What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
people-2562102_640-150x150.jpg





இப்படி நடக்குமென்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால், மனித உயிரானது என்றாவது ஒருநாள் இப்புவியை விட்டு போய்தான் ஆகவேண்டும்.

துக்கம் நடந்ததை நான் அறியவில்லை.

மூன்றாவது எழுத்தாளிணி சொல்ல அறிந்தேன்.

விரைந்தேன் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்த்திட.

அதிர்ந்தேன் கண்ட பதிவுகளில்.

ஆறுதல் சொல்ல கை பரபரத்தாலும் அந்நேரத்தில் பொறுமை காப்பதே உசிதம் என்றுத் தோன்றியது.

பத்து நாட்கள் கடந்திருந்த இன்றைய பதினோராவது நாள் மாலை ஏழுக்கு அலைபேசியை கையிலெடுத்தேன்.

எழுத்தை நிறுத்தி சில நிமிடங்கள் சிந்தையை அமைதியாக்கினேன்.

முன்னரே யோசித்திருந்தேன்.

எக்காரணத்தைக் கொண்டும், நல்லாருக்கீங்களா என்ற கேள்வியைக் கேட்டிட கூடாதென்று.

அது என்னவோ எனக்கு அக்கேள்வி அவரின் இந்நிலைக்கு தோதானது இல்லையென்று தோன்றியது.

அதற்காவே அதை தவிர்த்திட நினைத்தேன்.

நீண்டதொரு பெருமூச்சுக்கு பின் அவரின் எண்ணை அழுத்தினேன்.

ரெண்டே ரிங்கில் மறுமுனையில் அவரின் குரல் கேட்டது.

உற்சாகம் கொண்டு பேசிட ஆரம்பித்தார் அவர்.

சற்று முன் எனக்கிருந்த தயக்கமோ காணாது போனது.

அப்பாடா, என்ற நிம்மதியைக் கொடுத்த அவரின் தொடர் குசல விசாரிப்புகளில் சற்றே நெகிழ்ந்தேன்.

பேச்சின் ஊடே நகைச்சுவை கொண்டே இருவரும் சிரிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் அறியாது உதிர்த்த

கேள்வியொன்று அவரை மீண்டும் ரணத்தில் ஆழ்த்தியது.

முன்போ இருவர் சம்பாத்தியம். இப்போதோ ஒருவரின் தலையில் மொத்த பொறுப்பு.

வார்த்தைகள் நடந்த துக்கத்தை மீண்டும் அசைபோட்டிட, அதை தவிர்க்க நினைத்த நானோ வேறு விஷயங்கள் பேச,

தழுதழுத்தது அவரின் குரல்.

முதலிலிருந்து சிரிப்பு மறைந்து சோகம் அப்பிக் கொண்டது தொனியில்.

''அவன் இல்லங்கறதே என்னாலே இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல பேபி!''

இதுதான் என்னை வெகுவாக பாதித்தது.

மனசு ஏதோ பிசைவது போலிருந்தது.

கனத்தது இதயம்.

எத்தனையோ கதைகள், வசனங்கள் எழுதிய என்னால் அவரின் இவ்வாக்கியத்தை சட்டென கடந்திட முடியவில்லை.

சர்வ சாதாரணமாய் ஒரு கதாப்பாத்திரத்தை இல்லாது செய்யும் என்னால், அவரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை.

அருகில் இருந்திருந்தால் நிச்சயம் ஓடோடி போயிருப்பேன்.

சாமானியத்தில் உடைந்திடாத நான், நிச்சயம் அவர் அழ பார்த்திருந்தால் கண்டிப்பாய் கலங்கியிருப்பேன்.

உணர்வுகளுக்கு வார்த்தைகள் இல்லை. செயல்கள் மட்டுமே அதன் பிரதிபலிப்புகள்.

தினம் பேசும் நட்பெல்லாம் கிடையாது.

ஆடிக்கு ஒருதரம் என்றாலும் வயிறு குலுங்க சிரிக்க பேசி அரட்டை அடிக்கும் கோஷ்டி எனலாம்.

ஐந்தாண்டு நட்பு. எழுத்துலக தோழமைதான்.

வாசகியான எழுத்தாளர். ஆர்.சி. அம்மாவின் தீவிர ரசிகை.

பாந்தமான முகத்தோடு எப்போதுமே தனியொரு வாஞ்சைக் கொண்டிருக்கும் செவத்த அழகி.

அவரின் முகத்தை கண்ணில் நிழலாட விட்டு, போனை வைக்க முனைந்தேன்.

''சரி, பேபி! ஆஹ், பேபி! ஓகே பேபி!''

பழைய விறுவிறுப்பு மீண்டும் வார்த்தைகளில் வந்து தொத்திக்கொள்ள, அவரின் பேபி என் இதழோரம் புன்னகையை

இழைந்தோட வைத்தது.

அன்றைக்கும் இன்றைக்கும் என்னை எழுத்துலகில் உரிமையோடு பேபி என்றழைக்கும் ஒரே ஆள் என் கார்த்திக் மட்டுமே.

தனிஷாவின், அஜய் கார்த்திக்!

பழையப்படி வா!

மறவாது சொல், எப்போதென்று!

குல்லி மட்டா: எப்போதென்று சொல்!

எப்படியும் கடந்து வந்திடுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நிதர்சனத்தை ஏற்கும் பக்குவம் அவரிடம் நிறைய உண்டு.

கொஞ்சம் அவகாசம் மட்டுமே தேவை.

நெருக்கமானதை இழந்து மீண்டு வருவது சுலபமல்ல.

ஆனால், அப்படியானதொரு எழுச்சி எக்காலத்திலும் வீழ்ச்சியை தந்திடாது!

 

Author: Admin 1
Article Title: குல்லி மட்டா?!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top