- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 79
தாதியர்கள் எல்லாம் கிளம்ப குஞ்சரியின் பக்கத்தில் அமர்ந்து அவளையே வெறித்தான் ரீசன்.
அவளின் குணம் அறிந்தே விசாவை விரட்டு விரட்டென்று விரட்டினான் எல்லை மீறிய ஆணவன். பாதகம் உணராதவளோ திரும்ப திரும்ப வந்து நின்றாள் காதல் முட்டாளைப் போல் காதல் கண்ணை மறைக்க. இறுதியில் பாவம் ஒருப்பக்கம் பழி ஒருபக்கம் என்பது போல் ஆனதுதான் மிச்சம்.
இன்னமும் ரீசன் மறக்கவில்லை அடுக்கடுக்காய் நடந்த சம்பவங்களை. அன்றைக்கு விசாவின் வீட்டில் கட்டியவளை கழட்டி விட்டு சின்னவளை தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்து சேவகம் பார்த்தான் அவள் கண் விழிக்கும் வரை ரீசன்.
சுயம் திரும்பிய சுந்தரியோ ஒப்பாரி வைத்து அவன் தோள் சாய பார்க்க அப்போதும் விலகியே நின்றான் குஞ்சரி புருஷனவன் தாலி கட்டிய வேட்டாள் அவளுக்கு மனதாலும் துரோகம் நினைக்காது.
அவனை பொறுத்தமட்டில் தெரியாமல் நடந்த தவறுக்கு குஞ்சரி மனம் நோக பொறுப்பேற்க முடியா நிலை ஒன்றே அவனை வாய் மூடி நிற்க வைத்தது விசாவின் விடயத்தில்.
மற்றப்படி பேசி புரிய வைத்திட முடிகின்ற பட்சத்தில் அவன் விசாவை கைவிட என்றைக்குமே நினைத்ததில்லை. அதுவும் அவனின் வாரிசு அவளில் ஜனித்திருக்க.
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, கற்பாளின் கருப்பு பக்கம் ஆணவனை கொதித்தெழ வைத்திருந்தது.
அக்கோபத்தில் வீர்ரை அழைத்து குஞ்சரியுடனான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் டிவோர்ஸ் வேண்டுமென்றிட ரீசன் ஒற்றைக் காலில் நிற்க நண்பன் அவனோ நேரில் வந்து பேசுவதாய் சொல்லி போனை வைத்தான்.
அண்ணனின் சாவுக்கும் அண்ணியின் மானம் போன கணக்கிற்கும் மொத்தமாய் பிராய்ச்சித்தம் தேடிட முடியாது என்றறிந்தவனோ, நன்றாய் யோசித்து முடிவெடுத்தான் கொஞ்சமேனும் பாவக்கணக்கை குறைத்திடும் வழியொன்றை.
அதுதான் குஞ்சரியின் கந்தரம் கொண்டிருக்கும் மூன்று முடிச்சுகளை கழட்டியும் விசாவின் கழுத்தில் அதே தாலிக் கொண்ட மூன்று முடுச்சுகளை இறுக்குவதும் ஆகும்.
நெஞ்சில் குஞ்சரியை சுமந்து வெளியில் பலர் பார்க்க இனி வாழ்க்கையை விசாவோடு வாழ முனைந்தாலுமே படுக்கை என்பதை அவளோடு பகிர்ந்திட மட்டும் அவன் சிந்தித்திடவே இல்லை.
காரணம், ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் அவன் மனசில் சிம்மாசனம் கொண்டவள் என்னவோ குஞ்சரித்தானே. ஆகவே, உள்ளத்தில் ஒருத்தியை நினைத்து மஞ்சத்தில் வேறொருத்தியை கொஞ்சிட அவனுக்கு விருப்பமில்லை.
அதுவும் இருவரின் முகமும் ஒன்றாகா இருப்பினும் காதல் அவனுக்கு அவனின் குஞ்சாயின் மீது தவிர விசாவின் மீதல்ல என்பதில் உறுதியாகவே இருந்தான் ரீசன்.
இப்படியானதொரு வாழ்க்கையை அவனுக்கு அவனே ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் வேதனைக் கொள்ள தயாராகவே இருந்தான் ரீசன் நிகழ்ந்த தப்புக்கெல்லாம் பாடமாய் இவை அமைய.
பெற்றோர்களின் காதில் டைவர்ஸ் விஷயத்தை ஓதியவன் காரணத்தை என்னவோ மறைத்தே கூறினான் ஒற்றை வார்த்தையில் பிள்ளை பெற்றவள் சலித்து விட்டாள் வயது கூடியிருக்க என்று.
அதற்காக பெற்றவரிடம் அடிக்கூட வாங்கினான் தென்னை மர கணக்காய் வளர்ந்திருந்தாலுமே மகளொருத்திக்கு அப்பா ஸ்தானம் கொண்ட போதிலும். அம்மாவின் கதறலுக்கு கூட ரீசனின் முடிவினை மாற்றிடும் சக்தியில்லாமல் போனது.
சின்னவளை வீட்டுக்காரியாக்கியே தீருவேன் என்றவனோ தீர்மானமாய் வீரிடத்தில் எண்ணத்தை வெளிப்படுத்த, பெறாத பிள்ளையாய் நம்பிய வக்கீல் அவனுமே கையை விரித்தான்; நண்பனின் சொந்த விஷயத்தில் அதிகமாய் தலையிடாது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள.
பெற்றோர்கள் இடிந்தே போயினர் மகனின் மனசாட்சியற்ற முடிவினில். மருமகளுக்கு ஆறுதல் சொன்னவர்கள் மகளாய் தாங்கியவள் இழைத்த இழப்புகளை அறியவில்லை.
புகுந்த வீட்டின் பேச்சில் புரிந்துக் கொண்டாள் ரீசனின் காதல் தம்பிராட்டியவள் ஆணவன் அப்போதும் அவளின் மானத்தை காப்பாற்றி அவனையே பலியாடாக்கி இருக்கிறான் என்று.
நிஜத்தை சொல்லி அவளை அசிங்கப்படுத்த நொடியொன்றும் தேவையில்லை ரீசனுக்கு இருந்தும் அவள் மீது கொண்ட காதல் அவனை தடுத்தது. அதுதான் காதல். மானங்கெட்டது, ரொம்பவே.
குஞ்சரிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியவன் அடுத்த நாளே விசாவிற்கான திருமண தாலி வாங்க வீர்ரை இழுத்துக் கொண்டு போன கதையெல்லாம் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த சங்கதியாகும்.
இதில் வேடிக்கை யாதெனில் விசாவிற்கு கூட தெரியாது அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதென்று.
அவசர அவசரமாய் அச்சிட்ட கல்யாண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு கல்லான மனதோடு போனான் ரீசன் மாஜி மனைவியாக்க துடித்த குஞ்சரியை காண.
அந்நேரமே தற்கொலைக்கு முயன்று முழுசாய் போய் சேராது பாதியில் அல்லாடி அல்பாயிசில் உயிர் பிழைத்து தத்தளித்த தேவகுஞ்சரியை ரத்த வெள்ளத்தில் கண்டான் ரீசன் மகள் கீத்து அம்மாவின் கோரத்தை கண்டு அலறிய வேகத்தில் மேல்மாடி விரைந்தவன்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 79
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.