What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
வணக்கம்.

வழக்கமான சாயலில் கதைகளைப் படிக்கின்றோருக்கு எமியின் கதைகள் வேறுப்பட்டிருக்கும். எல்லா உணர்வுகளையும் பாரபட்சமின்றி அள்ளித் தெளித்திடும் ரகம் எமி.

பல்வகையான படைப்புகளை எமியின் எழுத்தில் வாசித்து மகிழலாம்.


காதல், க்ரைம் திரில்லர், சைன்ஸ் பிக்ஷன், பெருந்திணை, மெடிக்கல், சமூகம், வயலன்ஸ், மேற்கத்திய பாணி, போகம், அழுகை, நட்பு, அமானுஷியம், மர்மம், திகில், ஐந்திணை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கதைகளுக்கு ஏற்ப, அதில் இடம்பெறுகின்ற காட்சிகளும் வசனங்களும் கதைமாந்தர்களின் குணாதிசியங்கள், பழக்க வழக்கங்கள், சுற்றம் மற்றும் சிந்தனையை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கதையின் வகையை பொறுத்தே அதன் போக்கும் இருக்கும்.

அதாவது, மென்காதல் வகை என்றால் அந்நாவல் முழுவதும் நாயகனும் நாயகியும் எல்லை மீறிடா காதலில் கசிந்துருகுவதும், அறமான முறையில் அரவணைத்து இணைவதும் என்ற பாணியிலேயே புனையப்பபட்டிருக்கும்.


இருப்பினும், சில கதைகளில் தார்மீகமற்ற முறையில் டயலாக்ஸ் மற்றும் காட்சி விரிவாக்கங்கள் வீரியம் மிக்கதாய் இருக்கும்.

அதாவது, போகத்தை (கலவியலை) முன்னிறுத்தும் கதைக்களம் என்றால், நாயகனும் நாயகியும் அவர்களின் முகிரத்திலான முக்குளிப்புகளை பகிங்கரமாய் பேசி செயல்படுத்துவது போலான வகையில் அமைந்திருக்கும்.

ஆகவே, விருப்பமான கதை வகையை எமியின் எழுத்தில் தேர்தெடுத்து படிப்பது என்பது புதுவித அனுபவமாய் அமையும்.

ஆதலால், முதல் இரண்டு அத்தியாயங்கள் அல்லது டீசரை மட்டுமே படித்து முழுகதையும் இப்படித்தான் என்ற தவறான புரிதலின் பேரில் சிறந்த நாவல்களை தவற விடாதப்படி இருப்பது சிறப்பாகும்.

அதனால், கதையை முழுவதுமாய் படித்து இன்புற்று பயனடைவதே சால சிறந்ததாகும்.

எமியின் தாரக மந்திரங்கள் இரண்டு.

புத்தகத்தின் அட்டையினைக் கொண்டு புத்தகத்தை எடைப்போடதீர்!

எதிர்பாராததை எதிர்பாருங்கள் எமியிடம்!

இவ்வளவே எமி தீப்ஸ்!


என் முந்தைய படைப்பிற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும். வாழ்த்துக்களும்.

நன்றி. வணக்கம்.
 

Author: KD
Article Title: கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top