- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் 105
இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும்.
நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை.
இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை.
ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால், அவனுக்காகவே பிறப்பெடுத்த அபலைக்கு இனி மூச்சுவிடும் ஒவ்வொரு நிமிடமும் நரகம்தான்.
தீராத இப்பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்க இனி எவனும் வரப்போவதில்லை, செத்தவன் திரும்பி வந்தால் ஒழிய. இதுவொன்றும் சினிமா இல்லையே போனவன் வருவதற்கு.
இருபது நாட்கள் கடந்திருந்தன குஞ்சரியின் ரீசன் மரணித்து. காரியங்கள் எல்லாம் முடிய அதற்கு பிறகான நாட்களில் வந்து போனவர்கள் கூட சொல்லாமலே கிளம்பிப் போயினர்.
அம்பாளோ போக வேண்டிய வயதில் அவரும் வாத்தியாரும் வாழ வேண்டிய இரு மகன்களையும் சாவுக்கு வாரிக்கொடுத்த நிலையில் மொத்தமாய் உடைந்திருந்தனர்.
குலந்தழைக்க ஒருத்தனைக் கூட விட்டு வைத்திடவில்லையே முருகன் என்ற கோபம் ஒருபுறம் பெற்ற தாய்க்கு. தவமிருந்து பெற்றவனும் இல்லை ஆசை மகனும் இல்லை.
இனியென்ன வாழ்க்கை என்று திரும்பிப் பார்க்கையில் பேத்தியோடு குட்டி தினா ஒருத்தனும் இருப்பதுதான் இப்போதைய அவர்களுக்கான ஒரே ஆறுதலாகிப் போனது.
பெரியவர்கள் பேத்தியோடு அவர்களுக்கான அறையில் சென்று நுழைய குட்டி தினாவோடு விசாவும் ப்ரீதனும் கூட கிளம்பினர்.
குஞ்சரி தனியாய் அப்பெரிய வரவேற்பறையில் மாலையிட்டிருந்த ரீசனின் புகைப்படத்தையே வெறித்திருந்தாள். வீடு முழுக்க இருட்டு. அவனுக்கு அப்படிதான் பிடிக்கும். அவன் படமிருக்கும் இடத்தில் மட்டும் சிறியதோர் ஒளி.
சிரித்த முகமாய் அவனிருக்க நிழலாய் தெரிந்தது சிரிப்பைத் தொலைத்தவளின் முகம்.
பொட்டில்லாது இருக்கவே இருக்காது குஞ்சரியின் முகம். அது ரீசனுக்கு பிடிக்கவே பிடிக்காது. கருப்புப் பொட்டையாவது தூக்கி வைத்திடுவான் சிவப்பில்லா நேரத்தில்.
குஞ்சரியின் உச்சி குங்கும் அவ்வளவு பெரிய மேட்டரில்லை அவனுக்கு. இருப்பினும், அவ்வப்பொழுது சின்னதாய் வைத்துப் பார்த்து ரசித்திடுவான்.
இப்படி கணவனவன் பார்த்துப் பார்த்து அலங்கரித்தவளின் முகம் இன்றைக்கு வெறுமையாய் காட்சியளித்தது.
வீர் கொண்டு வந்து அடுக்கியிருந்தான் ஒரு பெட்டி பீர் போத்தல்களை கருமாதியின் படையலின் போது. வந்து போன கீரனும் ஒரு வாய் தண்ணி வைத்திடவில்லை துக்க வீட்டில் அவனின் கேரியருக்கே பெரிய இழுக்காகிப் போன வழக்கால்.
மேலிடம் அவனை கண்டத்தனமாய் கிழித்ததெல்லாம் கூட அவனுக்கு பெரிசில்லை. நண்பனை இழந்ததுதான் சொல்ல முடியா வலி.
என்னதான் கீரனோடு அடிக்கடி ரீசன் தாய்லாந்து போய் வந்தாலும் மிஞ்சி மிஞ்சி தண்ணியடித்து மட்டையாகிடுவானே தவிர மற்ற பெண்களின் மீது அவனின் கவனம் போனதே இல்லை.
ஏன், கீரனே சரக்கை ஓசியில் தள்ளிய போது கூட ரீசன் சொன்ன வார்த்தைகள்.
“குஞ்சரி பாவம்டா... தாங்க மாட்டா...”
இதுவொன்றே கீரனை முழுதாய் ரீசனின் பக்கத்தில் நம்பிக்கையோடு நிற்க வைத்தது விசாவின் விடயத்தில்.
மனை முழுதும் ரீசனுக்கு துளியும் பிடிக்காத சாம்பிராணி அகர்பக்தி வாடைகள். கடந்த சில நாட்களுக்கு முன் அவன் படத்தின் முன் அவைகள்தான் குழுமி கிடந்தன.
விசா அவர்களின் வாழ்க்கையில் நுழைந்து எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும் வரையில் வீட்டு சாப்பாட்டை சப்புக் கொட்டி உண்பவன் அதற்கு பின்னர் ஒருமுறை கூட நிம்மதியாக பொண்டாட்டி கையால் ஒருவாய் சோறு உண்ணவில்லை.
ஆனால், அன்றைக்கோ அவன் படத்திற்கு முன்னால் படையல் என்ற பெயரில் எக்கச்சக்கமான உணவுகள் வரிசையாய் காத்து வாங்கின.
அப்போதே பெரிய கலாட்டா செய்து விட்டாள் குஞ்சரி கத்தி கதறி. மரண ஓலத்தை விட போனவர்களைப் பிரிந்து இருப்பவர்கள் கதறும் ஓலம்தான் ரணம் மிக்கது.
“ஐயோ! உங்களுக்கெல்லாம் என்ன பைத்தியமா? எதுக்கு இப்போ என் ரீசனுக்கு படையல்? எதுக்கு மாலை? என் ரீசன் என்ன செத்தா போயிட்டான்?”
என்றவளோ ரீசனின் படத்திற்கு முன்னிருந்த எல்லாவற்றையும் உதறித்தள்ளி, புருஷனின் படத்தை கையிலெடுத்து அழித்தாள் உள்ளங்கையால் அவன் நெற்றி படத்திலிருந்த சந்தன குங்குமத்தை.
“ஏய் விடு! கொன்னுடுவேன் உன்னை! நான் கொடுக்க மாட்டேன்! நான் கொடுக்க மாட்டேன்! நான் என் ரீசன கொடுக்க மாட்டேன்!”
என்றவளோ அவளின் வீல் சேரோடு அங்கிருந்து நகரப் பார்த்தாள் நெஞ்சோடு இறுக்கிய ரீசனின் படத்தை அவளின் கையிலிருந்து சிலர் பறிக்க முயற்சிக்க.
“குஞ்சரி இப்படி பண்ணாதம்மா... மணியாச்சு படையல் போடணும்... பையன் பசியோட இருப்பான்மா...”
அம்பாள் கெஞ்ச,
“இல்ல! முடியாது! என் ரீசனுக்கு நான்தான் சமைச்சுக் கொடுப்பேன்! இதெல்லாம்... இதெல்லாம்... யாரோ சமைச்சது! அவனுக்கு பிடிக்காது! குஞ்சாய் நான் சமைச்சாதான் பிடிக்கும்!”
என்றவளோ தரையைப் பார்த்தாளே தவிர முன்னிருந்தவர்களின் முகத்தை ஏறெடுக்கவேயில்லை.
“கொடுத்திடு குஞ்சரி... அத்தை கேக்கறாங்கதானே கொடுத்திடுமா... படத்தைக் கொடுத்திடுமா...”
வாத்தியார் கூட போராடினார் சித்தங்கலங்கிய மருமகளிடம்.
“முடியாது மாமா! முடியாது! பாருங்க ரீசன் வேணாம் சொல்றான்! ஆமாதானே ரீசன்! ஆமாதானே! நான் உனக்கு என் கையாலயே சிக்கன் ரெண்டாங் (chicken rendang) செஞ்சி தறேன் சரியா?”
என்றவளோ ரீசனின் படத்தோடு பேசிக்கொண்டே வீல் சேரை நகர்த்த, போனவனைப் பெத்தவரோ தலையில் அடித்துக் கொண்டார் மகன் நட்டாத்தில் விட்டுப் போன பொண்டாட்டியின் அவலத்தைக் கண்டு.
இருப்பினும், அவள் போக்கில் குஞ்சரியை விட்டிட முடியுமா என்ன? காரியங்கள் எல்லாம் நடந்தாக வேண்டுமல்லவா? ஆகவே, சுற்றத்தார் சுந்தரியவள் கையிலிருந்து ரீசனின் படத்தைப் பிடுங்க மறுபடியும் முயற்சிக்க,
“யூ ஸ்டுபிட்ஸ்! லீவ் எஸ் அலோன் (leave us alone)! ஏன் இப்படி பண்றீங்க? என் ரீசன் பாவம்! அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது! அவன ஏன் எல்லாம் இப்படி டார்ச்சர் பண்றீங்க? போங்க எல்லாம்! போங்க!”
என்று கதறியவளை வந்திருந்த அத்தனை பேரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
“குஞ்சரி படத்தைக் கொடு குஞ்சரி! குஞ்சரி கொடு குஞ்சரி!”
என்று பலமுறை கெஞ்சி ஒருகட்டத்தில் பொறுமை இழந்தான் பஜாரி புருஷன்.
“கொடு குஞ்சரி படத்தை, செத்தவனுக்கு சாப்பாடு போட வேண்டாவா?”
என்றவனோ ஒரே பிடுங்காய் பிடுங்கினான் ரீசனின் படத்தை குஞ்சரியின் கையிலிருந்து.
“செத்... செத்து போயிட்டானா?”
என்றவளோ புத்தி பேதலித்தவளாய் வாய் பொத்தி வினவ,
“ஆமா செத்துதான் போயிட்டான்!”
என்று முறைத்த வீரிடத்தில்,
“செத்து போயிட்டானா! என் ரீசன் செத்து போயிட்டானா!”
என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கேட்டாள் சத்தமாய் குஞ்சரி.
“ஆமா செத்து போயிட்டான்! இருக்கும் போதுதான் நீ அவன நிம்மதியா இருக்க விடல! போய் சேர்ந்த பிறகாவது அவன நிம்மதியா விடு!”
என்று கோபத்தில் கத்திய வீர்ரையோ ஓரம் இழுத்து போனான் மீகன்.
“ரீசன் எங்கடா இருக்க... எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்கறாங்கடா... நீ வாடா! நீ எங்க போன? இந்த வீர் வேற லூஸ் மாதிரி நீ செத்துட்டன்னு சொல்றான்! கேனப் பையன்!”
என்ற யுவதியோ அவளை வேடிக்கை பார்த்த கூட்டத்தைப் பார்த்து கைகளை பிசைந்தாள்.
“குஞ்சரி வாமா... சாம்பிராணி போடணும்...”
என்று மாமியார் அம்பாள் அழைக்க,
“இல்ல நான் வரல! எனக்கு பசிக்கல! ரீசன்கிட்ட சொல்லுங்க நான் அவன்கூட டூ! என்ன ஏமாத்திட்டு எங்க போனான் அவன்? வீர் என்ன திட்டறான். அவன சத்தம் போடக் கூட ரீசன் வரலல்ல! நான் போறேன்! நான் பேச மாட்டேன் அவன்கூட!”
என்றவளோ தன்னிச்சையாய் உளறியபடியே வீல் சேரில் அவள் அறை நோக்கி சென்றாள்.
தீனரீசன் தேவகுஞ்சரி மாளிகையை நிரம்பியிருந்த மனித மந்தைகளோ கடவுளால் கைவிடப்பட்ட காதல் கிறுக்கியை பாவமாய் பார்த்து மனம் கனத்துப் போயினர்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 105
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.