What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
WhatsApp Image 2024-10-15 at 7.22.01 PM.jpeg

அத்தியாயம் 13

நிகழ்காலம்


தனியார் மருத்துவமனை

டாக்டரை சந்தித்த வேதாவோ பாரமான நெஞ்சோடு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தான்.

காரிலேறி அமர்ந்தவன் சோகம் ததும்பிய முகத்தை ஸ்டேரிங்கில் புதைத்துக் கொண்டான்.

மூடிய ஆணவனின் விழியோரமோ கண்ணீர் துளிர்த்து மெதுவாய் வழிந்திறங்கியது.

நொடிகள் கடக்க சிரசை மேல் தூக்கியவன், ஈரமான கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

எக்கி காரின் க்ளோவ் பாக்ஸை (glove box) திறந்தான். விரல்களால் துழாவி, அதன் உள்ளிருந்து வெளியில் எடுத்தான் அலைபேசி ஒன்றை.

அதை ஆன் செய்து வீடியோஸ் பக்கம் போனான் வேதா. முதலும் கடைசியுமாய் இருந்த காணொளியை ப்ளெய் (play) செய்தான்.

ஒளிபரப்பாகிய காட்சியை பார்க்காது, கைப்பேசியை திருப்பி நெஞ்சில் பதித்துக் கொண்டான் ஆணவன்.

ஆரவாரங்களுக்கு இடையில் அட்சராவின் குரல் ஓங்கி ஒலித்தது கோபத்தின் பேரிரைச்சலாய் அவ்வீடியோ பதிவில்.

''I'm married! You idiot! take off your hands, bastard!''
(நான் கல்யாணம் ஆனவடா! முட்டாள்! கையே எடுடா!)

மூடிய இமைகள் ரெண்டும் கண்ணீரை வழிய விட, அதற்கு மேலும் அக்காணொளியில் அவனுக்கு தேவையான எதுவும் இல்லாத பட்சத்தில், கைப்பேசியின் ஓரத்தை அழுத்தி அதை அப்படியே ஆப் செய்தான் வேதா.

*****************************************


நிகழ்காலம்

அட்சராவின் நிலையை தாய் அம்பிகாவிடம் எடுத்துரைத்திருந்தான் வேதா. அவரும் மகன் சொன்னதற்கு இணங்கி பெண்ணவள் மனம் கோணாதே நடந்துக் கொண்டார்.

ஆனால், அமலாவும் மாமன் மீது ஆசைக்கொண்ட மாதவியும் மாதங்கள் கடந்து வீடு வந்திருப்பவளை எதிரியாகவே பார்த்தனர்.

அபலை அவளை ஜாடை மாடையாய் வசைப்பாடினர். அவர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கவனித்த அம்பிகாவோ அவர்களை எச்சரித்தே வைத்தார்.

உண்மையை சொல்லப் போனால் தாய் மகள் இருவரும் எப்போதோ இவ்வீட்டிலிருந்து வெளியேறி இருந்தனர்.

கடந்த காலத்தில் அட்சரா நாக்கை பிடிங்கி கொள்வது போல் அவர்களை கேள்வி எழுப்ப, அதன் அவமானம் தாளாது அப்போதே அண்ணன் கந்தனிடம் கராறாய் சண்டை போட்டார் அமலா.

''எனக்கு தெரியாதுண்ணா! பணம் உன் பாடு! நானும் என் பொண்ணும் இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுலே இருக்க மாட்டோம்!''

''ஏன் இப்படி அடம் புடிக்கறே அமலா?! அந்த பொண்ணு ஏதோ வயசுலே சின்ன பொண்ணு தெரியாமே பேசிட்டா! அதை போய் நாமே பெருசு பண்ணலாமா?! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அட்சராவே மன்னிக்க கூடாதா?!''

வருடங்களாய் கூடவே இருந்த தங்கை பிரிந்து போக முடிவெடுக்க, அதை கந்தனால் தாங்கிட முடியவில்லை.

''பேசி என்னே சமாதானம் படுத்த நினைக்காத அண்ணா! என் முடிவிலே மாற்றமில்லே!''

''கொஞ்சம் யோசிச்சு பாரு அமலா! அட்சரா பேசினத்துக்காக இத்தனை வருஷம் ஒன்னா இருந்த குடும்பத்தை விட்டு பிரிஞ்சி போறேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்?!''

அம்பிகா முயற்சித்தார் நாத்தனாரை சாந்தப்படுத்த.

''என் பொண்ணே கட்டிக்க சொல்லி கேட்டப்போ, என்ன நியாயம் சொன்னீங்களோ அதே நியாயம்தான் அண்ணி! இன்னைக்கு இப்படி எங்களே கேவலப்படுத்தி பேசின உங்க பணக்கார மருமகே, நாளைக்கே என்னையும் என் பொண்ணையும் கழுத்த புடுச்சு வெளிய துரத்த மாட்டான்னு என்ன நிச்சயம்?!''

''கண்டதையெல்லாம் பேசாதே அமலா! நான் உயிரோட இருக்கற வரைக்கும் உன்னையும் மாதவியையும் கைவிட்டிட மாட்டேன்மா!''

கந்தன் பாசங்கொண்டு கண்ணீர் சொரிந்தார்.

''அதான் விட்டுட்டியே! என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்துலே மட்டு மரியாதை தெரியாத பிடாரி ஒருத்தியே கூட்டிட்டி வந்து வெச்சு, குடும்பமா சேர்ந்து அழகு பார்க்கறீங்களே!''

என்ற அமலாவோ இதான் சாக்கென்று அடாவடி அட்சராவிற்கு புதுப் பேர் சூட்டினார்.

வேலை முடிந்து வந்த வேதாவோ கண்டாகி போனான் வரவேற்பரையில் பஞ்சாயத்து செய்த அத்தையின் அராஜகத்தில்.

''முடிவா வேணும்னா ஒன்னு சொல்றேன்! நானும் என் பொண்ணும் எங்கையும் போகாமே இங்கையே இருக்கணும்னா, வேதாவையும் அந்த அடங்காப்பிடாரியையும் தனிக்குடித்தனம் போக சொல்லுங்க!''

என்ற அமலாவோ வன்மம் கொண்டு மிடுக்காய் நிற்க, ஆடவனின் பெற்றோர்களோ ஆடிப்போயினர்.

''அதெல்லா முடியாது அத்தை!''

என்ற வேதாவோ மற்றவர்களுக்கு முன்னிலையில் வந்து நின்றவனாய்,

''அட்சரா என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது! ஆனா, அது உங்களை ரொம்பவே காயப்படுத்திருக்கின்னு மட்டும் எனக்கு நல்லா புரியுது! அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!''

என்ற வேதாவின் மன்னிப்பில் துளியும் மனம் இறங்கா அத்தையோ, அப்போதும் முறுக்கிக்கொண்டு நிற்க,

''நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன் அத்தை! என் அப்பாம்மாவே பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு! வீட்டை விட்டு இன்னும் ரெண்டு வாரத்துலே போக போறது உங்க பொண்ணு மாதவிதான்!''

என்றவனின் வார்த்தைகளில் பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சி கொள்ள,

''அவளுக்கு வேலை ஒன்னு ஏற்பாடு பண்ணிருக்கேன்! ஹாஸ்ட்டல் வசதி ஏதுமில்லே! தனியா ரூம் இல்லே வீடு ஒன்னு வாடகைக்கு எடுத்துதான் தங்கணும்! இங்க இருக்கற சம்பளத்தை விட அங்க மூணு மடங்கு அதிகம்! படிச்ச படிப்புக்கான வேலைதான்! நிலா மாதிரி அவளையும் எங்கையும் அனுப்பாமே இங்கையே வெச்சிருக்கறது இதுக்கு மேலையும் சரி வராது! வெளிய போய் வேலை பார்த்து நாலு பேர்கிட்ட பழகினாதான், பிற்காலத்துலே அவளுக்கு வசதியா இருக்கும்!''

மாதவியின் வாழ்க்கையை முன்னிறுத்தி வேதா எடுத்திருந்த முடிவை பற்றி அனைவரிடத்திலும் நல்லப்படியாய் பகிர்ந்திடத்தான் ஆணவன் நினைத்திருந்தான்.

ஆனால், இப்போதோ வேறு வழி இல்லாது இப்படியான சூழ்நிலையில் அதை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தான் ஆடவன் அவன்.

''என்னடா, புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து என் பொண்ணே அங்க இங்கன்னு அனுப்பி ஊர் மேய விட பார்க்கறீங்களா?!''

தகாத வார்த்தையில் வேதாவின் மனதை மட்டுமல்லாது அம்பிகா மற்றும் கந்தனின் நெஞ்சையும் நோகடித்தார் அமலா.

''நான் இல்லாத இடத்துலே இருக்கணும்னு ஆசைப்பட்டாதே மாதவிதான்! நான் சொல்லி எதுவும் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லே! கொஞ்ச நாளைக்கு அவே இப்படி மத்த விசியங்கள்லே கவனத்தை செலுத்தறதுதான் பழசையெல்லாம் மறந்து பக்குவமாக சரியா இருக்கும்!''

''அதுக்காக என் பொண்ணே பிரிஞ்சு நான் இருக்கணுமா?!''

''அவளை தனியா விட பயமா இருந்தா, நீங்களும் அவளோடவே கிளம்பி போங்க! ரூமுக்கு பதிலா, ஒரு வீட்டையே பார்த்து கொடுக்கறேன்!''

என்ற வேதாவோ அதற்கு மேலும் அங்க நில்லாது மேல் தளம் நோக்கினான்.

இப்படியாக வீட்டை விட்டு கிளம்பிய இருவரும் அட்சரா காணாது போன சங்கதி தெரிந்த ஒரே வாரத்தில் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மீண்டும் மாமன் வீடு வந்து சேர்ந்தனர்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top