What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம்: 83

மனைவி குஞ்சரியின் நெஞ்சில் தலை சாய்த்து கிடைந்த ரீசன் மெதுவாய் விழிகள் விரித்தான்.

தலை தூக்கியவன் இமைக்காது வெறித்தான் பொஞ்சாதியவளை.

கற்பழிக்கப்பட்ட காரிகை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மருந்துகளின் மகிமையால்.

ஐயோ என்றது கணவனவன் மனது நேரம் கடகடவென ஓட. மயக்கம் தெளிந்தால் நிச்சயம் முகத்தை பார்த்து பேச வெட்கங் கொள்வாளே கோமகள் என்றவன் மனம் பதைத்தது.

அவனோடானா கூடலில் நாணங்கொண்டு சிவந்தவள் இன்று எவனோ ஒருவனின் ஈனக்காரியத்தால் அவளை அவனிடத்திலிருந்து ஒதுக்கி கொள்வது எவ்விதத்தில் நியாயம் என்று ஆணவனின் உள்ளமோ கிடந்து தவித்தது.

காதல் மனது தற்போதைய நிலைக்கு சட்டம் பேச மனசாட்சியோ மணவாட்டியவளின் கணக்கு வழக்கில்லா மனித தன்மையற்ற குற்றங்களை வரிசைப்படுத்தியது.

கர்மவினைகள் வதுகையவளை தொடர்ந்தாற்போல இப்பாடு படுத்துவதை ரீசனால் பொறுக்க முடியவில்லை. ஆகவே, இன்றைக்கே இதற்கெல்லாவற்றிக்கும் ஒரு முடிவு கட்ட தீர்மானித்தான்.

தென்றலாய் துயில் கொண்ட பேதையை புயலாய் தாக்கிட எண்ணங்கொண்டவனோ அருகிலிருந்த தலையணையை கையிலேடுத்தான் ரீசன்.

கண்ணீர் பொலபொலக்க அழுத்தினான் தலையணையை புருஷனவன் ஆசை ஆசையாய் காதலித்த மனைவி குஞ்சரியின் முகத்தில்.

பாவத்தின் சம்பளம் கூடிப்போக காரியம் நிகழ்தி கதறுபவனை பார்த்து சிரித்தது தீனவானனின் டைரிக்குள்ளிருந்த விசாவின் கடிதம்.

அதன் ஒவ்வொரு எமுத்துக்களும் உயிர் கொண்டு எழுந்து வந்தன மடலிலிருந்து.

சூழ்ந்துகொண்டன சிலையாய் படுத்து கிடப்பவளை சுற்றி.

கைக்கொட்டி சிரித்தன வன்மம் கொண்ட வஞ்சகியின் உயிர் ஊசலாடும் அழகைக் கண்டு.

"நோ! நோ! நோ! குஞ்சரி! மன்னிச்சிருமா! இந்த பைத்தியக்காரனே மன்னிச்சிருமா!"

என்றவனோ எப்போதோ தலையணையை ஓரம் வீசி குலியவளை நெஞ்சோடு அணைத்து.

கொக்களித்த வார்த்தைகளோ ஆர்பாட்டத்தை அடக்கி அடங்கிப்போயின.

மீண்டும் சென்று ஒட்டிக் கொண்டன பழைய இருப்பிடத்தில்.

கவலைக்கொண்டது மடல் குஞ்சரியின் மூச்சு நிற்காமல் போக.

மெது மெதுவாய் அதுவே அதை ஆறுதல் படுத்திக் கொண்டது.

உட்கருத்திலான காயங்களோ வடுக்களாக முடியாதென்ற வீம்பில் சத்தம் போட்டு சொல்லின தாங்கியிருந்த பாவத்தின் வலியினை.

கடவுள் எல்லாம் தெரிஞ்சவர் குஞ்சரி!

அதனாலத்தான் இந்த டைரியே என் கண்ணுலே காட்டியிருக்காரு!

இதை மட்டும் நான் படிக்காமே இருந்திருந்தா!

என் அக்கா மயிலினியே சிதைச்சே உன்னத்தான் இன்னமும் நான் முட்டாளாட்டம் என் அக்காவா பார்த்திருப்பேன்!

வாய் நிறைய மனசார உன்னே அக்கான்னு கூப்பிட்டேனே குஞ்சரி!

அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது எனக்கு!

கொஞ்சுங் கூட அந்த வார்த்தைக்கு தகுதியில்லாத அரக்கி உன்ன போய் அக்கா ஸ்தானத்துலே வெச்சேன் பாரு என் புத்தியே செருப்பாலே அடிக்கணும்!''

என் அக்கா மயிலினி எங்கே! நீ எங்கே! ஏன் உருவத்துல ஒன்னா இருக்கறே நானும் நீயுங்கூட ஒன்னாகிட முடியுமா!

த்துப்! நான் வைரம்டி! நீ என்னாட்டம் மின்னறே வெறும் கூலாங்கல்லு! அதுவும் வன்மத்தே கக்கற விஷக்கல்லு!

இல்லே! இல்லே!

நீ ஒரு ஜடம்! உனக்கு மனசாட்சியே கிடையாது! நீ இருக்கறே இடம் நரகம்! உன்னே சுத்தி துர் ஆத்மாக்கள் மட்டும்தான் இருக்கும்!

காரணம் நீ நல்லவே இல்லே! நீயே ஒரு பிசாசுதான்! உனக்கு அடுத்தவங்க உயிரே எடுக்க மட்டும்தான் தெரியும்!

அவ்வளவு ஏன்..

நீ தாயாக கூட தகுதியில்லாத ஜென்மம்தான்! என் அக்கா மயிலினி வயித்திலிருந்த கருவே கொன்னே நீ எப்படி ஒரு அம்மாவா இருக்க முடியும்!

கீத்துவே நிஜமாலுமே நீதான் பெத்தியா இல்லே அது உன் புருஷனோட திருவிளையாடல்லே பிறந்த குழந்தையா!

நீதான் இப்படின்னா.. உன்னே கட்டி என்னே தொட்ட அந்த உத்தமனோ.. என் அக்கா மயிலினியோட வருங்காலத்தையே அழிச்சிட்டானே!

நான் நம்பறேன் குஞ்சரி கடவுளை! அதான் உன் மொத்த குடும்பத்தோட சாயத்தையும் வெளுக்க வெச்சிட்டாரு!

நீயும் உன் புருஷனும் பண்ண பாவம்தான் உன்னே இப்படி கைகால் விளங்காதவளா ஆக்கி சிரிக்குது!

நீங்க ரெண்டு பேரும் மனுஷங்களே இல்லே! ரத்த வெறி புடிச்ச காட்டேறிங்க!

அடியே பாதகத்தி!

ரீசன் மேலே வெச்ச காதலாலே ஐஞ்சு உசுரே அசால்ட்டா எடுத்த பிறகும் உன் ரத்த தாகம் அடங்கவே இல்லல்லே!

ஏன்! ஏன்! ஏன் குஞ்சரி என் அப்பாவே கூட விட்டு வைக்கலை நீ!

சொல்லு குஞ்சரி! ஏன் என் அப்பா தேவேந்திரன் வரைக்கும் போனே நீ!

அவர் உன்னே என்ன பண்ணாரு! அவருக்கு ஏன் இவ்ளோ பெரிய பாவத்தே செஞ்சே!

எதுக்கு அவருக்கு இப்படியொரு தண்டனை! ஏன் குஞ்சரி என் அப்பாவே சாகடிச்சே!

எத்தனை தடவே கெஞ்சி கேட்டுக்கிட்டேன் குஞ்சரி உன்கிட்டே நான்.. என் அப்பாக்கு நடந்தது எதுவும் தெரியாது.. பிளீஸ் சொல்லிடாதன்னு!

அப்படியிருந்தும் அவர்கிட்டயே போய் ஒழுக்கமில்லாத பொண்ணே வளர்த்து என் புருஷன் ரீசன் கூட படுக்க அனுப்பி வெச்சியான்னு நீ கேட்டே கொச்சை வாக்கியத்துலே வரக்கூடாத நெஞ்சு வலி வந்து அவரே ஓரேடியா கூட்டிக்கிட்டு போச்சேடி படுபாவி!

இதுக்கு நீ என்னையே கொன்னுருக்கலாமே!

அப்படி பண்ணிருந்தா கூட நிம்மதியா போய் சேர்ந்திருப்பேனடி இதான் விதி அடுத்தவே புருஷனுக்கு ஆசைப்பட்ட பாவத்துக்கின்னு!

ஆனா.. நீ என் முகத்துக்கு நேரா ஒரு பேச்சு பேசி முதுகுலே குத்துனையே ஒரு குத்து!

ஐயோ! சத்தியமா என்னாலே எழவே முடியலடி!

நான் கனுவுலே கூட நினைச்சுப் பார்க்கலே குஞ்சரி..

என்னே அணு அணுவா சாகடிச்ச அந்த கேவலமான ஜந்து நரேனும் உன் ஆளுதான்னு!

தெரியலே குஞ்சரி சாமி சத்தியமா புரியலே குஞ்சரி! நீயெல்லாம் என்னா பொறப்பு! பொம்பளத்தானா நீ! இல்லே ராட்சசியா!

என்னவோ போ!

ஆனா.. மனசு வெறுத்து போய் சொல்றேன்டி!

நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டே!

தப்புதான்! நான் இழந்த கற்புக்கு உன் புருஷனே பங்கு கேட்டு வந்தது என் தப்புதான்!

ஆனா.. அதுக்காக.. இப்படியா!

அந்த நரேன் மூலமா என் குலத்தையே அளிக்க பார்த்தியேடி சண்டாளி!

உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடி!

அதுவும் அல்லோல் பட்டு சாவறே சாவு உனக்கு அவ்ளோ சீக்கிரத்துலே வராதுடி!

சீப்பட்டு சாவடி நீ! சந்தி சிரிக்க சாவடி நீ!

என் அக்கா மயிலினி உன் புருஷன் மேலே ஆசைப்பட்டான்னு.. அவசர புத்திக்காரி நீ தப்பா புரிஞ்சிக்கிட்டுதானே அவளே கண்டவனையும் விட்டு சீரழிச்சே!

வயிறெறிஞ்சி நான் சொல்றேண்டி இப்போ!

நீ கொண்டாடுறே உன் புருஷன் ரீசன் தொட போறே உன் உடம்பு இனி அவனுக்கு மட்டுமே சொந்தமானதா இருக்காதுடி!

அதுக்கு முன்னாடியே நீ சின்னா பின்னமாயிருப்படி! கட்டினவன் முகம் பார்க்க முடியாமே நீ கூனிக்குறுகி போவடி!

இது நடக்கும்டி! கடவுள் உனக்கு கண்டிப்பா சரியான பாடம் கத்துக் கொடுப்பாருடி!

இது சத்தியம்டி!

இந்த விசாகா எப்படியெல்லாம் தவிச்சேனோ!

என் அப்பா தேவேந்திரன் எப்படியெல்லாம் துடிச்சாரோ!

என் அக்கா மயிலினி எப்படியெல்லாம் கதறினாளோ!

அவளே வளர்த்தவங்க எப்படியெல்லாம் பதறினாங்களோ!

என் மாமா தீனா எப்படியெல்லாம் பதைச்சாரோ!

அந்த பிஞ்சிக் குழந்தே எப்படியெல்லாம் திணறுச்சோ!

இது அத்தனையும் ஒருசேர நீ அனுபவிப்படி சொல்ல முடியாத கொடூரமான வலி ஒன்னே!

அப்படியான ரணக் கொடுமையே நீ அனுபவிக்கும் போது உன்னே சீண்ட கூட ஒரு நாதி இருக்காதுடி!

அனாதை பிணமாத்தாண்டி போவே நீ!

எதுக்காக இதையெல்லாம் நீ பண்ணியோ அது உனக்கு இல்லாமையே போகும்டி தேவகுஞ்சரி!

இது நான் நம்பறே என் முருகன் மேல சத்தியம்டி! ''

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 83
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

preetha

New member
Joined
Sep 15, 2024
Messages
3
Evalo aragant ah entha kunjari very worst character. Yepady resan evaluku poi support panra
 
Top