- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் 102
மணி விடியற்காலை நான்கு முப்பது.
சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான்.
ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ ப்ரீதனின் வேறு விதமான உடற்பயற்சிக்குத்தான் பேருதவியாக இருக்கிறது. முடிவினில் ரிசால்ட் பிக் பாஸுக்கும் டயர்ட் லேடி பாஸுக்கும் சொந்தமாகி கேம் ட்ராவில் முடியும்.
பைக் சுவற்றோடு விளையாடிய விளையாட்டில் நல்லவேளை ப்ரீதனுக்கு அடியேதும் பலமாய் படவில்லை. சமாளித்து எழுந்தவன் பைக்கை மேல் தூக்கி நிற்க வைக்க கண்ணாடி நொறுங்கிய சத்தம் அவனை திரும்பி பார்க்க வைத்தது இடிப்பட்டு நின்ற வீட்டின் மேல் மாடியை.
ஜன்னலுக்கு வெளியே எவனோ சிறுமியொருத்தியின் கழுத்தை பொம்மை போல் கையில் பற்றியிருக்க கீழிருந்து காட்சியை கண்டவனுக்கோ பதறித் துடித்தது உள்ளம்.
“ஏய்!”
என்றலறிய ப்ரீதனோ அரக்க பறக்க ஓடினான் பெறாத பல குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பவன் சில் வண்டவளுக்கு நடக்கின்ற அராஜகத்தை பொறுத்திட முடியாது.
ப்ரீதனவன் ஊரான் வீட்டில் நுழைய கீழ் தளமோ சர்வ நாசமாகிக் கிடந்தது. யாரென்று தெரியாத ஒருவன் அசைவற்று கிடந்தான் ரத்த வெள்ளத்தில். பளிங்கு தரையெங்கும் குருதி.
ப்ரீதனின் முழி பிதுங்கியது. ஹார்ட்டோ வழக்கத்தைத் தாண்டிய படபடப்பைக் கொண்டது. உடல் வேர்த்துக் கொட்ட போலீசுக்கு அழைக்க நினைத்தவனோ பாக்கெட்டில் போனை தேடினான்.
கண்களை மூடி உச்சுக் கொட்டினான் ஆணவன் அதை விட்டு வந்த சங்கதி ஞாபத்துக்கு வர கூடவே அவன் மீது அவனுக்கே கோபமும் சேர்ந்து வர.
மேல் மாடியில் கேட்டது அலறல். இல்லை அலறல்கள். ஓடினான் ப்ரீதன் பின்னங்கால் பிடறியில் பட கதறல்கள் வந்த திசை நோக்கி.
சத்தம் கேட்ட அறையை நோக்கியவனோ சம்பவத்தை தடுக்கும் வேகத்தில் கால் இடறி விழுந்தான் அறையின் வாசலிலேயே அறைக்கும் படிக்கட்டிற்கும் நடுவினில்.
“ப்ரீதன்!”
என்ற அலறலில் தலையை மேல் தூக்கியவனோ கண் முன்னிருந்த மஞ்சத்தில் கண்டான் அவனின் தாலியையும் வாரிசையும் சுமந்திருக்கும் விசாவை அலங்கோலமான நிலையில்.
“மூடுடி வாய!”
என்றவனோ விட்டான் அறையொன்றை செவினி சிவக்க பெண்ணவள் கன்னத்தில்.
“விசா!”
என்ற ப்ரீதனோ கால் முட்டி படிக்கட்டினில் இடித்த இடியில் எழ முடியாது தவித்தான் கட்டியவள் படும் பாட்டினை கண்டும் காப்பாற்றிட முடியாது.
“ப்ரீதன்!”
என்று தலையைத் திருப்பி கணவன் குரல் கேட்ட திசையில் கைகளை நீட்டியவளின் கையை இழுத்து கட்டிலின் விளிம்போடு சேர்த்து கட்டினான் கயவனவன் அன்றைக்கு போல இன்றைக்கும் உருண்டை தலையணையின் கயிறுகளை உருவி.
“யாருடா நீ! நல்ல மூட ஸ்பாயில் பண்ணிக்கிட்டு!”
என்றவனோ கடுப்பில் கத்தி தலையணைகளைத் தூக்கியடித்தான் தரையில் எழ முயற்சித்துக் கொண்டிருந்த ப்ரீதனின் மீது.
கூடவே, உடைந்த கண்ணாடி துண்டுகள் சிலதுகளையும் தூக்கி வீசினான் விசாவின் ஆளனின் மீது மனசாட்சியற்றவன். அவைகளைத் தடுத்த பேபி சீட்டரின் கையிலோ கண்ணாடி குத்துகள் சரமாரியாய் வரிசை கொண்டன.
“ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ!”
என்றவன் வலியில் துடிக்க,
“ப்ரீதன்! விட்றா! விடுடா என்ன! டேய்! ப்ரீதன்!”
கணவனின் ரணம் உணர்ந்தவளோ அலறி திமிறினாள் தீயவனின் பிடியிலிருந்து தப்பித்திட.
“டேய்! சீக்கிரம் வாங்கடா! இந்த உத்தம பத்தினி வேற ரொம்பதான் துள்ளுறா!”
என்றவனோ மற்ற கொடூரர்களுக்கு அழைப்பு விடுத்து நுகர்ந்து கொண்டான் வழக்கமான போதைத்தூளை.
“தப்பான நேரத்துல சரியா வந்து மாட்டிக்கிட்டியேடி அழகி! இந்தா! நீயும் கொஞ்சம் போதைய ஏத்திக்கோ அப்பத்தான் செம்ம மூட்ல ஜாலியா என்ஜாய் பண்ணலாம்!”
என்றவனோ கர்ப்பிணியின் வாய்க்குள் போதைத் தூளை திணிக்க,
“டேய்! வேணாண்டா! அவ பிரக்னென்ட்டா இருக்காடா! விடுடா அவள! டேய்!”
என்றலறினான் முஷ்டி கைகளை தரையில் ஊன்றி எழ பார்த்த ப்ரீதன் கோபங்கொண்டு.
“புள்ளத்தாச்சியா நீ! சொல்லவே இல்ல! அதுக்கென்ன பார்த்து பண்ணிக்கலாம் செல்லம் விடு!”
என்ற காமக்கொடூரனோ போதையில் உளறினான்.
“விடு! என்ன விடு! ஆஹ்ஹ்! அம்மா! வேண்டாம்! ப்ரீதன்!”
ஆடைகள் கிழிபட்டு கந்தலாகிக் கிடக்க மானத்தைக் கையால் காத்திட முடியாதவளோ கெஞ்சினாள் மேனியைப் பந்தாடப் பார்த்தவனை.
“அடங்க மாட்டல்ல நீ! உன்ன என்ன பண்றன் பாரு! சாவுடி!”
என்றவனோ கையிலெடுத்தான் முன்னரே உடைந்து கிடந்த கூரிய கண்ணாடி துண்டொன்றை.
“அம்மா!”
என்றலறிய விசாவோ விலோசனங்களை மரண பயங்கொண்டு மூடிட,
“விசா!”
என்ற ப்ரீதனோ வாசலிலிருந்து கட்டில் நோக்கினான் பொஞ்சாதியவளை மீட்டிட.
இருப்பினும், அவனுக்கு முன் முந்தியதென்னவோ தீனரீசன்தான்.
“டேய்!”
என்ற ஆவேசம் பொங்கிய கணீரென்ற கோபக்குரலோடு எதிர்புற அறையிலிருந்து ஓடி வந்த ரீசனோ ஒரே பாய்ச்சலில் பஞ்சணையில் ஏறி படாரென்றொரு அடியை வைத்தான் பற்றியிருந்த ஹாக்கி மட்டையால் விசாவின் கற்பை சூறையாடப் பார்த்த ஈனப்பிறவியின் கபாலம் கலங்க.
ரீசன் பலங்கொண்டு அடித்த அடியில் சித்தி புத்தியெல்லாம் சின்னாபின்னமாகி மண்டை ஓடு உடைய மூர்ச்சையாகி தரையில் விழுந்தான் கேடு கெட்டவன் திரும்பிய வேகத்தில்.
பதறிக் கிடந்த ப்ரீதனோ நிம்மதிப் பெருமூச்சு கொண்டான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 102
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.