- Joined
- Jul 10, 2024
- Messages
- 461
அத்தியாயம் 20
வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை வஞ்சியவள் இறுதியாய் கொண்டு போய் பார்க் செய்தது என்னவோ அவனின் தோள் தழுவி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான்.
விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர்.
ஆகவே, வர்மாவின் உணர்ச்சி நரம்புகளோ பெண்ணவளின் தொடுதலை கண்டறிந்து, மூளைக்கு சிக்னல்களை அனுப்பின.
எல்லைகள் தாண்டிட இருவருக்கும் இடையில் பெரிய தடுப்பெல்லாம் இல்லை. வாய் திறவாது உறும்பினான் கிளர்ச்சிக் கொண்ட இளம் வயமா அவன்.
மங்கையின் வதனத்தை அவனின் பெரிய முகங்கொண்டு விழிகள் மூடி செல்லங்கொஞ்சும் பாணியில் மென்மையாய் முட்டி மோதி உரசினான் வர்மா.
சுமார் 15 சென்டிமீட்டர், அதாவது 6 அங்குல நீளம் கொண்ட அவனின் விஸ்கர்கள் நாயகியவளை மேலும் படுத்தி எடுத்தது.
அவன் அசைய காரிகையின் கந்தரமெல்லாம் வர்மாவின் மீசை மூடி எதார்த்தமாய் அங்கும் இங்கும் உரசி அவளை நிலைகுலைய செய்தது.
மென்முனகலோடு ஏந்திழையவள் வர்மாவின் முகத்தை அவளின் பட்டுபோன்ற உள்ளங்கைகள் கொண்டு வருட, ஜிவ்வென்று இருந்தது நாயகன் அவனுக்கு.
அவனின் முகப்பகுதியில் ஏராளமான உணர்ச்சி நியூரான்கள் உள்ளன. பயணிக்கையில் காற்று அழுத்தத்தில் ஏற்படுகின்ற சிறிதளவு மாற்றத்தைக் கூட அவனால் மிக நாசூக்காய் கண்டறிய முடியும்.
அப்பேர்பட்டவன் மிருவின் தொடுதலில் கலவரமாகி போனான். அவளை அப்படியே தாங்கி பின்னோக்கி திரும்பியவன் அழகாய் அவளை கிடத்தினான் நிலத்தில்.
ஜடை பார்வை பார்த்த மிருவை ஹீரோ அவனும் ஓரக்கண்ணால் பார்த்தான். அவளின் முதுகுக்கு பின்னிருந்த அவன் கரத்தை மிக ஜாக்கிரதையாகவே வெளியெடுத்தான் வர்மா. எங்கே அவனின் நகங்கள் தன்னவளை காயப்படுத்திடுமோ என்ற பயமே அவனுக்கு.
திடிரென்று அலறியது மிருவின் பேக்பேக்குக்குள் இருந்த போன். குகையோ ஒலியை இரட்டிப்பாக்கியது. வர்மா அச்சம் கொண்டான். யாரோ வந்து விட்டார்கள் என்றெண்ணி.
முதலில் அலைப்பேசி கதறிட, சேயிழை அவளுக்குமே தூக்கி வாரித்தான் போட்டது. பின், சுதாரித்து கொண்டாள் மங்கையவள்.
யோசித்துக் கொண்டாள், அது அலாரம் பாட்டு இல்லை முக்கிய நிகழ்வின் ரீமைண்டர் என்று. சிக்னல் இல்லா காட்டில் எவன் அழைக்க போகிறான் இவளை.
உறும்பிய வர்மா பதற்றங்கொள்ள, மொய்க்குழல் அவளோ ஆணவன் நெஞ்சில் கரம் பதித்து ஆறுதலாய் அவனை சமாதானம் செய்தாள்.
அன்பு வருடல் கொண்ட தாரகையின் குண்டு விலோசனங்களை ஆழமாய் நோக்கிய வர்மாவோ, அதில் சிக்கிக் கொண்ட தலையாட்டி பொம்மையாய் அவளையே வெறித்தான் இமைக்காது பார்த்து.
மிருவின் விரல்கள் அவன் நெஞ்சிலிருந்து விலகி காதோரம் ஊறிட ஆரம்பித்தது, வர்மாவோ உணர்ச்சி பிடியில் திணறி கபாலத்தை அங்கும் இங்கும் அசைத்தான் கொஞ்சலான உறும்பல் கொண்டவனாய்.
மனம் ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பது போல் நனவை மறந்து கொண்டாட்டம் கொள்ள, முன்னிருந்தவன் முகம் முட்ட முன்னோக்கி மேலெம்பியவள், கிறங்கி கிடந்தவன் தேகம் உரச அவனை விலகினாள்.
வர்மாவோ சூடேறிய உடல் அனத்த என்செய்வதென்று தெரியாது குட்டி போட்ட பூனையாய் குகைக்குள்ளேயே நடையாய் நடந்திட ஆரம்பித்தான்,
காரிகையோ ஓரமாய் கிடந்த பேக்பேக்கை துழாவி எடுத்தாள் கையில் ஆர்ப்பாட்டம் செய்த போனை. மீண்டும் போன் ஸ்பீக்கர் திறந்தது.
சத்தம் காதை பிளக்க உறும்பினான் வர்மா. மிருவோ கவனத்தை பாட்டில் செலுத்தினாள் அவனை டீலில் விட்டு.
வரிகளை கேட்டு சிரித்துக் கொண்டே முதுகை குகையின் ஓரம் சாய்த்து அமர்ந்தவள் தலை தூக்க, வர்மாவோ நூலிடை இடைவெளியில் அவளருகே நின்றிருந்தான்.
அவன் இன்னும் நெருங்க, மிருவின் உடலோ ஓரம் போனது. கையிலிருந்த போனோ தரை தட்டியது. துடியிடையோ வர்மா நெருங்க சரிந்தாள் நிலத்தினில்.
ராஜா அவனோ ரோஜா அவளின் யாக்கையை கிரீன் கண்களால் மேய, குண்டு நயனங்களால் அவன் வீரியத்தை கிழித்தெறிந்த மிரு மோகன புன்னகை வீச, மொத்தமாய் விழுந்தான் அருள்மொழி வர்மா அவன் உறும்பல் எல்லாம் ஊமையாகிட, வல்வி அவளிடத்தில்.
ஆணவனின் பெருங்கரம் மென்மையாய் சுந்தரியின் தலை வருட, மையல் கொண்ட குயிலவள் மிழிகள் தானாய் சொருகியது. விரல்களோ வேங்கையவனின் பின்னந்தலையை இறுக்கியது.
வர்மாவோ அவனவளின் முகத்தை செல்லங்கொஞ்சலோடு உரசி, உள்ளங்கை கொண்டு அவன் சிரசு தாங்கி விழிகள் மூடினான்.
பாடலோ நிறுத்தாமல் அலறிக் கொண்டே இருந்தது.
''ஹே வாமா ட்விங்கிலு
கம் அண்ட் மிங்கிலு
நம்ம காட்டுல நான்தான் கிங்கு
மார்டன் மன்மதா
ஆசை கூடுதா கண்ண கட்டுதா
கிவ் மீ ரிங்கு
நான் சொக்குறேன்டி விக்குறேன்டி
ஒத்தையில நிக்குறேன்டி
நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தை கொத்த ஆட ரெடி..
உருகுதே மயங்குதே
ஏ தவிக்குதே ஏ தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவைதான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்!''

இடியுடன் கூடிய மின்னல் பளிச்சிட வனமோ மாரியில் குளித்தது.
அஃறிணையிலான ஆபத்தொன்றும் உயர்திணையிலான அசடொன்றும் காமமற்ற உறவொன்றில் திளைத்திட தொடங்கினர், அது காதலென்று அறிந்திடாமலே.
தீவியின் ஆரணியம்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 20
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.