What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
483
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஐந்து

மறுபடியும் ஒரு நெருக்கத்தில் தளிரவளின் வெட்கமெல்லாம் சத்தங்கொண்டு உடைந்திட, பெருமோகத்தீயாய் ஆளானவன் மொட்டவளை மலர்விக்க; உயிர்த்தடங்கும் கூடலில் மொத்தமாய் இரு ஆன்மாக்கள் தொலைகின்ற சங்கமம் நிகழ அந்திகையின் மனது ஏங்கி தவித்தது.

''என்.. என்னாச்சு..''

ரீசனின் அமைதியில் சங்கடம் கொண்டவளோ மெதுவாய் வினவ,

''ஹ்ம்ம்.. ஹேங் ஆகிட்டேன்.. லேடி பீஸ்ட்.. நீங்க சொன்னே பிக் பாஸுங்கறே வார்த்தையிலே..''

என்றவனின் பதிலில் வாய் பொத்தி நகைத்தவளின் வாய்த்தாடையை ஒற்றை விரலால் மேல் தூக்கியவனோ,

''இந்த போதை இனி இறங்கவே கூடாது சீனியர்..''

என்றவனோ செல்லமாய் குலியவளின் நாசியை ஒற்றை விரலால் தீண்ட,

''கண்டிப்பா இறங்காது.. ஆனா.. இங்கில்லே..''

என்றவளோ அவனின் விரலை பிடித்து அவளின் உள்ளங்கைக்குள் ஒளித்துக் கொண்டாள்.

''வேறெங்கே..''

''கே.எல்..''

என்றவளின் கூற்றில் ரீசனின் முகம் மாறியது. எப்படி போவான் ரீசன் அங்கே. அவனின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருகுலைத்த ஊரல்லவா அது.

''நான் இப்படி ஆகறதுக்கு முன்னாடி அங்க ஒரு வீடு பார்த்திருந்தேன் ஜூனியர்.. ரொம்ப பிடிச்சிருந்தது.. வாங்கிட்டேன்.. கீத்து பேருலே.. அங்க போகலாம் ரீசன்.. கீத்துவே கூட்டிக்கிட்டு வந்திடுங்க.. அப்பா அம்மா.. நாமே எல்லாரும் ஒன்னா இருக்கலாம்.. ஒரே குடும்பமா..''

குஞ்சரி சொல்ல தீவிர யோசனை கொண்டவனோ எழுந்து நின்று இடையில் ஒற்றை கையிறுக்கி மற்றொரு கையால் தலையோரத்தை பற்றியிருந்தான்.

''ஏன் ரீசன்.. உங்களுக்கு கே. எல். போறதுலே விருப்பமில்லையா.. இல்லன்னா பரவாலே விடுங்க.. எல்லாரையும் நாமே இப்போ இருக்கறே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திடுங்க..''

குஞ்சரியின் குரல் அடிவாங்க உணர்ந்தவனோ சிரித்த முகமாய் திரும்பினான் ஊடையவள் பார்க்க.

''அட கொஞ்சம் யோசிக்க விடுங்க சீனியர்.. அதுக்குள்ளே மூஞ்சியே பாரு கோழி பட்டெக்ஸ் மாதிரி..''

என்றவனின் கிண்டலில் எக்கி அடித்தாள் ரீசனை மணவாளியவள் செல்ல உடலோடு.

''ஐயோ! அடிக்காதீங்க சீனியர்! நீங்க வேறே திடுதிப்புன்னு கே.எல். போகலாம்னு சொல்லிட்டிங்க! நான் பிளான் பண்ணே வேண்டாவா!''

என்றவனோ அவளை சீண்டிக் கொண்டே அவர்கள் தங்கியிருந்த விடுதியை சென்றடைந்தான்.

அன்றைய இரவு தம்பதிகள் இருவருக்கும் புதியதோர் தொடக்கமாக அமைந்தது.

ஐந்து மணி நேர பயணத்தில் தாய்லாந்திலிருந்து தலைநகருக்கு வந்து சேர்ந்திருந்தான் ரீசன்.

''சீனியர்.. டின்னர் வெளியிலே பார்த்துக்கலாமா இல்லே வீட்டுலையே ஆரன்ஞ் பண்ணிடவா..''

என்றவனோ மனைவிக்கு சீட் பெல்ட் அணிவித்தப்படி கேட்க,

''கீத்துக்கு ஹோக்கினா ரொம்ப பிடிக்குதுலே.. உன்னே மாதிரியே..''

என்றவளோ அப்போதுதான் ரீசனவன் மகளுக்காய் வாங்கிய புதிய ஹோக்கி மட்டையை மடியில் வைத்து விரல்களால் தொட்டுரசி சொன்னாள்.

''என்ன மாதிரியான தெரியாது.. ஆனா.. அவளுக்கது உயிர்.. அது மட்டும் தெரியும்..''

என்றவனோ காரை அவர்களின் புதிய பங்களாவை நோக்கி செலுத்தினான்.

''அப்போ உனக்கு உயிர் எது..''

என்றவளோ பின் சீட்டியில் மட்டையை தூக்கி வைத்து கணவனின் செவியை விரலால் வருடியப்படி கேட்டாள் சின்ன முறுவலோடு.

''தோ..''

என்றவனோ இழுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான் துணையவளின் கையை மொத்தமாய்.

''அப்போ.. டின்னர் கூட இங்கையேவா..''

என்றவளோ சில்மிஷமாய் சிரித்து ரீசனின் நெஞ்சில் தலை சாய்க்க,

''வசதி பத்தாதுமா..''

என்றவனோ ரகசியமாய் குஞ்சரியின் காதுக்குள் என்னவோ சொல்ல,

''யூ! நோட்டி ஃபெலொவ்!!''

என்றவளோ அவனின் தொடையை திருகினாள்.

''ஆர்ர்ஹ்ஹ்.. சரி சரி! இந்த டின்னர் கதையே விடுங்க.. நைட்டுக்கு வீட்டுல எல்லாருக்கும் டின்னர் எப்படி அதை சொல்லுங்க..''

''நாமே வெளியிலே போய் சாப்பிட்டுக்கலாம் ஜூனியர்.. இன்னைக்கு நாமே மட்டும் அங்க தனியா..''

என்ற குஞ்சரி இழுக்க,

''ஏன் இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. ஒரு வாரம்.. ஒரு மாசம் கூட நாமே மட்டுமே முதல்லே இருந்திட்டு அப்பறம் மத்தவங்களே பொறுமையா கூட்டிக்கிட்டு வரலாம் சீனியர்..''

என்றவனின் நக்கலான பேச்சில் அவன் நெஞ்சில் செல்லமாய் குத்தினாள் குஞ்சரி.

''அப்போ நாமே ஏர்லி டின்னர் எடுத்திட்டு வீட்டுக்கு சீக்கிரம் போயிடலாம் ஜூனியர்..''

என்றவளின் கரமோ ரீசனின் கன்னத்தில் சரசம் கொள்ள,

''ரொம்ப நாளாச்சு சீனியர் நீங்க இப்படிலாம் பண்ணி..''

என்றவனோ சிக்னலில் நின்ற சாக்கில் திரும்பி குஞ்சரியின் நெற்றியில் அழுத்தமான ஓர் இதழ் முத்தத்தை பதித்தான்.

''ஐ லவ் யூ ரீசன்.. நீ இல்லன்னா நான் நான் இல்லடா..''

''அதெல்லாம் ஒன்னுமில்லே.. நான் இல்லாட்டியும் நீங்க இருப்பீங்க..''

''வாயே மூடுடா பண்ணி!''

என்றவளோ அவன் வாயிலையே ரெண்டு போட,

''நிஜமாத்தான் சொல்றேன் சீனியர்.. நீங்க ரொம்ப போல்ட்.. தைரியமான பொண்ணு.. எதுனாலும் தாங்கிப்பிங்க.. நான் இல்லன்னாலும்..''

''அறைஞ்சிடுவேன் ரீசன்!சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு! நானே எப்போ ராத்திரி ஆகும்னு இருக்கேன்.. பழைய மாதிரி நாமே மறுபடியும் ஒன்னா..''

என்றவளோ முடிக்காத வாக்கியத்தோடு சிவந்தவளாய் கண்களை மூடிக்கொண்டாள் நிம்மதியாய் ரீசனை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு.

கொண்டாட காத்திருந்த இரவில் வாழ்க்கையின் ஆதாரமாகியவன் ஆத்மார்த்தமானவளை அனாதையாக்கி போக போகிறான் என்பதை முன்னரே அறிந்திருந்தால் நிச்சயமாய் அவ்வீட்டிற்கு போக சொல்லி கேட்டிருக்கவே மாட்டாள் ரீசனின் குஞ்சரியவள்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 125
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top