What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 67

அன்பை அளந்து வைத்தாலும் அன்புதான், கொட்டி கொடுத்தாலும் அன்புதான். கொடுப்பவர் எடுப்பவர் என்ற பேதமெல்லாம் ஒன்றுமில்லை, அளப்பரிய நேசமது உள்ளத்தில் வெள்ளங்கொண்டிருக்க.

பைசெக்ஸுவளுக்காகவே பிரதானமாக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆரம்பித்த மூன்றாவது நாள் வந்தது மெயிலொன்று முற்றிழையவளுக்கு.

விமான டிக்கெட்டோடு சேர்த்து சுரிகுழலள் லாவோஸ் (Laos) நாட்டின் வியன்டியான் (Vientiane) சிட்டியில் அமைந்திருக்கும் பிரபலமான தங்கும் விடுதி ஒன்றில் தங்குவதற்குமான தகவல்களையும் அம்மின்னஞ்சல் கொண்டிருந்தது.

வந்த மின்னஞ்சல்களிலேயே இது ரொம்பவும் வித்தியாசமாய் இருக்க தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் தையல்காரியவள் நேர்காணல் எடுக்க நடிகன் நதானியேலை.

கட்டுமஸ்தான நடிகனவன் அச்சு அசல் பார்த்திட பிரேசிலியன் மாடல் டேனியல் மட்சுனாக (Daniel Matsunaga) போலவே இருப்பான்.

இரண்டரை மணி நேர பயணத்தில் போனதும் வந்திடலாம் என்ற எண்ணத்தோடு வந்திருந்தாள் நேரிழையவள் வியன்டியான் நகரத்திற்கு நடிகனவனை பார்த்திட.

ஏர்போட்டிலிருந்து நேராய் தங்கும் விடுதி வரைக்கும் ராஜ மரியாதையே விரனின் பத்தினிக்கு.

சந்திப்புக்கு தயார் என்ற மெயிலை அம்மணி அனுப்பிய அடுத்த நொடியே போன் வந்தது வாசிதையவளுக்கு நடிகனின் செயலாலினியிடமிருந்து, பிரயாண திட்டத்தை விளக்கும் பொருட்டு.

விமான பயணம் கர்ப்பிணிக்கு எவ்வித பிணக்கையும் கொடுத்திடவில்லை. சீமந்தினியவளை மேடு கொண்ட வயிரோடு கண்ட நடிகனின் ஆட்களோ விரைந்து திட்டங்களில் சில மாற்றங்களை செய்தனர்.

விடுதி அறை தொடங்கி பரிமாறிய உணவுகள் முதற்கொண்டு எல்லாமே வேறே லெவல். கவனிப்பை விவரிக்க கூட வார்த்தைகள் இல்லை எனலாம் பெதும்பை அவளிடத்தில்.

அப்படியான நிலையில் வியந்து கிடந்தவளை சந்திக்க வந்தான் நதானியேல் அவ்விடுதியின் விருந்து மண்டபத்திற்கு தனியார் காவலாளர்களோடு.

ஒட்டு மொத்தமாய் காலியாக்கியிருந்தான் நடிகனவன் அவர்கள் இருவர் மட்டுமே தனியே எவ்வித தொந்தரவுமின்றி கதைக்க விரும்பி.

''குட்டி அவிரனா, இல்லே நிழலிகாவா?''

என்றவனோ தனியொரு ஆளாய் பழங்களை அதக்கிக் கொண்டிருந்தவளை நோக்கி வினவியப்படி இழுத்தமர்ந்தான் நாற்காலியை.

''சோரி, ஹாய்!''

என்ற சின்ன டிக்கியோ வாயை நாப்கினில் ஒத்தியெடுத்து பின் கேசுவலாக அறிமுகமாகிக் கொண்டாள் நடிகனிடத்தில்.

''எப்படி இவ்ளோ அழகா தமிழ் பேசறிங்க?!''

என்றவளின் ஆச்சரியமான வினவளில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனோ,

''எங்கம்மா காரைக்குடி ஆள். எங்கப்பா பிலிப்பைன்ஸ். லவ். நான் மிக்ஸ்.''

என்றவனோ அவர்களின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த மதிய உணவுகளை கண்களால் அளந்தான்.

''இதெல்லாம் கர்ப்பிணிகள் சாப்பிடறே உணவுகள் நிழலிகா. குழந்தையோட வளர்ச்சிக்கு ரொம்பவே அவசியமானது. எந்த தயக்கமும் இல்லாமே தாராளமா சாப்பிடுங்க.''

என்றவன் தேவையான அளவில் அவனுக்கான உணவை எடுத்துக்கொள்ள,

''ஏன் என்னே இப்படி கவனிக்கறிங்க?!''

என்ற சின்ன டிக்கியோ சந்தேகத்தை முகிழ்நகை கொண்டு வினவினாள் வழக்கம் போல் வாய் துடுக்குத்தனம் கொள்ள.

''அவிரன் உங்க ஹஸ்பண்ட்.''

என்றவனோ உதட்டில் மென்புன்னகை ஒன்றை பரவவிட்டு சொன்னான் நிழலிகாவை உற்று நோக்கி. புரியவில்லை ஆயந்தியவளுக்கு ஆணவனின் பதில். குழப்பாய் இருந்தாலும் அடுத்த கேள்வியை தொடுத்தாள் தெரிவையவள்.

''அப்போ, அவர் என்னவரா இல்லாமே இருந்திருந்தா?''

என்றவளும் விடாது அழுத்தம் கொள்ள,

''சாப்பிடுங்க நிழலிகா. சூடாறிடும்.''

என்றவனோ கத்தியால் தட்டிலிருந்த இறைச்சியை வெட்டிட ஆரம்பித்தான், விறலியின் வதனம் ஆயிரங்கேள்விக்கொண்ட பார்வைகளை உறுத்திருக்க.

அதற்கு பிறகான அவர்களின் உரையாடல்கள் எல்லாம் பைசெக்ஸுவல் விஷயங்களை பற்றியே இருந்தது.

நேர்காணல் என்ற பெயரில் கண்டதையும் கேட்டு வைத்தால் நிழலிகா நடிகனிடத்தில். அவனும் சலிக்காமல் பதில் சொல்லி புரிய வைத்தான் அவளின் ஒரு சில தவறான புரிதல்களை.

''ரொம்ப நன்றி மிஸ்ட்டர் நதானியேல்! நான் நினைக்கவே இல்லே நீங்க இவ்ளோ பிரெண்ட்லியா இருப்பிங்கன்னு! கண்டிப்பா அடுத்த தடவே விரனோட வந்து உங்களே நான் மீட் பண்றேன்.''

''எப்படி இருக்காரு அவிரன்?''

என்றவனின் இழைந்தோடிய இதழ்கள் வெளிக்கொணர்ந்த விசாரிப்பில் தளிரவளின் அடிமனதோ ஏனோ இனம் புரியா கலக்கத்தை உணர்ந்தது.

அது என்னவோ விரன் என்ற பெயர் நடிகனின் முகத்தை நாணிட வைத்தது. சிவந்தான் ஆணழகனவன் பேரழகன் பற்றிய பேச்சுகள் எழுகையில்.

அப்போதுதான் கிளிக்கியது கோதையின் மூளைக்கு முக்கியமான விடயமொன்று. சின்ன டிக்கியவள் விரனின் தோழி என்றிருந்தாளே ஒழிய மனைவி என்று எங்கேயும் எப்போதும் வெளிப்படுத்திடவே இல்லை.

காரணம், அவளின் இந்த மிஷன் ரொம்பவே ரகசியமானது. அதுவும் விரன் அறிந்திடாத ஒன்று.

அப்படியிருக்க வந்தவன் எப்படி குட்டியின் பாலினத்தை பற்றிய கேள்வியை கற்பாள் அவளிடத்தில் கேட்டிட முடியும் என்று குழப்பம் கொண்டது ஏந்திழையின் மனது.

ஒருக்கால், யார் எவர் என்ற பெக்ராவுண்ட் செக் ஆப்பில் கண்டுக்கொண்டிருப்பானோ என்றுக் கூட யோசிக்கத் தோன்றியது நறுதுதல் அவளுக்கு.

நடிகனாயிற்றே கண்டிப்பாய் தோண்டி துருவியிருப்பான் என்றெண்ணியவளின் சிந்தை கலைந்தது செறுமியவனின் குரலால்.

''நல்லாருக்காருள்ளே?!''

என்றவனின் பார்வைகளோ முன்னிருப்பவளின் முகத்தில் ஒட்டிடாது சாரளத்தை வெறித்தது புதுவித புன்னகை அதரங்களில் பரவிக் கிடக்க.

இவன்தானோ என்ற வேள்வி எண்ணத்தில் கொழுந்துவிட, பொறுமை கொள்ளாமல் கேட்டு விட துடித்தது ஊடையவளின் வாய் உண்மையை நடிகனிடத்தில்.

அடித்துக் கொண்டது நாயகியின் நெஞ்சமே இருக்காது, இல்லையென்று. புத்தியோ காதல் கொண்ட மனசின் பேச்சை கேட்காதே என்றது நதானியேல்தானென்று .

பிள்ளைக்கொண்ட வயிறோ சுருக்கென்ற வலியொன்றை கொண்டது வல்லபியின் உள்ளம் பதறி கிடக்க.

''என்னதான் எல்லாரும் ஆணழகன்னு சொல்வாங்க! ஆனா, நான் அவிரனத்தான் பேரழகன்னு சொல்லுவேன்! கவர்ச்சி கண்ணன்! அடங்கா மன்னன்!''

என்றவனின் கவித்துவத்தில் பனிமொழியவளின் நாவோ வாயுக்குள் உக்ரத்தில் உலை கொண்டது. செவிகள் வழி வந்த பொறாமை புகையோ காற்றில் கலந்தது.

சினங்கொண்ட சின்ன டிக்கியோ இடம் பொருள் ஏவலலை கருத்தில் கொண்டு அடக்கி வாசித்தாள்.

புருஷனை எவளாவது பார்த்தாலே கண்ணை நோண்டிடும் நங்கையிடம் நதானியேலோ ஆசை நாயகனை வர்ணித்து சிலாகித்தான் ரகசியமாய்.

''போதும்!''

என்றவளை கண்டுக்காத நதானியேலோ,

''ஆட்சி கொள்ளும் கோனவன்!''

என்று முடித்தான் வாக்கியத்தை அன்றைய அவர்களின் முயங்கல் கண் முன் வர.

''உங்க மனைவிக்கு தெரியுமா நதானியேல்?!''

என்றவளின் நறுக்கென்ற கேள்வியில் பட்டென அவள் பக்கம் முகத்தை திருப்பியவனோ பேயறைந்தவன் போலானான்.

அப்பாடா! இப்போதுதான் நிம்மதி என்றது தாரமவளின் தாலி கொண்ட இதயம் நதானியேலின் முகம் செத்து போனவன் கணக்காய் மாறியிருக்க தலை தொங்கிக்கிடக்க.

''யார் மனசுலே யாருங்கறே தேடல், சுயத்தை தொலைச்சு வாழறே வாழ்க்கை, கலவியா காதலாங்கற குழப்பம், சமூக பொறுப்பு, அழகான குடும்பம், நம்பிக்கையான ஒழுக்கம் இன்னும் எவ்வளவோ இருக்கு, தெரியும்!''

என்ற நிழலிகாவின் வார்த்தைகளில் ஈயாடவில்லை நடிகனின் முகத்தில்.

கோபம், பொறாமை என்ற இரண்டையும் ஒதுக்கி வைத்தவளாய் பேசிட ஆரம்பித்தாள் பெரிய மனுஷியாட்டம் நிழலிகா.

''போலி சிரிப்பு ரொம்பவே கொடுமையானது நதானியேல்! கொஞ்ச நாட்களா அதை நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்! ரொம்ப வலிக்குது, தெரியாக்கூடாத உண்மை, தெரிஞ்சிருந்தாலுமே! வெறுக்கப்படறதே விட ஒதுக்கப்படுவது மேல் நதானியேல்! கொஞ்சநஞ்ச நம்பிக்கையாவது மிச்சமிருக்கும்!''

என்றவளோ பொலபொலத்த கண்ணீரை திசுவால் ஒத்தி எழுந்தவளோ,

''by the way thanks for the gift box! your Aviran love it and he cured too!''
(கிஃப்ட் பாக்ஸுக்கு நன்றி! உங்க அவிரனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது! அவர் இப்போ நல்லாருக்காரு!)

என்று அழுத்தமாய் சொல்லி கிளம்பினாள் அங்கிருந்து பாரமான மனதோடு.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 67
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top