- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
Meenakshi Murugappan #Badass #review
இந்த போஸ்ட் ரொம்ப நாளா போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. கதை படிச்சு ஆறு மாசம் ஆச்சு.. கதை பெரிய கதை. ஆயிரம் பக்கங்களுக்கு அறிவியல் புனைவா? எப்படி முடியும்.. எனக்குலாம் 25k எழுதுறதுக்குள்ள நாக்கு தள்ளிறிது. இப்படித்தான் படிக்க ஆரம்பித்தேன்.
விறுவிறுப்பான கதை. நல்ல த்ரில்லர். கற்பனைக்கு எட்டாத அறிவியல் புனைவு. ஒரே கதையில் நிறைய விஷயங்கள் சொல்லியிருக்காங்க. கேதர்நாத் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம். ஜெர்மனி, மலேசியன்னு ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரலாம். நிறைய விஷயத்தை ஒரே கதையில் கொடுக்க முயற்சி செஞ்சிருக்காங்க. அதில் வெற்றியும் பெற்றிருக்காங்க.
இந்த கதையில் வரும் படாஸையோ ஔகத்தையோ நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்புண்டு. ஆனால் எனக்கு படிச்சது சுரஜேஷ் தான். அவனோட கேரக்டர் இன்ட்ரோவில் இருந்து கடைசிவரை அவன் மட்டும்தான் ஒரே மாதிரி இருந்தான். ஆரம்பத்தில் அவன் வில்லனாக இருப்பானோ என்று எண்ணினேன்.
ஆனால் படாஸ் யாரென்ற கேள்விக்கு அவன் ஒரு விடை கொடுத்தான். அண்ணி விசுவாசத்தில் படாஸ் யாராக இருக்கக் கூடும் என்று ஒரு புதிர் விடுபட்டது எனக்கு. இதுக்கு மேல விளக்கமா சொன்னா கதையோட உயிரை ஒற்றை வரியில் சொல்லிவிடுவேன் என்ற காரணத்தால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
படாஸ் யாரென்று விடை கிடைத்ததும் கதை முடிந்தது. ஆனால் ரைட்டரே... ஒருத்தன் யாருன்னா சொல்ல 500 பக்க கதையில் முன்னூறு பக்கங்கள் மண்டையை கழுவி, பின் இருநூறு பக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் யாரென்று சொல்லலாம். ஆனால் இப்படி ஆயிரம் பக்கங்களுக்கு எங்கள் மண்டையை கழுவுவது நியாயமில்லை.
எஸ். ஜே. சூர்யா சொல்ற மாதிரி இருக்கு.. ஆனா இல்லைன்னு சுத்தவிட்டு, புதுசா ஒண்ணு சொல்லி கதையை முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
கதையில் பிடித்தது:
1. நிறைய சயின்ஸ் க்ளாஸ் எடுத்திருக்காங்க. சிலருக்கு இதுவே நெகட்டிவா தோணலாம். ஆனா என்னை நிறையவே படிக்க வச்சாங்க. எனக்கு சயின்ஸ் ரொம்ப பிடிச்சதால், நான் கதையை மட்டும் படிக்கல.. கதையில் வரும் அறிவியல் கருத்துப்படிவங்களில் எதெல்லாம் சாத்தியம், இப்பொழுது வளர்ச்சி என்ன என்று பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் சேர்த்து படிக்க வைத்துவிட்டார்.
2. கேதர்நாத் பார்ட் - அந்த இடங்களுக்கு போய் வந்த அனுபவம் கிடைத்தது.
3. கீத்துவின் தைரியம்.
4. படாஸ் யாரென்று தெரிந்து இடம்.
5. முன்னும் பின்னும் கதை சொல்லியிருந்த விதம்.
6. நிறைய தமிழ் வார்த்தைகள்.
ஔகத் என்னதான் கீத்துவின் மேல் காதல் வைத்திருந்தாலும், கீத்து வஞ்சிக்கப்பட்ட தாங்கவே எனக்கு தோன்றுகிறது.
ஆமா... ஔகத் என்னதான் படிச்சிருக்கான். ஆ.. வூன்னா மருந்து கண்டுபிடிக்கிறான். ரோபோ வச்சிருக்கான். தனியா லேப் வச்சிருக்கான். முதல்ல படிச்சானா? முப்பது வயசுக்குள்ள எவ்ளோமா படிக்க முடியும். எவ்ளோ கண்டுபிடிக்க முடியும். சரி.. அவ்ளோ படிச்சானே.. ஊருக்கு உதவுற மாதிரி ஏதாச்சும் செஞ்சானா? அந்த வகையில் ஔகத்தின் மேல் நிறைய கோபம்.
நானும் பயோடெக் படிச்சிட்டு ஜெனிட்டிக் இன்ஜினியரிங்ல ஏதாச்சும் லேப் அசிஸ்டன்டா வேலை கிடைச்சா கூட பரவாயில்லைன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு வரை அது கனவு தான். முடிஞ்சா உங்க ஹீரோவை ஒரு வேலை போட்டு குடுக்க சொல்லுங்க.
கதையில் கொலையும் ரொமான்ஸ் பார்ட்டும் மாறி மாறி வந்தது. இடையில் வந்த ரொமான்ஸ் பார்ட் கொஞ்சம் சுருக்கி சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம்.
18+ கதை எல்லா வகையிலும்... கதையில் கொலை நல்லா கலையா செஞ்சிருக்காங்க.. காதலும் அப்படித்தான்... சயின்ஸ் பார்ட்டும் அப்படித்தான்... எல்லாம் ஓவர் டோஸ்.. 😍😍😍😍
படாஸ் முழுதொகுப்பு:
https://amzn.in/d/d0Ojy8z

Author: KD
Article Title: படாஸ் - மீனாட்சி அடைக்கப்பன்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.