What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 123

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கிருத்திகாவின் வாழ்வை பொறுத்த மட்டில் மறுக்க முடியா உண்மையே.

அகம்பாவ கள்ளியாய் வளம் வந்த வஞ்சியவள், மங்கையை மிஞ்சிய விகடகவியின் புத்தியில் மயங்கி காதலென்ற மூன்றெழுத்துக்கு உடல், பொருள், ஆவியை சமர்ப்பிக்க, யார் கண் பட்டதோ பசையாய் ஒட்டிக்கிடந்த தம்பதிகள் இருத்துருவமாய் விலகி போயினர்.

படைத்தவன் விளையாடிய திருவிளையாடலில் ஜோடிகளின் தலையெழுத்தோ எழுதாத விதியாய் மாறிப்போனது.

எது எப்படியாகினும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற எண்ணத்தில் கனவில் கண்ட துர்சம்பவங்கள் கண் முன் நடந்தேறியும், கணவன் உயிர் பிழைத்திருக்க அதை விட வேறென்ன வேண்டும் என்று ஆத்ம திருப்திக் கொண்டாள் கீத்து.

சம்பவங்களின் முடிவினில் டாக்டர் குணமடைய, எல்லாம் பரம்பொருளின் கருணையே என்று கண்ணில் ஜலம் கொண்ட துணைவியோ, சிவன் கோவிலில் பெரியதொரு பூஜையை நிகழ்த்தி பலருக்கு அன்னதானம் வழங்கினாள்.

ஆனால், கண்டத்திலிருந்து தப்பித்து வந்த டாக்டரோ ஒப்புக்கு கூட மனைவி அவளிடம் கரிசனம் காட்டிடவில்லை. அதுதான் கீத்துவிற்கு ரொம்பவே வலித்தது.

இருப்பினும், நடந்தவைகளை ஓரம் வைத்த கீத்துவோ, ஜெர்மனியிலிருந்து வந்திருந்த கணவனின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிட விரும்பினாள்.

அதற்காகவே, வீட்டில் சிறியதொரு அனிச்சலை வாங்கி வைத்தவள், ஔகத்திற்கு மிகப்பிடித்த உணவுகளையும் சமைத்து வைத்திருந்தாள்.

பர்த்டேய் பையனோ, காலையில் கீத்து விழித்திடும் முன்னரே மனையிலிருந்து வெளியேறியிருந்தான். அதை அறிந்துக் கொண்ட மணவாட்டியோ, புருஷன் ஒருக்கால் மாமியார் வீட்டிற்கோ அல்லது ஆலயத்திற்கோ சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால், அவனோ மதியமாகியும் வீடு திரும்பிடவில்லை. பொஞ்சாதியோ போனை போட, அதுவோ வழக்கம் போல் செத்துக் கிடந்தது.

மாமியாருக்கு அழைத்தவளோ ஏதேதோ பேச, தெரிந்துக் கொண்டாள் கணவன் காலையிலேயே தாய் சுஜியை சந்தித்து கிளம்பி விட்டானென்று.

மனசு பதைக்க வேறு வழி தெரியாது, சுரஜேஷுக்கு அழைத்தாள் கீத்து. அவனோ ஜெர்மனியில் இருக்க, மேற்கொண்டு பேசாத டாக்டரின் பாரியாளோ, கொழுந்தனின் தொடர்பைத் துண்டித்தாள்.

மாலை மணி ஆறோ நள்ளிரவு இரண்டாகி போனது.

ஆசையாய் சமைத்து காத்திருந்த கீத்துவோ, பட்டினியாய் டிவியை வெறித்திருந்தாள் விரக்தியான மனதோடு.

விடியும் முன்னரே வெளியில் போயிருந்த ஔகத் அப்போதுதான் வீடு திரும்பினான். வந்தவன் சோபாவில் அமர்ந்திருந்த கீத்துவையும் பார்க்கவில்லை, டைனிங் டேபிளில் அவனுக்காக ஆயந்தியவள் காதலோடு சமைத்து வைத்த உணவுகளையும் நோக்கிடவில்லை.

குனிந்த தலை நிமிராது குடுகுடுவென மாடிப்படிகளில் ஏறியவனின் முகமோ வெளிறிக் கிடந்தது. முகமோ நரம்புகள் புடை சூழ சிவந்திருந்தது.

லோங் ஸ்லீவ் கூட அழுக்காய் இருந்தது. அவனைக் கண்ட கீத்துவின் மனதுக்கோ டாக்டருக்கு என்னானது என்றறியவே முந்தியது.

டாக்டரின் பின்னாலேயே போன கீத்து படுக்கையறை பஞ்சணையில் குப்பிற கிடந்தவனின் தலையை கோதி,

''ஔகத், என்னாச்சு?!''

என்று வினவ, அவளின் கரத்தை உதறித் தள்ளினான் டாக்டர் சிரத்தை சிலிர்ப்பி.

''ஔகத், என்ன இது?! எப்படி அடிப்பட்டிச்சு?!''

என்றவளோ காயங்கொண்டிருந்தவனின் நெற்றியோரத்தை கண்டு பதற,

''நீ என்னே ஒரு தடவெ கூட லவ் பண்ணலையா கீத்து?!''

என்ற சுரமற்ற கேள்வியோடு விருட்டென எழுந்தமர்ந்தான் ஔகத் மெத்தையிலிருந்து.

''இப்போ, அது ரொம்ப முக்கியம்! சதை எப்படி கிழிஞ்சிருக்கு பாரு! ஆமா, எப்படி அடிப்பட்டுச்சு?!''

என்றவளோ மருந்துக் கொண்ட பஞ்சோடு கணவனை நெருங்கி அவனருகில் வந்தமர்ந்தாள்.

''சொல்லு கீத்து, நீ என்னே ஒரு தடவெ கூட லவ் பண்ணலையா?!''

என்ற வெற்றுடல்காரனோ தலை திருப்பி சீமாட்டியவளை ஏறெடுக்க,

''என்னடா கேள்வி இது?! பைத்தியக்காரத்தனமா?!''

என்ற போலீஸ்காரியோ பஞ்சில் மருந்தை ஊற்றி கடுகடுக்க,

''என் கேள்விக்கு பதில் சொல்லு கீத்து!''

என்றவனோ அழுத்தமாய் மீண்டும் அவன் தேவையிலேயே வந்து நின்றான்.

''என்னடா பிரச்சனை உனக்கு?! ஏன் சும்மா லூசு மாதிரி ஏதேதோ கேட்டுக்கிட்டு இருக்கே?!''

என்றவளோ மஞ்சள் மருந்தைக் கொண்டு புண்ணை ஒற்றியெடுக்க,

''பதில் சொல்லு கீத்து?! நீ என்னே ஒரு தடவெ கூட லவ் பண்ணலையா?!

என்றவனோ வதூகையின் கையை தட்டிவிட்டு, அறையே அதிரும்படி அலறினான்.

புருஷனின் அதிரடியில் திகைத்து போன காந்தையோ, ஔகத்தையே வெறித்தாள் இமைக்காது.

''சொல்லு கீத்து?! பதில் சொல்லு! நீ என்னே ஒரு தடவெ கூட லவ் பண்ணது இல்லையா?!''

என்றவனின் சினங்கொண்ட குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க, அவனையே கண் சிமிட்டிடாது நோக்கினாள் கீத்து.

பேரழகனின் மரகத பச்சையிலான விழிகள் ரெண்டும் சிவந்து போய் கலங்கி நிற்க, குளமாகி போனவளின் நேத்திரங்கள் ரெண்டும் அணை உடைந்த வெள்ளமாய் பெருக்கெடுத்தது சத்தமின்றி.

''லவ் பண்ணாமத்தான் அந்த பதினெட்டு வயசுலே உன் ரூமுக்கு வந்தேனா?!''

என்ற பொஞ்சாதியோ, பட்டென தலையைக் கீழே குனித்துக் கொண்டாள். டாக்டரோ இம்மியும் அசையாது விருந்தனை அவளையே பார்த்திருந்தான்.

''நான் சொல்றதே கண்டிப்பா உங்களாலே நம்ப முடியாது. ஏன், என்னே தெரிஞ்ச யாருமே நம்ப மாட்டாங்க! ஆனா, இதான் நிஜம்! நீங்க என்ன லவ் பண்றத விட, கோடி மடங்கு அதிகமா நான் உங்களே லவ் பண்றேன்! பண்ணேன்! பண்ணுவேன்! பண்ணிக்கிட்டே இருப்பேன்!''

என்றவளோ முகத்தை மூடிக்கொண்டு கதறினாள். ஔகத்தோ காதல் இல்லத்தரசியவள் அழுவதை காண முடியாது தலையை திருப்பிக் கொண்டான், பளிங்குத் தரையை பார்த்தப்படி.

அந்த நேரத்திலும் அவனுக்கு ஜிவ்வென்றுதான் இருந்தது, கீத்து முதல் முறை அவனை விடாது லவ் பண்ணுவேன் என்று சொன்னதைக் கேட்டு.

''உன்னே பார்த்த உடனே நான் விழுந்துட்டேன் ஔகத்! ஆனா, நீ என்ன விட எல்லாத்துலையும் பெஸ்ட் (best)! அதுதான் என் பிரச்சனையே! அதைக்கூட நான் ஓரளவுக்கு சமாளிச்சிடலான்னு நினைச்சேன்! ஆனா, அது எல்லாத்தையும் தாண்டி உனக்கு கிடைச்ச ஸ்பெஷல் அட்டென்ஷன்தான் (special attention) நான் உன்னே வேணான்னு சொல்ல காரணமே!''

என்றவளோ மெத்தையின் விளிம்புகளை முஷ்டி மடக்கிய கரங்களால் குத்திட, அவள் பக்கம் திரும்பினான் ஔகத்.

''கேடி மகன் அப்படிங்கறே ஒரே காரணத்துக்காக எல்லாரும் உன்னே கொண்டாடுன விதம்தான் என்னே, உன்னே வெறுக்க வெச்சது ஔகத்!''

என்று கத்தியவளின் வார்த்தைகளில் உடைந்தது டாக்டரின் மனம். அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கணைகளை வீசிட தொடங்கினாள் கீத்து.

''ஏன், கேடி மகன்னா ரெண்டு கொம்பா?! உங்கப்பா மட்டும்தான் உசத்தியா?! எங்கப்பாலாம் ஒண்ணுமே இல்லையா?! என்னவோ உங்கப்பா மட்டுந்தான் தியாகி மாதிரியும் மத்தவங்க அப்பாலாம் வேஸ்ட்டுங்கற மாதிரியும்தானே நம்பலே சுத்தியிருந்த அத்தனை பேரும் பேசினாங்க!''

என்றவளோ சட்டென ஆர்ப்பரித்த கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்து சீறினாள்.

''எங்கம்மா கூடத்தான், எங்கப்பா செத்ததுக்கு அப்பறமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலே! எனக்காகவே வாழ்ந்தாங்க! ஏன், யாருமே அதைப் பத்தி பேசலே?! கேடி! கேடி! கேடி! அப்படி என்னே செஞ்சி கிழிச்சிட்டாரு உங்கப்பா?! உன்னையும் உங்கம்மாவையும் தனியா விட்டுட்டு போனது தவிர்த்து!''

என்றவளின் வார்த்தைகளில் இறுகியது டாக்டரின் முகம்.

''இந்த தடவெ நீ என்னே அடிச்சாலும் பரவாலே! ஆனா, சத்தியமாய் சொல்றேன் ஔகத், உங்கப்பா மாதிரி ஒரு சுயநலவாதிய நான் பார்த்ததே இல்லே! பிரிஞ்சி போய் தூரமா உட்கார்ந்துக்கிட்டு, குடும்பத்தோட தேவையை வெறும் பணத்தாலே மட்டுமே தீர்த்து வைக்கிறத்துக்கு பேரு அப்பா இல்லே! பொண்டாட்டி புள்ளே பக்கத்துலே இருக்கணும்! சும்மா கடமைக்கு வேண்டியதே செஞ்சிட்டா எல்லாம் முடிஞ்சதா?! ஆனா, அப்படிப்பட்ட அவரத்தான் எல்லாரும் தலையிலே தூக்கி வெச்சி கொண்டாடுனாங்க! அதுதான் எனக்கு சுத்தமா புடிக்கலே!''

படபட பட்டாசாய் வெடித்து தள்ளினாள் கீத்து. முதல் முறை வேட்டாள் அவள் மாமனாரை கிழித்தெடுக்க, மகனோ ஆமோதிப்பவனாய் மௌனம் கொண்டான் காரணம் அதில் நியாயம் இருக்க.

''இல்லே நான் தெரியாமத்தான் கேட்கறேன்?! அந்த வயசுலே என்னடா நீ பெருசா நான் பெருசா?! ஔகத் இத்தனை ஏ (A) வாங்கிட்டான்! இவ்ளோ மார்க்ஸ் (marks) வாங்கிட்டான்! ஏன், நீ மட்டும்தான் நல்லா படிப்பியா?! நான்லாம் படிக்க மாட்டேனா?!''

என்றவளோ மூக்கை சிந்திப் போட்டாள், திசு பேப்பரில்.

ஒன்று மட்டும் புரிந்தது ஔகத்திற்கு, நாச்சியவள் கணக்கு வழக்கில்லாமல் மனதிலிருக்கும் அத்தனையையும் கொட்டுகிறாள் என்று.

''அதுவும் நீ வந்துட்டா போதும்! மொத்த கூட்டமும் உன் புராணம் மட்டுந்தான் பாடும்! சின்ன வயசுலையே வெளிநாட்டுக்கு போய் தனியொருத்தியாய் தங்கி ஸ்போர்ட்ஸ்லையும் (sports) ஸ்டடிஸ்லையும் (studies) ஈக்குவலா (equal) எச்சீவ் (achieve) பண்ண என்னே பத்தி பேச ஒரு நாதி இல்லே! ஆனா, ஔகத் ஒரு டியூன் (tune) வாசிச்சிட்டா போதும்! ஆஹ் ஹா, ஓஹ் ஹோங்கறது! அப்போ என்னோட வின்னிங்லாம் (winning) புரோஜனமே இல்லாத ஒன்னு, அப்படித்தானே?!''

என்றவளோ பஞ்சனையிலிருந்து எழும்பி ட்ரஸிங் டேபிள் நோக்கினாள்.

''அதுவும் நான் ஸ்டேட் லெவல்லே (state level) கப் அடிச்சிட்டு வந்தா, அங்க எல்லாரும் என்னோட விக்டரிய (victory) கொண்டாடறதே விட்டுட்டு, நீ முதல் தடவே ரெட் வெல்வட் கேக் (red velvet cake) செஞ்சிட்டன்னு உன்னே செலிப்ரேட் (celebrate) பண்ணாங்க பாரு! எப்படி இருந்தது தெரியுமா எனக்கு?! சாணியே அள்ளி முகத்துலே பூசிக்கிட்ட மாதிரி இருந்தது! தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நான்லாம் உன்னைத் தாண்டி வரவே முடியாதுன்னு தோணுச்சு!''

என்றவளோ தரையை பார்த்து ஆக்ரோஷமாய் பேச, வல்லபியவளை இழுத்து அவளின் அம்பகங்களை நேருக்கு நேராய் நோக்கினான் ஔகத்.

இந்தளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டவள் எப்படி அவனை விரும்பிட முடியும் என்று சுத்தமாய் புரியவில்லை ஔகத்திற்கு.

''எங்க உன்னே கல்யாணம் பண்ணா, நான் தொலைஞ்சு போயிடுவேனோன்னு பயம் வந்திடுச்சு ஔகத்! ஏன்னா, நான் என்னதான் பெருசா சாதிச்சிருந்தாலும், உன் பக்கத்துலே நான் ஒன்னுமே இல்லங்கறே மாதிரியான நிலைதான் எனக்கு!''

என்றவளின் விசும்பலில் காரிகையின் முழங்கையைப் பற்றியிருந்தவன் மெதுவாய் அவனின் பிடியைத் தளர்த்தினான்.

''அன்பு ரொம்ப பயங்கரமானது ஔகத்! எந்தளவுக்கு அழகானதோ அதை விட பல மடங்கு மோசமானது! பலமானவங்களே கூட சொடக்கு போடற கணத்துலே பலவீனமாக்கிடும்!''

என்றவளோ ஔகத்தின் முகத்தை இருக்கரங்களால் பற்றினாள்.

''நான் உன்னே பைத்தியம் மாதிரி லவ் பண்ணேன் ஔகத்! உன்னோட சின்ன சலிப்பை கூட என்னாலே தாங்கிக்க முடியாது! அதுக்கு கூட நான் இடங்கொடுக்க கூடாதுன்னு நினைச்சேன்! நீ சிரிச்சா எனக்கு அவ்ளோ புடிக்கும் ஔகத்! ஆனா, அந்த சிரிப்பு நான் வெண்ணிலா ஐஸ்க்ரீம் கேட்டா, காணாமே போயிடும்! ஆனா, உனக்கு புடிச்ச சாக்லேட் ஐஸ்க்ரீமுக்கு நான் ஓகே சொன்னா உன் முகத்துலே அப்படி ஒரு சந்தோஷத்த பார்க்க முடியும்! அப்போ, உன்னே பித்து புடிச்ச மாதிரி லவ் பண்றே நான் என்னே பண்ணுவேன் ஔகத்?! என்ன பண்ணே முடியும் என்னாலே?! உன்னே சிரிக்க வெச்சு பார்க்கறதே விட, வேறென்ன நிம்மதி எனக்கு இருந்திட போகுது?!''

என்றவளோ அவன் வதனத்திலிருந்து கரங்களை கீழிறக்கியப்படி குனிந்த தலையோடு குலுங்கி அழ, ஔகத்தோ அவளை சமாதானம் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருந்தான்.

''வெளியிலிருந்து பார்க்க இது ரொம்ப சின்ன விஷயமான தெரியும் ஔகத். ஏன், இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு உனக்கே கேட்க தோணும். ஆனா, என் இடத்துலே நின்னு பார்த்தாதான் அதோட வலி புரியும்! எனக்கானது எல்லாம் நமக்கானதா மாறுறதுதான் வாழ்கை. ஆனா, இங்கே எனக்கானதுன்னு எதுவுமே இல்லே, எல்லாம் உனக்கானதுதான்! ஏன்னா, நான் என்னே தொலைச்சுதான் உன்கூட வாழ வேண்டிய சூழ்நிலை!''

என்றவளின் வாக்கியங்களில் ஔகத்தின் விழிகளிலோ கண்ணீர் ததும்பி வழிந்தோடியது நாசியை தாண்டி.

''எப்போ இப்படியான ஒரு இன்செக்கியூரிட்டியே (insecurity) நான் உன்கிட்டே உணர ஆரம்பிச்சேனோ, அப்போவே முடிவு பண்ணிட்டேன் ஔகத், என்னாலே இப்படியெல்லாம் என்னோட இண்டுவிஜுவாலாட்டி (individuality) விட்டுக்கொடுத்திட்டு உன்னோட வாழ முடியாதுன்னு! ஆனா, அதே சமயம் என்னாலே உன்னே மறக்கவும் முடியலே! அதனாலதான், நீயே என்னே வெறுக்கறே மாதிரி நடந்துக்கிட்டேன்! அப்போவாவது நீ என்னே விட்டுட்டு போவன்னு!''

என்றவளோ மூக்கு சளி ஒழுக ஒப்பாரிக் கொண்டாள் ஔகத்தின் புறங்கையிலேயே முகம் புதைத்து மெத்தையில் சரிந்தாற்படி.

''சோரி ஔகத்! உனக்கு எப்படி வலிச்சிருக்கும்னு எனக்கு தெரியும்! ஏன்னா, எனக்குமே ரொம்ப வலிச்சது! நான் நினைச்சே மாதிரியே நீ வெளிநாட்டுக்கு போயிட்டே! ஆனா, நான் இங்க உன்னே மறக்க முடியாமே தினம் தினம் செத்து பிழைச்சேன்! கல்யாணம் வேணாம் சொன்னேன்! ஒண்டியா வாழ்ந்து செத்திடலான்னு நினைச்சேன்!''

என்றவளோ அவன் நெஞ்சில் குழந்தையாய் துஞ்சி கதறினாள்.

''காதல் என்னே கொஞ்சங்கொஞ்சமா கொல்லே, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன்கிட்டையே ஓடி வந்திட நினைச்சேன் ஔகத்! ஆனா, அந்த நேரத்துலதான் எனக்கு ப்ரோமோஷன் (promotion) கிடைச்சது.''

என்றவளோ கண்களை மூடியப்படி விசும்பித் தொடர்ந்தாள்.

''திரும்பவும் இனம் புரியாத ஒரு பயம் ஔகத், எங்கே உன் பக்கத்துலே நிக்கும் போது இன்ஸ்பெக்டர் கிருத்திகான்றே அடையாளம் காணாமே போய், டாக்டர் ஔகத்தோட வைஃப் கிருத்திகாவா நிலைச்சிடுமோன்னு! அதை என்னாலே ஜீரணிச்சிக்கவே முடியலே ஔகத்! மறுபடியும், எண்ணத்தே மாத்திக்கிட்டு சிஜனே கட்டிக்க ரெடியானேன்! அப்படியாவது உன்னே மறந்து தொலைக்கலான்னுதான்! ஆனா, முடியலே ஔகத்! என்னாலே முடியலே!''

என்றவளோ சத்தம் போட்டு கதறி, மேலெழும்பி கணவனின் மரகத வண்ண விழிகளை நோக்கினாள்.

''ஆனா, உண்மையே ரொம்ப நாள் ஒளிச்சு வைக்க முடியலே ஔகத்! எப்போ உன்னே படாஸா அந்த காட்டுலே பார்த்தேனோ, என்னே அறியாமே உன் நெருக்கத்துலே..''

என்றவளோ அப்படியே நிறுத்தி கலங்கியிருந்தவன் மிழிகளை நோக்கிட, அதுவோ மயூர வர்ண நிறத்திற்கு மாறியது.

''என்னோட முதல் காதல், முதல் முத்தம், என்னோட அத்தனை முதலும் நீ ஒருத்தன்தான் ஔகத்!''

என்றவளோ வீங்கிய முகத்தில் கண்ணீர் தாரை தாரையாய் ஊற்ற அவனிதழில் தாரத்தின் நுதலை பதித்தாள்.

''அந்த முத்தம் சொன்னது ஔகத் எனக்கு, யூ ஆர் தி ஒன்லி ஒன் (you are the only one), நத்திங் செஞ்ன்னு (nothing changed)! என்னோட லவ், நீ இல்லே ஔகத்! என் லைஃப்வே (life) நீதான்! நீ இல்லாமே நான் இல்லே ஔகத்!''

என்றவளோ ஔகத்தின் இதழ்களை விரல்களால் வருடினாள்.

ஏந்திழை அவளை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டான் ஔகத் இறுக்கமாய், அவனுக்கான நாள் அதிகமில்லை என்றுணர்ந்து.

நிமிடங்கள் கடக்க, மெதுவாய் அவளை விலக்கி எழுந்துக் கொண்டான் ஔகத் மெத்தையிலிருந்து.

பேண்டை கழட்டி டவலுக்கு மாறியவன், குளியலறை நோக்கி அதன் சுவர்களில் கரம் பதித்து நின்றவனாய்,

''நாமே டிவோர்ஸ் பண்ணிக்கலாம் கீத்து.''

என்றுச் சொல்ல, பஞ்சணையில் கிடந்த சுந்தரியோ விடுக்கென்று எழுந்தாள் பேயறைந்தவள் கணக்காய்.

''சோரி! தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னே ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் கீத்து! என்னே லவ் பண்ணி, இப்போ கல்யாணம் பண்ணி நீ எவ்ளோ வேதனையான வாழ்க்கையே வாழ்ந்துக்கிட்டு இருக்கன்றதே நீ சொல்லிதான் எனக்கு புரியுது!''

''முட்டாளாடா நீ?! இதுக்காகவா மனசிலிருந்த அத்தனையையும் கொட்டினே?!''

''இங்கப்பாரு கீத்து, உன்னோட ப்ரைவசியான வாழ்க்கைக்கு நான் மரியாதை தர நினைக்கறேன்! இதுக்கு மேலே எனக்காகவோ என் மேலே வெச்ச காதலுக்காகவோ நீ எதுவும் பண்ண வேண்டாம்! நீ, நீயா வாழலாம்! நிம்மதியா, சந்தோஷமா, குறிப்பா உன்னோட ஒரிஜினாலிட்டியே இழக்காமே!''

என்றவன் குளியலறைக்குள் நுழைய போக, அவன் கையை பற்றி இழுத்து நிறுத்தினாள் கீத்து.

''பிளீஸ் கீத்து, நான் எந்த சமாதானத்துக்கும் தயாரா இல்லே! நாமே டிவோர்ஸ் பண்றோம் அவ்ளோதான்!''

என்றவன் முறுக்கிக் கொண்டே நிற்க, அவன் கரத்தை இழுத்து அருகிலிருந்த கேபினெட்டின் மீது பதித்தவளோ, ஆணவனின் உள்ளங்கையில் கிட் ஒன்றை வைத்து நகர்ந்தாள் அங்கிருந்து.

எரிச்சலோடு திரும்பி கையை பார்த்த ஔகத்தின் திட்டிகளோ ஆனந்தத்தில் கூத்தாடின. ப்ரெக்னென்சி கிட்டிலிருந்த இருகோடுகள் அவனை கண் கலங்க வைத்தன.

உள்ளங்கையை கிட்டோடு மடக்கி நெற்றியில் முட்டிக்கொண்டவன், கேபினெட்டின் மீதிருந்த சின்னஞ்சிறு பிறந்தநாள் அட்டையில், 'ஹேப்பி பர்த்டேய் டேடி' என்று எழுதியிருப்பதைக் கண்டான்.

உதடுகளை மடக்கிக் கொண்டவன் அவ்வாழ்த்து அட்டைக்கு கீழிருந்த மருத்துவ அறிக்கைகளை எடுத்து புரட்டிட, திருமதி உண்டாகி இதோடு நான்கு மாதங்கள் என்று தெரிய வந்தது.

சில நிமிடங்கள் நயனங்களை மூடி அமைதியாக மூளையையும் மனதையும் ஒருநிலைப்படுத்தினான் ஔகத்.

சற்று முன் நடந்திருந்த அத்தனையையும் மறந்து இனி எக்காரணம் கீத்துவை விட்டு விலகியிருக்கக்கூடாது என்று முடிவெடுத்தான் கணவனவன்.

சில்லாய் சிதறிய மனதோடு வீடு திரும்பியவன் நெஞ்சை மேலும் வார்த்தைகளால் குத்தி கிழித்த வதூவோ, அறிந்திருக்கவில்லை அவன் முட்டி மோதிவிட்டு வந்திருப்பது படாஸோடு என்று.

ஆண்களின் வீழ்ச்சிக்கு காரணம் மூன்றே விடயங்கள்தான். பொன், பெண் மற்றும் மண்.

படாஸ் மற்றும் ஔகத் இருவருக்கும் மண் மற்றும் பொன்னில் பெரிதாய் நாட்டமில்லை. ஆனால், இருவரும் ஒருசேர அடைய துடித்தது என்னவோ கிருத்திகா என்ற ஒருத்தியை மட்டுமே.

கீத்து ஒன்றும் பேரழகியெல்லாம் இல்லை. இருந்தும், அவர்களுக்கு அவள் உலக அழகியை மிஞ்சிய பதுமையே. அப்படியிருக்க கீத்து யாருக்கு என்ற வாக்குவாதத்தில் டாக்டரை வார்த்தைகளால் தாக்கியிருந்தான் படாஸ்.

என்னதான் ஔகத் பணம் மற்றும் புகழ் கொண்ட ஒருவனாக இருந்தாலும், அவன் எப்போதுமே அன்புக்கு அடிமை.

தேவையான பாசம் அவனுக்கு கிடைக்க வேண்டிய உயிர்களிடமிருந்து கிடைத்திடாத போதும் தவறான பாதைக்கு போகாது வாழ்க்கையை நல்லபடியாக செம்மைப்படுத்திக் கொண்டவன்.

அப்படியானவனை குற்ற உணர்ச்சியில் புழுங்கி சாகும்படி வருத்தி எடுத்தியிருந்தான் படாஸ்.

பேச்சு வார்த்தை இறுதியில் அடிப்பிடி சண்டையாகிய போனது. இருவரும் கட்டி புரண்டு வம்பை வளர்த்தனர் கிருத்திகா என்ற ஒருத்திக்காக.

''கீத்து விரும்பறது இந்த படாசே, ஔகத்தே இல்லே!''

என்று ஆக்ரோஷமாய் அவனறிந்த உண்மையை உரைத்தான் படாஸ், ஔகத்தின் மேலிருந்தப்படி டாக்டரின் கழுத்தை நெறித்து.

''நீ ஜஸ்ட் பாசிங் க்ளவ்ட்ஸ் (just passing clouds) ரேவ்! ஆறுதலுக்கு தோள் கொடுத்து ஏமாந்த முட்டாள்!''

என்ற டாக்டரோ விஷமாய் வார்த்தைகளை துப்பினான்.

''கிருத்தியே நெருங்கி பாரு யார் முட்டாள்னு தெரியும்!''

என்ற படாஸோ சொல்லாமல் சொன்னான், சுந்தரியின் வாய் நித்தமும் ரேவ் அவன் பெயரையே உச்சரிப்பதை டாக்டரின் முகம் நெருங்கி அவன் நாசி ஒட்டி அழுத்தமாய்.

''உன்னாலே கீத்து மனசுலே என் இடத்தை பிடிக்கவே முடியாது படாஸ்!''

என்ற ஔகத்தோ அவன் கந்தரத்தை இறுக்கியிருந்த படாஸின் கையை பலங்கொண்டு தகர்த்தி அவனை கீழே விழ வைத்தான்.

''டேய், கிருத்தி உன்னே கல்யாணம் பண்ணதே நீ படாஸ்னு நினைச்சுதான்! இந்த உண்மை மட்டும் அவளுக்கு தெரிஞ்சா, உன்னே எக்காலத்துக்கும் மன்னிக்கவே மாட்டா!''

என்ற படாஸோ அவன் டி - ஷர்டை கழட்டி போட்டு அழைத்தான் ஔகத்தை சைகையால் தலையை ஆட்டி சண்டைக்கு.

''கீத்து மனசுல இருக்கறது, இருந்தது, எப்போதுமே இருக்க போறதும் இந்த ஔகத், நான் ஒருவன் மட்டும்தான்!''

என்ற டாக்டரோ, அவனும் சளைத்தவன் இல்லை என்ற ஆதாரத்தை அச்சாரமாய் பதித்தான் படாஸின் முகத்தில் பல குத்துகளை வைத்து.

''நீ என்ன சொன்னாலும், கிருத்தி மனசுலே இந்த படாஸ்தான்! அதான், உன்கூட படுக்கும் போது கூட என் பேரே சொல்றாடா!''

என்ற படாஸோ எதை சொல்லக் கூடாதோ, அதில் வந்து நிற்க,

''ரேவ்!''

என்றலறிய ஔகத்தோ கேபினெட்டின் பக்கமாய் நின்றிருந்த படாசை கதங்கொண்டு விலாசிட ஆரம்பித்தான்.

''உண்மையே சொன்னா கோவம் வருதா?! வலிக்குதா?! அப்போ எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் என் கிருத்தியே நீ கட்டிக்கிட்டப்போ!''

என்ற படாஸோ இழுத்து போட்டு டாக்டரை பொளக்க,

''வேண்டாம் ரேவ்! போதும்! என்னே கோபப்படுத்தாதே!''

என்ற ஔகத்தின் விழிகளோ மரகத பச்சையாய் மாறி போயின.

''என்னே நீ ரொம்பவே காயப்படுத்திட்டே ஔகத்! அதுக்கான தண்டனையே நீ அனுபவிச்சுதான் ஆகணும்! மன்னிக்க நான் சிவனில்லே! எமன்!''

என்ற படாஸோ, ஔகத்தின் நெற்றியோரத்தில் அவன் கோர பல் கொண்டு கீறல் போட, அவனை எட்டி உதைத்து விலகிய டாக்டரோ, அவனின் வன்மத்தை அறையை தும்சம் செய்து வெளிப்படுத்தினான்.

''யாருக்குமே நீ வேணா ஔகத்! எல்லாருக்குமே இந்த படாஸ்தான் தேவை! சுரஜேஷ் மாதிரி கோடி பேர் உருவாகின அவுங்க அத்தனை பேருக்கும் நிவாரணி இந்த படாஸ்தான்! நான் இல்லாமே அந்த ஹைபிரிட் மிருகங்களுக்கு மருந்தில்லே! உன்னாலே போக முடியுமா கைலாய மலைக்கு?!''

என்ற ரேவ்வோ மூச்சிரைக்க தரையில் படுத்தப்படியே நக்கல் தொனி கொள்ள, ஆணவனின் உடலுக்குள்ளோ வேதியல் மாற்றங்கள் உருவாகி மூக்கு மற்றும் செவிகளிலிருந்து சோணத்தை கக்கியது.

''நீ பொறந்தே, உன்னோட தரிச்சவன் செத்தான்! அப்பா, அம்மாவே விட்டுட்டு போனாரு! அம்மா, பைத்தியம் ஆனாங்க! கிருத்தி கூட உன்னே தூக்கி எரிஞ்சிட்டுத்தான் போனா!''

''ரேவ் நிறுத்து!''

அலறினான் ஔகத் முகமெல்லாம் சிவந்து போக.

''சுரஜேஷ் கொடூரமான மிருகமா மாற காரணம் யாரு?! நீ! ஏமாளி நீ கண்டவனையும் நம்பி பிரெண்ட்ஷிப் வெச்சிக்கிட்டதாலே சின்னவன் நரக வாழ்க்கை வாழறான்! கிருத்தி வேணான்னு சொல்லிட்டா, அவ்ளோதான்! திரும்பி வந்து அவளே எப்படியாவது லவ் பண்ண வெச்சியா நீ?! இல்லே! ஆனா, எல்லாத்தையும் பண்ணே என் முதுகுலையே குத்தி என் கிருத்தியே என்கிட்டருந்து ஆட்டைய போட்டு அவகூட குடும்பம் நடத்துறே! அசிங்கமா இல்லே?!''

என்று படாஸ் அவன் தரப்பு விவாதங்களை முன் வைக்க,

''ரேவ்! ''

என்றலறிய ஔகத்தோ ஓங்கி ஒன்று வைத்தான் ஒரே பாய்ச்சலில் அவனை நோக்கி வந்த வேகத்தில்.

சுருண்டு போய் விழுந்த படாஸோ, அதே வேகத்தில் மேலெழும்பி நின்றான்.

''நீ செத்தா கூட அழ ஆளில்லே ஔகத்! நீ கீத்து, கீத்துன்னு உருகறே உன் கிருத்திகா கூட வேண்டறது இந்த படாஸதான்! வருங்கால மெடிக்கல் உலகத்துக்கும் புது டெக்னோலஜிக்கும் தேவை இந்த படாஸ் மட்டுந்தான்! கெட்டவங்களே கொன்னு குவிக்க அவசியம் இந்த படாஸ்! ஆனா, நீ!"

என்று நிறுத்தி ஆள்காட்டி விரலால் டாக்டரை சுட்டிக் காட்டிய படாஸ்,

"யாருக்குமே பயன்படாத நீ உயிரோட இருக்கறதே வேஸ்ட்!''

என்று சொல்ல அவனை கொலை காண்டில் முறைதான் ஔகத்.

''இப்படி பார்க்கறதாலே நான் சொன்னதெல்லாம் பொய்யாகிடாது ஔகத்! அதுவும், கிருத்தியே அடிச்சியே ஞாபகம் இருக்கா, உன்னோட பிறப்பே தப்பா பேசிட்டான்னு, இப்போ நீயே அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கே! மறந்துடாதே!''

என்ற படாஸின் வார்த்தைகளில் மரித்து போனது ஔகத்தின் இதயம்.

அதற்கு மேலும் அங்கிருப்பது சரி வராது என்றுணர்ந்துக் கொண்டவன், தொங்கிய தலையோடு கேடியின் ஆழ்கடல் மனையிலிருந்து வெளியேறியவனாய் நேராய் வீடு வந்துச் சேர்ந்திருந்தான்.

மனம் அலையாய் கொந்தளித்தது ஔகத்திற்கு. படாஸ் சொல்வது உண்மைத்தானோ என்று உள்ளம் வெம்பியது.

நிஜமாகவேஅனைவருக்கும் ரேவ்வால் தானே பலன். ஔகத்தால் இம்மி அளவும் புரோஜனம் இல்லையே என்று மிடல் கொண்டது.

டாக்டரவன் வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லையென்று தோன்றியது அவனுக்கு.

போதாக்குறைக்கு கீத்து வேறு நொந்துப்போய் வந்திருந்தவனை மேலும் நோகடித்தாள் கண்டதையும் பேசி.

அதுவும் பேடையவள் காதலால் பட்ட துன்பங்களை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரில், வக்கிரங்களை வஞ்சனையின்றி அள்ளித் தொளிக்க, அவனொருத்தனே ஆயந்தியின் ஆளன் என்ற ஆனந்தத்தில் டாக்டர் கொஞ்சமேனும் நிம்மதி கொண்டிருந்தான் பொஞ்சாதியின் குமுறல்களில்.

இருப்பினும், கடைசியில் மொத்தமாய் மண்ணள்ளி போட்டாள் சீமாட்டியவள், எவனால் ஔகத் கூனிக் குறுகி தாழ்த்தப்பட்டு கேவலமாய் சீண்டப்பட்டானோ அதே படாஸின் பெயரைச் சொல்லி உயிரோடு டாக்டரை பாடையில் ஏற்றி.

அந்நொடியே அழைத்தான் பேரழகனவன் லேட்டாக வரப்போகும் சாவை இன்றே வாவென்று.

ஆனால், இப்போதோ அகமுடையாளவள் கர்ப்பம் என்று தெரிந்த பின்னாடி, அர்த்தமற்ற வாழ்வை வாழும் வரையிலாவது வாழ்க்கைத்துணை அவளுக்காக உருப்படியாக வாழ்ந்திட முடிவெடுத்தான் டாக்டர்.

அதே வேளையில் அவன் உள்ளமோ, எப்படியாவது அவன் மரணத்தை தடுத்து நிறுத்திட வழித்தேடிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டது.

அது வரையிலும் மீண்டும் பழையப்படி கீத்துவோடு காதல் கொண்டு அவளின் நெஞ்சத்தை குளிர வைத்திட உறுதிக் கொண்டான் ஔகத்.

படாஸை தோற்கடித்தே ஆகவேண்டும் டாக்டர். கீத்துவிற்காக மட்டுமல்ல வரப்போகும் குட்டிக்காகவும்தான்.

விரல்களால் முகத்தை மேலிருந்து கீழ் நோக்கி தேய்த்திறக்கியவன் நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டான்.

நெட்டி முறித்தவன் இருக்கின்ற கொஞ்ச காலத்தில் அவன் உயிரை சுமக்கும் கீத்துவை ஒரு குறையுமின்றி பார்த்துக் கொள்ள மைண்டை செட் செய்தான்.

காதிலோ ஷவர் சத்தம் கேட்க, மேடம் குளியல் அறைக்குள் இருப்பதை புரிந்துக் கொண்டான் ஔகத்.

''கீத்து, கதவே திற.''

என்றவன் முதலிலிருந்து தொனியிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டவனாய் குரலெழுப்ப,

''ஏன்?!

என்றவளோ புரியாத வினவளே கொண்டாள்.

''ஹான், மன்னிப்பு கேட்கணும்.''

''ஓஹ்!''

என்ற நங்கைக்கோ சந்தேகமே புருஷனின் திடீர் கரிசணையில்,

''என்ன ஓஹ்?! கதவே திற!''

என்ற டாக்டரோ கதவில் தாளம் போட,

''மன்னிப்புதானே?! சரி, மன்னிச்சிட்டேன்! கிளம்புங்க!''

என்ற போலீஸ்காரியோ ஷவரில் கூந்தலை நனைக்க,

''ஐயோ கீத்து! என்ன இப்படி பொசுக்கின்னு மன்னிச்சிட்டே?! செல்லாது! செல்லாது! பிளீஸ் கதவே திற! நான் உன் கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்! அப்போதான் இந்த ஆத்மா சாந்தியடையும்!''

என்றவனோ நமட்டு சிரிப்பு சிரிக்க வெளியில் இருந்தப்படி ,

''ஆஹ் ஹான்! அப்போ சரி!''

என்றவளோ குளியலறை கதவை பாதியாய் திறந்து ஒரு காலை மட்டும் வெளியில் நீட்ட,

''என்னடி, ஒரு பேச்சுக்கு சொன்னா, காலே நீட்டறே?!''

என்றவனின் வாய் மட்டும்தான் வார்த்தைகளை உதிர்த்தது. ஆனால், உள்ளுக்குள்ளோ அம்மணியின் மெட்டிக்கொண்ட ஈரக்காலை கண்டவுடன் குதிரை கனைத்திடாமல் இல்லை.

''ஆமாவா?! சரி!''

என்ற தளிரியளோ காற்சங்கிலி கொண்ட பாதத்தை மீண்டும் குளியலறைக்குள்ளே இழுத்துக்கொள்ள,

''ஏய்! ஏய்! ஒரு கால்லே எப்படிடி சோரி கேட்க முடியும்?! ரெண்டு காலையும் காட்டு! அப்போதானே நான் விழுந்து கும்பிட சரியா இருக்கும்!''

என்றவனோ கிண்டலோடு புருவம் குறுக்கி தகர்த்தான் வல்வியவள் சாத்திட போன கதவை.

''உங்க மன்னிப்பே எனக்கு வேணாம்!''

என்ற கோபக்காரியோ அவன் முகத்தைப் பார்த்திடாமலே கதவை பலங்கொண்டு இழுத்து சாத்தினாள் படாரென்று.

''ஏய், கீத்து! கதவே திற! பிளீஸ்! சரி, அப்போ காலெல்லாம் வேணா! கையாவது கொடு! காலா நினைச்சு மன்னிப்பு கேட்டுக்கறேன்!''

என்றவனோ மீண்டும் வேடிக்கை கொள்ள,

''ஹ்ம்ம்!''

என்ற வதூவோ கையை மட்டும் கொஞ்சமாய் வெளியில் நீட்டினாள். இதான் சாக்கென்று வேட்டாளின் ஈரமான கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்ட ஔகத்தோ அவளை அவன் நோக்கி இழுத்த வண்ணம் டக்கென நுழைந்தான் குளியலறைக்குள்.

''ஏய்! கொன்னுடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கா வெளியே போயிடுங்க!''

என்ற விறலியோ கூச்சல் கொள்ள,

''மாட்டேன்! மாட்டேன்! மாட்டேன்!''

என்ற டாக்டரோ சில்மிஷ முறுவலோடு குளியலறைக்குள்ளேயே வட்டமடித்தான் இடை இறுக்கிய டவலோடு.

''போங்கன்னு சொல்றேன்லே! போங்க! கிளம்புங்க!''

என்ற மதங்கியோ விடாது அவனை பிடித்து வெளியில் தள்ள முயற்சிக்க, ஆணவனோ வல்லபியவளை பக்கென கட்டியணைத்துக் கொண்டான் பின்னாலிருந்து.

''ஏய்! என்னது இது?! விடுங்க! விடுங்க என்னே!''

என்ற யுவதியோ திமிறி துள்ளினாள் ஷவருக்கு கீழே நின்றவாறு.

''சூச்சூவா சூச்சூவா சூச்சூவா வாவா! சூச்சூவா சூச்சூவா சூச்சூவா வாவா!''

என்றுப் பாடியவனோ தலைமகளின் வயிற்றை விரல்களால் மென்மையாய் வருட, சுடுநீரின் கதகதப்பையும் தாண்டிய இதத்தை கணவனின் உள்ளங்கைகளில் உணர்ந்தவளோ,

''என்ன பாட்டிது?!''

என்றாள் அவளறியாது சத்தமாய் சிரித்து,

''பேபி ரைம்ஸ், பேபி!''

என்றவனும் சிரித்துக் கொண்டே சொல்ல,

''ரொம்பத்தான்!''

என்ற கற்பாளோ அவன் குமட்டில் செல்லமாய் குத்தினாள், அரிவையவள் திரும்பிய வேகத்தில் தெரியிழையின் சிகை அவன் முகத்தில் ஒட்டிக்கொள்ள.

''இப்போதான் உன் மூஞ்சியே பார்க்கவே சகிக்குது! இதே மாதிரி சிரிச்சிக்கிட்டே இரு!''

என்ற டாக்டரோ பொஞ்சாதியின் தோள்களில் கரங்களை மாலையாய் கோர்த்து அவளை அருகே இழுத்துக்கொள்ள,

''இந்த முகஸ்துதியெல்லாம் ஒன்னும் தேவையில்லே! முதல்லே என்னே சொன்னே, டிவோர்ஸ் பண்ணிக்கலாமா?! டிவோர்ஸ்!''

என்ற பனிமலரோ நுதலொட்டி நின்றவாக்கில், புருஷனின் கன்னத்தில் ஒட்டிக்கிடந்த ஒண்டொடியின் குழலை விரல்களால் மெதுவாய் கீழிறக்கி கடியொன்று வைத்தாள் நறுக்கென்று.

''ஆர்ர்ர்ர்! கடிக்காதடி! நான்தான் பாவம் தெரியுமா?! உனக்கு எவ்ளோ காண்டு என் மேலே!''

என்றவனோ வலியை கூட மெல்லிய குறுஞ்சிரிப்போடு வெளிப்படுத்தினான் சுடுநீரோ அவனை மேலும் கனலாக்க.

''அதைவிட லவ் அதிகம்!''

என்ற கீத்துவோ ரகசிய தொனியில் அவன் காது கடிக்க, இருவருக்குள்ளும் வழிந்திறங்கிய நீரோ தேங்கி நின்றது, ஔகத்தின் மார்பும், மலரவளின் குவியலும் ஒட்டிக்கிடந்த வழித்தடத்தில்.

''ஹுஹும்?!''

என்ற டாக்டரின் கரமோ காந்தாரியின் மேனியில் கண்ட இடம் ஊற, தகித்தவளின் தேகமோ டிகிரி காஃபியாய் சூடேறிப்போனது, சுடுநீர் பட்ட இடமெல்லாம் ஆளனின் கைப்பட.

விடுக்கென்று அவனை பின்னோக்கி தள்ளியவள், முன்னோக்கி சென்று ஷவரில் நின்றாள் முகத்தில் நீர் படர.

மூன்று வாரங்களுக்கு பிறகு தன்னவளை பிறந்தக்கோலத்தில் காண, கை பரபரத்தது ஔகத்திற்கு அவளை சொந்தமாக்கிக்கொள்ள.

கீத்துவோ கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சிலையாய் நின்றாள் ஷவர் கொட்டிய நீசகத்தில்.

குடும்பினியை நெருங்கியவனோ சில்மிஷங்களை தொடங்க, அதை ரசித்த மௌனியோ பளிங்கு சுவற்றில் கரங்கள் பதித்தாள்.

இல்லாளின் இடை வளைத்த ஔகத்தோ, ஈனசுரத்திற்கான முயற்சியை உருவாக்க,

''டேய்! வேணா! விடு! கையே எடு!''

என்றவளின் உணர்ச்சிகளோ மெய்யாலுமே ஏங்கி கிடந்தன அழகனின் ரோலர் கோஸ்ட்டர் அதிர்வுகளை எதிர்பார்த்து.

''வைக்காமே இருக்கவா உள்ளே வந்தேன்!''

என்றவனோ நீரில் நனைந்து கவர்ச்சியெழுப்பிய பொஞ்சாதியின் பின்னழகெல்லாம் நசுங்க இழுத்தணைத்துக் கொண்டான்.

ஔகத்தின் தலையில் கொட்டிய நீரோ, அவன் உச்சிக்குழல் கடந்து கீத்துவின் திம்மென்ற நெஞ்சில் சூடாய் தரையிறங்கியது.

''ஔகத்!''

என்றவளோ சிணுங்கினாள் கழுத்தோரம் புதைந்த கணவனின் ஈரத்தலை தந்த கிளர்ச்சியில்.

''வெக்கத்துக்கே வெக்கம் வரும்

உன் மேனி முழு பௌர்ணமி!''

என்றவன் பாட, அவ்வரிகளில் டாக்டரின் டவலை இறுக்கியவளின் கண்களோ கலவி போதையில் சொக்கின.

ஏந்திழையை முன்புறமாய் திருப்பிய ஔகத்தோ, கண்ணாடி சுவர்களில் கரம் பதித்து, நீரிலும் அடங்காது காமத்தீயில் உழன்றனத்திய அவளை உச்சியிலிருந்து பாதம் வரை ரசித்தான் கூடலாசையில் வேட்கை கொண்டு.

முன்னும் பின்னும் முன்பை விட இப்போது சதைக்கொஞ்சம் கூடியிருந்தது கீத்துவிற்கு. பார்த்தாலே அவளின் அளவீடுகளுக்கு போதையேற்றியது.

கழுத்தில் தாலியும் கூடவே தாலிக்கொடியும் இருக்க, காலிலோ மெட்டியும், கலைந்த கூந்தலும், நீரில் வெலவெலத்த மேனியும் இமைக்காது பார்க்க சொல்லி கேட்டது அவளை.

ஷவர் நீரோ கீத்துவின் நெளிவு சுளிவான யாக்கையில் எரிமலை பிழம்பாய் பரவி, பள்ளத்தில் அடங்கி போனது, பொஞ்சாதியவளோ கால்களை குறுக்கிக் கொண்டு நிற்க.

காதல் ரதி வதனம் நெருங்கியவனோ,

''சொக்கனுக்கே ஆச வரும்

என்ன அழகு என் கிருத்தி நீ!''

என்றுப்பாடி உரசினான் அவளின் கன்னங்களை.

''காஜி மன்னா!''

என்றவளோ உதடுகள் கடித்தாள், டாக்டரோ விரல்களால் காயம்படாக்கூட இடத்தினில் மருத்துவம் பார்க்க.

''தை மாசம் தேதி குறிக்கவா

தெனம் தெனம் கேள்வி கேக்குது

உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே

மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது!''

என்றவனோ அவன் ஆசையை, பாடிய வரிகளின் நொடிகளில் முடித்துக்கொண்டான், கீத்துவின் முன்னழகில் தலை சாய்த்து, தொங்கிய தாலிக்கயிறை கடித்தவாக்கில்.

துவண்டவளோ அவனை இறுக்கமாய் அணைத்துக்கொள்ள, சுடுநீரோ அயர்ந்தவளை நீராட்டி தாலாட்டியது.

''லவ் யூ கிருத்தி!''

என்றவனோ அவள் இதழ்களை கடல் உடைக்கும் மணல் கோட்டைப் போல் விடாது தளர்த்தி சுவைக்க, இருவரின் நாவும் சிற்றலைகளை போல் சீற்றம் கொள்ளாது சுமூகமாய் சமாதானம் பேசிக்கொண்டன.

''ஐ லவ் யூ டா காஜி மான்னா!''

என்ற கீத்துவோ அவன் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்கி ஆட்சி செய்ய துடிக்க, முகிழ்நகை கொண்ட ஔகத்தோ டவலை எடுத்து சுற்றினான் சுந்தரியவளை.

ஏந்தினான் முற்றிழையைக் கையில். நீர் சொட்ட நோக்கினான் படுக்கைக்கு.

''தடுமாறும் என் மனசு கேக்குது

எப்போ உன்ன சேர்வது மானே

பித்தானாதன் ஆகுறேன் நானே!''

என்று பாடியவனோ கிடத்தினான் கிருத்திகாவை மஞ்சத்தில்.

லைட்ஸ் தன்னிச்சையாய் அடைத்துக் கொள்ள, காதலின் முனகலும் காமத்தின் அனத்தலும் படுக்கையை நிறைத்தன.

படாஸ்....

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 123
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top