- Joined
- Jul 10, 2024
- Messages
- 483
அத்தியாயம் நூற்றி பதினேழு
குட்டி கீத்து வளர்ந்த ரீசனாகி நிற்க, ஹாக்கியின்பால் கொண்ட அதீத கவனம் குஞ்சரிக்கான நேரத்தைக் குறைத்தது.
கொஞ்சநாட்கள் அம்மா, அவள் மகளுக்காய் காத்திருக்க விளையாடி வந்தவளோ, களைப்பில் தாயை மறந்து உறக்கம் கொண்டாள்.
சர்ஜரி சுந்தரியோ சாப்பாடு வேண்டாமென்று படுக்க, விடியற்காலையில் எதார்த்தமாய் எழும்பிய பொம்பளையிலான ஆம்பளை ரீசனோ, ஓடோடி வந்தாள் உணவுத்தட்டை தூக்கிக்கொண்டு பெற்றவளுக்கு சோறூட்ட.
புதல்வி ஊட்ட அமைதியாய் உண்டு முடித்தவளோ ஏன் லேட்டென்றுகூட ஒரு வார்த்தைக் கீத்துவைக் கேட்காது, அவள் மடியிலேயே படுத்துக்கொண்டாள்.
ரீசனைப் போலவே குஞ்சரியவளைத் தொடையில் தாங்கி, வலித்தாலும் அதை மறைத்து ஆழ்ந்த நித்திரையில் தாயவள் மூழ்கிய பின்பே, போர்வை போர்த்தி அங்கிருந்து நகர்ந்தாள் கீத்து.
கீத்துவின் நேரப் பற்றாக்குறையை உணர்ந்து கொண்ட குஞ்சரியோ, அவளுக்கான தேவைகளை அவளே கவனித்துக் கொண்டாள். சரியாகி பேட்டரியை சார்ஜிங் செய்து எந்நேரமும் முழு விழிப்புடன் இருந்தாள்.
கதை புத்தகங்களைத் தூக்கி தூரப்போட்டு வாழ்க்கையில் வீழ்ந்து எழுந்தவர்களின் சுயசரிதையைப் படித்திட ஆரம்பித்தாள். ரீசனின் பாவக்கணக்கு குறிப்பேடுக்கு சில காலம் விடுமுறையளித்தாள்.
படங்கள் பார்த்து சிந்தையை ரிலாக்ஸாக்கி கொண்டாள். பழைய சம்பவங்களிலிருந்து மெதுவாய் வெளிவர பார்த்தாள். ரீசனின் ஆடைகளை மீண்டும் கலைத்துப் போட்டு மடித்துவைத்தாள்.
உணவைத் தனியே உண்ண பழகிக்கொண்டாள். சுயமாகவே வீல்சேரிலிருந்து எழுந்து நிற்க முனைந்தாள். அலமாரி, கட்டில் விளிம்பு என்று பற்றி பிடித்து விழாமல் அடிகள் வைத்திட துணிந்தாள்.
ஆனால் இவையனைத்தையும் யாரும் அறியா ரகசியமாகவே வைத்துக்கொண்டாள், கீத்து உட்பட.
ப்ரீதனோ சொன்ன சொல்லை நன்றாகவே காப்பாற்றினான் கீத்து விஷயத்தில். ரீசன் ஏற்கனவே சேர்த்துவிட்டிருந்த ஹாக்கி செண்டருக்கு அடிக்கடி சென்று பயிற்றுனரை சந்தித்து, மகள்முறை கொண்டவளின் வளர்ச்சியைக் கேட்டறிந்து கொண்டான்.
பொதுவில் எங்கு ஹாக்கி போட்டி நடந்தாலுமே அங்கு கீத்துவை அழைத்துப் போனான். கூடவே இருந்து தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்தான்.
அடித்தது லக்கு கீத்துவிற்கு. வெறிப்பிடித்தவளாட்டம் ஹாக்கி ஆடுபவளை வெளிநாட்டில் ஐஸ் ஹாக்கியை கற்றுக்கொள்ள முழு ஸ்காலர்ஷிப்போடு சிவப்புக்கம்பளம் போட்டு அழைத்தனர் மேற்கத்தியர்.
ஆனால் வந்த வாய்ப்பைத் தட்டிக்கழித்தாள் கீத்து, அம்மா குஞ்சரியை மற்றவர்களின் பார்வையில் விட்டு போகமுடியாத காரணத்தால்.
இருப்பினும் வசமாய் சிக்கினாள் ப்ரீதனிடத்தில், மெயில் சித்தப்பா அவனுக்குப் போனது கீத்துவின் கார்டியன் அவனென்பதால்.
சங்கதியைத் தூக்கிக்கொண்டு ரீசனின் வீடு வந்தவன், விருப்பமில்லாதவளை சம்மதிக்கவைக்க முயற்சித்தான்.
“கீத்து இது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி! யாருக்கும் கிடைக்காத வாய்ப்புமா, உனக்கு கிடைச்சிருக்கு. இதப்போய் இக்னோர் பண்ணலாமா? சித்தப்பா சொல்றதே கேளு கீத்து.”
“முடியவே முடியாது சித்தப்பா! என்னாலே என் சீனியரே விட்டுட்டு எங்கையும் போக முடியாது. அவங்களே இங்க விட்டுட்டு அங்க போய் கிரவுண்ட்லே என்னாலே சத்தியமா நிம்மதியாவே விளையாட முடியாது. ஸ்காலர்ஷிப்போட சேர்ந்த கேம் ஆப்பர்சூனிட்டிதானே இது, பரவாலே விடுங்க போட்டும். இது இல்லன்னா இன்னொன்னு! இதுக்காகலாம் என் சீனியரே மத்தவங்க பார்க்க விட்டுட்டு வர முடியாது சித்தப்பா.”
குதி குதியென்று குதித்தாள் பொம்பளே ரீசன்.
“கீத்து, நீ ஒன்னும் ரீசனில்லே! அதை ஞாபகம் வெச்சிக்கோ. சித்தப்பா சொல்றே மாதிரி அவர்கூட கிளம்பி போறே வழிய பாரு. உங்கம்மாத்தானே, அவளே நான் பார்த்துக்கறேன். உங்கப்பனே பெத்து வளர்த்த எனக்கு உங்கம்மாவே பார்த்துக்க முடியாதா என்னே?”
பாட்டி அம்பாள் போட்ட போட்டில் அசராது நின்ற கீத்துவோ,
“பாட்டி, இந்த அதட்டல், மிரட்டல்லாம் என்கிட்ட செல்லாது. நான் ரீசன் பொண்ணு! ஒரு இன்ச் நகர மாட்டேன் என் சீனியரே விட்டு.”
சின்னவள் டேடியை போலவே நின்றாள் குஞ்சரி தான் முக்கியமென்று.
“கீத்து சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கோ! உன் வயசுக்கு தகுந்த பேச்சை மட்டும் பேசு.”
பாட்டியின் கோபத்தை ரீசனைப் போலவே சட்டை செய்யாதவள்,
“வெல் சித்தப்பா! என் சீனியருக்கும் சேர்த்து ஃபிளைட் புக் பண்ணா இந்த ஜூனியர் எங்க வேணும்னாலும் வருவேன்.”
என்றவளோ ரீசனுக்கே உரிய மிடுக்கோடு டைனிங் டேபிளில் அமர்ந்து மேஜையை ரெண்டு தட்டு தட்டி,
“ஹலோ மேடம், சோறு.” என்றிட, போய் சேர்ந்தவனைப் பெத்த அம்பாளுக்கோ டக்கென்று விழிகள் கலங்கி ஊத்தி விட்டது, அச்சு அசல் பேத்தி நொடிகளில் மகனைக் கண்களில் காட்டிட.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️

Author: KD
Article Title: அத்தியாயம்: 117
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.