- Joined
- Jul 10, 2024
- Messages
- 476
அத்தியாயம் நூற்றி பதினெட்டு
கீத்துவின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ப்ரீதனோ தீவிரமாய் யோசித்து நல்லதொரு முடிவை எடுத்திருந்தான்.
சித்தப்பா அவன் சம்பவத்தைப் பற்றி குஞ்சரியிடம் பேச, அவளோ அமராவை வர சொல்லி கேட்டாள்.
கொஞ்சமும் யோசிக்காத ப்ரீதனோ அக்காவிற்கு போனை போட, முன்பை போலில்லை குஞ்சரி என்றறிந்த அமராவோ, சேவகம் செய்ய உடனே பொறுப்பெடுத்துக் கொண்டாள்.
அங்குதான் பற்றிக் கொண்டது ஜுனியருக்கும் சீனியருக்கும்.
குஞ்சரியின் அறைக்கதவு படாரென்றது.
"யாரே கேட்டு அமரா ஆன்ட்டிய உங்கள பார்த்துக்க வர சொன்னிங்க?" கர்ஜனைக் கொண்டது சின்னவளின் குரல்.
"யாரே கேட்கணும்?" என்ற குஞ்சரியோ பொறுமையாய் வேள்வி கொள்ள,
"என்னே கேட்கணும்!" என்றவளின் தொனியோ ஓங்கி ஒலித்தது.
"நீ என் பொண்ணு, புருஷன் இல்லே." இப்போதும் பவ்வியமாகவே வார்த்தைகளை உதிர்த்தாள் குஞ்சரி.
“கீத்து வேறே ரீசன் வேறையா?” என்ற மகளின் குரலில் அழுத்தம் கூட,
“அதானே நிஜம்!”
என்றவளோ கரையும் மனதைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள், மகளை சம்மதிக்கவைக்கும் முயற்சி தோல்வியைத் தழுவிடக்கூடாதென்று.
"ஓஹ்! இப்போதானே புரியுது சர்ஜரி முடிஞ்சாச்சு, இனி நான் சீனியருக்கு தேவைப்பட மாட்டேன்லே! அதான் ஜுனியர் நான் இப்போ புள்ளையாயிட்டேன்..." சோகம் கொப்பளித்தது கீத்துவின் குரலில்.
"நீ என்ன நினைச்சிக்கிட்டாலும் சரி, ஆப்ரஷனுக்கான பர்ப்பஸ்ன்னு (purpose) ஒன்னு இருக்கில்லே. அதுக்கு எனக்கு எக்ஸ்பெர்டிஸ் (expertise) வேணுமே தவிரே, எமோஷனல் கிட் (emotional kid) இல்ல."
"வாட்! எமோஷனல் கிட்!"
என்றவளோ சினங்கொண்ட சிங்கமாய் குஞ்சரியை வெறிக்க, தாயவளோ கல்லாக்கிய நெஞ்சோடு முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தாள்.
"ஃபைன்! (fine) முடிவு பண்ணிட்டிங்க, என் பேச்சு இனி எடுபடாது."
என்ற கீத்துவோ அப்பனின் கோபம் கொண்டு அறையிலிருந்து விருட்டென வெளியேறினாள்.
வரவேற்பறையிலோ பாட்டி அம்பாளுடன் தர்க்கம் கொள்ளும் மகளின் குரல் கேட்டது குஞ்சரிக்கு.
“எனக்கு வேணா மீன்ஸ் (means) வேணா! ஒரு நாள் சாப்பிடாட்டி செத்திட மாட்டேன். லீவ் மீ அலோன் (leave me alone).”
என்றவளோ அச்சு பிசகாது ரீசனைப் போலவே ஆத்திரத்தில் ஆவேசமாய் கத்தி, மேல்மாடி நோக்கினாள் அவளறைக்கு.
ரணம் கொண்டாலும் மகளின் செயலில், இது அவளின் நல்லதுக்கே என்றெண்ணிய குஞ்சரியோ விட்டுப்பிடித்திடவே நினைத்தாள் கீத்துவை.
ஒரு வாரம் கடக்க குஞ்சரியின் முகத்தைக்கூட பார்த்திடவில்லை கீத்து. பள்ளி போவதும் ஹாக்கி ட்ரெயினிங் போவதுமாய் மட்டுமே இருந்தவள், வீட்டில் ஒரு பருக்கை சோறை வாயில் வைத்திடவில்லை.
அம்மாவிடம் மட்டுமல்ல, பாட்டி, ஏன் ப்ரீதனிடம் கூட முகங்கொடுத்து பேசிடவில்லை அம்மணி. ஒரு வாரம், ரெண்டு வாரமாக அவளாகவே ஓடோடி வந்தாள் விழுந்தடித்துக் குஞ்சரியின் அறை நோக்கி, சார்ஜிங் பெல்ட் பீப் சவுண்டை வெளிப்படுத்த.
குஞ்சரியோ வீல்சேரிலேயே அரை மயக்கம் கொண்டிருக்க, பதறிய மகளோ, அம்மாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினாள். சூதானத்திற்கு வந்த குஞ்சரியோ மகள் கீத்துவின் உதவியோடு மஞ்சம் சரிந்தாள்.
அதீத தலைவலி மற்றும் திடப்பொருட்கள் ஏதும் உண்ணாது வெறும் பால், பழம், ஜூஸ் மட்டுமே புசித்ததால் வந்த வினையென்று, அறை நோக்கி வந்த அம்பாள் வேறு கீத்துவிடம் குஞ்சரி கொண்ட போரைப் போட்டுக் கொடுத்தார்.
கூடவே பேத்திக்கும் சேர்த்து நாலு டோஸ் விட்டார் பாட்டியவர், ஐஞ்சு நிமிஷம்கூட மனை தங்காது சொல்ல வருவதையும் காது கொடுத்துக் கேளாது, கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்ததன் விளைவாய் குஞ்சரியின் உயிரையும் ஊசலாட வைத்த சம்பவத்திற்காய்.
கீத்துவின் பார்வைகளோ குஞ்சரியை நொடியில் தலைகுனிய வைத்தது, ரீசனின் சினத்தை மகளவளின் நேத்திரங்களில் உணர்ந்ததால்.
“இங்கப்பாருங்க சீனியர், எனக்கு வெளிநாடு போக விருப்பமில்லே, அவ்ளோதான்! தயவு செஞ்சு என்னே ஃபோர்ஸ் பண்ணாதீங்க. மனசு இங்கிருக்க, அங்க போறது வேஸ்ட்.”
சொன்னவளின் கையை மெதுவாய் பற்றி தலையை மேல் தூக்கிய குஞ்சரியோ,
“கிரவுண்ட்லே விளையாடறது கீர்த்திகா இல்லே, என் ரீசன்!”
கொட்டிவிட்டது சொன்ன குஞ்சரியின் கண்ணீர்.
சில நிமிட மயான அமைதிக்கு பின்,
“கீர்த்திகா தீனரீசன் சீனியர்.” என்ற மகளோ வேறேதும் பேசாது அறையிலிருந்து வெளியேறினாள் தாயின் பிடியிலிருந்து, மெதுவாய் விலகி தீவிரமான சிந்தனையோடு ரீசனைப் போலவே நெற்றி சுருக்கி.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
Author: KD
Article Title: அத்தியாயம்: 118
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம்: 118
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.