- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 98
மடித்த துணிமணிகளை திறந்திருந்த ட்ரவலிங் பேக்குக்குள் அவசர அவசரமாய் அடுக்கிக் கொண்டிருந்தாள் விசா.
ப்ரீதனோ சத்தமின்றி நுழைந்தான் அறைக்குள்.
அவனை ஏறெடுத்தவளோ எதையோ எதிர்பார்க்க, ஆணவனோ குனிந்த தலையோடு அமைதியாகவே நின்றிருந்தான்.
பெண்டு அவளோ கண்ணிலிருந்து துளிர்த்த கண்ணீர் துளியை துடைத்துக் கொண்டு வேக வேகமாய் துணிகளை தூக்கி போட்டாள் பேக்குக்குள் மடிக்காமலேயே.
''அவுங்களுக்கெல்லாம் என்னே தெரியும்.. சும்மா வாயிருக்கின்னு ஏதாவது சொல்லுவாங்க.. அதை போய் நாமே சீரியஸா எடுத்துக்க முடியுமா..''
என்றவனோ தலையை தூக்காது சொல்ல, பெதும்பையின் விழிகளோ அவனை மேலும் கீழும் பார்த்தது ஓங்கி அறைந்திடும் கோபத்தோடு.
ப்ரீதனின் தாய் வழி சொந்தமொன்று கல்யாண பத்திரிக்கை கொடுக்க வர பெண்கள் இல்லா வீட்டில் ஓடோடி சென்று அவர்களை வரவேற்றாள் விசா.
மரியாதையாய் பேசி ஆயந்தியவள் அன்பாய் ஜூஸ் கொடுக்க, குட்டி தினாவோ அவளை அம்மா என்று நெருங்கிய வேகத்தில் அணங்கவள் ப்ரீதனின் மனைவியோ என்று வந்தவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.
அவளுக்குமே அது பிடித்தம் என்பதால் மறுவார்த்தை பேசாது அமைதியாய் நிற்க, அமராவோடு கடைக்கு சென்று திரும்பிய வேலைக்காரியோ வந்தவர்கள் விசாவின் புராணம் பாடிட போட்டுடைத்தாள் அவள் ஒட்டுறவு அற்றவள் என்று.
அந்நேரம் பார்த்து ப்ரீதனும் அவன் அம்மாவும் செண்டரிலிருந்து வீடு திரும்ப வந்திருந்த சொந்தமோ சுந்தரியவள் காது படவே அவளை அங்கிருந்த சீக்கிரம் அனுப்பிட சொல்லி பேபி சீட்டரின் மம்மி காதை கடித்தனர்.
''நான் சொல்றதே சொல்லிட்டேன்.. நீங்கதான் இதுக்கப்பறம் பார்த்துக்கணும்.. சரியாக்கா.. தப்பி தவறிக்கூட ஏற்கனவே ஒரு புள்ளைக்கு அம்மாவே இருக்கறவளே போய் பொம்பளே வாடையே படாதே நம்ப பையனுக்கு கட்டிக்கிட்டி வெச்சிடாதீங்க..''
வந்தவர்களின் வார்த்தை நெஞ்சை குத்தி கிழிக்க அதற்கு மேலும் அங்கு நிற்க விசாவிற்கு மனம் வரவில்லை. குடுகுடுவென மேல் மாடி நோக்கியவள் கிளம்பிட உடனே அவளின் லக்கேஜ் பேக்கை ரெடி செய்தாள்.
ஆனால், பெண்ணவளோ அறியவில்லை அதற்கு பிறகு கீழே நடந்த சம்பவத்தை.
வீட்டு படியேறி வந்தவர்களை எப்படி அவமானப்படுத்துவதென்று ப்ரீதன் யோசிக்கையில் அவன் மம்மியோ சொந்தங்களை டம்மியாக்கியிருந்தார்.
''மனுஷங்களா நீங்களா!! என்ன பேசறீங்க! மனசாட்சி இருக்கா உங்களுக்கெல்லாம்!''
என்றவரின் கோபத்தில் ஆடிப்போனார்கள் வந்திருந்தவர்கள்.
''இப்போதான் அந்த பொண்ணு கையாலே ஜூஸ் வாங்கி குடிச்சீங்க! அது தொண்டையே கூட முழுசா இன்னும் நனைச்சிருக்காது அதுக்குள்ளே போய் அந்த பொண்ணே பத்தி இப்படி பேசறீங்க!''
''இருங்கம்மா!''
என்று குறுக்கிட்டவனோ தொடர்ந்தான் படபட பட்டாசாய்.
''ஒரு குழந்தையோட இருக்கறே பொண்ணே கட்டறதுலே என்னங்க பிரச்சனை உங்களுக்கு! ஏங்க அப்படியான பொண்ணே கட்டே கூடாது! சொல்லுங்க! என்ன காரணம்! உங்களத்தான் கேட்கிறேன் சொல்லுங்க!''
ப்ரீதனின் எகிறிய எகிறில் வந்தவர்கள் முகமோ இறுகி போனது.
''ஒருவேளை.. அவுங்க இதுக்கு முன்னாடி வேறொருத்தர் மனைவி.. படுக்கை பகிர்வு.. அதனாலே யூஸ்ட் ஐட்டமா ஆகிட்டாங்க! அதானே! அப்போ இதே நான் ஒரு விடோவரா (widower) இருந்தா நானும் அப்படியான யூஸ்ட் ஐட்டம்தானே! ஆனா ஏன் ஒரு ஆம்பளன்னு வரும் போது மட்டும் இதை யாருமே பெருசா எடுத்துக்க மாடட்டறீங்க! ஏன்னா நான் ஆம்பளே! ஒரு பொண்ணெண்ணெ நூறு பொண்ணு கூட கட்டலாம்! அப்படித்தானே!''
என்றவனை தடுக்க போன் அமராவை கையை பிடித்து நிறுத்தினார் அவளின் தாய்.
''இந்நேரம் நான் ஒரு குழந்தையோட மனைவி இல்லாமே இருந்திருந்தா உடனே எனக்கு ஒரு பொண்ணே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிருப்பீங்க! காரணம் நான் ஆம்பளே! என்னாலே பிள்ளையை தனியா வளர்க்க முடியாது! அப்படியே நான் வளர்த்தாலும் அது சரியா வளராது! சோ, அதுக்கொரு அம்மா தேவை! அதே மாதிரி என்னோட தேவைகளை கவனிக்க ஒரு ஆள் வேணும்! இல்லே கடைசி காலத்துலே கூட மாட எனக்கு ஒத்தாசையா இருக்க ஒரு துணை வேணும்! அப்படித்தானே!!''
பாயிண்டாய் ப்ரீதன் பேச சொந்தங்களின் முகங்களோ தொங்கி போனது குறிப்பாய் விசாவை துரத்த சொன்ன நல்லுள்ளத்தின் முகம்.
''இப்போ நான் சொன்னதெல்லாம் ஆம்பளைக்கு மட்டுமில்லங்க குடும்ப வாழ்க்கே சரியா அமையாதே எல்லா பெண்ணுக்கும் அவசியமானதுதான்! அது எத்தனை முறையான வாழ்க்கையா இருந்தாலுமே சரி! புரிஞ்சிக்கோங்க எல்லா பொண்ணுங்களுக்கும் மனசிருக்கு! அவுங்களுக்கும் ஆசாபாசம் இருக்கு! அவங்களுக்கும் வயசாகும்! அவுங்கள பார்த்துக்கவும் ஆறுதல் படுத்தவும் ஒரு துணை வேணும்! அவுங்க குழந்தைகளுக்கும் ஒரு அப்பா தேவை!''
என்றவனோ அவனை சுற்றி வந்த குட்டி தீனாவை தூக்கி வைத்துக் கொண்டுதான் பேசினான்.
''எவனோ தப்பு பண்ணன்.. இல்லே எவனோ அவன் வாழ்க்கையே மாத்தி அமைச்சிக்கே பார்த்தான் அப்படிங்கறதுக்காக குழந்தைகள் ஏன் அப்பா இல்லாமே வளரணும்.. ஒரு பொண்ணு ஏன் போனவனுக்காக வருந்தணும்! அழணும்! பயப்படணும்! மனசுக்கு புடிச்சவனே கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழலாமே! விரும்பறே வாழ்க்கையே வாழ நினைக்கறே பெண்களே நாமே ஏன் தடுக்கணும்! ஏன் அவுங்களுக்கு முட்டுக்கட்டையான சமூகமா இருக்கு! ஏன் இப்படியான பெண்களே நாமே தப்பா எடை போடணும்!''
மம்மியின் ஒவ்வொரு வாக்கியத்திலும் ப்ரீதன் வானில் பறந்தான். எங்கே அம்மா விசா மேட்டரில் ஏதாவது சிவப்பு கொடி பிடித்திடுவாரோ என்றெண்ணியவன் இப்போது கட் அண்ட் ரைட்டாக புரிந்துக் கொண்டான் அவர்கள் வீட்டு மாட்டுபெண் விசாதான் என்று.
''சமூகம் அந்த பொண்ணே சீதாவாவோ கண்ணகியாவோ பார்க்க வேண்டாம்! ரத்தமும் சதையுமான சக மனுஷியா பார்த்தாலே போதும்! மத்தவங்க கண்ணுக்கு அவே பாஞ்சாலியாவே தெரிஞ்சாலும் என் விசா என் விசாதான்! எதுவும் மாறாது! என் அன்பும் குறையாது!''
என்றவனோ அவனறியாது கொட்டி விட்டான் மனசில் உள்ளதை. இருந்தும், என்செய்ய கேட்க வேண்டிய கூமுட்டையோ கோபித்துக் கொண்டு பறக்க ஆயத்தமாகி விட்டது.
ப்ரீதனின் மம்மியோ கையெடுத்து கும்பிட்டார் வந்தவர்களை.
''நீங்க கிளம்பலாம்! அதான் என் மகன் சொல்லிட்டான்லே கல்யாண பத்திரிக்கையோட வீட்டுக்கு வந்து பணம் பாக்கு வைக்கிறேன்! வந்து அட்சதை போட்டு மனசார வாழ்த்திட்டு போங்க!''
வந்தவர்களோ முகத்தில் ஈயாடாமல் நகர அவர்களை நோக்கி சொடக்கிட்ட ப்ரீதனோ,
''முதல்ல இந்த ஆம்பளே பொம்பளே பிரிவினையே மாத்துங்க! உரிமைகளும் உணர்வுகளும் இங்க எல்லாருக்கும் சமம்தான்! அதை மட்டும் மனசுலே வெச்சுக்கோங்க!''
என்றவன் சொன்ன சொல்லை கேட்டவர்கள் செத்த முகத்தோடு இடத்தை காலி செய்தனர்.
பெற்ற பிள்ளைகள் இருவருமே அவர்களின் மம்மியை மொய்த்தெடுத்து விட்டனர் அவரும் ப்ரீதனுக்கு சப்போர்ட் செய்ய.
''டேய்! விட்றா என்னே! போய் முதல்லே விசாவே பாரு! கண்டிப்பா ஒப்பாரி வெச்சிக்கிட்டுத்தான் இருப்பா!''
தாய் விரட்ட மகனோ ஓடோடி வந்தான் வஞ்சியவளை காண. வந்து பார்த்தால் மேடமோ ஆன் தெ வெய் பேக்கிங். ப்ரீதனின் மனதை மம்மி கூட புரிந்து வைத்திருக்க காரிகை இவளோ உணராதவளாய் கிளம்புவது அவனுக்கு வலித்தது.
''கிளம்பியாச்சா..''
சுவரோரம் நின்றப்படி கேட்டான் ப்ரீதன்.
''ஹ்ம்ம்..''
என்றவளோ அவன் முகம் பார்க்கவேயில்லை.
''டிக்கெட்..''
''புக் பண்ணிட்டேன்..''
குரலில் சுரமில்லாமல் சொன்னாள் மாயோள் அவள்.
''எத்தனை மணிக்கு..''
''விடியற்காலையிலே..''
கைக்கடிகாரத்தை பார்த்தவனோ,
''டைம் இருக்கு.. ஒரு லோங் ரைட் போகலாமா..''
என்றுக் கேட்டு நெருங்கினான் நங்கையவளை.
''தூங்கணும்.. சீக்கிரம் ஏழனும்..''
என்றவளோ முடியாதென்பதை வேறு மாதிரியாக தெரியப்படுத்தி எழுந்தாள் மஞ்சத்திலிருந்து.
''தினா! தினா!''
கீழ் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தவன் பெயரை அழைத்தப்படி ப்ரீதனை தாண்டி போனாள் விசா.
''சீக்கிரம் போயிட்டு வந்திடலாம்..''
என்றவனோ இழுத்து நிறுத்தியிருந்தான் அருணியவளின் கையை.
''இல்.. இல்லே.. வேண்டாம்..''
என்றவளின் குரல் அழுகையால் உள்ளே போனது.
உணர்ந்தவனோ ஆயந்தியவளின் கையை இறுக்கி பட்டென உடலை திருப்பி சொன்னான்.
''ஒன் ஹவர்லே வந்திடலாம்..''
''வேண்..''
என்றவளோ வார்த்தைகளை விழுங்கினாள் தலையை மேல் தூக்கிடா விட்டாலும்.
''போறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. லைஃப் ரைட்டுக்கு (life ride) எனக்கு லக்கில்லே.. சோ.. ஒரே ஒரு தடவே லோங் ரைட்டாவது வாயேன்..''
என்றவனின் குரல் முதல் முறையாக சுணங்க, சட்டென அவனை ஏறெடுத்தாள் விசா வீங்கிய விழிப்படலங்களில் நீர் கோர்த்து நிற்க.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 98
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.