What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
அத்தியாயம் 99

பைக் எங்கெங்கோ போய் கடைசியில் பீச்சில் வந்து நின்றது. விடிய இன்னும் மூன்று மணி நேரங்கள் இருக்க காலரா நடக்க ஆரம்பித்தனர் ப்ரீதனும் விசாவும்.

''விசா..''

என்றவன் அழைத்து கண்ணால் சைகை செய்தான் ஈரமணலை பார்த்திட சொல்லி சுந்தரியவளை. பெண்ணவளும் தலைகுனிந்து பார்க்க அங்கே இரு குட்டி நண்டுகள் ஒன்றோடு ஒன்று அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தன.

ஏதும் பேசாதவளின் முகம் மட்டும் முறுவல் கொண்டது நண்டுகளின் சேட்டையை கண்டு. சட்டென மண்டிப்போட்டு அமர்ந்தவள் இரண்டில் ஒரு நண்டை விரல்களால் ஓரந்தள்ளிய ப்ரீதனின் கையை தட்டி விட்டாள்.

''டிஸ்டர்ப் பண்ணாதீங்க விடுங்க..''

''இரு விசா என்ன பண்ணுதுங்கன்னு பாப்போம்..''

என்றவனோ வேண்டுமென்றே பெண் நண்டை திரும்ப திரும்ப ஆண் நண்டோடு சேர விடாது நகர்த்தினான்.

''ம்ம்ச்ச்ச்.. வேணாம் விடுங்க..''

என்றவளோ மீண்டும் ப்ரீதனின் விரலை அவள் கை கொண்டு தடுக்க அதற்குள் ஆண் நண்டோ முந்திக்கொண்டு போய் பெண் நண்டை பின்னாலிருந்து அதன் கைகள் கொண்டு பாதுகாப்பாய் கட்டிக் கொண்டது.

''அட! ஏய் நண்டு!''

என்றவளின் இறுகிய முகமோ டக்கென்று அலராய் மலர,

''பார்த்தியா நண்டு பண்றே வேலையே..''

என்றவனோ அவளோடு சேர்ந்து சிரித்தான்.

''நண்டுக்கு கூட தெரியுது..''

என்றவளோ எழுந்து பைக் நோக்கி நடக்க,

''என்ன தெரியுது..''

என்றவனோ அவளை பின் தொடர்ந்தான்.

''அதெல்லாம் சொல்லி தெரியரே விஷயமில்லே.. சொந்தமா உணர்றது.. அதுக்கு நீங்க செட்டாக மாட்டிங்க மிஸ்ட்டர் குகப்ரீதன்!''

என்றவளோ ஹெல்மட்டை தலையில் கவிழ்க்க,

''ஓஹ்! அப்படியா! சரி! சரி! எனக்கொரு நேரம் வராமலா போகும்.. அப்போ தெரியும் நான் செட் ஆவேனா மாட்டேனானு..''

என்றவனும் ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து பைக்கை கிக் ஸ்டார்ட் செய்தான்.

''கிங்கோ பார்த்திட்டு போயிடலாம்..''

என்றவளோ அவனின் தோளில் கை வைக்க,

''பார்த்திட்டு என்னே.. அதுக்கூட விளையாடிட்டு கூட போகலாம்.. ஆனா அதுக்கு லேடி பாஸுக்கு டைம் இருக்கணுமே.. நீங்கதான் செகண்ட் கணக்கிலே டிக்கெட் வாங்கிட்டிங்களே!''

என்றவனோ பைக்கை விட்டான் வழக்கமாய் அவர்கள் போகும் இடத்திற்கு.

அரை மணி நேரத்துக்கு எவ்வித பேச்சுகளும் இல்லை இருவருக்கும் பைக் பயணத்தின் போது. விசா எட்டியிருக்க தயங்கியவன் ஒரு கட்டத்திற்கு மேற்பட்டு டக்கென்று மானினியவளின் கையை இழுத்து முதுகோடு அவளை ஒட்டிட வைத்தான்.

மறுப்பேதும் பேசாத அரிவையோ பல்லியாய் அவனோடு பசையாகிப் போனாள். கூடவே, அம்பகங்கள் மூடி அவனை உரிமையாய் கட்டியும் கொண்டாள்.

''நான் போறேன்..''

என்றவளோ அவளாகவே முன் வந்து சொன்னாள் வழிந்த கண்ணீரோடு.

''அதான் தெரியுமே..''

என்றவனோ பைக்கை ஸ்லோவாக்கினான் எவ்வித பெரிய இம்பேக்கும் இன்றி.

''அவுங்க அப்படி பேசனதுலே தப்பேதும் இல்லே.. அதுக்காகலாம் ஒன்னும் நான் போகலே.. பெண்டிங் வார்க்ஸ் நிறைய இருக்கு.. அதான் கிளம்பறேன்..''

''ஆமா! ஆமா! நீங்க இப்போ பெரிய ஆள் வேறே! லேடி பாஸ்னா சும்மாவா!''

''கிண்டலடிக்கறீங்களா..''

என்றவளோ பைக்கிலிருந்து கீழிறங்க,

''கிண்டல் பண்ண என்னே இருக்கு! யாரே பார்க்க வந்திங்களோ அவுங்களே பார்த்தாச்சு அப்பறம் இங்கென்னா வேலை! கிளம்ப வேண்டியதுதான்!''

என்றவனோ பைக்கோடு ஒட்டி நின்றான் கால்களையோ பின்னியப்படி பேண்ட் பாக்கெட்டின் இருப்பக்கமும் கைகளால் நுழைத்து ஸ்டைலாக.

''ஒன்னுமே சொல்ல தோணலையா..''

என்றவளோ ஒருமுறையேனும் ப்ரீதன் அவளை போகாதே என்றிடுவான் என்று நினைத்து கேட்க,

''என்ன சொல்லே..''

என்றவனோ எதுவுமே அறியாதவன் போல் பாசாங்கு கொண்டான்.

இடியிறங்கியது போலிருந்தது பூமகளின் நெஞ்சுக்குள். ஒரு நொடி அவளுக்குமே தோன்றியது விருப்பம் கொண்டிருப்பது பூவை அவள் மட்டும்தானா என்று.

ஒருவேளை வந்தவர்கள் பேசிப்போனதுதான் ஜீரணிக்க முடியா உண்மையா, குழந்தைக் கொண்டதால் அவள் புதியதோர் வாழ்க்கைக்கு தகுதியற்றவளா என்று விசாவின் குட்டி மூளையோ கண்டதையும் யோசிக்க விறலியின் நெஞ்சமோ விம்மியது சோகங்கொண்டு.

விலோசனங்கள் குளங்கொள்ள பட்டென திரும்பி சில அடிகள் முன்னோக்கி வைத்தவள் விரல்களால் விழி நீரை ஓரந்தள்ளி பேச்சை மாற்றினாள்.

''இல்லே.. அன்னைக்கு ஏர்போட்லே என்னே பிக் ஆப் பண்ணிட்டு நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு நீங்க எதுவுமே சொல்லாமே என்னே ஹோஸ்ப்பிட்டல் கூட்டிக்கிட்டு போயிட்டிங்களே அதை பத்தி..''

''என்னே சொல்லி இருக்கணும்.. நீங்களே சொல்லுங்களேன்..''

ஆணவனின் மரியாதையிலேயே புரிந்தது அவன் உள்ளே ஒன்றை மறைத்து வெளியே வேறொன்றை பேசுகிறானென்று.

அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று தெரியவில்லை பெதும்பையவளுக்கு. ஒருகால் இவளாகவே மனம் திறக்க நிந்திக்கிறானா என்று யோசித்தவளோ அவளாக எப்படி வாய் திறக்க முடியும் என்று கலங்கினாள் பழசெல்லாம் கண் முன் நிழலாட.

கூனிக்குறுகியவளோ தலைநிமிர்ந்து சாலைக்கு அப்பால் தெரிந்த தொழிற்சாலையை வெறித்தாள்.

''ஹலோ.. என்னாச்சு..''

கேட்டான் ஆணவன் ரொம்ப நேரமாகியும் விசா வாயே திறக்காதிருக்க.

''ஆர்ஹ்ஹ்.. இல்லே.. போகாதே.. வேண்டாம்.. ஏன் போயிக்கிட்டு.. இப்போ அவசியமா போகணுமா.. இப்படி ஏதாவது சொல்லி நிறுத்துவீங்களோன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க அப்படி எதுவுமே சொல்லி என்னே ஸ்டாப் பண்ணலையே..''

என்றவளோ இப்போதும் ப்ரீதனுக்கு முதுகு காண்பித்தே நின்றாள்.

எதையோ பேச வந்து என்னவோ சொல்லி நிற்பவள் எண்ணம் முழுக்க அவனை கட்டியணைத்து கதறிடவே தோன்றியது. கண்ணா பின்னாவென்று ப்ரீதனின் கன்னங்களில் அறைந்திட உள்ளம் கிடந்து தவித்தது.

உள்ளுக்குள் கோடியாசையை ஒளித்திருப்பவள் முன்னாள் கசப்பு தந்த ரணத்தில் உழன்று கொண்டிருந்தாள் மௌன புழுவாய்.

ப்ரீதனுக்குமே அவளை அதிகமாய் நோகடிப்பதுப் போல் தோன்றியது. இருந்தும், வேடிக்கை பார்த்திடவே ஆவல் கொண்டான் பொறுமையாய் என்னதான் நடப்பதென்பதை பார்த்திட.

ஆலைய புகை ஒருபக்கமாய் போக லைட் வெளிச்சம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தெரிந்தது. அவ்வப்போது நெடுஞ்சாலை ரோட்டில் வாகனங்களும் பெரிய கனரகங்களும் கூட கடந்து போயின.

அருணியவள் விசும்பல் சத்தம் ப்ரீதனின் காதில் கேட்க, மேலும் அவளை வதைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

வாய் மலர்ந்தான் குகப்ரீதன் காந்தல் அவள் உயிர் சிலிர்க்க.

''தினான்னு சொன்னே விசா எப்போ ரீசன்னு சொல்ல ஆரம்பிச்சாளோ அப்பவே எனக்கு தெரிஞ்சிடுச்சு விசாகா தேவேந்திரன் மனசு காலின்னு..''

சொன்னவனின் வார்த்தைகளில் நேத்திரங்களில் வழிந்த அருவி செக் போஸ்ட் போட, மெதுவாய் தலைத்தூக்கியவாளோ ப்ரீதனின் வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை மூளைக்குள் ஓட்டி பார்த்தாள்.

''லேடி பாஸோட பார்ட்னர்ஷிப் இதுக்கு மேலே எப்படி இருக்கப்போகுதுன்னு தெரியலே.. சோ.. நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு புது வென்ஞ்சர் (venture) பத்தி சொல்லிடறேன்.. யோசிச்சு சொல்லுங்க..''

வாழ்க்கையை பற்றி பேச வந்த இடத்தில் பேபி சீட்டரவன் வணிகத்தை பற்றி பேசுகையில் விசாவிற்கு வந்த கடுப்பிற்கு அவனை கழுத்தை நெரித்து கொல்ல கைகள் பரபரத்தது.

''கேட்கறீங்களா.. சொல்லவா..''

என்றவனோ தலையை கொக்காட்டம் முன்னுக்கு நீட்டி ஓரமாய் சாய்த்து வதனியவளின் பதிலுக்காய் காத்திருந்தான்.

நெஞ்சுக்கு குறுக்கே கட்டியிருந்த கையை முஷ்டி மடக்கியவளோ சினத்தை அடக்கி வேள்வி கொண்டாள்.

''பேப்பர்வர்கஸ் (paper works) ரெடியா..''

''டீலிங் ஓகே பண்ணாமே பேப்பர்ஸ் வேஸ்ட் பண்ண நான் விரும்பலே..''

என்றவனின் நக்கலில் உதட்டை கடித்தவளோ,

''ஈக்கோ பிரெண்ட்லியா (eco friendly) மெயில் பண்ணிடுங்க..''

''அப்போ ப்ரோபோசல் பண்ணிடவா..''

என்றவனின் அழுத்தமான வார்த்தைகளை கண்டுக்காதவளோ தலையை மட்டும் ஆட்டினாள் ஆமோதித்து நகத்தை பல்லால் கடித்தப்படி ஆயிழை அவள் மனதை பின்னாலிருக்கும் மரமண்டைக்கு எப்படி புரிய வைக்கும் வழியை சிந்தித்து.

''இப்போதைக்கு 368 குழந்தைகள் இருக்காங்க.. இவுங்களுக்கு அம்மா மாதிரியும்.. இன்னும் ஒன்பது.. பத்து.. மாசத்துலே 1 பொண் குழந்தை நியூ ஜாயினியா (new joinee) ஜாயின் (join) பண்ணிக்குவாங்க.. அந்த குட்டிக்கு அம்மாவாகவும்.. எடிஷனலா 1 அடால்ட் மேன் (additional one adult man).. ஏஜ்ட் தெர்த்தி பிளாஸ் (aged thirty plus).. பேர் கூட என்னவோ குகப்ரீதனாம் அவருக்கு மிர்ஸஸ்சாகவும் இருக்க விருப்பமா..''

ப்ரீதனவன் காதலை மொழிந்து வஞ்சியவள் பதிலுக்காய் காத்திருக்க, நயனங்களில் வழிந்த நீர் காற்றில் படர திரும்பியவளோ சிவந்த விழிகள் கொண்டு நோக்கினாள் மனசெல்லாம் நிரம்பியிருக்க.

ப்ரீதனோ முகிழ்நகையோடு வலக்கையை நீட்டி கண்களை இமைத்தான் ஆயந்தியவளை அவன் நோக்கி வரச்சொல்லி.

அழுகையின் ஊடே அவன் நோக்கி ஓடிய வதூவோ பொத்தென சாய்ந்தாள் ஆணவன் நெஞ்சில். ப்ரீதன் அருவாட்டியவளை இறுக்கமாய் கட்டியணைக்க மொத்தமாய் அவனுக்குள் புதைந்தாள் பேதையவள்.

முதல் முறை முத்தமிட்டான் ப்ரீதனவன் இருவரின் முகமும் ஒட்டி உரசி பற்றிய பொழுதில் அங்கனையின் செவியோரம். காந்தாரியின் கலைந்த குழல் நாசியில் கிறக்கம் ஏற்ற சிவந்தது ஆணவனின் காதுகள்.

இருவரின் தேகமும் சூடேறி அனத்த, அழகனின் கழுத்தோரம் ஒட்டி விசும்பிய விசாவோ வலக்கையால் ப்ரீதனின் நெஞ்சை மூடியிருந்த டி- ஷர்டை பற்றி இறுக்கினாள்.

''என் மனசுலே நீங்கதான் இருக்கீங்க ப்ரீதன்.. வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்.. நீங்க சொல்லத்தான் நான் வெயிட் பண்ணேன்.. பழைய காயம் ஆறிட்டாலும் அந்த பயம் இன்னும் என்னே விட்டு போகலே..''

என்றவளோ மூக்கை உறிஞ்சி கொண்டு தொடர்ந்தாள்.

''அன்னைக்கு கூட நான் அழுதது குஞ்சரிக்காகத்தான்.. நான் வன்மமா எப்படி அந்த லெட்டர்லே எழுதி வெச்சேனோ அது அப்படியே நடந்து போச்சின்னுதான் எனக்கு வருத்தம்.. நான்தான் அந்த குடும்பத்தோடு கொஞ்சநஞ்ச சந்தோஷத்தையும் கெடுத்திட்டேனோன்னு எனக்கே என் மேலே கோபம்! தப்பு பண்ணிடோம்னு எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி! அதான் அப்படி அழுதிட்டேன்! உங்கக்கிட்டே சொன்னா எங்கே திட்டுவீங்களோன்னுதான் சொல்லலே! ஆனா.. முருகன்கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுட்டேன்..''

என்றவளோ ஒப்பாரியின் நடுவே கடகடவென மனசில் உள்ளதை கொட்டிட,

''அவர் என்னே ஜிஸஸ்ஸா! ரெண்டு பொண்டாட்டிக்காருமா! அவர் பிரச்சனையே பெரும் பிரச்சனை! இதுலே நீ வேறே!''

என்றவன் நக்கலடிக்க,

''என் வேதனை உனக்கு கிண்டலா இருக்கா!''

என்றவளோ திருகினாள் ஒரு திருகு ஜாக்கெட்டுக்குள் அதுவும் டி - ஷர்டுக்குள் ஒளிந்திருந்த ப்ரீதனின் நெஞ்சை.

''ஆர்ஹ்! ஏய்! வலிக்குது! சளிகிளி சிந்தி வெச்சு பழிவாங்கிடாதம்மா தாயே!''

என்றவன் செல்லமாய் நாயகியின் நிடலத்தில் முட்டிட,

''இப்போ கூட சொல்லணும்னு தோனலலே..''

என்றவளோ அவன் நெஞ்சில் துஞ்சியப்படியே மிழிகள் மூடி கேட்டாள்.

''இன்னும் என்னே..''

என்றவனோ வாஞ்சையாய் வருடினான் காதலியின் தலையை.

''போகாதன்னு..''

என்றவளோ அவனை ஏறெடுக்க,

''சொல்றதுலே என்னடி இருக்கு.. நிறுத்துறதுலதானே கிக்கே இருக்கு..''

என்றவனின் பிடி மலரவள் தேகத்தில் அழுத்தம் கொள்ள, நாணி விலகியவளோ பின்னோக்கி போனாள்.

''வாங்க லேடி பாஸ்.. காதலிக்க கத்துக் கொடுக்கறேன் இந்த பிக் பாஸ்..''

என்றவனோ அளகவளின் விரல்களை விடாது பிடித்திழுத்து தூக்கி அமர்த்தினான் பைக்கின் மீது.

''என்ன பண்ண போறீங்க..''

என்றவளின் சிறு இதயமோ படபடத்தது அவனின் நெருக்கத்தில். ஏதும் பேசாதவனோ மெதுவாய் வருடினான் மங்கையவள் கன்னத்தை. விசாவின் விழிகளோ சொக்க துடிக்க தாபமோ தெரிவையவளின் மேனியை சிலிர்த்திட வைத்தது.

''ப்ரீ.. தன்..''

என்றவளின் கையோ டக்கென்று பற்றி நிறுத்தியது ஆணவனின் வருடிய விரல்கள் விறலியின் கழுத்திறங்க.

இதழோரம் புன்னகை இழைந்தோட மௌனம் கொண்டவனோ இருக்கரங்களுக்குள் அடக்கினான் அந்திகையவள் வதனத்தை.

உணர்ச்சிகள் ஒழுக்கத்தை பீய்த்தெறிய பார்க்க மூடிய விழிகளோடு தலைகுனிந்த பாவையின் கரங்களோ பைக்கின் விளிம்புகளை இறுக்கின.

''லவ் இப்படித்தான் இருக்கும் விசா.. பேதையே ஏத்தவும் விடாது.. இறக்கவும் விடாது..''

என்றவனோ கண்கள் மூடி மாயோள் அவளின் நெற்றியில் அவனின் நுதல் ஒட்டி சொல்ல, மொத்தமாய் தலையை ப்ரீதனின் தோளில் சாய்த்தவளோ அவனின் கழுத்தை இருகைகளால் வளைத்து கட்டிக்கொண்டாள்.

''ஐ லவ் யூ லேடி பாஸ்..''

என்றவனோ தாரமாக போகின்றவளை ஒரே தூக்கில் தூக்கி சுத்த,

''ஐ லவ் யூ பிக் பாஸ்..''

என்றவளோ சிரித்தாள் அவளின் நாசியை ஆணவனின் மூக்கோடு உரசி.

தாமரைநாயகன் உதிக்க, நாயகியின் குழல் மாறனின் முகம் மறைக்க, அந்திகையின் அதரங்களை சிற்றெறும்பாய் மொய்த்திட ஆரம்பித்தான் குமரனவன்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 99
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top