What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
WhatsApp Image 2024-10-19 at 4.45.54 PM.jpeg


அத்தியாயம் 29

நிகழ்காலம்


இந்தரின் இல்லம்

அட்சரா கேட்டதற்கு இணங்கி அவளை மச்சானின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் வேதா.

அம்மணியோ பழைய சபதங்களை மறந்தவளாய் அண்ணி நிலாவோடு சகஜமாய் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் அடுக்களையில்.

ஆண்களோ வரவேற்பரையில் டீவி ஓடியும் அதில் லயிக்காது அளவளாவிட ஆரம்பித்தனர்.

''சோரி வேதா! உங்கக்கூட வாழ புடிக்காமத்தான் அட்சரா எங்கையோ போயிட்டான்னு நான் நினைச்சிட்டேன்!''

இந்தர்தான் சொன்னான் குற்ற உணர்ச்சியிலான குரலில்.

''கொட்டுற மழையிலே, உங்க வீட்டுக்கு, அர்த்த ராத்திரியிலே நான் வந்த பிறகுமா அட்சராக்கு என்கூட வாழ புடிக்கலன்னு உங்களுக்கு தோணுச்சு?!''

தங்கை மகனை கையிலேந்தி கொஞ்சி கொண்டிருந்த மனைவியை ஜாடை பார்வை பார்த்த வண்ணம் மச்சானிடம் வினா தொடுத்தான் வேதா.

''தப்புதான்! நான் என் தங்கச்சியை தப்பா நினைச்சிருக்கக்கூடாது! போகட்டும்னு அப்படியே கைகழுவியிருக்கவும் கூடாது! தேடியிருக்கணும்! இல்லே, முயற்சி பண்ண உங்களுக்காவது உதவி பண்ணியிருக்கணும்! மன்னிச்சிருங்க வேதா! செய்தி தெரிஞ்சு அம்மா படுத்த படுக்கையான ஆத்திரத்துலதான், அட்சரா விஷயத்தை கண்டுங்காணாமே இருந்திட்டேன்!''

என்றவனோ தொனியில் வருத்தம் கொண்டு பேச, மென்புன்னகை கொண்ட வேதாவோ,

''விடுங்க இந்தர்! பழசெல்லாம் இப்போ எதுக்கு?!''

''இல்லே வேதா, என்ன சொன்னாலும் மனசு ஏதோ ஒரு மாதிரி உறுத்துது! ஒரு அண்ணனா நான் எப்போதுமே அட்சரா பக்கம் நின்னது இல்லே! ஆனா, அவே அப்படி இல்லே! சின்ன வயசுலேருந்தே எனக்காக நிறைய அடி, திட்டெல்லாம் கூட வாங்கியிருக்கா! ஏன், அவே உங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டதே எனக்காகத்தான்!''

என்றவன் வேதாவின் விழிகளை ஆழமாய் நோக்கி,

''நல்லா யோசிச்சு பாருங்க வேதா, பத்து இருபது பேருக்கு சம்பளம் கொடுக்கற அளவுக்கு படிச்ச பக்குவமான பொண்ணு, விருப்பமில்லாதே ஒன்னே எதுக்காக அவளே வருத்திக்கிட்டு பண்ணிக்கணும்?! அவே நினைச்சிருந்தா, யாரை பத்தியும் எதை பத்தியும் கவலைப்படாமே எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அப்பவே போயிருக்கலாமே?! ஆனா, அட்சரா அப்படி பண்ணலே! கோழைத்தனமோ, இல்லே பயமோ இல்லே! என் மேலே அவளுக்கு இருந்த பாசம்! அவளுக்கு என்னே ரொம்ப புடிக்கும் வேதா! ஆனா, நான்தான் சுயநலவாதியாவே இருந்திட்டேன்! அதுவே எனக்கு இப்போதான் புரிஞ்சது!''

என்றவன் கண்கள் குளமாக,

''அட்சரா இங்க வாங்கே!''

என்ற ஆளானோ மச்சானின் கில்டி பீலிங்க்ஸுக்கு ஒரு முற்று புள்ளி வைத்திட விரும்பியவனாய்,

''உங்க அண்ணிக்கிட்டே ரொம்ப பேசிட்டிங்க! இப்போ, உங்க அண்ணன்கிட்ட பேசுங்க! நான் போய் என் தங்கச்சியை மீட் பண்ணிட்டு வறேன்!''

என்றவனோ துணைவியின் கையிலிருந்த மருமகனை வாங்கிக் கொண்டவனாய் கிட்சன் நோக்கினான்.

''என்னண்ணா ரொம்ப சீரியஸா ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க போலே?!''

''எல்லாம் அட்சரா காணாமல் போனதை பத்திதான்!''

''அதான், அண்ணி நல்லப்படியா திரும்ப கிடைச்சாச்சே! அப்பறம் இன்னும் என்னவாம் அவருக்கு?!''

என்றவளோ வேதாவிற்கு ஜூஸ் கப் ஒன்றை தாரம் வார்க்க,

''முன்னாடி தேடாமல் விட்டதை நினைச்சு இப்போ வருத்தப்படறாரு!''

''கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?!''

என்ற நிலாவோ அவள் கப்பை கலியாக்க, வேதாவோ மௌன புன்னகைக் கொண்டு மீத ஜூசை பருகிட ஆரம்பித்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த தங்கையிடமோ,

''சோரி அட்சரா!''

என்ற இந்தர் அவனின் குற்ற உணர்ச்சியிலான மன பாரத்தை இறக்கி வைக்க,

'' எதுக்கு?!''

என்றவளோ புரியாது வினவினாள்.

''கேட்க தோணுச்சு! அதான்!''

என்றவனோ வாஞ்சையாய் முதல் முறை அவள் உச்சந்தலையாய் வருடிக் கொடுக்க,

''நீங்களும் நானும் பேசிக்க மாட்டோமா?! சண்டையா நமக்குள்ளே?!''

என்ற பகினியோ எதார்த்தமாய் கேட்க, ஆமாம் என்று குறுநகையோடு தலையாட்டிய இந்தரோ,

''சண்டை போடாத நாளே இல்லே! ஆனா, எதுவுமே சீரியசான சண்டை இல்லே!''

என்றுக்கூற முகிழ்த்தவளாய் அவன் உள்ளங்கையை பற்றிய அணங்கோ,

''பழசெதுவும் எனக்கு வேண்டாம்! இப்போ இருக்கற இந்த சந்தோஷமே போதும்! இது எனக்கு மறக்காமல் இருந்தால் போதும்!''

என்றவளாய் கலக்கம் கொண்டிட, அவள் அருகில் சென்றமர்ந்த அண்ணனோ முதல் முறை தங்கையை நெஞ்சோடு சாய்த்து கொண்டான் தோளை தடவிக்கொடுத்து ஆறுதலாய்.


******************************************


நிகழ்காலம்


இந்தர் இல்லத்தின் கெஸ்ட் ரூம்

அண்ணன் தங்கையை பார்க்க வந்த அட்சராவையும் வேதாவையும், தம்பதிகள் இருவரும் அன்றைய இரவு அவர்களின் மாளிகையிலேயே தங்கிட சொல்லி அன்பு கட்டளை விடுத்தனர்.

அதை மீற முடியா பாசமலர்களோ, ஆர்டர் போட்டவர்களை குஷிப்படுத்த வேண்டி சம்மதம் தெரிவித்தனர் அன்றைக்கு அங்கேயே பொழுதை கழிப்பதாய் வாக்குறுதி அளித்து.

குடும்பம் இணைந்த சந்தோஷத்தை கொண்டாடிட விரும்பிய வேதாவோ, டின்னரை வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்றுக்கூறி ருசிகரமான செட்டிநாட்டு உணவகம் ஒன்றிற்கு அனைவரையும் அழைத்து போனான்.

வயிறு நிரம்ப வீடு திரும்பியவர்களோ, நள்ளிரவு வரை கதை பேசி, மணி ஒன்றாக அவரவர் படுக்கையறை நுழைந்தனர், தூக்கம் கண்ணை எட்டிப்பார்க்க.

குளியல் ஒன்றை போட்டு, கமகம கமலமாய் நைட்டியில் மஞ்சம் சரிந்த அட்சராவோ அர்ச்சனை மலராய் காத்திருந்தாள் பூஜையை எதிர்ப்பார்த்து.

வேதாவிற்கோ மனைவியின் எண்ணம் புரிந்தாலும் அதை நிறைவேற்றும் நிலையில் அவனில்லை என்பதோ பெரும்பாடாய் போனது.

கண்ணை மூடி குப்பிறப்படுத்துக் கொண்டவனின் கேசம் கோதிய மணவாட்டியோ,

''ரஞ்சகன், ஐ லவ் யூ!''

என்று கிசுகிசுத்தாள் புருஷனின் காதோரம் கிறங்கிய குரலில் அவன் முதுகின் மேல் அவள் உடலை ஒட்டி உரசியவளாய்.

என்னதான் கட்டியவளின் நெருக்கம் ஆணவனை சூடேற்றினாலும், அதுவெல்லாம் அவனை முருகேற்றிடாது மாறாய் நேத்திரங்கள் கலங்கவே வழி வகுத்தன.

''வேதா, பீரியட்ஸ் நேத்தோட முடிஞ்சிருச்சு! நான் மதியமே தலைக்கு ஊத்திட்டேன்!''

என்றவளோ மோகம் கொழுந்து விட்டு எரிய, எக்கி வைத்தாள் முத்தம் அவன் கன்னத்தில்.

விழியோரம் வழிந்த கண்ணீரை தலையணையில் முகம் உரசி துடைத்துக் கொண்ட வேதாவோ, இருட்டிய அறையில் மல்லாக்க திரும்பி, தாரமவளை கைகளால் வளைத்துக் கட்டிக்கொள்ள,

''வேதா, நாமே நம்ப வாழ்க்கையே இதுக்கு முன்னாடி எப்படி வாழ்ந்தோம்னு எனக்கு நினைவில்லே! ஆனா, இதுக்கு மேலே நாமே ஒரு நல்ல கணவன் மனைவியா வாழணும்னு நான் ஆசைப்படறேன்!''

என்றுச் சொல்லி மென்மையாய் ஆணவனின் மார்பில் விரல் கோலம் கொள்ள, மூச்சு முட்டியது வேதாவிற்கு தேகமோ அனல் புழுவாi துடிக்க.

''என் மனசு முழுக்க நீங்கதான் இருக்கீங்க வேதா!''

என்ற மணவாளியோ உரிமைக்காரனின் முகம் நெருங்க,

''வேண்டாம் அட்சரா!''

என்றவனோ விருட்டென எழுந்தமர்ந்தான் அசவுகரியமாக உணர்ந்து.

''என்னாச்சு வேதா?!''

என்ற பெதும்பையின் குரலோ சுணங்க,

''இல்லே அட்சரா, அவசரப்பட வேண்டாம்னு நினைக்கறேன்!''

என்றவனோ விளக்கை போட்டவளை சங்கடமான பார்வைகள் பார்க்க,

''சட்டத்துக்கும், சம்பிரதாயத்துக்கும் நாமே எப்போவோ தம்பதிகள்தானே வேதா?! அப்பறம் எதுக்காக இன்னமும் எல்லாத்தையும் தள்ளி போடணும்?!''

என்ற வதுகையோ காதலான ஏக்கத்தில் வினவ, மெய்யை ஜீரணிக்க முடியா நல்லவனோ உள்ளுக்குள்ளேயே புழுங்கி செத்தான் அவன் நிலை கொண்டிருக்கும் அவலத்தை பகிங்கரப்படுத்திட இயலாது.

''ரொம்ப அசதியா இருக்கு அட்சரா!''

என்றவனோ பட்டென டாப்பி மாற்ற,

''ஐயோ! நான் ஒருத்தி! சோரி வேதா! முதல்லே நீங்க நல்லா படுத்து தூங்கி ரெஸ்ட் எடுங்க! இதை அப்பறம் பார்த்துக்கலாம்!''

என்றவள் இவ்வளவு நேரமாய் கொண்ட ஆர்வத்தை காணாதாக்கி, சாமானிய மனுஷியாய் பேச,

''சோரி அட்சரா!''

என்றவனை வார்த்தைகளற்ற புன்னகையால் வதைத்து, மல்லாக்க சரித்து, நெஞ்சில் புதைந்து நயனங்கள் மூடினாள் ஏந்திழையவள்.

வேதாவோ, பாரமான நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான் கோற்றொடி அவளை எத்தனை நாளைக்கு இந்நாடகம் தொடரும் என்றெண்ணி.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 29
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top