பெண் :
ரசனையை நீ ரட்சித்தாயா ?
இல்லை
ரசனை உன்னை ரட்சித்ததா ?
உன் ரசனையை
எழுத்துக்களில் மட்டும் உலகறிந்ததை
எனக்கு ரணங்களாகவும் பற்பதங்களாகவும்
காட்டிவிட்டாதே !
ஆண் :
நிச்சயம் ரணங்களாக காட்டும் எண்ணமில்லை !
பற் பதங்களாக காட்டுவது என் கையில் இல்லை !
- சின்சானின் சின்ராசு -
பெண் :
நீராடி வா !
நாம்
மீண்டும் விளையாடே !
ஆஹ்... ஆஹ்.... வேண்டாம் !
நிறுத்தி வையடா கண்ணா !
உன் உதோட்டோறா புன்னகையை !
நான் சொன்னது
'அந்த' விளையாட்டை அல்ல !
கண்ணாம் பூச்சி ஆட்டம் !
ஆண் :
கண்ணாமூச்சி ஆடுவதும்
பிரிதொன்றின் தொடக்கம் தானே !
- சின்சானின் சின்ராசு -
பெண் :
மழை வேண்டாம்
உனக்கு
நான்
போதும் !
நீ
சூடு தணித்து
குளிர்காய்ந்திட !
ஆண் :
குளிர் காய்ந்திடுவோமா ?
பெண் :
நீ ஒரு மூலையிலும்
நான் ஒரு மூலையிலுமா ?
- சின்சானின் சின்ராசு -
மழை வேண்டாம்
உன் சிரிப்பு போதும் !
குளிர் வேண்டாம்
உன் தீண்டல் போதும் !
உடை வேண்டாம்
உன் கரம் போதும் !
நிர்வாணமாக்கிடு
உன் மூச்சால்
என் சிந்தையை !
நிலைகுலைத்திடு
உன் பார்வையால் !
என் பெண்மையை
தெவிட்டிடாமல்
எனை துவண்டவை !
- சின்சானின் சின்ராசு -
நான் நினைக்கவில்லை
இப்படி ஆகும் என்று !
நீ
என்னை
மிக நெருங்குகிறாய் !
உன்னை
என்னால்
ஜெயித்திட முடியாது !
காரணம்
நீ ஆண் என்பதால் அல்ல !
நான் உன்னடிமை என்பதால் !
உன் எழுத்துக்களின் அடிமை என்பதால் !
- சின்சானின் சின்ராசு -
உன் கண்கள்
எதை நோக்கியதோ தெரியாது !
என் கண்கள்
உனை
உன் இமைகளை
அதன் விழிகளை
உன்னழகை
உன் வசீகரத்தை
உன் நெற்றித் தொடும்
கேசத்தை
அந்த மெல்லிய
சந்தனக் கீற்றை
ரோஜா செடியின் முள்ளான
உன் தாடியை
உன்மணம் மங்காத
சந்தன சட்டையை
இட்லியோ புட்டோ
எனக்கு பிடித்த
ஏதோ ஒன்றாய்
உன் சிரிப்பை...