What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
WhatsApp Image 2025-02-15 at 12.04.18 PM.jpeg

காதலர் தின சிறப்பு பகிர்வு 💚 2025

நிமலன் அடுக்களை வாஷிங் பேஷனில் சுஜிக்காக வாங்கி வந்த மீன்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்.

குளித்து வந்தவள் விசிலடித்து அவன் கவனத்தை திருப்பிட, திரும்பி பார்த்தவன் சிரித்து மீண்டும் திரும்பிக் கொண்டான்.

''டேய், என்னடா சிரிக்கறே ? தங்கச் சிலையாட்டம் ஒரு பொண்ணு பாதி துண்டோடு உன்னை பார்த்து கண்ணடிக்கறேன்.. என்ன பார்க்காமே மீனை பார்க்கறே நீ!!''

நிமலனோ, வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் சத்தமாக சிரித்தான்.

''தங்கச் சிலை.. நீ!!''

அவளைப் பார்த்து சிரித்தவன், சுஜி முகம் இறுகுவதை கவனிக்காமல் இல்லை.

சுஜி கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த குளியல் தொட்டியின் தண்ணீரை கொஞ்சமாய் கையில் எடுத்தாள்.

நிமலனை நோக்கி வீசினாள். அவள் கைகளிலிருந்து பறந்த தண்ணீர் அவன் மேனியில் பட, நிமலனோ சமாளித்தான் சிரித்து.

''பாப்பா.. வேணும்னா உன்ன வெண்கல சிலைன்னு சொல்லலாம்!!''

''நான்!! நான் வெண்கல சிலையா!!''

என்றவள் விளையாட்டு கோபத்தோடு வேகமாய் ஓடி வந்து அவன் கழுத்தை பின்னாலிலிருந்து இருக்கைகளால் கட்டிக் கொண்டாள்.

அப்படியே அவன் கழுத்தை பிடித்து சுஜி தொங்க, அவளின் பாரம் நிமலனை பின்னால் இழுத்தது.

கூண்டுக்குள் சிக்கிய கோழியாய் நிமலன். பாவம் தவித்து போனான் அவளிடம் சிக்கி.

''பாப்பா.. விடுடி!! இப்படியே போன செத்திடுவேன் போல!!''

செத்துப்போ!!! நீ செத்து போ!! என்ன வெண்கல சிலைன்னு சொன்னேல்ல!!''

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிமலன் அவனின் கைகளை நன்றாக கழுவிக் கொண்டு முன்னே இழுத்தான் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்த சுஜியின் கைகளை பிடித்து.

"நான் செத்து போணுமா!!அதுக்கென்ன உன்னையும் கூட கூட்டிக்கிட்டு போய்ட்டா போச்சி !"

சுஜி நிமலனின் பின்னால் உப்புக்குட்டி ஏறிக் கொண்டவள் போல காட்சியளிக்க, வாயால் அவனின் தோளை கடித்தாள்.

''ஆ.. கடிக்கறே நீ!''

சுஜி முதுகினில் இருக்க, உடலை மட்டும் வலதும் இடதும் ஆட்டினான் நிமலன்.

சுஜி அவளின் தொங்கிய கால்களை அங்கும் இங்கும் ஆட்டினாள்.

''நீ அடங்க மாட்டே! உன்னை எப்படி அடக்கறேன் பாரு!''

என்றவன் அவளைக் கீழே இறக்கி விட்டு மீண்டும் மீன் ரத்தத்தில் கைகளை நனைக்க, சுஜி ஒரே ஓட்டமாய் குளியல் அறைக்குள் நுழைய துண்டோ கதவின் ஓரம் மாட்டி கொண்டது.

மாட்டிய துண்டை அவள் கவனிக்காமல் போய் விட, அங்கேயே மாட்டிக் கொண்டு நின்று விட்டது துண்டு.

மூலையில் சென்று பதுங்கிய பின்புதான் தெரிந்தது அவள் நிர்வாணமாக இருக்கிறாள் என்று.

சுதாரித்து மீண்டும் துண்டை கைப்பற்றிடலாம் என்று நினைத்தால், நிமலன் அவனின் மீன் ரத்தம் படிந்த கைகளோடு சுஜியை நெருங்கிட, சுஜி கத்தி ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.

நிமலன் விடுவதாய் இல்லை. சுஜியும் குமட்டிய வாடையோடு பொறுத்து பொறுத்து இறுதியில் நிமலனின் வெற்றுடலில் வாந்தி எடுத்ததுதான் மிச்சம்.

வாந்தியும் எடுத்து பேந்த பேந்த அவள் முழிக்க, கேடி அவளை கிண்டல் பார்வை பார்க்க நமட்டு சிரிப்போடு பட்டென்று ஷவரை திறந்து விட்டாள் சுஜி.

நிமலன் தொப்பையாய் நனைந்து, சுஜியை நெருங்கிய வாக்கில் முத்தமிட போக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுஜி.

''வாந்தி தானே எடுத்தேன்.. இன்னும் வாய் கூட கழுவுல!''

அவள் வாய் கழுவிட போக, அவளை அப்படியே தடுத்த நிமலன்,

''உன் எச்சில்லெல்லாம் தீர்த்தமடி
பன்னீரும் தோற்குமடி
சலவை செய்திட வேண்டுமடி
துவர்வாய் என் நீரருவி!''

என்றவன் அவளை அப்படியே முத்தமிட நெருங்கினான்.

சுஜி முற்று பெற்ற அந்த மூலையில் பின்னே போக முடியாத நிலையில் குளியல் சுவரில் கைகள் பதிக்க,

''வேண்டாம்.... வ.. வராதே!''

கேடி சொன்னால் கேட்பவனா என்ன, அவளை சுவற்றோடு இறுக்கினான். சுஜி கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

கேடி அவளின் கழுத்து வளைவினில் முத்த இட்டு சொன்னான்.

''நின் கழுத்து போதுமடி தீரா...
கேடி என் நரம்புகள் முனகிட...''

சுஜியின் பொன்விரல்கள் குளியல் நீர் தொட்டியில் படர, ஜில்லென்ற நீரின் தாக்கம் அவளை சிலிர்க்க வைத்தது.

கேடி அவளை தூக்கி அப்படியே அந்த தண்ணீர் தொட்டிக்குள் நிற்க வைத்தான்.

சிலிர்த்து குலுங்கினாள் கேடியின் லேடி. அலறினாள் குளிரில் சுஜி.

நிமலன் தொட்டிக்குள் இருக்கும் சுஜியின் இடையே இறுக்கமாய் பற்றி அவனிடம் இழுத்தான்.

திருமதி நிமலன் சர்வேஷ் குமாரின் நெஞ்சு தாலியோடு சேர்ந்து கணவன் அவன் நெஞ்சில் இழவும் பஞ்சாக ஒட்டியிருக்க, கேடி அவனின் கரத்தினை அவளின் இடது காதோரம் படர விட்டான்.

அவள் காது மடல்களில் மூர்க்கத்தனமான ஒரு உரசல் கொண்டு மெதுவாய் அவளின் காது கடித்தவன்,

''உன் கதறல் எல்லாம்..
என் காதலின் ஆழமடி.. தீரா... ''

சுஜி எப்போதோ மலை ஏறி விட்டாள். அவள் கழுத்தை தாண்டி கீழிறங்கிய கேடியின் தலையை பிடித்து மேலே தூக்கியவள் அவனின் முகத்தை இருக்கைகளால் அழுத்தமாய் பற்றினாள்.

''நிமல், ஐ லவ் யூ! நான் உன்ன பைத்தியம் மாதிரி காதலிக்கறேண்டா! நீ எனக்கு மட்டும் தான்! இந்த கயல் தீராக்கு மட்டும் தான்!''

என்றவள் தன்னவனின் மென் இதழ்களை முரட்டுத் தனமாய் கடித்திழுத்தாள்.

அவளின் ஆர்வம் புரிந்தவன் அவளின் தலையை இறுக்கமாய் பற்றினான்.

மனம் முழுதும் காதல் கொட்டிக் கிடக்க, தேகங்கள் ரெண்டும் சூடேறி போயிருக்க, ஈருடல் ஓருயிராகி இணைந்தன இதழ் வழி.

மாசற்ற சூடான பாலை போல் தீராவின் பற்களில் படர்ந்து பின் இதழ் வழி இறங்கிடும் எச்சில் எல்லாம் சீம்பாலாய் ஆகிட, இதழ் வலிக்காமல் கீழ் உதட்டை கவ்வி பல் படாத மென்மையில் உறிஞ்சி காரிகை அவளின் உயிர் வரை சென்று தொட்டான் கேடி.

தீராவின் மேல் உதடு கேடியின் கீழ் உதட்டினை பற்றிக் கொள்ள விடாப்படியாக, அடிவயிற்றில் ஒரு பட்டாம் பூச்சி பறந்திட; நா சுழற்றி பின்னிக் கொண்டது இருவரின் இதழ்களும்.

பியானோவின் கீக்களை இசைப்பது போல, கேடி அவன் தீராவின் உதட்டினை வீணையாய் மீட்டிட, அவள் போதையேத்தும் அதரங்கள் ரெண்டும் வெம்பி நின்று ருசி ஏத்தி ஜதி சேர்த்தன.

பயலாவோவின் இதமாய் கேடியின் இதழ்கள் அவள் உதட்டின் மெல்லிய கோடுகளை சுவைத்திருக்க, செக்ஸபோனில் ஒலித்திடும் சுவரமாய் தீராவின் முனகல் இருக்க, ட்ரம்மின் உச்சமாய் இருவரும் முத்த தீயில் வேகம் கூட்டி ஒருவருக்குள் ஒருவர் தொலைந்திருக்க, இறுதியில் கித்தாரின் கடைசி சுருதியாய் அன்பால் பிணைந்து இருவரும் ஆரத்தழுவி அடங்கிப் போயினர்.

ஆடையில்லா அவள் மேனி வெற்றுடல் நிமலனோடு இணைச்சேர்கையில் ஜில்லென்ற அந்த குளியல் தொட்டி தண்ணீரும் சூடாகித்தான் போனது.

#KD #KKD #3KS #2019 #memories
 
Top