What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 100

துயில் திருட போகும் இரவினை பால்கனியில் நின்றப்படி ரசித்திருந்தாள் மாயோள் அவள். பஞ்சு மிட்டாய் கலர் சேலையில் சும்மா சோக்காய் இருந்தாள் அவனின் இயமானியவள்.

இடை தொடாது மேல் முதுகின் பாதியிலான கோர குழலோ தின்று செரிக்கா பாம்பாக அசைவுக் கொண்டது. காரிகையின் இருகரங்களையும் நிறைத்திருந்த வளையல்களோ இம்மியளவும் ஓசையெழுப்பாது அவளோடு சேர்ந்து லயித்திருந்தது ராத்திரியின் அமைதியில்.

''என்ன மேடம் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க.. படுக்கலையா..''

என்றவனின் சிரித்த முகத்திலான கேள்விக்கு உதடுகள் பிரிக்காது முறுவல் கொண்டவளோ மீண்டும் தலையை நீரூபம் காண திருப்பிக் கொண்டாள்.

பெண்ணவளை பின்னாடியிலிருந்து நெருங்கியவனின் உடல் சூடு தந்த கதகதப்பில் மெதுவாய் முதுகை அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள் கோதையவள்.

நேத்திரங்களை மூடிக்கொண்ட நாயகியின் உடலோ உஷ்ணமேறி உளவியல் மாற்றம் கொண்டது. நங்கையின் நாணமோ ஓடி ஒளிய பார்த்தது தற்சமயத்திற்கு.

மங்கையவள் சிகையோ இல்லாத போதும் கொண்டது மல்லிகை பூ வாசத்தை. கணவனின் இருக்கரங்களும் இல்லாள் அவளின் கைகள் கோர்க்க சின்னதாய் ஒரு தகிப்பு பூத்து அடங்கியது அரிவையவளுக்குள்.

கோமகளின் உள்ளங்கையை கோர்த்திருந்த ஆளனின் கரங்களோ மெதுவாய் பிரிந்து கட்டிக்கொண்டது கட்டியவளின் இடையை.

ஒட்டி உரசிய புருஷனின் முகமோ காந்தாரியின் கந்தரத்தில் கற்கண்டு சுவை காண,

''நியூ ஜோயினி ரெடியாகிட்டாங்க.. அட்மிஷன் ரெடி பண்ணிடுங்க பிக் பாஸ்..''

என்று மடவரலவளோ மெதுவாய் கிசுகிசுத்தாள் கொண்டாடிடும் வைபோகத்தை.

''ஆர்ஹ்ஹ்..''

என்றவனோ டக்கென்று விழிகள் விரித்து விசாவின் தோள் திருப்ப, தாரமவளோ கணவனவன் உள்ளங்கையில் பதித்தாள் இரண்டு கோடுகள் கொண்ட பிரெக்னன்சி கிட்டை.

''ஏய்! மூக்கு சளி! என்னடி சர்ப்ரைஸ்க்கு மேலே சர்ப்ரைஸ் கொடுக்கறே!''

என்றவனோ கிட்டை பார்த்தவாறே ஏறெடுத்தான் பல்லெல்லாம் பற்பசை விளம்பரத்திற்கு ரெடியாகி நிற்க.

''நான் இல்லே நீங்கதான்!''

என்றவளோ பிடித்தாட்டினாள் புருஷனின் மூக்கை.

மூன்றாண்டுகள் வெறும் காதலிலேயே கழிந்தது ஜோடிகளுக்கு. விசா போதும் எனும் அளவிற்கு போதாத அன்பை வாரிக்கொடுத்திட்டான் பேபி சீட்டர்.

நேசங்கொண்ட இரு நெஞ்சங்களும் அவர்களுக்குள் காதலை பரஸ்பரமாய் உணர்ந்த அடுத்த மாதமே நிச்சயம் முடிந்தது. இரண்டாவது வருடம் சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்த வருடம் கலாச்சார கல்யாணம் அரங்கேறி முடிந்திருந்தது. அனாதை கணக்காய் ஒரு காலத்தில் இருந்தவளுக்கு உலகெங்கிலிருந்தும் ஆட்களும் வாழ்த்துக்களும் வந்து குவிந்தன.

ப்ரீதன் உடனிருக்க மென்மேலும் பல வெற்றிபடிக்கட்டுகளை சர்வசாதாரணமாய் சாதித்தாள் விசா. அடிக்கடி சின்னதாய் கவலைக் கொள்வாள் சிறுகுழந்தையை போல் ப்ரீதன் ஏன் மானினியின் மனதை தொட்ட முதல்வனாக இருந்திருக்கக் கூடாதென்று.

அப்படியான நேரத்தில் லேடி பாசை மடியில் போட்டு ஆறுதல் படுத்திடுவான் பிக் பாஸ் ஒருக்கால் இதுதான் விதியோ என்று சொல்லி.

திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்கு காதல் கொண்டு காமம் வளர்த்த ஜோடிகளோ வேலைகளை ஒத்தி வைத்து குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதன் முடிவில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கட்டிய தாலியின் மஞ்சள் காயும் முன்னரே கருவை சுமந்தாள் சுந்தரியவள். அதுவும் ஆளனின் பிறந்தநாளன்று. கூடவே, பிறந்தநாள் பரிசாக கணவனுக்கு பங்களா ஒன்றையும் பரிசளித்திருந்தாள் பாவையவள்.

பிக் பாஸோடு மீண்டுமொரு முதலிரவுக்கு தயாராகியிருந்தாள் தாரகையவள் புதிய மனையில்.

ஆயந்தியின் ஜிமிக்கி மெல்லமாய் சிணுங்க வஞ்சியின் செவிகளை உரசி நின்ற ப்ரீதனின் கரங்கள் மேலும் இறுக்கின பிடியினை. இளம்பிடியாளின் இதழ்களோ ஆளனின் அதரங்களுக்குள் அடங்கிப்போயின.

அவன் உயிரை அவளுயிருக்குள் சுமப்பவளை கையிலேந்தியவனோ மஞ்சம் நோக்கினான் திருநாளை உட்சவமாய் கொண்டாட.

புது பஞ்சணை ஒத்துழைக்க, சீமாட்டியவள் வெட்கத்தில் குளிக்க; குலியவளை அலுங்காமல் குலுங்காமல் காற்றலையாய் கரை சேர்த்தான் கணவனவன் மென் வெள்ளமாய் பாய்ந்து.

இன்ப யாக்கையில் சங்கமித்த தேகங்கள் ரெண்டும் நல்லதொரு தூக்கத்திலிருக்க சடீரென்று எழுந்தான் ப்ரீதன் பைக்கை யாரோ லாவிக்கொண்டு போவது போன்றதொரு கனவை கண்டிட.

படபடத்த நெஞ்சோடு பக்கென்று எழுந்தவன் மூச்சு விடும் நேரத்தில் நிடலத்தில் கைப்பதிக்க மணிக்கட்டு கடிகாரமோ விடியற்காலை மணி மூன்று நாற்பதை காண்பித்தது.

பக்கத்தில் முகிர அசதியில் உறங்கிக் கொண்டிருந்த விசாவை பார்த்தவன் சத்தமின்றி எழுந்து நடையைக் கட்டினான் பேண்டோடு ஜன்னலோரம். வாசலிலிருந்த பைக்கை பார்த்த பிறகுதான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது.

ஜக்கு நீரை தொண்டைக்குள் கடகடவென இறக்கியவன் மழலையாய் நித்திரைக் கொண்டிருக்கும் வதுகையை உதடுகள் மடக்கி பார்த்து சிரித்தான்.

''நீயே ஒரு குழந்தை.. உன்னையே நான் இன்னும் முழுசா படிக்கலே.. அதுக்குள்ளே உனக்கொரு குழந்தையா!''

என்றவனோ நெருங்கி பதித்தான் அந்திகையவள் நுதலில் இதழ் முத்தியொன்று. என்னதான் ப்ரீதனவன் வல்லபியின் பக்கமிருந்தாலும் அவனின் எண்ணமெல்லாமோ பைக்கையே சுற்றி வந்தது.

சரி ஒரு எட்டு கீழ் தளம் சென்று பைக்கை நேரடியாகவே பார்த்திடலாம் என்ற முடிவோடு டி - ஷர்டை ஒன்றை எடுத்தணிந்து கிளம்பினான் ப்ரீதன்.

என்னதான் தம்பதிகள் இருவரும் ஆளுக்கொரு கார் வைத்திருந்தாலுமே அவர்கள் பெரும்பாலும் அதிகமாய் பயன்படுத்துவதென்னவோ ப்ரீதனின் ஆசையான பைக்கைத்தான்.

''என்னடா உன்னே இன்னும் சர்வீஸ் பண்ணலன்னு கோவமா.. நாளைக்கு முதல் வேலையா அதை பண்ணிடறேன் சரியா..''

என்றவனோ பைக்கோடு சமரசம் பேசி அதை வாஞ்சையாய் தடவிக் கொடுத்து மீண்டும் வீட்டுக்குள் நுழைய அடிகள் எடுத்து வைத்த நேரம், சத்தம் போட்டான் திடிரென்று செல்ல பைக்கவன்.

தூக்கிவாரி போட்ட போதிலும் இதுவொன்றும் ப்ரீதனுக்கு புதிதல்ல என்பதால் சிரித்த முகத்தோடே திரும்பினான் வாசலை நோக்கி பைக் ஓனரவன்.

''தெரியும்டா எனக்கு! இப்போ என்ன உனக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வந்திட்டா ஓகே தானே! சரி வா மூக்கு சளிக்கு தெரியாம குவிக்கா ஒரு டேட்டிங் போயிட்டு வந்திடலாம்! மவராசி எழுந்திரிச்சா அவ்ளோதான் போ! ரெண்டு பேரும் செத்தோம்!''

என்றவனோ பைக்கை சத்தமில்லாமல் மாளிகைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போய் ஸ்டார்ட் செய்து பயணத்தை ஆரம்பித்தான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 100
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top