- Joined
- Jul 10, 2024
- Messages
- 433
சரியான பிழை நாம்! : 9
விடுமுறைக்கு பாட்டி வீடு சென்றிருந்த அனு திரும்பி வந்தாள்.
வழக்கம் போலான கலகலப்பு இல்லத்தில் மிஸ் ஆவதை அவளுமே உணர்ந்திருக்க, கேள்வி எழுப்பிய மகளிடம் பெற்றோர்கள் உப்பு சப்பில்லா காரணங்கள் சொல்லி சமாளித்தனர்.
என்னதான் தம்பதிகள் இருவரும் எதிரும் புதிருமாய் இருந்தாலும், படுக்கை என்னவோ பிரியாமல்தான் இருந்தது.
அனுவை கதை சொல்லி தூங்க வைத்து படுக்கையறை விரைந்த ஈரியனோ, பஞ்சணைக்கு அருகிலிருந்த மேஜையின் மீது சில டேப்லட்ஸ்களை கண்டான்.
அவைகளின் பெயர்கள் ஏதும் அவனுக்கு புரியவில்லை. ஆனால். போத்தல் கொண்டிருந்த விளக்கங்கள் அவனை திடுக்கிட வைத்தன.
முகங்கழுவியவளாய் குளியல் அறையிலிருந்து வெளிவந்த மினியோ, மஞ்சத்தின் மேல் கையில் போத்தலை பற்றியிருந்த ஈரியனை கண்ட நொடி அதிர்ச்சிக் கொண்டாள்.
பதைப்பை மறைத்தவளாய் அவன் நோக்கி விரைந்தவள், விருட்டென அவன் கரங்கொண்ட போத்தலை பறிக்க,
''என்ன மினி இதெல்லாம்?!''
என்றவனோ மெத்தையின் மீது கடை பரப்பியிருந்த சில மெடிக்கல் சிற்றேடுகளை தரை நோக்கி தள்ளி விட்டான்.
''எதுக்கு இப்போ இதையெல்லாம் வெளியே எடுத்தீங்க?!''
என்ற மினியோ அதையெல்லாம் பொறுக்கி எடுக்க, அவள் வாய் தாடையை பக்கென அழுத்தி பற்றிய ஈரியனோ,
''என்னடி பிரச்சனை உனக்கு?! ஏன் இப்படி என்னே வாழவும் விடாமே, பிரிஞ்சும் போகாமே டார்ச்சர் பண்றே?!''
என்று கேள்வி கேட்டு முறைக்க,
''ஏன்னா, என்னாலே உங்களே பிரிஞ்சிருக்க முடியாது ஈரியன்!''
என்று அழுத்தமாய் சொன்னவளோ அவன் கையை தட்டிவிட்டு மேலெழும்ப,
''அதுக்குன்னு இப்படி பண்ணுவியா?!''
''வேறே வழி?!''
என்றவளோ டவல் கொண்ட தோளோடு அவன் அருகில் சென்றமர்ந்து,
''இதனாலதானே, நீங்க என்னே விட்டு போகவே நினைச்சீங்க?! அப்பறம் எதுக்கு இது எனக்கு?!''
என்றவள் கண்ணீரால் கன்னங்களை அர்ச்சிக்க,
''ஏன் மினி, இப்படியெல்லாம் பண்ணி என்னே இன்னும், இன்னும் கில்டி பீலிங்ஸ்லே தள்ளறே?!''
''ஏன்னா, எனக்கு நீங்க வேணும் ஈரியன்! நம்ப செக்ஸ் லைஃப் வேணும்னா சொல்லிக்கற அளவு இல்லாமே இருக்கலாம்! ஆனா, நம்ப பொண்ணு அனுக்கு நீங்க ஒரு நல்ல அப்பா! எனக்கு நல்ல புருஷன்! குடும்பத்துக்கு பொறுப்பான மகன், மருமகன்! அப்பறம் எதுக்கு ஈரியன் அந்த ஒன்னுக்காக நாமே பிரியணும்?! இப்போ இருக்கற இந்த சந்தோஷம் உடையணும்?! எதுவுமே அவசியமில்லையே?!''
''அதுக்காக நீ ஏன் மினி, இயற்கையை மீறி உன்னையே தண்டிச்சிக்கணும்?!''
விரக்தியாய் அவன் கேட்க,
''ஒருக்கால் நமக்கு டிவோர்ஸ் ஆகாமே நான் எப்படியோ தடுத்து, என்னைக்காவது ஒரு நாள் என்னாலே அடக்க முடியாமே போய் உங்கக்கிட்ட வந்து நின்னா, நீங்க என்னே பார்த்து, அலையாமே இருக்கவே மாட்டியான்னு கேட்டிட கூடதுலே, அதுக்காகத்தான்!''
என்றவளோ முகத்தை மூடி கதற, செருப்பால் அடி வாங்கிய கணக்காய் முகம் இறுக தலை கவிழ்ந்தான் ஈரியன்.
பிழை தொடரும்...
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.