What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
483
அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு

கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும்.

ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல்.

காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின் மடியில் தலை சாய்த்திடுவான் பீஸ்ட்டின் போஸவன்.

ரீசனின் சந்தோஷம் நிம்மதி இவைகளுக்கெல்லாம் உயிரோடிருக்கும் ஒரே ஒரு ஆதாரம் குஞ்சரியே.

இரு பெரும் பேரிடர்கள் ரீசன் குஞ்சரி தம்பதிகளின் வாழ்க்கையையே திருப்பி போட எல்லாமே சொடக்கிடும் நேரத்தில் மாற்றம் கொண்டது கணவனவனால்.

புயலாய் மூன்று வருடங்கள் கடந்திருந்தன துர்சம்பவங்கள் நடந்து.

ரீசன் எப்போது தொழிலுக்கு கும்பிடு போட்டானோ அப்போதே இருக்கும் இடத்தையும் கொஞ்ச நாட்களிலேயே மாற்றி விட்டான்.

குஞ்சரியை கூட்டிக்கொண்டு பச்சை பசேலென இயற்கை நிரம்பியிருக்கும் கிராமப்புறமாய் பார்த்து செட்டலாகி விட்டான் ரீசன். அன்றாட செலவிற்கு ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து விட்டான்.

அதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது என்பதால் பார் ஓனர் ஹார்வெஸ்ட் ஓனர் ஆகிவிட்டான். தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டான் பின் போக போக கற்றுக் கொண்டான்.

வேலையில்லாதவனுக்கு முடியாத பொண்டாட்டியை பார்த்துக் கொள்வதும், படிப்பதும் பின் முள்ளங்கி நடுவதும்தான் முழுநேர ஜோப்பாகி போனது.

கீத்துவை அவ்வப்போது சென்று பார்த்து வருவான் அவ்வளவே. குஞ்சரி இன்னும் மனதால் யாரையும் உறவாட நிலைக்கொள்ளவில்லை. மகளாகினும் தற்சமயத்திற்கு ஒதுங்கியே இருந்தாள்.

ரீசனும் அதை பெரிதுப்படுத்திடவில்லை. மகளுக்கே இங்கு தடையாம் மாமனார் மாமியாரை பற்றி சொல்லிடவா வேண்டும். வீர் மட்டும் அவ்வப்போது ரீசனோடு தொடர்பில் இருந்தான்.

கீரன் ஆரழகனும் விடாது மோப்பம் பிடித்தான் குஞ்சரியை சிதைத்தவர்கள் யாரென்று கண்டறிய. இருந்தும் அவனுக்கு எவ்வித தடையங்களும் கைகொடுக்கவில்லை.

ஒரே இடத்தில் குஞ்சரியை உட்கார வைத்திடாத ரீசன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊர் சுற்றிட அழைத்து போனான் மணவாட்டியவளை. இதன் காரணமாகவே ரீசனவன் வெறும் மூன்று வாரங்களில் காய் தந்திடும் முள்ளங்கியை பயிரிட்டான்.

ஆணவன் குடியை முற்றிலும் விட்டிருந்தான். சிகரெட்டையும் சேர்த்தே. ரீசன் குஞ்சரி இருவரும் மீண்டும் காதலில் லயிக்க ஆரம்பித்திருந்தனர்.

இம்முறை தம்பதிகள் இருவரும் ரவுண்டடிக்க சென்றிருந்த நாடு தாய்லாந்தாகும்.

வீல் சேரை தள்ளிக்கொண்டு ரீசன் உணவு விடுதியிலிருந்து வெளியேற எதிரே இருந்தன மதுக்கூடங்கள் பல.

''சீனியர் இப்போ நேரா பீச் போயி ஜாலியா தண்ணியிலே விளையாடிட்டு அப்பறமா ஹோட்டல் போகலாம்.. ஓகே வா..''

என்றவனின் கையை வீல் சேரின் பிடியிலிருந்து முன்னுக்கிழுத்து,

''நாமே பீச்செல்லாம் போக வேண்டாம் ஜூனியர்..''

''அப்போ.. வேறெங்கே.. என்ன பிளான் வெச்சிருக்கீங்க சீனியர் மேடம்..''

என்றவனோ துணையவளின் முன் மண்டியிட்டமர்ந்து காரிகையவள் முகம் பார்த்தான்.

''அங்கே..''

என்றவளோ அவன் முகத்தை திருப்பினாள் எதிர்ப்புறமிருந்த பார்களை நோக்கி.

முறுவல் கொண்டவனோ உதடுகளை ஈரமாக்கி கேள்வி கொண்டான் கட்டியவளிடம்.

''நீங்க குடிக்க போறிங்களா சீனியர்..''

ஆணவனின் இதழ் பிரிக்கா புன்னகையில் அவனை இமைக்காது பார்த்தவளோ,

''என் ரீசன் குடிக்க போறான்..''

என்று சொல்லி மெதுவாய் வருடினாள் அவன் கன்னத்தில் பதித்த பாவையவள் உள்ளங்கையை.

''நான் குடிக்கறதில்லே..''

என்றவனோ லேசாய் குலுங்கி சிரிக்க,

''ரெ.. ரெயின்.. போ.. பார்க்க ஆசையா இருக்கு.. எனக்.. காக கொஞ்சமா குடிக்க முடியுமா பிக் போஸ்..''

என்றவளோ தயங்கி உதிர்த்தாள் வார்த்தைகளை மெல்ல நாணிய முகத்தை கீழே குனித்தாற்படி.

ரீசனோ ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நோக்கினான் நாயகியவளை. கண்ணெல்லாம் குளமாக அவளையே வெறித்தான் ஆளானவன். தழும்பிய குடம் உடைந்தூற்ற பட்டென விழிகளை தோளால் துடைத்துக் கொண்டான் குஞ்சரியின் ரீசனவன்.

மருத்துவர் மினர்வா சொல்லியிருந்தார் குஞ்சரி மனம் மாறுவதும் நடந்த சம்வத்திலேயே உழன்று சாவதும் அவன் கையில்தான் இருக்கிறதென்று.

கூடலையே ஒட்டுமொத்தமாய் வெறுத்து ஒதுக்கியிருந்தாள் குஞ்சரி அவளுக்கு நிகழ்ந்திருந்த கொடுமைகளால்.

பெண்ணுறுப்பில் போத்தலை திணித்தவர்கள் அதோடு நில்லாது சிகரெட்டால் சூடும் வைத்திருந்தனர். இப்படி அவளை பல்வகையில் சித்திரவதை செய்தவர்கள் நிம்மதியாய் வாழ கர்மா இவளை மட்டும் சுழட்டி அடித்து போயிருந்தது.

பொஞ்சாதியவளை டிஸ்ஜார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு வந்த நாளிலிருந்து இன்று வரை ரீசனுக்கும் குஞ்சரிக்கும் காதல் மட்டுமே. காமம் காணாமல் போயிருந்தது.

அவளிருக்கும் நிலைமையில் காயம்பட்ட வதனியின் நெஞ்சிலிருக்கும் புண்ணை ஆற்றுவதுதான் சால சிறந்தது என்றெண்ணினான் புருஷனவன்.

அப்படியிருக்க இரண்டு வருடங்கள் கடந்த இன்றைய மூன்றாவது ஆண்டில் வல்லபியவளே முன்வந்து அவர்களின் முகிரத்துக்கான கோர்ட் வெர்டை சொல்ல வேறென்ன சந்தோஷம் இருக்க போகிறது ஆணவனுக்கு அதைவிட பெரிதாய்.

முயங்களில் அதீதமாய் உட்சம் கொள்கையில் மட்டுமே அழைத்திடுவாள் ரீசனின் குஞ்சரியவள் அவனை பிக் பாஸேன்று.

அவள் அடங்காத பீஸ்ட்டென்று ஆளானவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியான வித்தாரக்கள்ளியை காதல் கொண்ட கலவியில் அடக்கும் வித்தையறிந்த வித்தகன் தீனரீசன் ஒருவனே.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 124
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top