What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

கண்ணாடியான நீ..

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
istockphoto-1351935189-612x612-1-150x150.jpg




சில உறவுகளுக்கு பெயர் வைத்திடவே முடியாது!

கண்ட முதல் நாளே!

இல்லை பேசிய நொடியே மொத்தத்தையும் கொட்டி உறவை வளர்த்திடும்.

அந்தப்பக்க நிலவரத்தை சிறுதும் பொருட்படுத்திடாது மனதின் ஆசைகள்.

இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த அத்தனையையும் சிலாகித்திட ஒரு ஜீவன் கிடைத்ததாய் உள்ளம் உணரும்.

கோபித்துக் கொள்பவர்களை ரசிக்க சொல்லும்.

வம்பிழுப்பவர்களை நக்கலடிக்க சொல்லும்.

விதண்டாவாதம் புரிவோரை கிண்டலடிக்க சொல்லும்.

சினங்கொண்டோரை மேலும் கடுப்பாகி பார்த்திட சொல்லும்.

புத்துணர்வு கொண்டு நெஞ்சம் துள்ளிக்குதிக்கும்.

ஒரே நாளில் வானை தொட்டதை போலுணரும்.

ஆனால், வெறும் பத்து பனிரெண்டு நாள் பழக்கத்தில் அதீத உரிமை ரகசிய பிளவொன்றை ஏற்படுத்திடும்.

நிதர்சன வாழ்க்கையை எடுத்துரைக்கும்.

போகும் பாதை சரியில்ல என்றுரைக்கும்.

கொஞ்சி பேசிய எல்லாமும் நினைவாய் போக, காதலித்த உயிரோ யாரோ போல் எட்டி நிற்கும் வேதனை சொல்லிலடங்கா.

சில வேளைகளில் இப்படியான பிணக்குகள் தேவையான ஒன்றே.

கண்டதும் காதல் கதைக்கு சரியாகும். நிஜத்துக்கு வெறும் நிழலாக மட்டுமே இருந்திட முடியும்.

சில உறவுகள் மிகவும் வினோதமானவை.

நிர்வாணம் என்பதை வேறு விதமாக வகைப்படுத்திடும்.

பலருக்கு ஆடையற்ற தேகம்.

சிலருக்கு மட்டுமே ரகசியமில்லா உள்ளம்.

இன்னும் சில பீசுகளுக்கு ஒளிவு மறைவு இல்லா உணர்வுகளே முழு நிர்வாணம்.

உணர்ச்சிகளை கடத்திட வேண்டி பகுத்தறிவை முட்டிக்கால்களில் வைக்கும் ஜந்துக்கள் தான் நாமெல்லாம்.

என்றாவது ஒரு நாள், இல்லையேல் யாராவது ஒருத்தரிடம் மட்டுமே மொத்தத்தையும் திறந்து காட்டி இருப்போம்.

மேற்சொன்ன வரையறை ஆளாளுக்கு மாறுப்படும்.

உறவுகளை கண்ணாடியோடு ஒப்பிடுவது ஒன்றும் புதுதில்லை.

உடைந்த கூர்முனை குத்தி கிழிக்கையில் உயிர் போகவும் வாய்ப்பிருக்கிறதே. மறுத்திட முடியாதே.

ஆனால், இத்தனை நாள் மு(அ)கத்தை அழகாய் காட்டிய அதை அப்படியே உதாசீனப்படுத்திடவும் மனசாட்சி

வேண்டாமெனும்.

உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பதும், நல்ல முகத்தை கோரமாக்கிக் கொள்வதும் ஒன்றுதான்.

இருப்பினும், புதுக்கண்ணாடி அவரவர் விருப்பம்.

ஆனால், பழைய கண்ணாடியோடான பிணைப்பு விவரிக்க இயலா போதை.

பித்து! பிடிவாதம்! விரக்தி! அழுகை! காதல்! சிரிப்பு! வெறுப்பு! அடாவடித்தனம்! குறும்பு! காமம்! கோபம்!

ஒட்டு மொத்தத்தில்..

இயலாமையின் வெளிப்பாடு!

இப்படியான உயிர்ப்புகள் மிக்க பந்தத்தை எப்போதுமே புதுக்கண்ணாடி தந்து விடாது.

என்னசெய்வது வலிக்கத்தான் செய்யும்.

பரவாயில்லை!

சந்தோஷமான கணங்களை அசைப்போட்டு பார்க்கவாவது நம்மின் அந்தரங்கங்கள் ரகசியமாய் புதைந்து கிடக்கட்டும்

நமக்குள்ளேயே.

பிரிவு என்ற ஒன்றை பிரகடனப்படுத்தி ரோதனைக் கொள்வதை விட, தோன்றுகையில் மூன்றாவது நபர் போல் ஒரு

சின்னசிறு குறுஞ்சிறுப்பு கொள். பதிலுக்கு நானும் முகிழ்நகை கொள்வேன்.

ஆகவே, கண்ணாடியான நீ..

உடைந்தாலும் என்னோடோ இரு!

அதுப்போதும் எனக்கு!


நிமல்..

 

Author: Admin 1
Article Title: கண்ணாடியான நீ..
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top