- Joined
- Jul 10, 2024
- Messages
- 415
சரியான பிழை நாம்! : 11
ஏர்போட்டில் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர் மினியும் ஈரியனும்.
பதவி உயர்வு பெற்று வெளிநாடு பயணிக்கிறான் ஆணவன். இரு வருடங்களுக்கு அங்குதான். எங்கும் நகர்ந்திட முடியாது.
வேண்டாம் என்று மறுத்தவனை பேசி பேசியே சம்மதிக்க வைத்த பெருமை மினியையே சேரும்.
''சரி, கிளம்பறேன்!''
என்ற நவீனோ ஒலிபெருக்கியின் தகவல் கேட்டு ஆயத்தமானான் அவர்களை பிரிய.
ஈரியனை கட்டியணைத்து விலகியவன்,
''உடம்ப பார்த்துக்கோங்க ரெண்டு பேரும்! அனுவையும் நல்லப்படியா பார்த்துக்கோங்க!''
என்றவனாய், முகிழ்நகை கொண்டு நின்ற மினியை, வெளிக்கொணரா ஏக்கம் தேக்கி பார்த்தான் விழிகளில்.
அவன் தவிப்பிலான சங்கடத்தை உணர்ந்த ஈரியனோ,
''பேசிக்கிட்டு இருங்க, கோல் வருது! வந்துடறேன்!''
என்று தார்மீகமாய் அங்கிருந்து நகர்ந்தான் ஜோடியற்றவர்களை தனியே விட்டு.
''சாப்பாடு அப்படி இப்படித்தான் இருக்கும்! அட்ஜர்ஸ்ட் பண்ண பழகிக்கோங்க! மருந்தெல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டிங்கல்லே?!''
என்ற மினியோ அக்கறையாய் விசாரிக்க,
''ஹ்ம்ம்!''
என்றவனோ மினியின் விரல்கள் பற்றி, ஏதும் பேசாது அவள் முகத்தையே வெறித்தான்.
''என்ன?!''
என்றவளை நெருங்கி,
''போக வேண்டாம், நமக்குள்ள நடக்கறதும் வேண்டாம்! டைம் ஸ்பெண்ட் பண்ணாலே போதும்னு தோணுது!''
என்றைக்கும் இல்லாது, இன்றைக்கு வார்த்தைகளை அதிகப்படுத்தினான் வாக்கியத்தில் நவீன்.
மினிக்கோ சிரிப்பு வந்து விட்டது.
''ரொம்ப தூரம் ட்ரவல் பண்ண போறீங்கள்ளே, அதான் மைண்ட் இப்படியெல்லாம் யோசிக்குது! சரியாகிடும்! கொஞ்ச நாள்லே!''
என்றவளை இறுக கட்டிக்கொண்டான் நவீன்.
''நீ என்னே ரொம்ப ஹேப்பியா வெச்சுக்கிட்டே மினி! முகம் சுளிக்காமே, மறுக்காமே, தயங்காமே, வேண்டாங்கற வார்த்தைக்கு வாய்ப்பே கொடுக்காமே! எல்லாம் கனவு மாதிரி இருக்கு!''
என்றவனின் ஏக்கம் தொண்டைக் குழியில் சிக்கிட ஆரம்பித்தது.
''என்னதிது, திடிர்னு, இவ்ளோ பீலிங்ஸ்?!''
''செக்ஸ்லே நூட்டா இருக்கறது கோமன்! ஆனா, வெளிப்படையா இருக்கறது ரொம்ப ரேர் மினி! ஆனா, நீ என்னே அப்படியே ஏத்துக்கிட்டே! எனக்குள்ள இருந்த பயத்தை காணாமே ஆக்கிட்டே!''
''என்னாச்சு நவீன் உங்களுக்கு?! ஏன், ஏதேதோ பேசறீங்க?!''
''இல்லே, மினி! நான் ரியாலிட்டி சொல்றேன்! என்ன மாதிரியான ஆட்களும் வாழ தகுதியானவங்கதான்னு எனக்கு நீ புரிய வெச்சுட்டே!''
''போதும்! போதும்! விட்டா எனக்கு சிலையே வெப்பீங்க போலிருக்கு!''
நக்கலடித்தாள் மினி.
''உன்னே ரொம்ப மிஸ் பண்ணுவேன் மினி! அதைவிட, இந்த லோங் ஹேரை..''
''அது சரி! இதைவிட நீட்டமான முடி வெச்சிருக்கற எவளாவது கிடைப்பா, அப்போ இந்த மினியே மறந்திடுவீங்க!''
கிண்டலாய் சொல்லி சிரித்தாள் நாயகியவள்.
''எதை மறந்தாலும், நீ, நவீனுன்னு சொல்ற அந்த டோன்னே மறக்க மாட்டேன்! போதுமா?!''
என்றவனோ அணைப்பிலான பிடியை தளர்த்தி,
''இதுவரைக்கும் சொன்னதில்லே! ஆனா, இப்போ தோணுது! சொல்றதுலே தப்பில்லன்னும் நினைக்கறேன்!''
''என்னவாம்?!''
வேடிக்கை கொண்டாள் மினி.
''தேங்கியூ!''
என்றவனோ அவள் முகம் பற்றி, கண்கள் மூடியவனாய் கொண்மினியின் நெற்றியில் பதித்தான் அழுத்தமான முத்தம் ஒன்றை.
பிழை தொடரும்...
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.