- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
மடக்கழுதை!
ஆகப்பெரும் முட்டாள்தனம் யாதெனில், கழுதையால் பொதி மட்டுமே சுமக்க முடியும் என்றறிந்தும், அதை புரவியை போல் ஓட வைத்திட முடியும் என்று போலி நம்பிக்கை கொண்டு காலத்தை கடத்துவதாகும்!
கழுதையால் நடக்க முடியும், சுமை கொண்டு கால் வலித்தாலும், சலிக்காது.
ஆனால், முடியாத பட்சத்தில், சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது சில சிக்னல்கள் காண்பித்தாலும் ஒரு கட்டத்தில் பொத்தென விழுந்திடும்.
அதை குதிரையென நம்பிய நம்பிக்கையோ அங்கனமே பொய்த்துப் போகும். அதை நம்பி கொண்ட, பல மையில் தூர பயணம் தடைப்பட்டுப்போகும்.
ஆனால், விழுந்த கழுதைக்கோ எதை பற்றியுமே கவலை இல்லை, இருக்காது. களைப்பு தீர எழுந்து மீண்டும் அதே சுமையோடு நடக்க மட்டுமே ஆரம்பிக்கும்.
ஆனால், அதன் விழுகையால் ஏற்பட்ட எவ்வித நஷ்டத்தை பற்றியும் அது துளியும் அறியாது. எவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற நிலை மட்டுமே அதற்கு.
ஆனால், பாவம் அதை நம்பி திட்டங்கொண்ட ஜீவனின் நிலைமையோ பரிதாபமே. காரணம், இழப்பென்னவோ கழுதையை நம்பிய, அதுவும் புரவி என்று நம்பிய முட்டாளுக்கே.
ஆகவே, எக்காரணத்தை கொண்டும் கவனமின்மை, தவறுக்கு மேல் தவறு, அலட்சியம், இப்படி பல விடயங்களை தொடர்ந்து செய்து அதற்கான திட்டுகளும், அறிவுரைகளும் புளித்து போகும் வரையிலும் உங்களிடமிருந்து தொண்டை தண்ணீர் வற்ற வாங்கிய பின்பும் அப்படியான ஆட்களிடம் எவ்வித மாற்றமும் இல்லையெனில், உடனடியாக அவர்களை விட்டு விலகிடுங்கள்.
காரணம், அப்படியானவர்கள் கழுதைக்கு ஒப்பானவர்கள். தப்பானவர்கள் இல்லை. மீண்டும் வலியுறுத்துகிறேன். அவர்களால் அவர்களுக்கான பணியை மட்டுமே செவ்வென செய்திட முடியும்.
அதாவது மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புது திறன்களில் ஜொலித்திட வாய்ப்பு வாய்க்காதவர்கள்.
அதீத திணித்தங்கள் அவர்களை பீதியடைய செய்யும். வேகம் எல்லாம் அவர்களுக்கு ஈடுக்கட்டிட முடியா ஒன்று. இலவச இணைப்பாய் கணைப்பிற்கு பதில் புலம்பல் கொள்வர்.
ஆனால், தட்டையான எண்ணத்தோடு தரணி வென்றிட முடியாதென்று அவர்கள் உணர மறுப்பர். இருப்பினும், ஆசை கொள்வர். பரவாயில்லை. கொள்ளட்டும்.
கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது போல், அவர்களும் அவர்களுக்கான சிறப்பம்சத்தை செம்மைப்படுத்தி புகழடையட்டும். அதில் ஒன்றும் தவறில்லை. அவர்கள் வட்டத்துக்குள் விண் தொடட்டும்.
ஆனால், அவர்களை போன்றோரை நம்பி ராக்கெட் போலான யாரும் அவர்களோடு கைகோர்த்திடாதீர்கள். நட்டம் உங்களுக்குத்தான்.
மீண்டும் சொல்கிறேன். கழுதைக்கு நிஜமாகவே கற்பூரத்தின் நறுமணம் மட்டுமல்ல அதன் தற்குறித்தனங்களால் விழைகின்ற இழுக்குகள், அவமானங்கள், துன்பங்கள் இப்படி எதை பற்றியுமே கவலைக் கிடையாது.
உங்களையும் கொஞ்சங்கொஞ்சமாய் வலுவிழக்க வைத்து மந்தமாக்கிடும் சாத்தியமும் உண்டு. சேர்க்கை அப்படி.
தனிக்காட்டு ராஜாவாக கூட இருந்திடலாம்.
ஆனால், அவசரத்தையும் அவசியத்தையும் சரிவர அலசி ஆராய்ந்திட தெரியா குழப்பவாதியான கழுதைகளோடு கொண்டிருக்கும் உறவானது பீபீயை ஏற்றி உங்களுக்கு சங்கை கூடிய சீக்கிரத்திலேயே பார்சல் செய்திடும்.
ஆகவே, கழுதைகளை நம்பி, வாழ்க்கையில் உங்களின் பொன்னான நேரத்தை இழந்திடாதீர்கள்!
கழுதைகள் ஒருக்காலும் குதிரைகள் ஆகாது!
பின்குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே ஆகும்! இதை யாரும் ஏற்றுக்கொள்ளவோ ஆமோதிக்கவோ வேண்டுமென்ற அவசியம் கிடையாது என்பதை தெளிவாய் தெரிவித்துக் கொள்கிறேன்!
நன்றி. வணக்கம்.

Author: KD
Article Title: மடக்கழுதை!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.