What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 97

மணி விடியற்காலை ஐந்து.

அழுது ஆர்ப்பாட்டம் செய்த குஞ்சரியை இப்போதுதான் ஒருவழியாய் உறங்க வைத்திருந்தான் ரீசன்.

அலைபேசியோ சத்தமில்லா வெளிச்சம் கொண்டது. அதை கையிலெடுத்தவனோ வக்கீல் ஆச்சாரியரின் வாட்ஸ் ஆப்பிற்கு கொஞ்சமும் யோசிக்காது பதில் அனுப்பினான்.

அதாவது மூத்தவன் மற்றும் அவனுக்கான குடும்ப சொத்துகளுக்கு விசாவின் மகன் தீனாவானனை வாரிசாக்கி உயில் எழுத கோரியிருந்தான் ரீசன் அனுபவஸ்தர் அவரிடத்தில்.

பெற்றோர்களும் மகனவனின் முடிவிற்கு செவி சாய்த்திருந்தனர் சின்னவன் இதுவரை செய்த காரியங்களிலேயே உருப்படியான ஒன்று இதுதானென்று எண்ணி.

புதல்வனை காரணங்காட்டி விசாவோடு பேசவோ பழகவோ ரீசன் விரும்பவில்லை. அது அவன் குஞ்சரியை கஷ்டப்படுத்தும் என்றறிந்தவன் ஒதுங்கியே இருந்தான்.

அதேவேளையில் எங்கே பண உதவி செய்ய போய் மறுபடியும் விசா காதல் கீதல் என்றிடுவாளோ என்றொரு அச்சமும் தயக்கமும் அவனை தடுத்தது.

ஆகவே, அவளோடனா எவ்வித உறவையும் அவன் வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை. ஏன், ஒரு முறைக்கூட பெற்ற மகனை பார்த்திட அவன் நிந்திக்கவில்லை.

ஆனால், அவனின் பெற்றோர்கள் அலைபேசியில் சேமித்திருக்கும் குட்டி பையனின் படங்களை அவ்வப்போது பார்த்து சந்தோஷம் கொள்வான் ஆணவன்.

ஏக்கம் இல்லாமல் இல்லை பாசமில்லாம் இல்லை. இருந்தும், எவ்வித ஒட்டுறவும் இல்லாமல் இருப்பதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு.

அம்பாளும் வாத்தியாரும் அவர்களின் பேரனை வாரம் இருமுறை போனில் முகம் பார்த்து தவறாமல் கதைத்திடுவர். அம்மணியவளோ மலேசியா வருகையில் ரீசனின் பெற்றோர்களை ரெஸ்டாரண்டில் நேரடியாக சந்தித்திடுவாள்.

குழந்தையவனை தாத்தா பாட்டியோடு நேரத்தை செலவிட விட்டிடுவாள். என்னதான் எவ்வித உறவையும் இவர்கள் யாரும் சரிவர கொண்டிருக்கவில்லை என்றாலும் அது எதுவும் அன்பின் பரிமாற்றங்களை தடுத்திடவில்லை.

ப்ரீதனை ஒருமுறை விசாவோடு கண்ட அம்பாளோ ஆசிர்வாதம் கூட கொடுத்திட்டார் மகனின் தவறுக்கு மன்னிப்பையும் கேட்டு. எதையும் மறக்காதவளோ மன்னிப்பை கிடப்பில் போட்டு நிஜமான நேசங்கொண்டே அவர்களோடு உறவாடினாள்.

பள்ளி வாத்தியாரே எப்போதோ தலைமுழுகி விட்டார் இருந்த ஒருத்தனையும் எப்போது அவன் குஞ்சரியை விட்டு விசாவை திருமண செய்வதாய் சொன்னானோ.

மகனிடத்தில் வீம்புக் கொண்டவர் பேரனை மட்டும் சொந்தங்கொண்டாடிடுவார். இது எந்த ஊர் நியாயமென்றுதான் தெரியவில்லை.

இன்றோடு ரீசன் காதல் குலியவளை வீட்டுக்கு கூட்டி வந்து ஏறக்குறைய பத்து நாட்கள் ஓடிவிட்டது. ஒவ்வொறு நாள் இரவும் ஆணவனுக்கு சிவராத்திரியே. எந்நேரமும் அவன் பக்கத்திலேயே இருக்க வேண்டினாள் கொடூரத்தின் உட்சத்தில் நிம்மதி இழந்தவள்.

வளர்ந்தவளை மழலையாய் தாங்கியவனோ மொத்த பொறுப்பையும் அவன் தோளிலே சுமந்திட ஆரம்பித்தான். அக்மார்க் வீட்டு புருஷனாகி போனான்.

சமையல் செய்தான். செடி நட்டான். வீடு கூட்டினான். துணி துவைத்தான். வதூவை குளிப்பாட்டினான். தாரமவளோடு லோங் ட்ரைவ் போனான். ஒரு மாதிரி நல்லாவே இருந்தது இப்படியான லைஃப் ஸ்டைல் அவனுக்கு. கல்லூரி காதல் மீண்டும் உயிர் கொண்டது போல.

முதல் மூன்று மாதங்களுக்கு பெரிய அளவிலான இடமாற்றங்கள் ஏதும் கூடாதென்று டாக்டர் மினர்வா திட்டவட்டமாக கூறி விட்டார் ரீசனிடத்தில். ஆகவே, ரீசனின் வெளிநாட்டு பயணம் டெம்பரவரிக்கு போஸ்ட் போன் ஆனது.

விருந்தனையின் உள்காயங்களை முறையாக சுத்தம் செய்வது தொடங்கி மருந்திடுவது வரை அனைத்தையும் டாக்டர் மினர்வாவிடம் தெள்ளத் தெளிவாய் கேட்டு அதை ஒருமுறை செய்தும் பார்த்து அவனை தயார் படுத்திக்கொண்டான் ரீசன்.

மதுக்கூடங்களை விற்று விட்டவனோ பிழைப்பிற்கு வீட்டிலிருந்தே படித்த படிப்பிற்கான வேலையை பார்த்திட ஆரம்பித்தான் வார்க் ஃப்ரோம் ஹாம் பேசில்.

வாரம் ஒருமுறை தம்பதிகளை காண வந்தான் வீர் ஆறுதலாய். கீரன் ஆரழகனும் மறக்காமல் விசிட் அடித்தான் குஞ்சரியவள் வாய் திறவாத போதிலும்.

போலீசாக அவன் விக்டீமை ஹிப்னோஸிஸ் செய்து உண்மையை வரவழைக்க யோசனை கொள்ள, அவன் ஐடியா அறிந்த ரீசனோ அதற்கு பக்கவாய் எதிர் திட்டமொன்று கொண்டான்.

போய் நின்றான் மினர்வாவிடத்தில். கெஞ்சி கூத்தாடினான் மனைவியின் தற்போதை நிலையை கருத்தில் கொண்டு அவளை மேலும் துன்பத்தில் ஆழ்த்திட வேண்டாமென்று.

ஆணவனின் காதலில் வியந்தவளோ ரீசன் கேட்ட மறுப்பு கடிதத்தை அவனிடம் கொடுத்து உற்ற தோழனுக்கு ஆப்படித்தாள்.

மருத்துவர் கடிதம் கடமைக்கு தடையாக, ஹோம் விசிடிங்கில் என்றாவது ஒருநாள் குஞ்சரி உண்மையை சொல்லிடலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தான் கீரன். ஆகவே, கேஸை ஒத்தி வைத்தாலும் அதில் ஒருகண் வைத்தே இருந்தான் ஆன்ட்டி ஹீரோ அவன்.

மோசமான நிலையில் அன்றைக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குஞ்சரிக்கோ தேவையான சிகிச்சைகள் உடனே வழங்கப்பட்டன.

இறந்த குழந்தை அப்போதைக்கு எவ்வித பிரச்சனையும் தாயிக்கு தராது என்பதால் முதலுரிமை குஞ்சரியின் நலனுக்கே வழங்கப்பட்டது.

ஃப்ரீலான்ஸ் என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்த சீனப்பெண்ணின் பின்புலன் குஞ்சரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றைக்கே விசாரிக்கப்பட்டது. அலசலின் முடிவினில் வந்திருந்த சீனத்தி திருட்டுக் கும்பல்காரியென தெரிய வந்தது.

காணாமல் போன நகைகள் மற்றும் பணம் சார்ந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த குஞ்சரியோ அவள் சிதைந்த சம்பவத்தின் காரணகர்த்தாக்கள் யாரென்று அப்போதும் சொல்லாமலே டிமிக்கி கொடுத்தாள்.

ரீசன் வரவும் குஞ்சரி கண் திறக்கவும் சரியாக இருக்க அப்போதுதான் அவளுக்கு சுகப்பிரசவமே நடந்து முடிந்தது.

செத்த குழந்தையை பெண்ணவள் பிரசவிக்க அதுவும் தாய்மைக்கே உரிய எவ்வித இடுப்பு வலியுமின்றி கூடவே இருந்து காட்சிகளை சிலையாக வெறித்தான் ஆணவன்.

இன்னும் மூன்று மாதத்தில் கையில் தூக்கி கொஞ்சி விளையாட வேண்டியவனை புதைக்கவா எரிக்கவா என்ற வேள்வியோடு கையிலேந்தினான் தீனரீசன். சத்தமில்லா அழுகை கொண்டவளோ கணவனின் உள்ளங்கையில் எழுதினாள் விரல்களால் சோரி என்று.

அடக்க முடியா வேதனையோடு மரித்த சிசுவை நர்ஸ் கையில் கொடுத்தவன் பிரசவ அறையிலிருந்து வெளியேறி வந்தமர்ந்தான் இரும்பு நாற்காலியில். வந்தாள் விசா. போக சொன்னான் தினா. அவன் படும் ரோதனை தாளாது ஓடோடி போனாள் அளகவள். கதிரியவளை வாரியணைத்துக் கொண்டான் ப்ரீதன்.

''ரீசன்.. ரீசன்..''

கேட்டது குஞ்சரியின் குரல் படுக்கையறையிலிருந்து.

''இங்கதான்மா இருக்கேன்.. தோ.. வறேன் இரு..''

என்ற தீனரீசனோ அவனின் டைரிக்குள்ளிருந்த புகைப்படத்தை மெதுவாய் வருடி குரூர பார்வைக் கொண்டான்.

அது குஞ்சரியின் கல்லூரி கால புகைப்படம். அவளின் கேங் மெம்பர்ஸ் கொண்ட அந்தக்கால நினைவுச் சின்னம்.

சிரித்திருந்த முகங்களுக்கு நடுவினிலிருந்த ஒரே ஒரு முகத்தை மட்டும் பேனா முனைகள் முத்தமிட்டிருந்தன துளைகள் விழும் அழுத்தங்கொண்டு. சிவப்பு நிற பேனா கொண்ட ரங்கோலியில் ரீசனின் ரத்தம் கொதித்தது.

சின மூச்சில் ரீசனின் முகம் மாறுதல் கொண்டது. பொங்கிய கோபத்தை அடக்கியவனோ படாரென்று டைரியை மூடினான்.

''ரீசன்..''

மறுபடியும் குஞ்சரியின் குரல். சாந்தமாக்கியது கணவனவனை.

கண்களை இறுக மூடி திறந்தவனோ,

''வந்துட்டேன்மா..''

என்றுச் சொல்லி இழுப்பறையை இழுத்து மறைத்து வைத்தான் கையிலிருந்த டைரியை.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 97
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top