- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
தாழ் திறவாய் ததுளனே! : 6
''பாட்டி! பாட்டி!''
ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி.
''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!''
தாத்தா பேரனை அடக்கினார்.
''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு முத்தம் கொடுப்பா?! அப்படி கொடுக்க நினைக்கறே பொண்ணு எப்படி ஒழுக்கமான பொண்ணா இருப்பா?!''
''அதுக்காக நீ அந்த பொண்ணே அப்படித்தான் பேசுவியா?!''
''அவ்ளோதான் பேசினேன்னு சந்தோஷப்படுங்க! இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா, செவினி அறையே விட்டிருப்பேன்!''
ராகன் ஆவேசமாய் கத்தி கொண்டிருக்க, பாட்டியோ தேநீர் கப்புகள் அடங்கிய தட்டோடு அவர்களை நோக்கி வந்தார்.
''நடந்தது நடந்தாச்சு! இதுக்கு மேலே என்ன ஆகணும்னு பாருங்க! அதான் எல்லாருக்கும் நல்லது!''
''உன் பேரன் மண்டைக்கு உரைக்கர மாதிரி இன்னும் அழுத்தமா சொல்லு! மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிடான்னா, முடியாதாம்!''
தாத்தா குமுறினார்.
''நான் ஏன் கேட்கணும்?! எதுக்கு கேட்கணும்?! நான் கேட்க மாட்டேன்!''
முறுக்கிக் கொண்ட பேரனின் கையிழுத்து தேநீர் கப்பை கொடுத்தார் பாட்டி சுடர்.
''இதான்! இதுதான்! எல்லா பிரச்சனைக்கும் காரணம்! இந்த முன்கோபமும், அவசரமும் உன்னே குட்டி சுவராக்கிடும் ராகன்!''
தாத்தா கதிரவன் சீரியஸ் தொனி கொள்ள,
''நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா!''
கணவரை அதட்டிய பாட்டியோ,
''ஒரு சோரிதானே?! கேட்டுடேன் ராகன்!''
பாட்டியோ செல்லக் கோரிக்கை வைக்க,
''நீங்களுமா பாட்டி?! ஏன், எல்லாரும் என் மேலதான் தப்புங்கற மாதிரியே பேசறீங்க?! இதே நான் அந்த பொண்ணே கிஸ் பண்ண போர்ஸ் பண்ணிருந்தாளோ, இல்லே நானாவே உரிமை எடுத்துக்கிட்டு கொடுத்திருந்தாளோ அந்த பொண்ணு சும்மா இருந்திருப்பாளா?! சொல்லுங்க?! அவளுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?!''
முறைத்துக் கொண்டவன் புற்தரையை கடுப்போடு வெறிக்க,
''இப்போ பிரச்சனை முத்தமில்லே! நீ பேசின பேச்சுதான்! உனக்கு சங்க்கியா நடந்துக்கிட்டது புடிக்கலன்னா, அதை நீ நாகரீகமான முறையிலே சொல்லிட்டு கிளம்பி வந்திருக்கலாம்!''
கையிலெடுத்த வடையை கடிக்காமலேயே, வம்பு வளர்த்து வந்த பேரனை கடித்தார் தாத்தா.
''என்ன தாத்தா இது?! சுத்த மடத்தனமா இருக்கு! கோபத்துலே வாயிலே என்ன வருதோ அதைத்தானே பேச முடியும்?! சென்சார் போட்டு நிறுத்தி, வார்த்தை தேடியா ஒருத்தரே திட்ட முடியும்?!''
எழுந்து விட்டான் நாயகன் அவன், தாத்தா தொடர்ந்து அவனை அவமானப்படுத்திய பனிமொழிக்கே சப்போர்ட் செய்ய.
''சரி ராகன், பேசாமே அந்த பொண்ணே நம்ப வீட்டுக்கு வர சொல்லுவோம்! தப்பு, சரியெல்லாத்தையும் ஒதுக்கி வெச்சிட்டு, ரெண்டு பேரும் நடந்த எல்லாத்தையும் மறந்து, ஆளாளுக்கு மன்னிப்பு கேட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடுங்க, சரியா?!''
''என்னே ஆம்பளையே இல்லன்னு சந்தி சிரிக்க வெச்ச அவக்கிட்ட சோரி கேட்டு கொஞ்சி குலாவ சொல்றீங்களா பாட்டி?! அது நான் செத்தாலும் நடக்காது!''
என்ற ராகனோ அதற்கு மேலும் அங்கு நில்லாது நடையைக் கட்டினான்.
முத்த சண்டையில் முகத்துக்கு நேராய் டாப் மாடல் அழகியை கீழ்தரமாய் பேசிய ராகனை பழி தீர்த்திட நினைத்தாள் சங்க்யா.
உடனடியாக எக்ஸ் தளம் தொடங்கி இன்ஸ்டா வரை லைவ் போனாள்.
பட்டும் படாமலும் டேட்டிங் போன அனுபவம் என்ற டேக்லைனோடு அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள் துடியிடையவள்.
கதை சொல்லியாய் அங்கணை அவள், வந்திருந்த ஆடவனின் பெயர் கூறாது, இதழ் கோர்க்க முயன்ற சம்பவத்தை சொல்ல, ஆர்வமாய் கேட்ட பலரும் அதற்கு பின்னாடி நடந்த சம்பவங்களை கேட்டு சினம் கொண்டனர்.
சிலர் மட்டும் விதிவிலக்காய் சங்க்கியாவின் செயல் தவறென்று கருத்து கூற, பெரும்பான்மையான விசிறிகளோ அவளுக்கு ஆதரவளித்தே காமெண்ட் செய்தனர்.
ராகனின் ஐடெண்டிட்டியை மொத்தமாய் வெளிப்படுத்தா அம்மணியோ, அவனின் அங்க அடையாளங்களை மட்டும் வேண்டுமென்றே சொல்லி மக்களை உசுப்பி விட்டாள்.
கூடவே, சிறு துருப்பாய் கடந்தாண்டுக்கான சிறந்த இளம் தொழிலதிபர் பட்டம் வாங்கிய உத்தமன் என்று வேறு நக்கல் கொண்டாள்.
இப்படியான ஹிண்டுகளை கொண்டு விராகன்தான், டாப் மாடலை தரைகுறைவாய் பேசிய அயோக்கியன் என்ற செய்தியோ காட்டு தீப்போல் பரவி சோஷியல் மீடியாவையே பரபரப்பாக்கியது.
ஒளியவன் கம்பெனி பி. ஆர்ஸ். சோ மேட்டரை அறிந்த நொடி நேரந்தாழ்த்தாது மறுப்பு அறிக்கையை தயார் செய்தனர்.
ஆரோன் அதை சரிப்பார்த்து ஆபிசியல் அறிவிப்பு செய்திடும் முன்னாடியே, எவனோ ஒரு நல்லவன், தம்பி பேசிய அடுக்குமொழி டயலாக் கொண்ட காணொளி காட்சிகளை முகநூலில் பதிவிட்டு ஒட்டுமொத்தமாய் மூத்தவனின் பிளானில் கல்லை போட்டான்.
பொறுத்தவனோ இனி கீ போர்ட் வாரியர் பார்போமான்ஸ் செல்லாது என்றுணர்ந்து, நேரடியாக களத்தில் குதிக்க திட்டங்களை வகுத்தான்.
ஆனால், ஷேர் ஹோல்டர்ஸ்களோ அதற்குள் ஆரோனின் கழுத்தை நெறிக்காத குறையாய் ஆணவனின் காதை குதறிட ஆரம்பித்தனர், பங்கு சந்தை வீழ்ச்சியை சந்திக்க விரும்பாது.
கூட்டணிகளின் அவநம்பிக்கையை வளர விட யோசிக்கா சி.இ.ஓ.வோ, உடனடியாக அவர்களை ஒன்றிணைத்து பேச்சு வார்த்தை நடத்தி நிலையை சமன் செய்தான்.
ஆனால், அவனின் கெட்ட நேரம், வந்து விழுந்தது அடுத்த ஆப்பாய், டாப் மாடலின் அதிரடியான பிரஸ் நியூஸ் சங்கதிகள்.
பத்திரிக்கைகள் தொடர்பு கொள்ள, உலாவிய செய்திகள் அத்தனையும் நிஜம்தான், காணொளி உட்பட, என்று சங்க்கியாவோ பெருமையாய் வாக்குமூலம் கொடுத்தாள்.
அதுவோ, நாளேடுகளின் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தி ஆகிப்போனது, கொட்டை எழுத்தில்.
ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் மொத்தமாய் எல்லா பக்கமும் முட்டு சந்தாய் போயினும், சின்னவன் ராகனை ஒரு வார்த்தை கூட என்ன, ஏதென்று கேட்காது, சொல்லாது, அரணாகவே நின்றான் அண்ணண் ஆரோன் அவன்.
தாழ் திறந்திடுவான் ததுளனே...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.