- Joined
- Jul 10, 2024
- Messages
- 476
அத்தியாயம் 1
விடிந்து பல மணி நேரம் ஆகி போச்சு. இருந்தும் இருட்டிய அறைக்குள் துயில் கொண்டிருந்த இரு ஜீவன்களுக்கும் இன்னும் விடியவே இல்லை.
கதிரவனும் வயிறு பசியெடுக்க, மதிய உணவுக்கு கிளம்பி போய்விட்டான். அவன் அப்படிக்கா போன கேப்பில், வருணன் கொஞ்ச நேரம் ஆட்டங் காட்டிட நினைத்து; இடிகளை மேளமாய் இறக்கி மழை கச்சேரி ஒன்றை நிகழ்த்தினான்.
அலறியது நாயகனின் போன்.
கண்ணை கசக்கி தேய்த்தவன், சத்தம் போட்ட அலைப்பேசியை பக்கமிருந்த மேஜையில் கையுரசி தேடிட; ஒன்றும் தட்டுப்படவில்லை ஆணவனின் விரல்களில்.
வேறு வழியின்று கண்களை பூனையாட்டம் சுருக்கி திறந்து, மெல்லமாய் விழிகளை சுழல விட்டவன்; தரையில் கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த அவனின் காற்சட்டையை இடது கர விரல்களால் எக்கி பிடித்து இழுத்தான் அவன் வசம்.
நச்சென்றிருந்த ஆணவனின் நெஞ்சில் துஞ்சியிருந்தவளோ, போர்வையை நெஞ்சோடு இன்னும் இறுக்கிக் கொண்டு வலப்பக்கம் திரும்பிப் படுத்தாள்; தூக்க கலக்கத்தில்.
ஆணவனோ கத்திக் கொண்டிருந்த அலைப்பேசியை தூக்கி வலது காதில் வைத்தான். பக்கமிருந்த அபிமானமான அவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து, ஹ்ம்ம் கொட்டினான் போனின் மறுமுனை குரலுக்கு.
''பிக் பாஸுக்கு இன்னும் கோபம் போகலையோ...''
ரிசீவர் குரல் காதில் தேனாய் பாய்ந்திட, நித்திரா தேவியோடு டேட்டிங் கொண்ட பட்டுக்குஞ்சம் அவனுக்கோ உரைத்திடவே இல்லை; உரைக்க வேண்டியது. அவ்வளவு தூக்கம் மைனருக்கு.
''ஹ்ம்ம்...''
என்றவனோ இப்போது கூட விழிகள் விரிக்காதே கிடந்தான்.
''சோரிடா... பீஸ்ட் குட்டி... லஞ்சுக்கு உனக்கு புடிச்ச சிக்கன் ரெண்டாங் (Chicken Rendang) பண்ணிருக்கேன்... எங்க இருந்தாலும் சீக்கிரம் வீட்டுக்கு வா. அப்பறம்... மாடர்ன் கியூட்டி (modern cutie).. ட்ரடிஷனல் பியூட்டியா (traditional beauty) வெயிட் பண்றேன்.. ரெயின்போ (rainbow) பார்க்கணும்.. டின்னர் வரைக்கும் தாங்காதுடா ஜூனியர்..''
நாணிக் கோணி அலைப்பேசியில் கட்டியவள் சிரிக்க, அரை நித்திரையில் இருந்தாலும் ஹீரோவிற்குமே ஜிவ்வென்று உடல் முறுக்கேறியது.
நேத்திரங்கள் திறக்காது, இதழ் முத்தத்தை தன் நெஞ்சோடு ஒட்டிக் கிடந்த காரிகையின் செவி மடலில் இச்சு பிச்சென்று பரப்பியவன் போனை நழுவ விட்டான்.
மறுமுனை ரிசீவரில் இருந்த ஆளனின் மனைவியோ, வெட்கம் தாளாது போனை எப்போதோ துண்டித்து ஓடியிருந்தாள்.
காளையவனின் மார் ஒட்டிக் கிடந்த ஆயிழையோ, மென்புன்னகையோடு சிணுங்கினாள்; அவள் கந்தரத்தில் அனலை ஏத்தி இறக்கியவனின் முதுகை தட்டி தூங்க வைத்திடும் சாக்கில்.
ஆணவனின் அதரங்கள் பெதும்பையின் கைகளுக்குள் அடங்கி கிடக்க, பெண்ணின் நெஞ்சிறங்கும் முன் யாரோ சம்மட்டியால் மண்டைக்குள் அடித்தாற் போன்றதொரு தெளிவோடு; பொறி தட்டிய வேகத்தில் படக்கென்று கண்கள் விழித்த ஹீரோ, நொடிகளில் செத்தே போனான் எச்சில் விழுங்கிட கூட இயலாது.
அவன் தலையை பற்றியிருந்த நங்கையின் விரல்களை மெதுவாய் பிரித்தெடுத்து எழுந்தவன், மிழிகளை பட்டாம் பூச்சியாய் சிமிட்டி; தலையை சொரிந்து விருட்டென்று தேடி எடுத்தான் அவனின் அலைப்பேசியை.
தொடுதிரையில் அவனின் காது கடித்து சிரித்திருக்கும் மனைவியோடு வளர்ந்துக் கெட்டவன் நிற்க, திரையை ஒதுக்கி முதலில் வந்த அழைப்பை பார்த்தவனுக்கோ நயனங்கள் நயப்புடைக்காததுதான் மிச்சம்.
அப்போதே பட்சி ஒன்று சொன்னது. கட்டிக்கிடப்பவள் எதற்கடா அலைப்பேசியில் தேன்பாய காது கடிக்க வேண்டுமென்று.
அப்போது புரியவில்லை. இப்போதுதான் புரிந்தது மன்மதனுக்கு.
தலையை ஸ்லோவ் மோஷனில் திருப்பி, மஞ்சத்தில் கூந்தல் கலைந்து வனப்பாய் கிடந்த காந்தாரியை பார்த்தவன் மீண்டும் டக்கென்று திரும்பி போனை பார்த்திட; வந்து சேர்ந்தது காதல் மணாளினியிடமிருந்து வாட்ஸ் ஆப் மெசேஜ்.
லங்கி மேன் (lanky man) அவன், அம்பகங்களை உருட்டி வாட்ஸ் ஆப்பை திறந்திட; மனைவியோ சமைத்த உணவையும் அவளையும் சேர்த்தே செல்ஃபீ எடுத்து அனுப்பியிருந்தாள்.
வேர்த்துக் கொட்டிட, அவளுக்கு ஒரு ஹார்டினை தட்டி விட்டு மீண்டும் கழுத்தை திருப்பினான் உதடுகள் கடித்த சுந்தரமானவன்.
பஞ்சணையில் மன்னவனோடு கூடி களித்த களைப்பில் போர்வைக்குள் வீடு கட்டி கிடந்த விறலியோ, சாட்சாத் நம் ஹீரோவின் லேடி பாஸ் போலவேத்தான் இருந்தாள் அச்சு பிசுக்காமல்.
தான் பூண்டிருக்கும் கோலமோ, கோவணம் கட்டிய முருக பெருமானை விட படு டேஞ்சராக இருக்க, இருக்கைகளையும் போர்வையோடு சேர்த்திறுக்கி வாய் மூடியவன்; மல்லாக்க சரிந்தான் அதே மெத்தையில் முனகி.
''செத்தடா மவனே தீனரீசா... தேவகுஞ்சரிக்கிட்டே!!!''
*
எட்டு மணி நேரத்திற்கு முன்பு
''சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு...
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன...''
டிஜே பாடலை தெறிக்க விட்டு கொண்டிருக்க, ஆடிக் கொண்டிருக்கும் கூட்டத்தினை மென்புன்னகையோடு பார்த்த ரீசன்; மீண்டும் தலையை திருப்பி நெட்டினான் கையிலிருந்த வோட்காவை.
ஒரே இழு, அது முடிய கிளாஸை நிரப்பினான் பார் டெண்டர் (bar tender) பையன்.
கேள்வியே வேண்டாம், அட் ஒன்க்கு (add on) ரீசனிடத்தில்; காரணம் ஹீரோதான் அம்மதுபான அறுந்தகத்தின் உரிமையாளன்.
''Get me one shot of tequila please...''
(எனக்கு ஒரு கிளாஸ் டெக்கீலா கொடுங்க... பிளீஸ்...)
என்றப்படி விரல் நகங்கள் கொண்டு பார் கேபினெட்டின் மீது ஐயா தாளம் போட்டிட, எதர்ச்சையாக திரும்பியவனின் கண்ணில் சிக்கினாள் கலாச்சார கண்ணகி.
''கொக்கா மக்கா!!
வசீகரிக்கும் வனப்போடு மதுவை மாதவள் வாயில் சில முடக்குகள் வைக்க ஹீரோவின் காதில் புகை வந்தது.
''அடியே!!!''
வாயுக்குள் முறுக்கு பிழிந்தான் ரீசன். மில்லி மீட்டர் கேப்பில் இருந்தவளை வெறித்தவனின் முகமோ ஏறுமுகம் கொண்டது.
''என்ன திமிறிருந்தா... தண்ணி அடிப்பே!! உங்கொப்ப மவளே!!''
டயலாக்கோடு ஹீரோ சீறி எழ, பக்கமிருந்தவளோ, எதையும் பொருட்படுத்தாது; அவன் யாரையோ வசைப்பாடுவதை போல கண்டுங்காணாமல் கடகடவென நெட்டி தீர்த்தாள் அவளின் டெக்கீலாவை.
''என்னடி... நான் ஒருத்தன் இங்க கிறுக்கன் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு பச்சத்தண்ணி குடிக்கறே மாதிரி இதை குடிச்சிக்கிட்டு இருக்கே!!''
சொன்ன வேகத்தில் யுவதியவளின் கையிலிருந்த கிளாஸை ஹீரோ தட்டி விட, சாந்த சொரூபி அவளோ சாமுண்டீஸ்வரியாக மாறிப்போனாள்.
''ஆமாடா!! அப்படிதாண்டா குடிப்பேன்!! உனக்கென்னடா!! ஆர்ஹ்ஹ்!! உனக்கென்ன!!''
மேஜையை டமார் என்றடித்தவளோ தள்ளாடினாள் பம்பரமாய்.
''நீ ஏன் பேச மாட்டே!! உங்கப்பனே சொல்லணும்டி!! அவனை உதைச்சா எல்லாம் சரி வரும்!!''
என்றவனோ அரிவையவளின் கையை பிடித்திழுத்தான் அங்கிருந்து அவளோடு வெளியேறிட.
''டிரஸை பாரு!! பெட்ரூம்லே போடறதெல்லாத்தையும் இங்க போட்டுக்கிட்டு!!''
முனகியவன் அவளை வலுகட்டயமாக இழுத்து போனான்.
பிறகென்னே, சொந்தமானவன் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை ஆயிழையவள் பட்டா போட்டவனைத் தாண்டி மொத்த ஊருக்கும் கடை விரிக்க, கடுப்பாகாதா ஹீரோவிற்கு.
''விட்றா பூனை என்ன!! விடு!!''
மாடர்ன் கன்னியோ முரண்டு பிடித்தாள்.
''எதெய்!! பூனையா!!!"
''ஆமாடா!! திருட்டு பூனை!!"
''ஆர்ர்ஹ்ஹ்!! நீ சொல்லு!! நீ சொல்லு!! பூனை சொல்லு!! யானை சொல்லு!! என்ன வேணும்னாலும் சொல்லு!! நாளைக்கு காலையிலே எதுவுமே ஞாபகம் இல்லன்னு சொல்லு... அப்பறம் இருக்கு உனக்கு!!''
என்றவன் வஞ்சனியவளின் மணிக்கட்டில் அவன் கரம் இறுக்கிட, உளறினாள்
தண்ணி போட்ட தேவதையவள்.
''நான் வர மாட்டேன்டா திருட்டு பூனை!! விடு என்னே!!''
''வா.. சயாங்!!''
மனம் விரும்பும் பெண்டுவிடத்தில் கொஞ்சல்தானே பல வேளைகளில் வேலை செய்யும். ரீசனும் அவ்வழியையே பின்பற்றினான்.
''டேடி!!''
என்று ஒப்பாரி வைத்தாள் திடிரென்று, குடியை போட்டிருந்த குலவிளக்கு.
அவளை ஓரக்கண்ணால் முறைத்தவனோ சத்தமாக சொன்னான்.
''என்னடி டேடி.. டோடின்னு!! எல்லாம் அந்த ஆளாலத்தான்!! அந்த மாட்டுக்காரனே மிதிக்கணும்..''
வாக்கியத்தை முடிக்காதவனோ கூட்டத்துக்குள் நுழைந்தப்படி மானினி அவளோடு வேகமாய் நடக்க, கைநழுவி பின்னோக்கியவளோ அங்கிருந்தோரின் மேனியில் முட்டி மோதி; சத்தத்தோடு சத்தமாய் கத்தினாள்.
''என்ன சொன்னே!! என்ன சொன்னே!! எங்கப்பாவையே மிதிப்பியா!! நான் மிதிச்சிருவேண்டா உன்னே!! திருட்டு பூனை!!''
''கிழிப்பே!!''
என்று நக்கல் தொனி கொண்டவன் அவளை ஒரே இழு இழுத்து, நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் மனித மந்தைகளுக்கு நடுவினில்.
முதல் முறை ஆணொருவனின் கைககள் இளம்பிடியாளின் பின்னிடையில் உரிமையோடு ஊர்ந்து பேதையின் போதைக்கு ஊறுகாவாய் ஆனது.
ரீசனின் தீண்டலில் ரிசர்வ்ட் ஆகிப்போனவள், ஆணவனின் முகத்தை இமைக்காமல் பார்த்தாள்.
''என்னடி குஞ்சாய் இப்படி பார்க்கறே..''
செல்லமாய் அப்படித்தான் அழைப்பான் ரீசன், அவனின் பத்தினியை.
மிதமான அசைவு கொண்ட ஆடல் இருவருக்கும்.
''மோர்னிங்லருந்து என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்றடா நீ..''
வெள்ளந்தியாய் மகடூ அவள் சொல்ல, லைட்டாய் வெட்கம் கொண்டவனோ காந்தையின் இடையை இன்னும் இறுக்கினான் அவன் நெஞ்சோடு.
''இன்னைக்கு மட்டும்தானா..''
பூப்படைந்த பதிமூன்று வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட இப்படியான நெருக்கம் கண்டதில்லை காரிகையவள்.
''சோரி சாயாங்.. (sayang) இனி அப்படி நடந்துக்க மாட்டேன்..''
என்றவன் இருக்கரங்களுக்குள் இளையாள் அவளின் முகத்தை சிகையோடு சேர்ந்திறுக்கினான்.
''சோரிடி குஞ்சாய்..''
என்றவனின் கனல் மூச்சோ மடந்தையவளின் மூக்குரசி, முயங்கல் நரம்புகளை நாட்டியமாடிட வைத்தது வதுகையவளுக்குள்.
''குஞ்சாய்.. குஞ்சாய்.. குஞ்சாய்..''
ஏற்கனவே, தகித்து கிடந்த சாக்லேட் தாமரையவள், ரீசனின் நெற்றி கன்னம் மூக்கென்ற முத்தங்களில் திளைத்து போனாள், அவனின் செல்ல நிக் நேம்மிலும்தான்.
''ஐ லவ் யூ டி.. குஞ்சாய்..''
என்ற ரீசனின் மிழிகள் சொருக, அவனையே உற்று நோக்கிய கன்னியவளின் உதட்டில் உரம் போட்டு செடி வளர்க்க பார்த்தவனோ அழுத்தினான் ஒரு அழுத்து அலரவளின் கண கச்சிதமான இடையில்.
வண்ண விளக்குகள் மின்னிட, குளுகுளு ஏசியில், முதுகுத்தண்டின் நடுவே எரிமலை காங்கினை உணர்ந்தாள் ஆடவளவள்.
அவர்களை கடந்து போன பார் டெண்டரின் கையிலிருந்த தட்டில் குட்டி கிளாஸ் மதுவெல்லாம் பல்லிளிக்க, அதில் ஒன்றை கைப்பற்றி ஒரே கல்பில் ரீசன் குடிக்க; அவனைப் போல அவளும் குடித்தாள்.
''ஏய்.. குஞ்சாய் என்னடி..''
பேச்சுக்கு கூட தண்ணி என்றால் எட்டி விடுவாள் ஒரு எத்து.
அப்பேர்ப்பட்டவள் இப்படி கணக்கு வழக்கில்லாமல் மதுவை குடலுக்குள் இறக்கினால், கட்டியவன் அதிர்ந்திட மாட்டானா என்னே.
வாயோரமெல்லாம் வோட்கா பன்னீர் கோலம் கொண்டிருக்க, வலக்கர பெருவிரலால் பெதும்பையின் இதழோரத்தை துடைத்தவன் முறுவல் கொண்டு கேட்டான் பிரவுன் சுகர் டாலியா (Brown Sugar dahlia) அவளிடத்தில்.
''என்னடி குஞ்சாய்.. இப்படி பார்க்கறே..''
கொக்கி போட்டு இழுத்தவனின் லுக்கில் முற்றிலும் விழுந்து தொலைந்தாள் பூக்காத பூவவள்.
''ஐ லவ் யூ குஞ்சாய்..''
என்ற தீனரீசனோ அம்பகங்களை மெதுவாய் மூடி, டாஃபி ரோஜா (toffee rose) அவளின் அதரங்களை ஏகாந்தமாய் சுவைத்திட ஆரம்பித்தான்.
அணங்கவள் அடித்த டெக்கீலாவின் சூர் குறையும் முன்னமே காளையவனின் மார் நசுங்கும் அணைப்பில் கட்டுண்டு மீண்டும் மீளா மையலில் லயித்தாள் கன்னி விசாகா.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

Author: KD
Article Title: அத்தியாயம் 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.