What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
476
WhatsApp Image 2025-01-11 at 5.30.54 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 12

''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!''

ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான்.

வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது.

சோகத்தில் குடிகொண்டவனாய் பால்கனியில் நின்றிருந்தவன், மூத்தவன் தோள் தொட, திரும்பி அவனை கட்டிக்கொண்டான்.

''எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?! நான் என்ன பாவம் பண்ணேன்?! ரொம்ப கஷ்டமா இருக்கு! கொஞ்ச நாளாவே எதுவும் சரியில்லே! என்னவோ, நான் எதுக்குமே லாயிக்கி இல்லாதவன் மாதிரி ஃபீல் ஆகுது! செத்துடலாம் போலிருக்கு!''

''நான் இருக்கேன்லே! விடு! பார்த்துக்கறேன்!''

சமாதானம் செய்தான் பெரியவன், சின்னவனை.

''எத்தனை நாளைக்கு நீ எனக்காக ஓடுவே?! இப்பவே, நான் உனக்கு பின்னாடிதான் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கேன்னு பேசுறாங்க! இதுக்கு மேலையும் நீயே இறங்கி ஏதாவது பண்ணா, அவுங்க சொல்றதெல்லாம் உண்மையாகிடாதா?!''

மனம் கொண்ட கவலை, அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.

''கண்டவனும் வாய் இருக்கின்னு ஏதேதோ பேசுவான்! அதையெல்லாம் பார்த்தா, நிம்மதியா வாழ முடியுமா?!''

தன்மையாய் சொல்லி, ஆறுதலாய் தடவிக் கொடுத்தான் நிதானமான ஆரோன், தம்பியின் முதுகை.

''அந்த ரிப்போர்ட் வேணும்னா போலியா இருக்கலாம்! ஆனா, எனக்கு மெடிக்கல் இஸுஸ் இருக்கறது உண்மை!''

குண்டை தூக்கி போட்டான் விராகன், மெதுவாய் அண்ணனின் அணைப்பிலிருந்து விலகியவனாய் அவன் முகம் பார்த்தப்படி.

சங்க்யா மற்றும் ராகன் இருவருக்குமான பிரச்சனை ஓரளவுக்கு முடிவை நாடியிருந்த போதிலும், அதனைக் கொண்டு காசு பார்த்திட நினைத்த யூடியூப் வாயன்களுக்கு அதை அப்படியே விட்டிட மனமில்லை.

கட்டுக்கதைகளை பரப்பி இருவரின் மானத்தையும் சோஷியல் மீடியாவில் வாங்கிக் கொண்டுதான் இருந்தனர்.

முடிந்தவரை களைந்துக் கொண்டுதான் இருந்தான் ஆரோன், சங்கதியை சின்னவன் அறியா வண்ணம்.

ஆனால், அப்படி இருந்தும் பெரியவன் கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து புதிதாய் முளைத்திருந்த ஒருவன் ராகனுக்கு ஆப்படித்திட ஆரம்பித்திருந்தான்.

பொய்யான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, சின்னவனை எவ்வளவு களங்கப்படுத்திட முடியுமோ அவ்வளவு மோசமாய் சித்தரித்து சந்தி சிரிக்க வைத்தான்.

விஷயம் ஆரோனின் காதுக்கு போயிடும் முன், ராகனை அடைந்தது, பி.ஏ.சுரேஷ் மூலம்.

தடாலடியாய் முடிவெடுத்த ராகனோ தாமதிக்காது அந்த யூடியூப்காரனை கஃபே ஒன்றில் சந்தித்தான்.

சினங்கொண்ட சிங்கமாய் அவனை கடித்து குதற போனவனிடத்திலோ, சுரேஷ் தன்மையாய் பேசி காரியம் சாதிப்பதே நமக்கான வழியென்று செவி கடித்தான்.

முதல் முறை அவனுக்கு கீழ் வேலை பார்ப்பவனின் பேச்சை கேட்பது நல்லதென்று பட்டது நாயகனுக்கு. ஆகவே, சமரசம் பேசி காசோலையும் கொடுத்தான் ராகன், முன்னர் பதிவேற்றிய காணொளிகளை அகற்ற கோரி, யூடியூப்காரனுக்கு.

ஆனால், இனிக்க பேசி, கொடுத்த செக்கை வாங்கிக்கொண்டு கிளம்பிய வஞ்சகனோ புத்தியை காண்பித்தான், சுடசுட புதியதோர் வீடியோவை பதிவேற்றி.

ராகனோடு அவன் கொண்ட சந்திப்பை ரகசியமாய் படம் பிடித்து அதன் மூலம் ராகனின் பெயரை மேலும் அசிங்கப்படுத்தினான்.

லஞ்சம் கொடுத்து உண்மையை மறைக்க பார்க்கும் போக்கத்தவன், என்ற அக்காணொளியோ பல லட்ச வியூஸ்களை சில நொடிகளிலேயே அள்ளியது.

கோர்ட் கேஸ் போவதெல்லாம் ராகனுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ஆனால், என்ன செய்தாலும், இழந்த தன்மானத்தை திரும்பவும் பெற முடியாதென்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதுவும் சங்க்யா தொடங்கிய இக்கலவரம், ஏற்கனவே அவன் குடும்ப தொழிலை ஒருபக்கம் படுக்க வைத்திருக்க, அதை ஒருவழியாய் இழுத்து பிடித்து சமாளித்திருப்பது என்னவோ ஆரோன்தான்.

அப்படி இருக்கையில், திரும்பவும் முதலிலிருந்து பிரச்சனையை ஆரம்பித்து பெரியவனை சங்கடத்தில் ஆழ்த்திட சின்னவனுக்கு மனமில்லை.

ஆகவே, இதுவரை யாருமே அறிந்திடாத அவன் ரகசியத்தை போட்டுடைத்தான் விராகன், பெரியவனிடம்.

''இப்போ சொல்லு, நான் கோபப்படறதுலே ஏதாவது தப்பிருக்கா?!''

கதை கேட்டு முடித்த மூத்தவனோ,

''முடியாதுங்கற உன் ஆதங்கம்தான் கோபமா வெளிப்படுது ராகன்! இதெல்லாம் ஒன்னுமே இல்லே! சரி பண்ணிடலாம்!''

''நீ என் இடத்துலே இருந்தா, உனக்கு என் வலி புரியும்!''

கோபித்து கொண்டான் வருத்தமான தம்பி.

அவனை இழுத்து போய் சோபாவில் அமர்த்திய அண்ணனோ,

''ஒரு பொண்ணே பார்ப்போம்! அக்ரிமெண்ட் போடுவோம்! கண்ட்ரக் மேரேஜ் பண்ணுவோம்!''

மிக சாதாரணமாய் சொல்லிய மூத்தவன், நீட்டினான் சின்னவனுக்கு கிளாஸ் நீரை.

''சரியா வருமா?!''

''காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும்!''

சொன்னவன், ராகனின் ஆபிஸ் டேபிள் விளிம்பில் சாய்ந்து நின்றான்.

''எனக்கு என்னவோ நாமே தேவை இல்லாத ரிஸ்க் எடுக்கற மாதிரி தோணுது!''

குழப்பம் கொண்டான் சின்னவன்.

''நான் இருக்கேன்! என்ன பயம்?! பார்த்துக்கலாம்!''

நம்பிக்கை கொடுத்தான் அண்ணன்.

''சரி, பொண்ணு எப்படி சூஸ் பண்ண போறோம்?! கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து என்ன?!''

ஆர்வத்தோடு ராகன் கேட்க,

''ஒரு மூணு மாசம் நீயும் அந்த பொண்ணும் எல்லாரும் பார்க்கற மாதிரி வாழணும்! நல்லா! சந்தோஷமா!''

''அது எப்படி முடியும்?! நடிக்க வரவே கூடலாம் என்னாலே அட்ஜஸ்ட் பண்ண முடியாது!''

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

''பண்ணித்தான் ஆகணும்! காரணமா!''

அழுத்தமாய் சொன்ன ஆரோன் தொடர்ந்தான்.

''அப்போதான் நீ அப்பாவாக போறேன்னு சொன்னா, இந்த உலகம் உன்னே நம்பும்!''

''சரி! என்ன பண்ணணும்?! சொல்லு?! பண்ணி தொலையறேன்!''

சளித்துக் கொண்டான் ராகன், வேண்டா வெறுப்பாக.

''அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்! பழகிடும் உனக்கே! ஆளுங்க முன்னுக்குத்தான் நடிக்க போறே! மத்தப்படி அந்த பொண்ணோட நிழல் கூட உன்னே நெருங்காத அளவுக்கு நான் பார்த்துப்பேன்!''

சீரியஸாக ஆரோன் சொல்ல,

''ஏன், நைட் என்கூட நீ படுத்துக்க போறியா?!''

ராகன் கடுப்பில் நக்கல் வசனம் பேச, சத்தம் போட்டு சிரித்தான் ஆரோன்.

''உனக்கு கூட சிரிப்பா இருக்குள்ளே என் நிலைமை?!''

கவலையோடு கடிந்துக் கொண்டான் சின்னவன், மூத்தவனை.

''நான் நடிக்கத்தான் பொண்ணு வேணும்னு சொன்னேன்! அது ஒரு லெஸ்பியானா இருக்க கூடாதுன்னு சொல்லவே இல்லே!''

தம்பியின் ஸ்விங் சேரில் சென்றமர்ந்தான் ஆரோன், மாஸ்ட்டர் பிளானை விளக்கி சொன்னவனாய்.

''இப்போ தெரியுது, நீ ஏன் அண்ணனா பொறந்தன்னு! மேலே சொல்லு?!''

பெருமிதத்தில் ராகனின் முகமோ தாண்டவம் ஆடியது.

''பிரக்னன்ஸியை ஆப்டேட் பண்ண ரெண்டே வாரத்துலே, அந்த பொண்ணு வெளிநாட்டுக்கு கிளம்பிடணும்!''

''ஏன்?!''

புரியாது அதிர்ந்தான் விராகன்.

''உன் கூட வாழ புடிக்கலன்னு அந்த பொண்ணு சோஷியல் மீடியாவுலே ஆப்டேட் பண்ணணும்!''

''காரணம்?!''

''ஒத்து வரலே!''

''அது சரி! இப்பவும் நான்தான் கிடைச்சேனா கழுவி ஊத்த! ஏன், அவளுக்கு ஒரு கள்ள தொடர்பு இருக்கற மாதிரியும், நான் அவளே வேணாங்கறே மாதிரியெல்லாம் நீ பிளான் போட மாட்டியா?!''

ஆவேசம் கொண்டான் இவ்வளவு நேரம் பொட்டி பாம்பாய் கிடந்தவன்.

''அப்பறம் குழந்தை உன்னதில்லன்னு ஒரு பஞ்சாயத்து வரும்! பரவாலையா?!''

கிண்டல் தொனி கொண்ட அண்ணனை முறைத்த ராகன்,

''எல்லாம் என் தலையெழுத்து! என்ன பண்றது!''

முனகினான் சத்தமாய்.

''பொறுமையா நான் சொல்றதை முதல்லே கேளு ராகன்! உன்னே தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும், உனக்கு மூக்குக்கு மேலே கோபம் வரும்னு! அதுவே உன் டிவோர்ஸ்க்கு காரணம்னு ஊர் பேச ஆரம்பிச்சிடும்! நீயோ இல்லே அந்த பொண்ணோ வாயே திறக்க வேண்டாம்!''

''ஓஹ்! போலி கல்யாணத்துக்கு, பொய் டிவோர்ஸ் வேறயா?!''

''ஆமா! அதுவும் அந்த பொண்ணு வெளிநாட்டுக்கு போன பின்னாடிதான், டிவோர்ஸ் பத்தின மேட்டரை நாமே பப்லிக் நியூஸ் ஆக்கணும்! கண்டிப்பா எவனாவது நம்ப பிளானை மோப்பம் புடிக்க ட்ரை பண்ணுவான்! ஏன், சரியா கூட கெஸ் பண்ணி விடிய விடிய பேசி, காசு கூட பார்க்க ஆரம்பிப்பான்! ஆனா, நாமே எதுக்குமே ரீயாக் பண்ணக்கூடாது! நம்ப கவனம் முழுக்க, நம்ப நாடகத்துலே மட்டும்தான் இருக்கணும்! புரிஞ்சுதா?!''

''புரியாட்டியும்! எனக்கு வேறே வழி இருக்கா என்ன, இதை விட பெட்டரா?!''

விரக்தியிலான வினா கொண்டான் ராகன்.

''இந்தளவுக்கு நீ தெளிவா இருந்தாலே போதும்! நம்ப திட்டம் சக்ஸஸ் ஆகிடும்! ஆனா, அதுக்கு ஏத்த மாதிரி நீயும் அந்த பொண்ணும் எங்க இருந்தாலும், பெர்போமன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்!''

''எப்படியும், ஒரு வருஷத்துக்கு நடிக்கணும் போலே?!''

''மூணு மாசத்தே குறைச்சுக்கோ! இந்த கேப்லே ரகசியமா நான் ஒரு குழந்தையே தத்தெடுத்து உன் கையிலே கொடுக்கறே வேலையே முடிச்சிடுவேன்!''

தம்பியை ஆழமாய் நோக்கி சொன்னான் ஆரோன், பேனா ஒன்றை சுழற்றியப்படி.

''அடுத்த ரெண்டே வாரத்துலே, அந்த பொண்ணு குழந்தை வேணான்னு என்கிட்டையே கொடுத்திடுச்சின்னு, அடுத்த நியூஸ் போட்டு எல்லா வதந்திக்கும் ஃபுல் ஸ்டாப் வெச்சிடுவோம்! அப்படித்தானே?!''

''இப்போதான் நீ என் தம்பி மாதிரி பேசறே?!''

இதழோரம் குறுநகை கொண்டான் ஆரோன், தம்பியை மெச்சி.

தாழ் திறந்திடுவான் ததுளன்!
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 12
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top