What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

என்ன வாசிக்க வேண்டும்?!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
என்ன வாசிக்க வேண்டும்?!

இவ்வினா தொடுப்பவருக்கும் சரி, பதிலளிப்பவருக்கும் சரி சுவராசியமான ஒன்றே எனலாம்.

இதில் என்னளவில் வாசகன் என்பவனுக்கு முதலில் நல்ல தெளிவு வேண்டும் என்பேன்.

எதற்கு என்கிறீர்களா?!

அவனுக்கான தேடல் என்னவென்பதை அறிந்து பின் அதற்கான வேட்டையில் இறங்கி புசிப்பதற்கே.

என்னை பொறுத்த மட்டில் வாசிப்பில் இருவகை உண்டு.

ஒன்று வெறுமனே பொழுதை போக்குவதற்காய் படிப்பது. மற்றொன்று அறிவை பெருக்கிக் கொள்வது.

முதல் வகை வளைவு சுளிவு எதுவும் இல்லா சீரான நீரோடை போலான படைப்புகளை படித்து மனதையும் சிந்தையையும் ஜாலியாய் வைத்துக் கொள்வது.

இதில் பெரும்பாலும் சிக்கலற்ற, அன்றாட வாழ்வியலை மையப்படுத்திய அல்லது ஒரே பாணியிலான படைப்புகளுமே அதிகம் இடம்பெறும்.

இவைகளை படிப்பதன் மூலம் ஸ்ட்ரெஸ் குறையும். மூளைக்கு குடைச்சல் இருக்காது. போற போக்கில் அதை கடந்து அடுத்த உலகில் குதித்திடலாம்.

இரண்டாவது வகை, புத்தியை பட்டை தீட்டும் தீவிரமாகும்.

ஒன்றை தெரிந்துக் கொள்வது பின் அதை பற்றிய அலசலில் ஈடுப்படுவது என்று ஆரம்பித்து அதைப் பற்றியே சதா நினைத்து நாட்களை கடத்துவது, இன்னும் சில படிகள் முன்னேறி அதில் மூழ்கி மூளையை கசக்கி பிழிந்து படைப்பாளியை தாண்டிய வெறியோடு அதில் ஒன்றி போகுதல் ஆகும்.

அப்படியென்றால், பொழுது போக்கு படைப்புகளில் படிப்பினையே இல்லையா என்றெல்லாம் வம்பு வளர்த்திட கூடாது.

யாரில்லை என்றது?!

வீட்டுக்கு வீடு வாசப்படி!

ஒவ்வொரு படைப்பிலும் விதவிதமான சர்ச்சைகளும் அதை கையாளும் திறனும், வழியும் படைப்பாளர்களுக்கு ஏற்ப அவரவர் ஸ்டைலில் ரசனையை கூட்டியே எழுதப்பட்டிருக்கும்.

ஆகவே, வாசிப்பு என்ற ஒன்றை சீரியஸ் மோட்டில் வைத்து, இதுதான் என் தேவை என்றுணர்ந்து அதை நோக்கி ஓடுவது என்பது வேறு, அதை ஜஸ்ட் லைக் தேட், என்று நேரத்தை விரயமாக்கிடாமல் உருப்படியாய் ஒன்றை செய்திட வேண்டுமென்று நினைப்பது வேறு.

இரண்டிற்கும் இருக்கும் ஒற்றுமை என்னவோ பிடித்தம் மட்டுமே.

ஆனால், பிடித்தம் மட்டுமே ஒருவரை வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிடாது என்பதும் நிதர்ச்சனமே.

விசாலமான கண்ணோட்டத்திற்கு வாசகன் முதலில் அவன் கண்களை திறந்து அவனின் சுகபோக நிலையிலிருந்து வெளிவர வேண்டும்.

இல்லை, வேண்டாம்!

எனக்கு இதுவே போதும்!

என்ற நிலை கொண்ட வாசகர் எனில் கூட ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்படியே இருந்துக் கொள்ளலாம். யாருக்கு என்ன நட்டம். வாசகனைத் தாண்டி.

தெரியாதது, தெரியாமலேயே இருக்க போகிறது. அவ்வளவுதானே.

அதையும் தாண்டி உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமே தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் ஒன்றுமில்லையே.

ஆகவே, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மைண்டை எவ்வகையை நோக்கி முன்னெடுத்து வைப்பது என்ற புரிதல் கொண்டால், அதற்கேற்ற கப்பலில் தங்கு தடையின்றி பயணிக்கலாம், தீனி போட்டிடும் வேட்கைக்கு தணித்திடும் வண்ணம் எவ்வித தர்க்கமும் கொள்ளாது!

பின்குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே ஆகும்! ஆகவே, இதை யாரும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஆமோதிக்கவோ வேண்டுமென்ற அவசியம் கிடையாது என்பதை தெளிவாய் தெரிவித்து கொள்கிறேன்!

நன்றி. வணக்கம்.
 

Author: KD
Article Title: என்ன வாசிக்க வேண்டும்?!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top