- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் 96
இரவு பத்து.
இருட்டிய ரோட்டில் ஒப்புக்கு முச்சந்தியில் ஒரு விளக்கு. மங்கிய மஞ்சள் கண்ணுக்கு எட்டும் வரை மயக்கும் வெளிச்சத்தை பரப்பியிருந்தது. ப்ரீதனோ பைக்கை சார பாம்பாட்டம் வளைத்து நெளித்து ஓடினான் சும்மாவே.
விசாவோ ஹெல்மட்டை கழட்டி கூந்தலை மொத்தமாய் வாரி ஒளித்தாள் கழுத்தோர இடுக்கில். ப்ரீதனோ பைக் கண்ணாடியை அட்ஜர்ஸ்ட் செய்யும் சாக்கில் அவளையே பார்த்தான்.
''சைட்டடிக்காமே ரோட்டே பார்த்து பைக் ஓட்டுங்க மிஸ்ட்டர் குகப்ரீதன்!''
என்றவளோ மெல்லமாய் ஆணவனின் தோள் தட்ட, முறுவலித்தவனோ பைக்கின் ஓட்டத்தை ஆமைக்கும் நத்தைக்கும் போட்டியாக்கினான்.
''வேகமா போங்க பார்ட்னர்!''
''ஹுஹும் முடியாது லேடி பாஸ்..''
என்றவனோ சிரிக்க,
''ஏற்கனவே லேட்டாச்சு பிக் பாஸ்! சீக்கிரம் போங்க! பாவம் புள்ளிங்க.. பசியிலே கிடப்பானுங்க! எல்லாம் உங்களாலதான்! இவரு பெரிய தனுஷு! வேட்டி கட்டிக்கிட்டுதான் ஃபங்சன் வருவாறாம்! இப்போ பாருங்க வீட்டுக்கு போயிட்டு வந்தனாலே எவ்ளோ லேட்டாச்சுன்னு!''
என்ற பெண்டுவோ கறுவ,
''ஆமா.. இவுங்க பெரிய சாய் பல்லவி! சேலையோடத்தான் வருவாங்கலாம்! ஏன் நீ ட்ரஸ் மாத்தி லேட்டாச்சுனு சொல்ல வேண்டியதுதானே!''
என்ற ப்ரீதனின் முகத்தை கொடிக்கம்பி சேலையாய் தீண்டியது குஞ்சரியின் காற்றிலாடிய கூந்தல்.
''ஏய்..''
என்ற பெண்டுவோ ஆணவன் முகத்தை மறைத்த குழலை கையால் ஓரம் ஒதுக்க, ப்ரீதனின் நிடலம் தொடங்கி மூக்கிறங்கிய வதனியின் விரல்களோ அழகன் அவன் இதழ்களை தொட்டிறங்க பக்கென்று பற்றிக் கொண்டான் சேட்டைக்காரனவன் சுந்தரியவளின் மோதிர விரலை.
தலை குனிந்த அணங்கவளோ மெதுவாய் சாய்ந்தாள் ப்ரீதன் அவன் முதுகில். நேத்திரங்களை மூடிக்கொண்டவளின் வலக்கையோ ஆணவனை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
ப்ரீதனின் நா தீண்டலில் கோடி கனைகள் உள்ளம் தைத்தது விசாவிற்கு. ஆணவன் விடுவிக்க விறலியவள் விரல் இறங்கி நின்றது பேபி சீட்டரின் இதயத்தில்.
முறுக்கி பாய்ந்த ப்ரீதனின் பைக்கோ பத்து நிமிடங்களில் நிறுத்தம் கொண்டது.
''அதுக்குள்ளே வந்துட்டோமா..''
என்ற சோக தொனியோடு பைக்கிலிருந்து கீழிறங்கினாள் விசா.
''இங்கிருந்து கிளம்பி ஒரு லோங் ரைட் போயிட்டு அப்பறமா வீட்டுக்கு போகலாம்..''
என்றவனின் சிரிப்போடு சேர்ந்த கன்ன வருடல்களும் வஞ்சியவள் வெட்கத்தை நிர்மூலமாக்கியது.
அப்போதே அடிகளில் அவளை விட கொஞ்சம் உயரம் கொண்டவனை மொத்தமாய் குழைத்து உடலெங்கும் பூசிக்கொள்ள தோன்றியது தெரிவையவளுக்கு.
சாலையில் உணவு பொட்டலத்தை பிரித்து வைத்தவனோ கூப்பாடு போட்டழைத்தான் விசுவாசிகளை.
''கிங்கோ! கிங்கோ!''
என்றவன் விசிலடிக்க,
''டிங்கோ! டிங்கோ!''
என்றவளோ சத்தம் போட்டு சிரித்தாள் இல்லாத நாய் பேரை சொல்லி அன்றைக்கு போல் இன்றைக்கும்.
''ஆரம்பிச்சிட்டியா! பார்க்கறே இடத்துலெல்லாம் கொடிய நாட்டிர்றது! அன்னைக்கு அப்படித்தான் மனோ சார்கிட்டே அமராவே கோர்த்து விட்டு மேட்ரிமோனியல் ஆரம்பிச்சே இப்போ இல்லாத டிங்கோவே இருக்கறே கிங்கோக்கு பேசி முடிக்க பார்க்கறே!''
என்றவனோ சோற்றை கைகளால் கிளறி விட,
''நான் என்னவோ மாமா வேல பார்க்கறே மாதிரிலே பேசறீங்க நீங்க!''
என்றவளோ நடு ரோட்டில் நெட்டி முறித்தாள்.
''அப்போ இல்லையா!''
என்றவனோ விசிலடித்தான் ரோட்டுக்கு அப்பாலிருந்த புதர்களை நெருங்கி.
''இல்லன்னு சொல்லலே.. ஆனா.. மனோ சாருக்கும் அமரா அக்காவுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கும்லே! அதான் சும்மா ஒரு ட்ரை பண்ணி பார்த்தேன்! யார் கண்டா செட்டாகிடுச்சின்னா ஓகேதானே! பிஸ்னஸ்க்கு பிஸினஸும் ஆச்சு.. மாமா மச்சான் உறவும் ஆச்சு!''
''அது சரி!''
என்றவனை நோக்கி திபுதிபுவென ஓட வந்தன நாய்கள் பல.
பயந்தவளோ நடுக்கத்தை மறைத்து பிரீதனின் பின்னால் ஒளிய,
''நீங்கதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே.. வாங்களேன் வந்து உங்க வீரத்தையெல்லாம் இந்த பப்பிஸ்கிட்டே காமிங்களேன்!''
''போயா யோவ்!''
என்றவளோ அவளையே வெறித்த நாயை ப்ரீதனின் ஹெல்மட் கொண்டு விரட்டினாள்.
''ஷு! ஷு! ஷு! போயேன்! ஏன் இங்கையே நிக்கறே! ஐயோ! பார்ட்னர் இவன் ஒருத்தன் மட்டும் ஏன் என்னையே குறுகுறுன்னு பார்க்கறான்!''
''அவனா.. அவன்தான் உங்க டிங்கோவோட மாப்பிள்ளை கிங்கோ! செல்லப்பையன் குசும்புக்காரன்! ஒன்லி லைக் லேடிஸ்!''
என்றவனோ நமட்டு சிரிப்பு சிரித்து நாய்களை சாப்பிட வைக்க,
''ஹாய் கிங்கோ! நீ எப்படி பார்த்தாலும் என்கிட்ட சதையெல்லாம் இல்லே! இங்கப்பாறேன் நானே துரும்பா இளைச்சு கரும்பா இருக்கேன்! நீ நீனைக்கறே மாதிரி..''
என்றிழுத்தவளோ கிங்கோ அவளை ஒரு சுற்று சுற்றி வந்து நெருங்கி கொடுத்த லுக்கில் அச்சங்கொண்டு ஓடினாள் பின்னங்கால் பிடறியில் பட.
''ஏய் மூக்கு சளி! ஓடாதே! நில்லு! ஓடனா கிங்கோ கடிப்பான்! நீ வேறே துரும்பானே வெளிநாட்டு கரும்பு!''
''அடேய் மடசாம்பிராணி வியாக்கியானம் பேசாமே வந்து காப்பாத்துடா!''
''மடசாம்பிராணியா! நீ கடி வாங்கனாதான் அடங்குவே! என்னா வாயி!''
என்றவன் இடையில் கரங்கள் இறுக்கி நின்ற இடத்திலேயே நிற்க, யூ டர்ன் போட்ட அறந்தவாளோ ஓடோடி வந்தாள் கிங்கோ துரத்த மீண்டும் ப்ரீதனிடமே.
''ஏய்! பார்த்து!''
என்றவனோ பயந்தவளை ஒருபுறமும் கிங்கோவை மறுபுறமும் சமாளித்து இறுதியில் சாலையில் பப்பரப்பா என்று மல்லாக்க விழுந்தான் தரையில். கிங்கோவோ பேபி சீட்டரை ஆங்காங்கே நக்க முயன்று அன்பை வெளிப்படுத்தியது.
''கிங்கோ! போதும் விடு! போ!''
என்றவனோ செல்லமாய் அதை ஓரந்தள்ள கிங்கோவின் கூட்டணியோ ப்ரீதனை ரவுண்டு கட்டி ஒருவழியாக்கிய பின்னரே கிளம்பினர்.
பைக் பின்னாடி ஒளிந்திருந்த மங்கையோ மெதுவாய் வெளிவர ப்ரீதனோ அதற்குள் அவன் முகத்தை கழுவி கொஞ்சம் ரிஃபிரஷ் ஆகிக் கொண்டான்.
''போதும்! போதும்! ரொம்ப கழுவாதீங்க பிக் பாஸ்.. அழகாயிட போறீங்க!''
என்றவளோ நக்கலடித்து சிரியாய் சிரிக்க,
''உன்னே!''
என்ற ப்ரீதனோ வேண்டுமென்றே விசாவை அவன் வசம் இழுத்து வஞ்சியவள் முகம் முழுதும் அவன் முகத்தை தேய்த்தான்.
''மாட்டினியா! மாட்டினியா!''
என்றவனின் திடீர் செயல் தந்த உணர்வு பூகம்பத்தில் சிக்கிய மானினியோ திணறி விட்டாள்.
''இப்போ என்ன பண்ணுவே! இப்போ..''
என்றவனோ அடுத்த வார்த்தை பேசாது அப்படியே நின்றான் அவன் கரங்களுக்குள் மலர்ந்திருந்தவளின் கிறங்கடிக்கும் பார்வை அவனையே வெறிக்க.
அனலாய் தகித்தவளின் நெஞ்சமோ மூச்சிரைப்பு கொள்ள, காளையவனின் ரோமங்களோ சிலிர்த்து பொங்கின.
மெதுவாய் ப்ரீதனின் உள்ளங்கைகள் மாயோள் அவளின் முகம் பிரிய, சூடேறிய குயிலவளோ சொக்கிட பார்க்கும் விழிகளை அடக்கி வைத்தாள்.
ஆணவனோ முறுக்கேறிய உடலை சமாதானம் செய்ய பார்வைகளை வேறு பக்கம் திருப்ப, மொத்த தலையையும் பார்வைகளையோடு சேர்த்து கவிழ்த்துக் கொண்ட மடவரல் அவளோ எதர்ச்சையாய் கண்டாள் ப்ரீதனின் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மட்டை.
மெதுவாய் அவனை பின்னோக்கி தள்ளியவளோ நெருங்கினாள் பைக் டேங்கரின் மீதிருந்த ஹெல்மட்டை.
''ப்ரீதன் இங்க பாருங்களேன்.. உங்க ஹெல்மட்லே இருக்கறே டிசைனோட பாதி இதுலே இருக்கறே மாதிரி இல்லே..''
என்றவளோ அவர்கள் இருவரின் ஹெல்மட்டையும் பைக் மீது ஒருசேர வைத்து ஒப்பிட,
''ஆமா விசா.. இப்படி ஒன்னா வெச்சு பார்த்தாதான் தெரியுது.. ஏதோ பொண்ணு மூஞ்சி மாதிரி இருக்கு..''
என்றவனின் ஆச்சரியத்தில்,
''ஆமா.. நல்ல சிரிச்ச முகமா இருக்கு.. அதுவும் ரொம்ப யூனிக்கா டிசைன் பண்ணிருங்காங்க ப்ரீதன்.. ஆற அமர அலசினாதான் யார் எவருன்னு கண்டுப்பிடிக்க முடியும் போலே..''
''ஒரு வேலே இது உங்க அக்கா மயிலினி முகமோ..''
சட்டென தோன்றியதை பட்டென சொன்னான் பீரீதன்.
ஆணவனின் கேள்வியிலான பதிலில் அன்றைய தீனவானனுக்கும் இன்றைய குகப்ரீதனுக்கும் செல்லமாய் இருக்கின்ற பைக்கோ தலையை சாய்த்து ஓசை எழுப்பியது ஆமாம் என்று சொல்லி.
தூக்கி வாரிப்போட்டது இருவருக்கும் பைக்கின் சடன் சத்தத்தில். இருந்தும் நிலையை சிரித்து சமாளித்தவர்களோ அவர்களின் லோங் ரைட்டுக்கு தயாராகினர்.
ஆறு மாதங்களுக்கு முன் இதே சாலையில் ஆணவனின் அதரங்களும் இடையாளவளின் இதழ்களும் இணைய பார்த்த தருணத்தை ஹொனொன்று தடுக்க, அன்று போனவள்தான் அதற்கு பிறகு இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறாள்.
''ரெடியா லேடி பாஸ்..''
என்றவனோ வாஞ்சையாய் விசாவின் கைகளை நெஞ்சில் இறுக்கிக் கொள்ள,
''இன்னும் டைட்டா கட்டிக்கவா பிக் பாஸ்..''
என்றவளோ சாய்ந்தாள் ப்ரீதனின் முதுகில்.
பறந்தது பைக் மின்னல் பாய்ச்சல் கொண்டு.
போவதென்னவோ நம்மை பொறுத்தமட்டில் ப்ரீதனும் விசாவும்தான்.
ஆனால், சோறு போட்டு வளர்த்த ஜீவன்களுக்கும், கும்மிருட்டு சாலைக்கும், ஏன் அவர்களை தாங்கிக் கொண்டு போகும் பைக்க்கும்,இருவர் தலையிலும் சிம்மாசனம் கொண்டிருக்கும் ஹெல்மட்ஸ்க்கும் அவர்கள் எப்போதுமே தீனவான் மயிலினிதான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 96
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.