What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

தீவியின் ஆரணியம்: 3

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 3

பிரேசில்
அமேசான் வனம்


முட்டி தெறித்து ஓடி வந்தது இதற்காகத்தானா என்றிருந்தது மிருவிற்கு.

உசுரு போக போவது உறுதியாகிவிட்டது. இனியும் தப்பிக்க முடியுமா என்ன, கண் முன்னிருப்பது என்ன புழுவா, தட்டிவிட்டு எழுந்து போக.

அவளை படமெடுக்கும் மணிரத்தினமாட்டம் உற்று நோக்கியது அனகோண்டா அது. இப்போதே பேடையவள் காதுகளுக்குள் கேட்டது அவளின் எலும்புகள் உடைய போகும் சத்தம் மாசுண பாம்பின் வயிற்றுக்குள்.

சுவாசம் இப்போதே அடைத்துக் கொண்டது வஞ்சிக்கு. உஸ்ஸென்ற சத்தத்தோடும் நாக்கை வெளியில் நொடிக்கு ஒரு முறை தவறாது பொசுக்கு பொசுக்கென்று நீட்டியும் பெரும்பாம்பு முன்னோக்கி வந்தது மங்கையவளை.

நெஞ்சம் பக்கென்றிட, உதடுகள் துடிக்க, சேற்றில் உழன்ற தேகம் வேறு அரிக்க, அதை சுகமாய் சொரிந்திட கூட முடியா அவல நிலையில் மரண பயத்தோடு மேனியை அமர்ந்த பாணியிலேயே பின்னோக்கினாள் பெதும்பையவள்.

எப்படி தப்பிக்க நினைத்தாலும் சங்குதான். அனகோண்டா அது, வாலை தூக்கி ஒரு சுழட்டு சுழட்டினால் அவ்வளவுதான் கொடூரமான சாவு கன்போர்ம். அதற்கு சும்மாவே இருக்கலாம். இப்படியே ஈசியாக செத்து தொலையலாம் என்றெண்ணியே உட்கார்ந்த இடத்திலேயே செட்டல் ஆகினாள் ஆயிழையவள்.

மிரண்டு கிடந்த இரையை நெருக்கி கொள்ள ஆயோத்தமாகி அரவு (பாம்பு) அது கோதையவள் முகம் நெருங்கி கந்தரம் சுற்றி வளைத்திட போக, கிடுகிடுத்த தேகம் கண்ணீரில் தளிரியலவளை குளிப்பாட்ட, தெரிந்தது சீரிய நாகத்தின் அதே கண்ணில் பச்சை கலர் திட்டியின் பிம்பமொன்று.

ஹார்ட் பீட் படு வேகமாய் எகிறிட சாவென்பது இப்படியா வரணும் என்று நொந்துக் கொண்டாள் வதூ அவள்.

பச்சை கலர் சக்குக்கு சொந்தக்காரனோ முன்னோக்கினான் ஒவ்வொரு அடிகளையும் கெத்தாய் எடுத்து வைத்து.

இது அவனின் கோட்டை என்பதை அனகோண்டாவிற்கு அவனின் கூரிய பார்வைகளால் எச்சரித்தான். மகுடியின்றி ஆடியது பெருத்த அனகோண்டா அது.

ஆணுக்கே உரிய தெனாவெட்டு கொஞ்சமும் குறையாது, பாம்பே ஒழுங்கா போயிடு என்ற மைண்ட் செட்டில் நிலத்தினை பிராண்டினான் விரல் நகங்களால் நடந்த பிரளயத்தில் கடுங் கோபம் கொண்டிருந்தவன்.

விடாரத்தின் (பாம்பு) இமைகளின் வழி அவளின் முதுகுக்கு பின்னாடி வருகின்ற உருவத்தினை நம்பிக்கையோடு பார்ப்பதா அல்லது வீறு கொண்டு எதிர்ப்பதா என்று வஞ்சிவளுக்கு தெரியவில்லை.

ஆனால், மிருவால் ராஜா அவனின் அலப்பறையை ரசித்திடாமல் இருக்க முடியவில்லை. இவனுக்கு இப்படி ஒரு ஸ்டைலா அதுதான் அவளின் கேள்வி. அசிஸ்டண்ட் டைரக்ட்டர் ஆச்சே அதான் மூளை அந்நேரத்தில் அப்படி யோசித்தது.

அதுவும் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் தீப்பற்ற வைத்திடும் அனல் அம்பகங்கள் அவனுக்கு. பார்வைகளோ ஆரணியத்தை கொழுத்தி குளிர் காய்ந்திடும்.

அனகொண்டாவோ பின்னோக்கி ஓடியது சர்ரென்று திரும்பி அதற்கு மேல் ஆணியே பிடுங்க வேண்டாம் என்றெண்ணி.

அப்பாடா ஒரு விக்கெட் அவுட் என்று நிம்மதி பெருமூச்சு விடுவதா இல்லை பின்னால் அதை விட பெரிய ஆபத்து ஸ்டைல் கொண்டு நிற்கிறதே அதற்காக பயங்கொள்வதா என்று தெரியாது குழம்பி போனாள் அங்கணை அவள் பரிதாபமான நிலையில்.

சரி, போற உசுரு எப்படியோ போகட்டும். கடவுள் விட்ட வழி என்றெண்ணியவள் ஒரு முடிவிற்கு வந்தாள் சட்டு புட்டென்று. சடீரென்றே எழ பார்த்தாள் மானினியவள் தப்பிக்கும் பிளானில்.

ஆசை யாரை விட்டது, அவளை விடாது துரத்திட. முன்னாலிருந்து கிரகம் போயாச்சு. பின்னாலிருக்கும் எமன் போய் தொலைந்தால் நன்றாக இருக்கும் என்றிருந்தது ஏந்திழை அவளுக்கு.

ஒன்று விட்டாலும் இன்னொன்று விட மாட்டுதே என்ற பாவப்பட்ட நிலையில் தவித்தாள் அலரவள். கேட்டது மிக நெருக்கமாய் மூச்சு காற்று ஒன்று. சேறு கொண்ட மலரவளின் செவிகள் ரெண்டோ வியர்த்து போனது.

பயம்! பயம்! பயம்!

அவ்வளவு நடுக்கம் அவளுக்கு. முடிஞ்சது சோலி என்று புரிந்தது அவளுக்கு. இருந்தும் சிறு நப்பாசை உயிர் வாழ மாயோள் அவளுக்கு.

விலோசனங்களை இறுக்கமாய் மூடி கொண்டாள் வதனியவள். கைகளை நெஞ்சுக்கு நடுவினில் கூப்பி பற்றிக் கொண்டாள். இஷ்ட தெய்வத்தை மனதார பிராத்தித்தாள்.

காதோரம் முதலில் உணர்ந்த சூடு இப்போது இல்லை. கொஞ்சம் தைரியம் பிறந்தது எமனுக்கு டிமிக்கி கொடுக்க பார்த்தவளுக்கு.

பெருமூச்சு ஒன்றை விட்ட விறலியவள் பிரேட்சணங்கள் திறந்தாள். எழுந்தாள் சகதியிலிருந்து. இடுப்பில் கரங்கள் பதித்து எதர்ச்சையாய் பின்னால் திரும்ப தூக்கி வாரி போட்டது மிருவிற்கு.

எவன் போயிருப்பான். போயிட்டான் என்று நினைத்தாளோ, அவனே கண் முன் மிடுக்காக மூச்சிரைக்க நிற்க ஆடி போனது ஈரக்குலை முற்றிழை அவளுக்கு.

திடுக்கிட்டு அதிர்ந்தவளின் கால்கள் தன்னிச்சையாய் பின்னோக்க சரிந்தாள் மீண்டும் சேற்றிலேயே மிரு அலண்டு பயந்து, முன்னிருந்தவனோ உறும்பல் கொண்டு அவளை வெறிக்க.

தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top