- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 93
சிறைவாசம் கொண்ட ரீசனின் தலையோ தூக்குக்கு போகாது தப்பித்தது அவசர பிரிவில் உயிருக்கு போராடியவனின் உயிர் ஊசலாடாது சீராக.
வீர்ரோ மதுக்கூட வழக்கிற்காய் வெளியூர் போயிருந்த ரீசனை தேடி இறுதியில் கண்டுக் கொண்டான் நடந்திருந்த விபத்தையும் அதில் சிக்கியிருந்த ரீசனின் நிலையையும்.
சாவானா பிழைப்பானா என்று தெரியாதா நிலையில் ரீசனின் மீது பதியப்பட்ட முதல் வழக்கென்னவோ கொலை வழக்கே ஆகும். வீர்ரோ சம்பந்தப்பட்ட காவல்துறையில் பேசி ரீசனை பெயிலெடுக்க கூட்டிக் கொண்டு வந்தான் மீகனை.
நல்லவேளை கண்ணை திறந்த மவராசன் தவறென்னவோ அவன் மீதுதான் என்று கூற மீகனின் வேலை சுலபமாகிப் போனது.
எல்லா பிக்கல் பிடுங்கலையும் ஒருவழியாய் தலைமுழுக எப்படியும் ஏறக்குறை ஒரு வாரம் ஆகுமென்று மேலிடம் சொல்ல நீட்ட வேண்டியதை நீட்டி கொடுக்க வேண்டியதை கொடுத்து ஏழு நாட்களை மூன்று நாட்களாக்கினான் மீகன்.
அதுவரையிலும் ரீசன் எவ்வளவோ கேட்டும் அவனிடத்தில் அலைபேசியை யாரும் கொடுத்திடவேயில்லை. அப்போதே ரீசனின் மனசில் என்னவோ தப்பாக பட்டது. இருந்தும் அவனின் வினாக்களுக்கு சமாளிப்பான பதில்களே கிடைத்தன வீரிடமிருந்து.
ரீசன் மூன்று நாட்களுக்கு பின் ஜெயிலுக்கு டாட்டா காட்ட ஆணவனின் பொருட்களில் அவன் முதலில் தேடியெடுத்ததென்னவோ பொண்டாட்டி குஞ்சரி பரிசளித்த கைப்பேசியைத்தான்.
என்னதான் ஈரக்குலை நடுங்கும் கற்பழிப்பாகினும் கீரன் ஆரழகன் தலைமையில் குஞ்சரியின் கேஸ் ரகசியமாகவே வைக்கப்பட்டது. ரீசன் வந்த பிறகு அவனின் சம்மதத்தோடு கேஸை மீடியாவிற்கு கொண்டு செல்ல நினைத்தான் ஆன்ட்டி ஹீரோ அவன்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவின்றி கிடந்த ரீசனின் வல்லபியவள் மிக சரியாய் காதல் கணவன் அங்கு ரிலீஸ் ஆக இங்கே விழிகள் விழித்தாள். மருத்துவரின் மேற்பார்வையில் சாதாரண வார்டிக்கு மாற்றப்பட்டாள் குஞ்சரி ஆள் தேறியிருக்க.
வீர் கார்டியனாக கையெழுத்திட தேவகுஞ்சரியவளோ தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள் கூடவே கீரனின் கான்செண்ட் ஃபோர்மும் இருக்க.
தெளிந்த தெரிவையின் முதல் வார்த்தை ரீசன். இரண்டாவது வார்த்தையோ ஜூனியர். நங்கையின் நேத்திரங்களோ ஆணவனை தேடியது மருத்துவர்கள் தாதியர்கள் கூடத்தினில்.
கும்பலை விலக்கி முன் வந்து நின்றான் கீரன் ஆரழகன். தொங்கிப் போனது தாமரையவள் முகம். விசாரணை நிகழ்த்தியவனோ நொந்து போனான் அவன் எதிர்பார்த்த பதிலேதும் கிடைக்காது.
சாப்பிடாது கொள்ளாது காத்திருந்தாள் ரீசனுக்காய் கட்டிய குலியவள். விபத்து கேஸுக்கு கும்பிடு போட்ட வீர்ரே கூட்டிக் கொண்டு வந்தான் ரீசனை மீண்டும் தலைநகருக்கு.
வீடு செல்லாது கார் மருத்துவமனையில் நிறுத்தம் கொள்ள புரியாத நெட்டையனோ புருவங்கள் சுருக்கினான்.
வீர்ரோ பக்குவமாய் எடுத்துரைத்தான். ரீசனோ பெருங்கோபம் கொண்டான். நண்பனை ஓரந்தள்ளி ஓடினான் கட்டியவன் பொஞ்சாதியவளை தேடி. தனியறையில் ஜன்னலை வெறித்திருந்த வதுகையவளோ கணவனை கண்ட நொடி உடைந்து கதறினாள் சத்தமின்றி.
ஓடோடி வந்தவனோ வாரியணைத்துக் கொண்டான் மணவாளியவளை.
''யாருமா! எப்படிடா! என்னாச்சு!''
என்றவனின் கேள்விகளுக்கு குஞ்சரியின் பதிலென்னவோ மென்மையான விலகலும் வேறு பக்கம் போன பார்வைகளும்தான்.
''குஞ்சரி! குஞ்சரி! இங்கப்பாரு என்னே!''
என்றவனோ ஒரு வார்த்தைக் கூட பேசாது மௌனத்தில் ஒப்பாரிக் கொண்டவளின் காயங்கொண்ட முகத்தை கையிலேந்த ஆயந்தியவளின் வீங்கிய விழிகளோ புருஷனவனையே இமைக்காது பார்த்தது கண்ணீர் சத்தமின்றி வழிந்திறங்க.
தாரமவளை புரிந்துக் கொண்டவனோ,
''போ மாட்டேன்மா! சத்தியமா போ மாட்டேன்! உன்னே விட்டுட்டு போ மாட்டேன்! குஞ்சரி இல்லாமே ரீசன் இல்லடா!''
என்றவனோ அகமுடையாளின் முகத்தை இருக்கரங்களுக்குள் பற்றி இல்லாள் அவளின் கன்னங்களோடு அவனின் முகம் உரசி மிழிகள் மூடிக்கிடக்க சொன்னான்.
குஞ்சரியோ இனியில்லை பயம் என்பது போல் கணவனின் நெஞ்சில் சாய்ந்தாள் நிம்மதியாய்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம் 93
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.