What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
476

அத்தியாயம் நூற்றி இருபது


மகள் கீத்துவின் உருவில் ரீசனையே கண்டது போல் பூரித்து போன குஞ்சரியோ, தெளிந்த நீரோடையாய் புத்துணர்வு கொண்டாள்.

அது அவனல்ல என்பதை சிந்தைக்குள் அழுத்தமாய் பதித்துக் கொண்ட காரிகையோ, மனப்பூர்வமாக கீத்துவை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தாள்.

தன்னம்பிக்கை கொண்டாள் குஞ்சரியவள், எங்கே தொலைத்தாளோ பெண்டு அவள் வாழ்வை அங்கேயே தேடிட முடிவெடுத்து.

என்னதான் இடைக்கு கீழ் மானினியின் பாகங்கள் செயலற்று போனது, அவளின் முட்டாள்தனமான தற்கொலை முயற்சியால் ஏற்பட்ட விபரீதமானாலும், அதற்கு காரணம் என்னவோ அவள் ரீசனின்பால் கொண்ட கிறுக்குத்தனமான காதலே.

ஆகவே, எந்த காதலது தேவகுஞ்சரியவளைக் கல்லூரி காலத்தில் மயூரியாக்கி, விஜயோடு சேர்ந்து மயிலினியை சர்வநாசம் செய்ததோ, எந்த பித்து கணவனவன் மெய்யறிந்து பிரிவைக்கோர தற்கொலைக்குத் தூண்டியதோ, எந்த அன்பு இருமுறை பெண்ணுடல் ஈனத்தனமாய் மேயப்பட்ட பின்னும் அளவில்லாமல் யுவதியவளை, கண்ணில் வைத்து காத்ததோ, அதே நேசத்தை நெஞ்சில் உரமாக்கி வைராக்கியம் கொண்டாள் ரீசனின் குஞ்சரியவள், சாதனமில்லா சாதாரண வாழ்க்கையொன்றை வாழ.

தீர்மானித்ததைப் போலவே அமராவுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டாள் குஞ்சரி. கேர் டேக்கர் அவளின் உதவியோடு நடைப்பயிற்சியில் ஈடுப்பட்டாள் நாள் தவறாது.

மிதமான ஜாக்கிங், பின் சைக்ளிங் என்று தொடங்கி கால்களை முன்னிறுத்தும் அத்தனை செயல்களையும், பயிற்சியாய் மேற்கொண்டாள் குஞ்சரி கொஞ்சங் கொஞ்சமாய். எதுவாகினும் அவளுக்கு முதல் ஆரம்பம் என்னவோ அரைமணி நேரமே.

வீல்சேரில் பயணித்து அவளின் அன்றாட தேவைகளைக் கவனித்துக்கொண்ட விறலியோ, சில மாதங்களில் கைத்தடிக்கு ஹாய் சொல்லி வீல்சேரை ஸ்டோர் ரூமில் பத்திரப்படுத்தினாள்.

கைத்தடியின் பிடியோடு படிகள் ஏறிட கற்றுக் கொண்டவள் ஓரளவுக்கு நிற்கவும், சுயமாக குளிக்கவும் அவளின் நிலையை உயர்த்தியிருந்தாள். அரை மணி நேரம்கூட ஒன்றை மணி நேரமாகியிருந்தது.

ஆறு மாதங்கள் சொடக்கிடும் பொழுதில் ஓடி மறைய, கீத்துவோ மேலும் ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

கவலைக்கொண்ட ஜூனியருக்கு ஆறுதல் சொல்லிய சீனியரவளோ, எப்படியோ மகளவளைத் தேத்தி கனடாவிலேயே தஞ்சம் கொண்டிட வைக்க, புயலென ஓடி மறைந்தது ஒரு வருடம்.

குஞ்சரியோ பிஸியோக்கள் பல செய்து யோகா மூலம் மனதைத் திடப்படுத்தி, தியானத்தின் வழி அறிவை ஒழுங்குபடுத்தி ஸ்பைனல் கார்ட் இம்பிளாண்டுக்கே விடை கொடுக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தாள்.

என்றைக்கு குஞ்சரி அவளின் உடலின்மீது அதீத அக்கறை கொண்டு, இடைக்கு கீழான பாகங்களைச் சீக்கிரமாய் செயல்படுத்திட முனைந்தாளோ, அன்று தொடங்கியே பல்ஸ் ஜெனரேட்டரில் சார்ஜ் இன்றி கால்களை மெல்லமாய் நகர்த்திட ஆரம்பித்திருந்தாள் ஆயந்தியவள்.

தொடக்கத்தில் சிரமம் கொண்ட கோதையவள் பின் போக போக பழகிக் கொண்டாள் சார்ஜில்லா நடைகளை. இல்லை, இல்லை அவளின் கால்கள் பழகிக்கொண்டன நியூரோபிளாஸ்டிசிட்டி உளவியலால்.

தோதான பிஸிக்கல் மூமண்ட்ஸ் மற்றும் போதுமான பிஸியோ பயிற்சிகள் அனைத்தும் குஞ்சரியை ஆளில்லா நீச்சல் குளத்தில் தனியே நீந்திடும் அளவுக்கில்லை வளர்த்து விட்டிருந்தது.

மொத்தமாய் வீல்சேர், கைத்தடி, பல்ஸ் ஜெனரேட்டர் எல்லாவற்றிற்கும் விடை கொடுத்தாள், ரீசனின் குஞ்சரியவள் கடைசி முறையாக வீல்சேரில் அமர்ந்து எழ.

அக்காட்சியைக் காண நிந்தித்த புருஷனோ போய் சேர்ந்திருக்க, நெஞ்சம் படும் வேதனைத் தாளாது அழுது புரண்டினாள் குஞ்சரி, பால்கனி கதவில் ஆரம்பித்து வாஷ்பேஷன் தரை வரை.

ஒற்றைத் தலைவலி மயக்கம் தானாய் தெளிய நிலைய சார் செய்துக் கொண்டவளோ வந்து நின்றிருந்தாள் ரீசன் உயிர் போய் குஞ்சரியின் தாலி அறுப்பட்டு போக காரணமான மாளிகைக்கு.

செத்துப் போன ரீசனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அடுத்த வாரம். ஆகவே, வேறெங்கும் அக்காரியத்தை செய்யாது எங்கே உயிர் துறந்தானோ அங்கேயே அவனுக்கு பூஜை போட்டிட நினைத்தாள் விருந்தனையவள்.

அம்பாள் தொடங்கி வாத்தியார் பின் ப்ரீதன் ஏன் ஜூனியர்கூட குஞ்சரியின் ஐடியாவிற்கு நோ சொல்ல, சுந்தரியவளோ அதையே ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டாள்.

இது இளம்பிடியாள் அவளுக்கு மங்கையவளோ வைத்துக் கொண்ட சுய பரீட்சையாகும்.

காரணம், தற்போதைக்கு மற்றவர்களின் பார்வைக்கு தேவகுஞ்சரியவள், மனதளவில் ரொம்பவே பக்குவப்பட்டு விட்டாள் என்ற பிம்பம், அடுத்தவர்களின்முன் அலரவளை தன்னம்பிக்கையோடு நடக்க வைத்திருந்தது.

இருப்பினும், பேதையவள் உள்ளம் மட்டுமே அறியும் ஆயிழையவள் படும் பாட்டை, ஒவ்வொரு நொடி நகரும் பொழுதிலும் அதுவெல்லாம் ரீசனின் பெயர் சொல்ல.

ஆகவே, இன்றைக்கு மாயோள் அவள் பெண்ணவளுக்குள் அணையாது எரியும் ஏக்கத்திலான ஞொளுக்கு ஒரு விடை காண வந்திருக்கிறாள் ரீசன் செத்த இடம் நாடி.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 120
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top