்றைக்கு பிடித்த பீடைத்தான் பேதையவளை ஒரு ஆட்டு ஆட்டியெடுத்து விட்டது.
''விசா.. சொல்லே மறந்துட்டேன்.. மனோ சார் இன்னைக்குத்தான் ஒரு விஷயத்தை நோட் பண்ணாறாம்.. எக்சுவலி.. அவர் உன்னே ஏற்கனவே பப்லே பார்த்திருக்காறாம்.. ஒருவாட்டி ஹெல்ப் கூட பண்ணிருக்காறாம் சொன்னாரு..''
முந்தைய நரகம் கண் முன் நிழலாட, தன்னிச்சையாக தாரகையவளின் விரல்களோ ப்ரீதனின் ஜாக்கெட்டை இறுக்கின.
''அம்மா தாயே! வேணும்னா உன் கோவம் சோகம் எல்லாத்தையும் அவருக்கு போன் போட்டு காட்டு! இப்படி என்கிட்டே காட்டி எசக்கு பிசாக்கா ஏதாவது ஆகிட போகுது!''
என்றவன் அடித்த நக்கலில் சிரித்து விட்டாள் நுண்ணிடையாளவள்.
''அப்பாடா என்னென்னெ பேச்செல்லாம் பேச வேண்டியதா இருக்கு மேடம் மூக்கு சளியே சிரிக்க வைக்க..''
என்றவனோ பைக்கை நிறுத்தினான் ஆளில்லா இருட்டு ரோட்டில்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 84
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.