- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் 104
மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது.
“ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!”
என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்.
“குஞ்... குஞ்சரி...”
என்ற ரீசனோ காதல் மணவாட்டி அவளின் கன்னத்தை குருதி கைகளால் வருடினான்.
“ஒன்னுமில்லடா! உனக்கு ஒன்னுமில்லடா!”
என்றவளோ தொடர்ந்து அலறினாள்.
“ஐயோ! ப்ரீதன்! எங்கடா ஆம்புலன்ஸ் எங்கடா? கடவுளே! உனக்கு இரக்கமே இல்லையா? என் காலத்தான் எடுத்துக்கிட்ட! போதாக்குறைக்கு என் வாழ்க்கையையும் கொடூரமா சிதைச்சிட்ட! இன்னும் தீரலையா உனக்கு வெறி? பத்தலையா உனக்கு நான் அனுபவிச்சதெல்லாம்? பத்தலையா? ஏன் இன்னமும் என்ன கஷ்டப்படுத்தற? ஏன் என் ரீசன இப்படி பண்ற? அவன் பாவம்! எனக்கு அவன் வேணும்! அவன் இல்லாம நான் இல்ல!”
குஞ்சரியின் அழுகை என்றைக்கும் இல்லாத பேரிரைச்சல் கொண்டிருந்தது இன்றைக்கு. அப்படியானதொரு பயம் பெதும்பை அவள் நேத்திரங்கள் கொண்ட அழுகையில் உயிர் கொண்டது.
“கீத்து! எங்கம்மா இருக்க?”
என்ற ப்ரீதனோ சின்ன குட்டியின் பெயரை அழைத்தாற்படி ஒவ்வொரு கிச்சன் கேபினட்டையும் திறந்து பார்த்தான்.
“கீத்து! பயப்படாதடா அங்கிள் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்டா! நான் விசா சித்தியோட ஹஸ்பண்ட்மா... சித்தப்பாடா! கீத்து...”
என்றவாக்கில் கடைசியாய் திறந்த கேபினட் உள்ளிருந்து வெளியே சரிந்தாள் மழலையவள் ப்ரீதனின் கரங்களில் மயங்கியபடி.
“கீத்து! டேய்! கீத்து குட்டி! டேய்!”
என்றவனோ சின்னவளின் முகத்தில் தண்ணீர் கொண்டு அடித்தெழுப்ப விழிகள் விரித்தவளோ,
“விடு! விடு என்ன! விட்டுடு! டேடி! டேடி! ஹெல்ப் மீ! டேடி!”
என்று திமிறினாள் ஆணவனின் பிடியிலிருந்து கயவர்களின் செயல் அவளையும் ஆட்கொண்டிருக்க.
“அப்பாடா! அப்பா! அப்பாம்மா! சித்தப்பாடா! சித்தப்பா! விசா சித்தி ஹஸ்பண்ட்!”
என்றவனின் பார்வையிலும் அணைப்பிலும் விரசத்தை உணராதவளோ,
“சித்தப்பா...”
என்று கண்கள் மூடி குலுங்கி கதறினாள் அவன் நெஞ்சில் துஞ்சி.
“சித்தப்பா இருக்கன்டா! யாரும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது!”
என்றவனோ கீறல்கள் கொண்ட பிஞ்சவளின் மேனியைப் பார்த்திட சகிக்காது அவளை மாரோடு அணைத்துக் கொண்டான்.
ஆனது ஆகட்டும் கர்மாவாவது குர்மாவாவது என்று பாவக்கணக்குகளை தெரிந்தே காரணமாய் ஏற்றிக் கொண்டான் ரீசன்.
நிமிடங்கள் காற்றில் கரைய ரீசனின் மிச்ச உயிரும் ஊசலாடியது இனி பிழைத்திட வழியே இல்லையென்றிருந்தது.
துக்கத்தை சிரிப்போடு வரவேற்றான் குஞ்சரி புருஷனவன்.
நன்றி நவின்றான் ஆணவன் மனதார சொச்ச நொடிகளை பக்கென்று பிடுங்கிடாது காதல் துணைவியிடம் சில வார்த்தைகள் கதைக்க வழிவிட்ட எமனுக்கு.
“ரீசன் உனக்கு ஒன்னும் இல்லடா! உனக்கேதும் ஆகாதுடா! ஆம்புலன்ஸ் வந்திடும்டா! நான் உன்னை விட்ற மாட்டேன்டா! குஞ்சரியால நீ இல்லாம வாழ முடியாதுடா! ரீசன்!”
என்றவளோ அவளின் ஆடையை கழட்டி சுருட்டி வைத்தாள் செம்புனல் பொத்துக் கொண்டு வழிந்த இதயக்கூட்டில். ஐஸ் கட்டிகள் முழுதாய் கரைந்திருந்தன.
“நான் உன்னை விட மாட்டேன்டா! உனக்கேதும் ஆகாதுடா! கொன்னுடுவேன்டா அந்த எமன! கொன்னுடுவேன்! உன்னை என்கிட்டருந்து யாராலையும் பிரிக்க முடியாது!”
ரணம் கொண்டு கதறியவளோ சரிந்து விழுந்தாள் தரையில் கட்டிலின் விளிம்பைப் பற்றியபடி வீல் சேரிலிருந்து.
காட்சிகளுக்கு சாட்சியாகிப் போன எமனோ அவன் ரெய்சனை கையிலேந்திய சம்பவத்தை மனக்கண்ணில் ஓட விட்டு எடுக்க போகின்றவனின் உயிரை நிறுத்தப் பார்க்க தம்பியின் கைகளைப் பற்றி நிறுத்தினான் அண்ணன் சனீஸ்வரன் தலையை வேண்டாமென்றாட்டி.
“கர்மா அதன் கடமையை செய்யும்!”
சனீஸ்வரனின் வார்த்தைகளில் எமனோ அங்கிருந்து நகர்ந்தான் இன்னமும் அங்கேயே நின்று குஞ்சரியின் கதறலைக் கண்டால் ஒருக்கால் மனமிறங்கிடுமோ என்று.
“ரீசன்! ரீசன்! பயமா இருக்குடா! இப்படி பண்ணாதடா! நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடா! ரீசன்!”
என்றவளோ நடக்க முடியா கால்களைத் தரையில் பரப்பி எக்கி கட்டிக்கொண்டாள் ரீசனை.
“சீனியர்...”
என்றவனின் முகிழ்நகையோ நங்கையவளை நிலைகுலை வைத்தது.
“டேய்! உனக்கு ஒன்னுமில்லடா! டாக்டர் இதோ... இதோ வந்துகிட்டு இருக்காங்க! நீ பாரேன் அடுத்த வாரம் நாம ஸ்வீஸ் போறோம்! அதுக்கு அடுத்த வாரம் லண்டன் போறோம்! நான் உன்னை விட மாட்டேன்! எங்கேயும் போக விட மாட்டேன்!”
என்றவளோ சளி ஒழுகிய முகத்தோடு ரீசனின் கழுத்தை கைகளால் வளைத்துக் கட்டிக்கொண்டாள்.
“ஐ லவ் யூ ரீசன்! ஐ லவ் யூ! என் லவ் உன்னை போக விடாது! குஞ்சரிக்கிட்டருந்து உன்னை போக விடாது! நீ குஞ்சரியோட ரீசன்டா! குஞ்சரியோட உயிர்!”
என்றவளோ நயனங்களை மூடி ஆளனவன் நாசியில் அவள் மூக்கொட்டி வீசிய சூடான கனலின் நடுவில் கண்ணீர் வழிந்திறங்க தவித்த உதடுகள் பதற ஒப்புவித்தாள்.
“ஐ லவ் யூ குஞ்...”
என்ற ரீசனின் மூச்சோ மேலிழுத்து,
“சரி...”
என்று கீழிறங்கி விடைபெற்றுக் கொண்டது முழுதாய்.
ரீசனின் திறந்திருந்த கண்கள் ரெண்டும் குஞ்சரியின் முகத்தையே வெறித்திருக்க ஓரமாய் கண்ணீர் துளிகள் திரண்டோடின உயிரற்றவனின் கண்ணோரங்களில்.
மனைவியவள் முகமோ ஆளனின் ரத்தம் படிந்த உள்ளங்கை பிடிக்குள்ளேயே நிலைகொண்டிருக்க, இதுவரை ஒப்பாரி வைத்தவளின் உதடுகளோ மூடிடாமல் சிலையாய் ஸ்தம்பித்து நின்றது.
இயமானியவளின் இமைகளோ இமைக்காது செத்தவனின் விழிகள் மூடா முகத்தையே பார்த்தது.
“ரீசன்! ரீசன்! டேய் ஜூனியர்! ஜூன்... ஜூ...”
என்றழைத்தவளோ அசைத்தாள் அவளையே வெறித்தாற்படி உயிர் துறந்திருந்த ரீசனின் முகத்தை.
“ரீசன்! ரீசன்! எழுந்திரு! ஜூனியர் எழுந்திரிடா! டேய்!”
என்றவளோ அவனுடலை உலுக்க மரித்தவனின் கரங்களோ பெண்ணவள் முகத்திலிருந்து சரிந்து விழுந்தது கீழே.
“ரீசன் ஐ லவ் யூ ரீசன்! ஐ லவ் யூ! ஐ லவ் யூ ரீசன்! ரீசன் ஐ லவ் யூ!”
என்றவளோ பிணமாகிப் போனவனின் வதனம் முழுக்க உதடுகள் பதிக்க அசையாது கிடந்தவனை ஆர்ப்பரித்த விலோசனங்கள் கொண்டு நோக்கியவளோ அலறினாள் உயிர் போகும்படி கணவனவன் பெயரை.
“ரீசன்!”
குஞ்சரியின் ஈரக்குலை நடுங்கும் கதறலில் அவ்வளவு நேரம் திக்பிரமை பிடித்தவளாட்டம் கிடந்த விசாவோ தெளிந்தாள்.
சூதானத்திற்கு வந்த மடவரலவளோ காலுக்கடியில் ரீசனின் உயிரற்ற உடலைக் கண்டு அலறி மயங்கினாள்.
கிச்சனில் கீத்துக்கு தேவையான முதலுதவியை வழங்கிய ப்ரீதனோ அங்கிருந்து வெளியேற, மேல் தளத்திலோ உலகமே ரெண்டு பட்டு போகும் அளவிலான குஞ்சரியின் அலறல் கேட்டது.
“சித்தப்பா டேடி எங்க... டேடி வேணும்... டேடி பாக்கணும் நான்...”
என்ற பிஞ்சோ அப்பன் போய் சேர்ந்த சங்கதி தெரியாது ப்ரீதனிடத்தில் மரித்தவனைக் கேட்க,
“வருவாருமா... வருவாரு...”
என்றவனோ பாரமான மனதோடு கையில் தாங்கியிருந்த மழலையை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 104
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.