What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 4

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
461
அத்தியாயம் 4

மணி பதினொன்றாகி பின் பனிரெண்டாகியது.

ஆனால், போன விரன் இன்னும் திரும்பவே இல்லை. சண்டையென்றாலும் மனசு கேட்கவில்லை அம்மணிக்கு. அவளை போடு போடென்று போட்டு சென்றவனுக்கு போனை போட்டால் ஜிம் ட்ரெனரவன் கோலை எடுக்கவே இல்லை.

அவளுக்குத் தெரியும் குட்டி குஞ்சனவன் எங்கிருப்பான் என்று. பூனைக்கு குட்டிக்கு சுவரை விட்டால் வேறிடம் எது.

ஆகவே, வழமையை போல் ஒரு குளியலை போட்டு சமைத்த அத்தனையையும் தூக்கி கேரியரில் அடுக்கி, நடையை கட்டினாள் ஆட்டியவள் போக வேண்டியது இடத்திற்கு அர்த்த ராத்திரியில்.

பருத்தி சேலை அதுவும் பஞ்சு மிட்டாய் கலரில், அவளின் சாக்லேட் மேனிக்கு மேலும் அழகூட்டியது. நடையாய் நடந்து வந்து சேர்ந்திருந்தாள் சீமாட்டியவள் கடை வீதிக்கு.

தெருவோர விளக்குகள் ஆங்காங்கே மங்கிய மஞ்சளில் மிளிர்ந்திருக்க நிடலத்தில் துளிர்த்த வியர்வை மொட்டுகளை புறங்கையால் ஒற்றிக் கொண்ட காரிகையோ அப்படியே சேலை முந்தானையை எடுத்து கந்தர ஈரத்தையும் துடைத்துக் கொண்டாள்.

கேரியர் கொண்ட பையை ஹேண்ட் பேக்கை போல் முழங்கையில் தொங்க விட்ட கோமகளவள் கையிலிருந்த சாவிக்கொண்டு அங்கிருந்த மருதாணி கடையை ஒட்டிய மேல்மாடி நோக்கும் நடைப்பாதை க்ரில் கேட்டை திறந்து மாடிப்படி ஏறி லிஃப்ட்டை தட்டினாள்.

அதுவோ இன்றைக்கென்று செத்துக் கிடந்தது வேலை செய்யாது.

''போச்சா!! இதுக்கு இதே ஒரு பொழப்பு!! எப்போ பாரு நின்னு நின்னு போறது!! இப்போ ஐஞ்சு மாடி மேலே ஏறி போகணுமா!! ஐயோ!! காலே கழட்டி தனியே வைக்கணும் போலையே!! இந்த குட்டி குஞ்சன் வேறே நேரங்காலம் தெரியாமே இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு என்னமோ அவ்ளோ பெரிய வீட்டுலே இடமே இல்லாத மாதிரி!!''

என்றுக் கறுவிக் கொண்டே மொத்தமாய் ஐந்து மாடிகளையும் ஏறி அடைந்தாள் டிண்டர்ட் கதவுகள் கொண்ட அவிரனின் சொந்த ஜிம் செண்டரை பரவையவள்.

சின்ன டிக்கியின் கணவனான அவிரன் ஜிம் கோச்சான பர்சனல் ட்ரெனராவான்.

ஆணவனின் கலரோ மைசூர் பார்க். ஆளோ படு ஸ்மார்ட். ஹேரோ போலீஸ் கட்.

வயதோ ஜஸ்ட் தேர்த்தி டூ (just 32). ஹிப்போ தேர்த்தி த்ரீ (hip 33). பைசெப்ஸ்சோ சிக்ஸ்ட்டின் (biceps 16). செஸ்ஸோ போர்த்தி போர் (chest 44). எடையோ ஏட்டி ஃவை (85). ஹைட்டோ ஃவை பாயிண்ட் நைன் (height 5.9).

மீசையிருந்தால் சிலம்பாட்டம். தாடி கொண்டால் பீஸ்ட். ரெண்டுமிருந்தால் அஞ்சான். இல்லையென்றால் கியூட்டாண்டி. இப்படி கலவையான அழகனே நிழலிகாவின் புருசன் அவிரன்.

''முதல்லே சாப்பிட வாடா குட்டி குஞ்சா.. அப்பறம் பெஞ்ச் பிரஸ் (bench press) பண்ணலாம்..''

என்றவளோ அடர் சாம்பல் கம்பளத் தரையிலேயே கடையை விரித்தாள் கொண்டு வந்திருந்த கேரியரை திறந்து வைத்து.

லீவரேஜ் பெஞ்ச் பிரஸ் மெஷினில் (Leverage Bench Press Machine) படுத்தப்படி பார்பெல்ஸ்சை (barbells) மேல் தூக்கி கீழே கையால் இறக்கிக் கொண்டிருந்தவன் செவியில் விழுந்த குரலில் முதலில் அதிர்ச்சித்தான் கொண்டான் குட்டி குஞ்சனவன்.

ஆனால், வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. இருந்தும், மௌனியாகவும் இருக்கவில்லை. இத்தனை மணிக்கு அவனை தேடி சின்ன டிக்கியவள் அங்கு வருவாள் என்றவன் நினைக்கவில்லை.

சிந்தனையை மாற்றி முகத்தில் வழிந்திறங்கிய வியர்வையை துடைக்காது மெதுவாய் தலையை மட்டும் ஓரந்திருப்பி சின்ன டிக்கியவளை பார்த்த விரனோ,

''உன்னே யாரு இங்கே வர சொன்னா!!''

என்றான் குரலில் எரிச்சல் கொண்டு.

''சாப்பிடாமே நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டே.. நீ எப்பையாவது ஒரு தடவைத்தான் இந்த மாதிரி நல்லா ஆக்கி வைக்கறதே சாப்பிடுவே.. மத்த நேரமெல்லாம் சும்மா கோழி கொத்தறே மாதிரி காஞ்ச ரொட்டி கேழ்விரகு சட்டின்னு கிடப்பே!! அதான் உனக்கு சாப்பாடு கொடுக்க வந்தேன்..''

''நான் கேட்டேனா!!! எனக்கு சாப்பாடு வேணும் நீ எடுத்து வான்னு!! சும்மா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஆட்டிக்கிட்டு வந்துடறது!! ச்சை!!''

என்றவனின் சீற்றத்தில் அவனை ஏறெடுத்தவளோ தெப்பமாகிய விழிகளை பொறுமை காத்திட சொன்னாள்.

''ஏன் இப்போ சேலை..''

என்றவனோ முன்னிருப்பவளை ஏற இறங்க பார்த்து போத்தல் நீரை கையிலெடுக்க,

''வீட்டுலே ஆள் இல்லன்னா இப்படித்தானே குட்டி குஞ்சா.. மறந்துட்டியா..''

என்றவளை திட்டிகளால் தின்று ஜீரணங்கொண்டு போத்தல் நீரை கடகடவென வாய் படாதவாறு தொண்டைக்குள் இறக்கினான் விரன்.

அலரவளின் கழுத்தோரமோ வியர்வை முத்துகள் குட்டி குஞ்சனின் முத்திக்காய் ஏங்கி தரையிறங்கின வழிந்து மங்கையவள் மார்க்குவியலின் மையப்பகுதியில்.

மொத்தமாய் நீரை நெட்டி முடித்தாலும் தலையை கீழிறக்காது ஏசியின் மென்காற்றில் விலகிய பெதும்பையின் இடையை இமைக்காது பார்த்து இளைப்பாறினான் இளைஞனவன்.

விருட்டென விறலியவளை இழுத்து, ஆடை பறித்து, காலை விரித்து போடத்தான் சொன்னது மனது. இருந்தும் துள்ளியெழுந்த மோகத்தை அடக்கினான் விரன்
முகத்தை குட்டி டவலால் துடைத்து.

உயிர் துஞ்சிடுவான் விரன்❤️

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 
Last edited:

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top