What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
483
அத்தியாயம் நூற்றி இருபத்தி மூன்று

சித்தரிக்க முடியா சிலாகிப்புத்தான் குஞ்சரியின் மீது ரீசன் கொண்ட காதல்.

அடுத்தவர்களுக்கு அவன் கெட்டவனாகினும் கட்டியவளுக்கு ராமனே விசாவை தொட்ட போதிலும்.

கல்லூரி காலத்தில் கூட இதழ் முத்த பரிமாற்றங்களை தாண்டி வேறெந்த சல்லாபத்திற்கும் சம்மதிக்காத அக்மார்க் மாடர்ன் சீதாதான் ரீசனின் குஞ்சரி.

இரு வீட்டிலும் கூட அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வர அதுவும் குஞ்சரியின் அந்தஸ்தால் என்றறிந்தவள் அத்தனையையும் தூக்கி போட்டு வந்தாள் ரீசனின் மீது கொண்ட காதலால்.

அப்போதும் ஆயிழையவள் கர்ப்பமாகியெல்லாம் ரீசனை கட்டிக்கொள்ள நினைக்கவில்லை. அப்படியான எண்ணம் ரீசனுக்கும் இல்லை. ஜோடிகள் இருவரும் பொறுத்திருந்து சண்டைபோட்டுத்தான் ஒன்று சேர்ந்தனர்.

என்னதான் திருமண வாழ்வில் அப்பா மற்றும் புருஷன் என இருவருக்குமிடையே சிக்கி நொந்தாலுமே ஒருபோதும் பேதையவள் ரீசனை எவ்விடத்திலும் எப்போதும் யாரிடமும் விட்டு கொடுத்ததில்லை.

அவன் அழைக்க தனிக்குடித்தனம் போனாளே தவிர அவனை தனியே போய் சொத்து சேர்த்து வா என்று சொல்லவில்லை.

அவ்வளவு ஏன் தீனவானன் மற்றும் தீனரீசன் என்ற பெயரால் ஏற்பட்ட குழப்பத்திற்குமே முழுமுதற் காரணம் ரீசன்தான் என்ற போதிலும் ஏனவன் குடும்ப விவரம் முன்கூட்டியே சொல்லவில்லை என்றொரு கேள்வியை பொஞ்சாதியவள் ஆணவனிடத்தில் கேட்கவேயில்லையே.

மாறாக, புருஷனவன் விவாகரத்து என்றிட அவனின்றி வாழ முடியாது என்றுத்தானே தற்கொலைக்கு முயன்றாள் வஞ்சியவள்.

அதுவும் கைக்கூடாது, இடைக்கு கீழ் செயலிழந்த மங்கையவள் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு போனாலுமே மஞ்சத்தாலியை அவள் கழுத்தில் கட்டியவனை மறந்திட முடியாது அப்பா செட் செய்த மாப்பிள்ளையையும் கடிந்து அப்பாவையும் தூக்கியெறிந்து வந்தாள் அந்திகையவள் ஓடோடி மீண்டும் ரீசனிடமே.

இப்படி அவனை மட்டுமே உயிராய் நினைத்து பூஜித்தவளை எப்படி விட்டு போயிடுவான் ரீசனவன்.

வாத்தியார் தொடங்கி ரோட்டில் போகும் நாய்க்குட்டி வரை தீனவானனை நல்லவன் என்று பறைசாற்ற, மூத்தவன் மரித்த போதிலும் அண்ணனின் நற்பெயரை களங்கமின்றி காப்பாற்றினான் தீனரீசன் என்னதான் ஊர் போற்றும் உத்தமன் ஒழுக்கந்தவறி போயிருந்தாலுமே.

ஏன், குனிந்த தலை நிமிராது ஜயர் வளர்ப்பில் பெரியவளாகிய மயிலினியோ உறுதியான உறவொன்று அவளுக்கும் தீனவானனுக்கும் ஏற்படும் முன்னரே எல்லை மீறிட அவளின் குணத்தை கூட கூட்டங்கூட்டி ரீசனவன் எங்கேயும் கேவலமாய் கொட்டமடிக்கவில்லையே.

மனைவி என்ற உரிமையில் ரீசன் தீண்ட தீயாய் வெகுண்டெழுந்து அவனை செருப்பால் நாலு சாத்து சாத்தியிருந்தால் கையெடுத்து கும்பிட்டிருப்பான் விசாவை குஞ்சரியின் புருஷன்.

ஆனால், விசாவோ போதையில் நடந்த தவறை பிடித்துக் கொண்டு அவன் வீடு வரை போய் கொடுத்தாலே கொடு ரீசனை என்று துரத்தி விரட்டி போராடி கரம் பிடித்த ரீசனின் சரிப்பாதியிடம் கேட்டால் என்தான் செய்திடுவான் ஆணவன் கணவனாக துணைவியவள் கொண்டிருக்கும் பீஸ்ட் குணம் அறிந்து விசாவை கைகழுவி விடுவதை தவிர.

இருந்தும், விசா அடங்காது பெண் குழந்தையொன்றின் தகப்பனவன் என்பதையும் ஒரு பொருட்டாய் கருதாது ரீசனின் அறைக்குள் அவன் மணவாளியின் ஆடை அணிந்து ஆணவன் நெருங்க அப்போதும் வெறும் வாய் ஜாலம் கொண்டு அவனை தடுத்திட பார்த்தாளே ஒழிய விருப்பமற்ற கற்பழிப்பு என்ற எண்ணத்தில் குஞ்சரி புருஷனை தள்ளி விடவும் இல்லை ஆவேசமாய் அலறி தகாத வார்த்தைகள் பேசிடவும் இல்லை.

இப்படி அவனை சுற்றி பலரும் அவரவர் வாழ்வை பொறுத்த வரைக்கும் சரியாய் இல்லாத பட்சத்தில் ரீசன் அவன் ஒருவனை மட்டுமே அதீதமாய் காதலித்த குஞ்சரி என்ன பாவம் செய்தாள்.

ரீசன் என்ற ஒருவனை கண்மூடித்தனமாக காதலித்த தவறால்தானே மற்றவர்கள் பார்வைக்கு கெட்டவளாகி போனாள்.

அவனை காதலிக்காமல் இருந்திருந்தால், ஏன் ரீசன் என்ற ஒருவன் இன்றைக்கு அவள் வாழ்வில் இல்லாதே போயிருந்தால்; ஒருக்கால் அவளை வெறிக்கொண்டு பந்தாடிய விஜய் நல்ல முறையில் காதலை வெளிப்படுத்தி இன்றைக்கு அவளின் கணவனாகி கூட இருக்கலாம்.

ரீசனை பொறுத்து வரையில் அவன் என்றைக்குமே குஞ்சரியின் ரீசனே. அவனின் உயிர் அவளுக்கானது மட்டுமே. உடல் தேவைகளை தாண்டி ஈருடல் ஓருடல் ஆகி ஆன்மாவில் கலந்த அவர்களின் காதலுக்கு என்றைக்குமே அழிவில்லை.

குஞ்சரி தெரிந்தே செய்த தவறு விஜயிடம் வாய் பேச முடியா அபலையை நாசமாக்க சொன்னது மட்டுமே.

அதைத்தாண்டிய மிரட்டல் உருட்டலெல்லாம் எல்லா பெண்களும் கணவனை தற்காத்துக்கொள்ள செய்கின்ற விடயமே.

ரீசனை மனதில் நினைத்த நொடியே கணவனாக்கி கொண்டவள் வேறென்னதான் செய்வாள் ஆணவனை மடக்க பார்க்கும் லம்பாடிகளை ஓரங்கட்டிட அவர்களை கல்லூரி விட்டே துரத்துவதை தவிர.

இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ரீசனின் குஞ்சரியின் முன் மயிலினியோ அல்லது விசாவோ நிற்க கூட முடியாது.

யாரும் சீண்டாத வரை குஞ்சரியை விட மேலான சொரூபி யாருமில்லை யுவதியவள் பாதையில் யாரேனும் குறுக்கிட்டாள் அவளைப் போல் பொங்கி எழும் சுனாமியும் வேறில்லை.

அன்பை கொடுப்பதிலும் சரி அதற்கான எல்லை கேட்டை மீறுவதிலும் சரி குஞ்சரிக்கு நிகர் குஞ்சரியே.

அந்த பீஸ்ட்டின் பசிக்கு தீனி போட முடிந்தவன் பிக் போஸான தீனரீசன் ஒருவனே.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 123
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top