What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
WhatsApp Image 2024-10-11 at 2.53.00 PM.jpeg

அத்தியாயம் 11


கடந்தகாலம்

பிடிக்காத கல்யாணம் போய் தொடாத கணவனின் செயல், அட்சராவை குணத்தில் அரக்கியாவே மாற்றியிருந்தது.

சிறுவயது முதற்கொண்டே அவள் விருப்பப்பட்ட எதுவும் பெரிதாய் நிறைவேறியதே கிடையாது.

என்னதான் பணக்கார குடும்பத்தின் ஒற்றை இளவரசியாக இருந்தாலும், ஆர்மி கேம்ப் போலான நிலையில்தான் வளர்க்கப்பட்டாள் சிறுமி அவள்.

கண்டிப்பான தாயிடம் அடி வாங்க பயந்த இந்தரோ, அம்மா பேச்சுக்கு தலை ஆட்டுவதை மட்டுமே முழுநேர தொழிலாக வைத்திருந்தான் மழலை பருவத்திலிருந்தே.

ஆனால், அட்சரா அப்படியல்ல. துணிந்து கேள்வி கேட்பது தொடங்கி குறும்பும் கொஞ்சம் ஜாஸ்தியானவள். அதனாலேயே, அவளுக்கு அடிவாங்கா நாளென்பதே கிடையாது நாட்காட்டியில்.

இருப்பினும், அடி உதை வாங்கி, தீயவளாக வளர்ந்திடாமல் நல்ல ஒழுக்கமான பெண்ணாகவே பருவ வயதை அடைந்தாள் மங்கையவள்.

ஓவியம் வரைவதில் விருப்பம் கொண்டவளின் க்ராபிக் டிசைனர் (graphic designer) எதிர்கால ஆசையோ அவள் மம்மியால் நிராகரிக்கப்பட்டது.

பல நாட்களான மூளை சலவைக்கு பின் இறுதியில் அம்மணியின் தாய் ராதா விரும்பிய கட்டிடக்கலைக்கான நிபுணத்துவ படிப்பையே படித்து பட்டமும் பெற்றாள் நாயகியவள்.

என்னதான் கணினி வரைப்பட ஆர்டிஸ்ட்டாக வர இயலாது போனாலும், ஆர்கிடெக் (architect) பணியில் பல கட்டிடங்களை விதவிதமாய் வரைந்து நிறைவேறா லட்சியத்திற்கு அவைகளை சமமாக்கி கொண்டாள் வஞ்சியவள்.

அட்சரா முன்பிருந்தே அப்படித்தான். அவள் ட்ரம் (drum) வாசிக்க கேட்க, அவள் அம்மாவோ பியானோ (piano) கிளாசுக்கு அனுப்பி வைத்தார்.

என்னதான் அது அவள் விரும்பிய இசைக்கருவிக்கான வகுப்பில்லை என்றாலும், ரெண்டும் இசைதானே கற்றுக்கொள்வதில் தவறில்லையே என்று வயதுக்கு மீறிய தொலைநோக்கு சிந்தனை கொண்டவளே அவள்.

முரண்டு பிடித்தாலும் இறுதியில் எதையும் வேண்டாமென்று கூறிடா பைந்தொடியின் குணமே அவள் தாய் ராதாவிற்கு சாதகமாய் போனது.

அதுவே, வேதாவை அவளுக்கு கட்டி வைக்கவும் காரணமாகியது.

ஆனால், நேற்று வரை நங்கையின் வாழ்க்கையை அவளை விட அவள் மம்மியே அதிகமாய் வாழ்ந்திருப்பதை உணர்ந்த வதூ அவள், திருமணமாவது அவள் விருப்பப்படி நடந்திட வேண்டுமென்று ஆசைக்கொண்டாள்.

யாரையும் லவ்வெல்லாம் செய்யவில்லை காரிகை அவள். ஆனால், பார்த்து பழகி அவளை மனதால் மயங்க வைத்திடும் குணம் கொண்ட ஒருவனையே விவாகம் செய்துக்கொள்ள எண்ணினாள் அந்திகை அவள்.

ஆனால், அதுவெல்லாம் கானல் நீராய் போனது சினிமா பாங்கற்ற சாதாரண பாணியை பின்பற்றும் வேதா அவளுக்கு கணவனாக.

தாயின் செயலின் மீது கொண்ட வெறுப்பு கல்யாணம் பேசி முடித்த நாளே வேதா மற்றும் அவன் குடும்பத்தின் மேல் திரும்பியது தெரிவை அவளுக்கு.

வேதாவும் தங்கைக்காக திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள அட்சராவிடம் பேசவோ, அவளை பார்க்கவோ ஆர்வங்காட்டிடவில்லை. இதுவும் ஒருபுறம் பேதையை பைத்தியமாக்கியது.

எப்படி அண்ணன் இந்தர் தாயின் பேச்சை கேட்டு ஆடும் தலையாட்டி பொம்மை போல் இருக்கிறானோ, அதேப்போல்தான் வேதாவும் என்று நினைத்துக் கொண்டாள் பகினி அவள்.

எடுப்பார் கைப்பிள்ளை போல் பெரியோர்கள் சொல்ல, கல்யாணத்துக்கு வேதா ஆமோதித்து ஓகே (ok) சொன்ன சங்கதி வேறு வாஞ்சினியின் காதுக்கு வர, அவனும் திராணியற்றவனே என்று நொறுங்கிப் போனாள்.

ஒட்டுமொத்தமாய் எல்லோரும் சேர்ந்து அவளின் வாழ்வை அழித்து விட்டதாய் எண்ணினாள்.

இதற்கெல்லாம் மூலகாரணமான அண்ணன் இந்தர் மற்றும் வருங்கால அண்ணி நிலாவிடமும் பேசுவதை முற்றிலுமாய் நிறுத்திக் கொண்டாள்.

காரணம் கேட்டவர்களிடமோ,

''உங்க சந்தோஷத்துக்காக என் வாழ்க்கையே படுங்குழியிலே தள்ளிட்டிங்க! இன்னும் வேறே என்னெல்லாம் பண்ண காத்திருக்கீங்க?! ஆனா, ஒன்னு! எந்த காதலுக்காக என் வாழ்க்கையே பாழாக்க நீங்க துணிஞ்சிட்டிங்களோ, அதே காதல் உங்களுக்குள்ளே காணாமே போய் என்ன மாதிரி நீங்களும் கஷ்டப்படுவீங்க!''

என்றவளோ சாபம் கொடுக்கும் தொனியில் விரக்தியும் வெறுப்பும் கொண்டு பேசினாள்.

நிலைகுலைந்து அழுத நிலாவை சமாதானம் செய்த இந்தரோ, அதோடு தங்கையோடு எவ்வித பேச்சு வார்த்தையும் கொள்ளாது உறவை முறித்துக் கொண்டான்.

தாயை எதிர்த்து இதுநாள் வரை எதுவும் செய்திட முடியா அபலையாய் இருந்த கோதையோ, அவருக்கு கொடுக்கும் தண்டனையாய், புகுந்த வீட்டில் பேரை கெடுத்துக் கொண்டாள்.

விரும்பிய வாழ்க்கைத்தான் அமையவில்லை, இளமையாவது கனியட்டுமே என்று நம்பியவளின் தலையில் இடியை போட்ட உத்தம புருஷனின் செயலோ, எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது.

ஆகவே, எந்தளவுக்கு வேதாவின் மனதை காயப்படுத்திட முடியுமோ அந்தளவுக்கு ரணமாக்கி நிம்மதி கொண்டாள்.

**********************************


கடந்தகாலம்


அட்சராவின் அலுவலகம்


மணி இரவு பதினொன்றுக்கு மேலாகியும் வஞ்சியவள் வீடு திரும்பிடவில்லை.

ஆகவே, அவளைத் தேடிக்கொண்டு ஆபிஸ் வரை வந்திருந்தான் வேதா.

''எதுக்கு இப்போ இங்க வந்தே?!''

அலுவலக கதவைத் திறந்து வைத்து எகிறினாள் வாசுரை அவள்.

''இவ்ளோ லேட்டாச்சு, ஒரு போன் பண்ணி சொல்லக்கூட உங்களுக்கு தோணலையா?!''

சாதாரணமாகவே கேட்டான் கணவனவன்.

''தோணலே போதுமா?!''

என்ற பொற்றொடியின் அலறலில் வேதாவின் முகமோ இறுகிப் போனது.

''கையெடுத்து கும்பிடறேன்! தயவு செஞ்சு என்னே கொஞ்சம் நிம்மதியா விடறீங்களா நீயும், உன் குடும்பமும்! அங்க இருக்க புடிக்காமத்தான் இங்க ஓடி வந்துடறேன்! அதுவும் பொறுக்காமே ஏன் இப்படி என்னே தேடி வந்து டார்ச்சர் (torture) பண்றீங்க?!''

எரிச்சல் கொண்டு கத்தினாள் மாயோள் அவள்.

''ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க?! அக்கறை இருக்கறதுனாலதாங்க தேடி வந்தேன்! மகளா உங்களே பார்க்கறனாலதான், என்னாச்சோ ஏதாச்சோன்னு எங்கம்மாவும் விடாமே உங்களுக்கு கோல் (call) பண்ணியிருக்காங்க! யாரும் உங்க நிம்மதியே கெடுக்க நினைக்கலங்க! முதல்லே எங்களை தப்பா பார்க்கற கண்ணோட்டத்தை மாத்துங்க!''

பொறுமையாகவே எடுத்துரைத்தான் ஆணவன்.

''இப்படியெல்லாம் நீ பேசினா, நான் மயங்கிடுவேன்னு நினைச்சியா?! அதுக்கு வேறாளே பாரு! நீயெல்லாம் என் கால் தூசிக்கு கூட வர மாட்டே! அன்றாடங் காட்சி உனக்கு கோடியிலே புரல்றே நான் கேட்குதா?! போய் உன் தகுதிக்கு ஏத்த மாதிரி எவளாவது கிடைப்பா அவளே கட்டிக்கிட்டு சீரழி!''

என்ற துணைவியோ மனசாட்சியற்று தேளாய் கொட்டி கதவை படாரென்று அடித்து சாத்தினாள்.

வேதாவோ வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டவனாய் அங்கிருந்து வெளியேறினான்.

போகின்றவனையே ஜாடை பார்வை பார்த்த மலருக்கோ கண்கள் ரெண்டும் குளமாகி போயின.

பொற்றொடி பேசிய வார்த்தைகளில் கடுங்கோபம் கொண்டு உரிமையோடு அவளோடு சண்டையாவது போட்டிடா மாட்டானா என்றிருந்தது.

ஏன், கதத்தை கன்னத்தை பழுக்க வைத்தாவது அவளை தொட்டிட மாட்டானா என்று பெதும்பை மனம் ஏங்கியது.

சரி, அடிக்கவும் வேண்டாம் அணைக்கவும் வேண்டாம், திரும்பி வந்து அவள் கரம் பற்றி தரதரவென்று இழுத்துக் கூடவா போயிட மாட்டான் என்றிருந்தது அந்திகை அவளுக்கு.

ஆனால், அடுத்த நொடியே சிவப்பேறிய விழிகளின் ஈரம் கதுப்புகளை நனைக்க, மேஜையை கலைத்து போட்ட நாயகியின் உள்ளமோ கோபத்தில் கொந்தளித்தது, இது எதையுமே வேதா இப்போது மட்டுமல்ல எப்போதுமே செய்திட மாட்டானென்ற அவநம்பிக்கையில்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top