What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
அத்தியாயம் 101

மணி நான்காக லேசாய் தூக்கம் கலைந்தது ப்ரீதனின் தம்பிராட்டிக்கு. மிழிகளை கசக்கி விழிகளை விரித்தவள் பக்கத்தில் பிக் பாஸை காணாது அறையைச் சுற்றி தேடினாள் தாலி கட்டியவனை.

“ப்ரீதன்... ப்ரீதன்... வாஷ்ரூம்லையா இருக்கீங்க? ப்ரீதன்...”

என்றவளோ அழைப்பின் ஊடே கணவனை ஏலம் போட்டும் இல்லாதவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

“ம்ச்ச்! டேய்! என்னடா பண்ற உள்ள? ம்ச்ச்! ப்ரீதன் நான் ட்ரஸ் போட்ருவேன்!”

என்றவளோ நாணியபடி அம்பகங்கள் மூடி மெத்தையில் உருண்டாள் போர்வையோடு சேர்ந்து.

“டேய் என்னடா நான் அம்மாவாகிட்டேன். சோ, ரெண்டாவது பொண்டாட்டி ஏதாவது செட் பண்ணலாம்னு டீப் திங்கிங்லே இருக்கியா? இல்ல உள்ளையே தூங்கிட்டியா?”

என்றவளோ போர்வையோடு எழுந்து அலமாரி நோக்கினாள்.

“அப்பனே முருகா நீதான் காப்பாத்தணும்! இவன் வேற குகப்ரீதன்! பேரு ஜாதகமெல்லாம் நீயேதான்! வள்ளியாட்டம் காதல் மனைவி நான் இருக்க... தெய்வானை கணக்கா எவளையாவது செட் பண்ணிட போறான் இந்த தர்ட்டி பிளஸ் அங்கிள்! அப்படி மட்டும் ஏதாவது ஆச்சு மவனே சளி சிந்தி வாயில போட்டுடுவேன்டா!”

சிரித்துக் கொண்டே கிண்டலடித்தவள் கேசுவலான ஆடைக்கு மாறியிருந்தாள்.

“என்ன நான் பாட்டுக்கு இவ்ளோ நக்கலடிக்கறேன் நீ எதுவுமே சொல்லாம இருக்க... என்னடா அங்கிள் கோவமா?”

என்றவளோ வாஷ்ரூமை நெருங்க தாழிடாத கதவோ பின்னோக்கியது அலரவள் விரல்கள் கதவில் பட.

விளக்கெரிவதைக் கண்டு கணவனவன் உள்ளே இருப்பதாய்தான் இவ்வளவு நேரம் நினைத்திருந்தாள் வீட்டாள் அவள்.

“எங்க போனான் இவன்? ப்ரீதன்!”

கழிவறையில் அவனில்லாது போக திரும்பிய நொடி புருஷனின் அலைபேசியைக் கட்டிலின் பக்கமிருந்த மேஜையில் பார்த்தவளின் மனதோ பதைத்திட ஆரம்பித்தது.

“ப்ரீதன் எங்க இருக்க? விளையாடறியா? அடிவாங்குவ? ஒழுங்கா வந்திடு! நான் கண்டுப்பிடிச்சேன் மூக்க கடிச்சி வச்சிடுவேன் சொல்லிட்டேன்! ப்ரீதன்!”

என்றவளோ நெஞ்சுக்குள் துளிர்த்த அச்சத்தை மறைத்துக் கொண்டு கீழ் மாடி நோக்கி ஓடினாள்.

ஆணவன் இப்படி பயங்காட்டி ரகளை செய்யும் டைப்பெல்லாம் இல்லை. இருந்தாலும் அப்பெரிய மாளிகையில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதுதான் வஞ்சியவளின் பயமே.

எல்லா இடமும் அலசி வாசல் நோக்க அங்கே பைக் இல்லாததைக் கண்டு புரிந்து விட்டது பரவையவளுக்கு.

“பிளடி ராஸ்கல்ஸ்! செத்திங்க ரெண்டு பேரும் என் கையில! சொல்லாம கொள்ளாம ஊர் சுத்த போயிட்டிங்களா என்ன விட்டுட்டு! எப்படி இருந்தாலும் இங்கதான வந்தாகணும்! வாங்க வச்சிக்கறேன்!”

என்றவளோ இடை இறுக்கிய கரங்களோடு புலம்பித் தீர்க்க எதர்ச்சையாய் எதிர்வீட்டு மேலறையில் மனித நிழல்கள் ரெண்டு பாதக செயலில் ஈடுபடுவது போல் தெரிந்தது அவளுக்கு.

என்ன நடக்கிறதென்று முழுதாய் அறியாதவளோ காலணி கொண்ட அடிகளைத் துரிதப்படுத்தி விரைந்தாள் பங்களாவின் முன் வாசல் க்ரில் கேட்டு வரைக்கும்.

ஜன்னல் திரைசீலைகள் காண்பித்த பிம்ப காட்சியினைப் பார்த்தவளோ உருக்குலைந்து போனாள். தவித்த சிறுபிஞ்சை காப்பாற்ற ஓடினாள் வயிற்றில் புதியதோர் உயிர் கொண்ட மங்கையவள் பின்விளைவுகளை யோசிக்காது.

பனிக்காற்று மேனியில் சல்லாபம் கூட்ட ப்ரீதனின் மோகமோ மணவாட்டியை நினைத்து சில்மிஷமான எண்ணங்களை மனதுக்குள் ஓடவிட்டது.

“டேய் இன்னைக்கு இதுபோதும்... வீட்டுக்குப் போகலாம் சரியா! லேடி பாஸ் வேற மைண்ட க்ராஸ் பண்ணி ரொம்ப இம்சை பண்றாங்க! பிஞ்சு நெஞ்சு தாங்காதுடா இந்தளவு சூட்ட!”

என்றவனோ பைக்கை முறுக்கினான் ஒரு முறுக்கு வேகமாய் இதழோரம் முகிழ்நகை கொண்டு.

என்னதான் காதல் கைகூடிய போதிலும் இடைவெளியான மூன்று வருடங்களில் ஜோடிகள் இருவரும் ஒருபோதும் எல்லை மீறியதே கிடையாது.

அது என்னவோ ஆரம்பிக்கும் போது கூடல் ஆசைகொண்டுதான் இருக்கும் போக போக இச்சை காணாமல் போய் பச்சாதாபம் மட்டுமே ஓங்கி நிற்கும் விசாவின் மூக்கு சளியால்.

ப்ரீதனும் அதற்கெல்லாம் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. காதலிக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கு சரசம் கொள்ள எவ்வளவு நேரம் பிடிக்கும். இருந்தும் காத்திருந்தான் நேரம் கூடி வர ஆணவன்.

அவனைப் பொறுத்தமட்டில் விசாவின் நெஞ்சில் அவனைத்தாண்டி வேறு யாரும் கொடி நாட்டிட இயலாது. அதுவொன்றே போதும் பேதையவளை ஆணவன் மொத்தமாய் சொந்தங்கொண்டாடிட.

வயது போனாலும் பரவாயில்லை என்றவனோ நுண்ணிடையாள் அவளுக்காகவே வயதை கண்டுக்காமல் காதல் கொண்டான். ஒரே தட்டில் சாப்பிட சொல்லிக் கொடுத்தான். ஒரே உறிஞ்சு குழாயில் ஜூஸ் குடிக்க வேண்டி நின்றான்.

கப்பல் சீட்டில் மிட்நைட் படம் பார்க்க வைத்தான். ராத்திரியில் பனிக்கூழ் உண்ண கற்றுக் கொடுத்தான். நடுராத்திரி க்ரில் கேட் பிடித்து கதைபேச வைத்தான். சர்ப்ரைஸ் விசிட் அடித்தான். பூங்கொத்துகளை சும்மாவே பரிசளித்தான்.

அவள் கையாலேயே வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுவதை வழக்கமாக்கினான். அனுதினமும் ராத்திரி போனில் விடியும் வரை பேசினான். மறுநாள் மீட்டிங்கிற்கு லேட்டாய் வந்து சமாளித்தான்.

லிஃப்டுக்குள் ஆளில்லா வேளையில் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தான். கார் பயணத்தின் போது பெதும்பையின் கையை மடியில் வைத்து பற்றிக் கொண்டான்.

பைக் ரைடில் அவளை ஓட்டச் சொல்லி பின்னால் அமர்ந்து கட்டியணைத்துக் கொண்டான். ரகசியமாய் ஓடி வந்து லிப் லாக் அடித்தான். பொது இடங்களில் டீசண்டாக கன்னத்தில் இதழ் பதித்தான்.

சேலை கட்டி விட்டான். கொலுசு போட்டு விட்டான். ஜிமிக்கி போட்டு அழகு பார்த்தான். தங்க மூக்குத்தியில் ஜொலிக்க வைத்தான். நகைகள் கொண்டு பூஜித்தான். செல்லங்கொஞ்சி ஊடல் கொண்டான்.

சும்மா சும்மா ஐ லவ் யூ சொன்னான். சுந்தரியவளை அடிக்கடி வெட்கப்பட வைத்தான். மூக்கு சளி கொண்ட ஆடையோடு தூங்கிட ஆரம்பித்தான். கம்பளி சட்டைகளை அவளுக்கும் சேர்த்தே எக்ஸ்.எல். சைசில் வாங்கினான். அவளோடு கட்டியணைத்துத் தூங்கினான்.

நெட்ப்ளிக்ஸில் படம் பார்த்தான். கிச்சனை சர்வ நாசமாக்கினான். ஓடிப் பிடித்து விளையாடினான். தோற்றால் வம்படியாய் இச்சு கேட்டான். யுவதியின் காலடியில் படம் வரைந்தான். கூசி அவள் கெஞ்சிட ரசித்தான்.

காதலி தாபம் கொள்ள மயக்கினான். கிறக்கம் தாளாத போது முடியா முத்திகளுக்கு வழி வகுத்தான். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ப்ரீதனின் காதல் லீலைகளை விசாவிடத்தில்.

நைன்டீஸ் கிட் அவனுக்கும் டூ கே கிட் அவளுக்கும் பக்காவாகவே செட்டானது. காந்தாரியவள் எதிர்பார்க்கா அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஆணவன் குறையேதுமின்றி பூர்த்தி செய்தான்.
நன்றாக ட்ரவல் செய்து கொண்டிருந்த ப்ரீதனின் பைக்கோ சடீரென்று மக்கர் செய்திட ஆரம்பித்தது.

“டேய்! டேய்! டேய்! டேய்! கால வாரி விட்டுடாதடா! செல்லமில்ல! பிளீஸ்டா! பிளீஸ்டா! வீடு வரைக்கும் மட்டும் போயிடுடா! நாளைக்கு காலையில காட் ப்ராமிஸ் சர்வீஸ்க்கு போயிடலாம்டா!”

கொஞ்சிக் கெஞ்சினான் ப்ரீதன் பைக்கிடம். இருந்தும் பலனில்லை.

அடி வாசலிலிருக்கும் வீட்டை அடைகின்ற நேரத்தில் கோளாறு பண்ணிய பைக்கோ இறுதியில் பிரேக் பிடிக்காது போய் முட்டி மோதியது அவர்களின் பங்களாவிற்கு பக்கமிருந்த மாளிகையின் திறந்திருந்த க்ரில் கேட்டை தாங்கியிருந்த ஓரத்து சுவற்றில்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 101
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top