- Joined
- Jul 10, 2024
- Messages
- 461
தாழ் திறவாய் ததுளனே! : 7
''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!''
கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா.
இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர்.
''அரை மணி நேரம் இருக்கும்!''
சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து வாயிக்குள் ஊற்றினான்.
''நான் சீக்கிரமா கிளம்பத்தான் பார்த்தேன்! ப்ரொடியூசர் லாஸ்ட் மினிட்லே ஸ்பாட்டுக்கு வந்து அடுத்த ஷூட் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரு! அதான், லேட்!''
அம்மணி காரணங்களை அடுக்க, அவளை முறுவலோடு பார்த்தவனோ,
''தேங்க்ஸ்!''
என்ற வார்த்தையோடு டாப்பிக் மாற்றினான்.
''எதுக்கு?!''
புரியாதவள், வெயிட்டர் கொண்டு வந்து கொடுத்த குட்டி கப் ஹார்லிக்ஸை வாய் குவித்து ஊதி ஆரோனை பார்க்க,
''வீடியோஸ் டிலீட் பண்ணதுக்கு!''
தெளிவுப்படுத்திய நாயகனோ, அவன் காரின் முன்பக்க விளிம்போரம் சாய,
''அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்?! நான் ஒன்னும் உங்க தம்பிக்காக அழிக்கலையே! என்னோட ரெப்புட்டேஷன் பாதிக்கக்கூடாதுன்னுதான் அழிச்சேன்! அது ஒரு மாதிரி நெகட்டிவ் இமேஜ் கிரியேட் பண்ணிருச்சு! அன்னைக்கு இருந்த மைண்ட் செட்லே அது அப்போ பெருசா தெரியலே! ஆனா, கொஞ்ச நாள் கழிச்ச பிறகு அது எவ்ளோ பெரிய மிஸ்டேக்னு புரிய ஆரம்பிச்சுடுச்சு! அதான், மனசுலே என்ன இருந்ததோ, அதை எல்லாம் வெளிப்படையா சொல்லி ஒரு வீடியோ போட்டுட்டு, முன்னாடி இருந்ததையெல்லாம் டிலீட் பண்ணிட்டேன்!''
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னாடி நடந்திருந்த சுந்தரியின் மன மாற்றத்திற்கான விளக்கத்தை கொடுத்தாள் சங்க்கியா.
''பார்த்தேன்! பியூட்டி வித் ப்ரெயின்!''
ஆரோன் கோர்ட் வார்த்தையில் புகழ, பாவையோ முகம் சிவக்க நாணினாள்.
''காமெண்ட் செக்ஷன் ஆப் பண்ணி வெச்சது பிரிலியண்ட் மூவ்!''
வெட்கியவளின் சங்கடம் போக்கினான் ஆரோன்.
''ஓஹ், அதுவா?! இல்லாட்டி நம்ப ஆளுங்க வாயிக்கு வந்ததையெல்லாம் பேசி சரியா இருக்கற என்னே மறுபடியும் பைத்தியமாக்கிடுவாங்க!''
சொல்லியவள் சிரித்து சமாளிக்க, ஆரோனும் சேர்ந்து சிரித்து அவளை நிம்மதிக் கொள்ள வைத்தான்.
''ஆனா, யாரை எப்படி தடை பண்ணாலும், ராகனை மட்டும் என்னாலே நிறுத்தவே முடியலே, ஆரோன்!''
என்ற சுந்தரியோ அவளை கேள்வியோடு பார்த்த ஆணவனின் முன் நீட்டினாள் அவளின் கைப்பேசியை, அவன் பார்க்க.
''You cheap bitch! Don't ever try your nasty plans to me! I can even smell your hypocrisy!''
வஞ்சியின் வாட்ஸ் ஆப்போ தம்பியின் கை வண்ணத்தில் பல்லிளித்து நின்றது.
பார்த்த மூத்தவனுக்கோ வதனம் வாடிப்போனது. பெருமூச்சு ஒன்றோடு உதடுகளை ஈரமாக்கிக் கொண்டவனாய் தலையை திரும்பிக் கொண்டான் ஆரோன், நெற்றியை தேய்த்து.
''நீங்க அப்சட் ஆகிட்டிங்களா?!''
வேள்விக்கொண்ட காரிகையோ தொடர்ந்து,
''மெச்சுவரா ஹெண்டல் பண்ண நினைச்சேன்! அதுக்கு நீங்கதான் சரியான ஆளா இருப்பீங்கன்னு தோணிச்சு! அதான், உங்களே பார்த்து பேச வர சொன்னேன்!''
''ராகன் எதையோ தப்பா புரிஞ்சிக்கிட்டான்னு தோணுது சங்க்கியா! முதல்லே அவன் உங்களுக்கு மெசேஜ் பண்ண அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நான் செக் பண்றேன்! அப்போதான், அவன் ஏன் உங்களுக்கு மெசேஜ் பண்ணி இருக்கான்ற காரணம் தெரியும்! அதுவும் இப்படி!''
பெரியவன் சின்னவனை விட்டுக் கொடுக்காது பேச, காலி கப்பை தூக்கி ஓரம் வீசிய மாடலின் முகத்திலோ ஈயாடவில்லை.
''ராகன் அப்படி மெசேஜ் அனுப்பியிருக்க கூடாது! அது தப்பு! ரொம்ப, ரொம்ப பெரிய தப்பு! கூடிய சீக்கிரத்துலே அது தப்புங்கறதை நான் அவனுக்கு புரிய வைக்கிறேன்!''
''புடிக்காமத்தான் என்கூட டின்னருக்கே வந்தாரு! எதிர்பாரத விதமா சண்டையும் வந்துடுச்சு! அது இப்போ, இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டிருக்கு!''
நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு தரை பார்த்த பெதும்பையின் தொனியோ சோகத்தில் கொலு கொள்ள,
''சோரி நான் கேட்டுடுவேன்! ஆனா, அது உங்க மனசை திருப்தி படுத்திடாது சங்க்கியா !''
''புரியுது! நான் யோசிச்சு பார்த்தேன்! அவசரப்பட்டு அப்படி பேசியிருக்ககூடாது! முதல்லே எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினவங்க எல்லாம், போகபோக என் கேரக்டரை ஜட்ஜ் பண்ண ஆரம்பிச்சது, என்னோட கேரர் கூட மிக்ஸ் பண்ணி, ரொம்ப தப்பா பேசி, ஆளாளுக்கு வீடியோ பண்ணி, ட்ரோல் பண்ணி, கருத்து சொல்ல ஆரம்பிச்சதுன்னு, நடந்த எல்லாமே என்னே ரொம்ப பெரிய மெண்டல் ஸ்ட்ரெஸ்லே தள்ளிடுச்சு! அதிலிருந்து வெளிவரவே எனக்கு சைக்காலஜிஸ்ட் உதவி தேவைப்பட்டிருச்சு!''
நிறுத்தி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு,
''நீங்க சொன்னது சரிதான்! பொண்ணு பத்தின விஷயங்கள் எப்போதுமே மறக்கப்படாது! நானே என் தலையிலே மண்ணே வாரி போட்டுக்கிட்ட மாதிரி ஆகிடுச்சு நான் அவசரத்துலே, கோபத்துலே பண்ண ஒரு விஷயம்!''
''விடுங்க! சரியாகிடும்! அடுத்த கண்டெண்ட் கிடைக்கற வரைக்கும் தான்! அப்பறம் எல்லா மறந்து போயிடும்!''
''அப்பா பெருசா ரீயாக் பண்ணிக்கலே! ஆனா, அம்மா..''
வாக்கியத்தை முடிக்காது மௌனியாகி போனாள் வல்வியவள்.
''இண்டியன்ஸ் எங்க இருந்தாலும், இண்டியன்ஸ்தான்! மெண்டலிட்டியே மாத்தவே முடியாது சங்க்கியா, ஒரு சில விஷயங்கள்ளே! அதுவும், லேடிஸ் மேட்டர்லே, பேச்சுக்கே இடமில்லே! சேலை மேலே முள்ளு விழுந்தாலும், முள்ளு மேலே சேலை விழுந்தாலும்னு பொண்ணுங்களைத்தான் தப்பு சொல்லுவாங்க!''
சமாதானம் என்று வரையறுத்திட முடியா கூற்றுகளை முன்னிறுத்தி பேசினான் ஆரோன்.
''நீங்க நினைக்கறீங்களா நான் தப்புன்னு?!''
ஏனோ தளிரியலின் மீது ஆணவன் கொண்டிருக்கும் மதிப்பீடு பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் வந்தது வாசுரை அவளுக்கு.
''எமோஷனலி ஸ்லிப்பான, செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்கற பொண்ணு!''
என்ற ஆரோனோ கார் கதவை திறந்தான் கிளம்பிட தயாராகியவனாய் மெல்லிய முறுவல் இதழில் இழைந்தோட.
தாழ் திறந்திடுவான் ததுளன்...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.