- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 15
நிகழ்காலம்
டாக்டர் துவரினி இல்லம்
''நல்ல வேளை சாப்பிடற டைம் பார்த்து வந்துட்டிங்க, இல்லன்னா இன்னும் ஒன் ஹவர்லே (one hour) டியூட்டிக்கு கிளம்பி போயிருப்பேன்!''
என்றவாறே சோற்றை வாயில் திணித்தாள் அம்மணி.
''கோல் பண்ணலாம்னுதான்..''
என்றவன் சொல்லும் போதே அலறியது இன்ஸ்பெக்ட்டர் அன்பின் அலைபேசி.
''சொல்லு ராகேஷ்?!''
என்றவனோ மறுமுனையில் இருப்பவனிடம் பேச, டாக்டர் ஆயிழையோ ஆணவனுக்கு முன் தட்டொன்றை வைத்தாள் சோற்று கையை கழுவிக்கொண்டு வந்தவளாய்.
''சார், டைமண்ட் பாபு மூணு மாசத்துக்கு அப்பறம் திரும்பவும் ஒரு பெரிய டீலிங் (dealing) பண்ண போறதா தகவல் கிடைச்சிருக்கு!''
''எங்க, எப்போன்னு ஏதாவது தெரிஞ்சதா?!''
என்றுக் கேட்ட அன்போ உணவை பரிமாறிய பனிமொழியை சைகையால் போதுமென்று நிறுத்தினான்.
''தனியார் ஜெட்லதான் (jet) டைமண்ட்ஸை (diamonds) கைமாத்த போறதா இப்போதைக்கு பிளான் (plan) பண்ணிருக்காங்க சார்!''
''நம்ப ஆளே அவனுங்களுக்கு சந்தேகம் வராதப்படி பத்திரமா இருக்க சொல்லு ராகேஷ்! எந்தளவுக்கு இந்த மிஷன் (mission) முக்கியமோ, அதே அளவுக்கு இதுலே இன்வோல்ட் (involved) ஆகியிருக்கறே ஒவ்வொரு ஆளோட உயிரும் முக்கியம்!''
''புரியுது சார்! அவுங்கள்ளே எப்படி நம்பாளுங்க இருக்காங்களோ, அதே மாதிரி நமக்குள்ளையும் அவுங்க ஆள் கண்டிப்பா இருப்பாங்க! அதனாலேயே, எவ்ளோ ரகசியமா இந்த மிஷனை நாமே பண்றோமோ அந்தளவுக்கு நாமே பாதுகாப்பா இருப்போம்!
''கண்டிப்பா ராகேஷ்! நம்ப ஆளுக்கிட்ட சொல்லி அவனுங்களே இன்னும் க்ளோசா (close) வாட்ச் (watch) பண்ண சொல்லு! கண்துடைப்புக்காக கூட போலியான இடம், நேரம்னு நம்பளே சுத்தல்லே விட வாய்ப்பிருக்கு!''
''ஆமா சார்! அதுவும் போன தடவை மாதிரி இந்த தடவை எந்த அசம்பாவிதமும் நடந்து அவனுங்க டீலிங் கெட்டு போயிடக்கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருப்பானுங்க!''
''உண்மைதான் ராகேஷ்! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமே போன மாதிரி இந்த வாட்டி அந்த கும்பல் நம்பக்கிட்டருந்து தப்பிக்கவே முடியாது! டைமண்ட் பாபுவே அரஸ்ட் (arrest) பண்ணி, போலியான அவன் முகத்திரையை கிழிக்காமே விட மாட்டேன் நான்!''
என்ற அன்போ கையை முஷ்டியாய் மடக்கி முகத்தை இறுக்க, அவன் புறங்கையை பற்றிய அணங்கோ பெருவிரல் கொண்டு மென்மையாய் வருடினாள் ஆணவன் கதம் குறைய.
***********************************
நிகழ்காலம்
கார் பயணம்
''அட்சரா, என்னாச்சு?! ஏன் டாக்டர் பார்த்திட்டு வந்ததுலருந்தே ஒரு மாதிரி இருக்கீங்க?! தலை ஏதும் வலிக்குதா?!''
என்ற வேதாவோ அக்கறையாய் விசாரிக்க, தொங்கிய முகத்தோடு இல்லையென்று தலையாட்டினாள் கோதையவள்.
டாக்டர் கொடுத்த மருந்துகள் நன்றாகவே வேலை செய்ய, நாயகியவள் இப்போது பழைய நிலையிலிருந்து விடுப்பட்டு புதியதோர் அம்னீஷியாவிற்கு வாக்கப்பட்டிருந்தாள்.
அதுதான் ரெட்ரோகிரேட் அம்னீஷியா (Retrograde amnesia).
தற்போதைக்கு நடக்கும் எல்லாமே காரிகையின் மூளையில் நன்றாக பதிந்து நினைவில் இருக்கிறது.
முன்னாடி போல், நடக்கும் சம்பவங்கள் எதுவும் மாதங்கி அவளுக்கு மறந்து போவதில்லை.
அதேப்போல், நொடிக்கு ஒரு தரம் டபுள் ரோல் செய்து வேதாவை வாட்டிடவும் இல்லை.
தலையில் அடிப்பட்டதால் இப்படியான மறதி நிலைகள் சாதாரணமே என்று டாக்டர் அவர்களிடம் சொல்லியிருந்தார்.
பலருக்கு ஒரே அம்னீசியாவோடு போயிடும், சிலருக்கு மட்டும் இப்படி கலந்து போட்டு அடிக்கும் என்றும் கூறி இருந்தார்.
சுருங்கச் சொன்னால், புதுசு மட்டுமே இப்போதைக்கு அட்சராவிற்கு நினைவில் இருக்கிறது. பழசேதும் இல்லை.
ஒருக்கால் கடவுள் மனது வைத்தால் நேரிழைக்கு நினைவு திரும்பிடலாம்.
இல்லையேல், இருக்கும் புதிய ஞாபகங்களோடு வாழ்க்கையை வாழ வேண்டியதுதான் என்பதையும் தெள்ளத்தெளிவாகவே எடுத்துரைத்திருந்தார்.
''அட்சரா, என்னாச்சுமா?!''
வேதாவின் கரிசனத்தில் மௌனம் உடைத்தாள் சுந்தரியவள்.
''வேதா, முன்னாடி எல்லாம் எனக்கு மறந்து போன பழசு சீக்கிரத்துல ஞாபகத்துக்கு வந்திடணும்னு நினைப்பேன்! ஆனா, இப்போ மறந்து போனதெல்லாம் அப்படியே போயிடணும்னு சாமியே வேண்டிக்கறேன்!''
என்றுக்கூறி கார் ஓட்டுபவனை பார்க்க,
''ஏன் அட்சரா அப்படி சொல்றீங்க?! டாக்டர் சொன்னதை கேட்டு வருத்தப்படறீங்களா?! எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் அட்சரா! சரியாகிடும்! நீங்க மனசையும் உடம்பையும் நல்லா பார்த்துக்கிட்டாலே போதும்! பழையப்படி ஆகிடுவீங்க! நம்புங்க!''
என்ற வேதாவோ ஆறுதலாய் பேசினான் பேடை அவளிடத்தில்.
''இல்லே வேதா! எனக்கு நிஜமாவே என் பழைய வாழ்க்கை வேண்டாம்! அதுலே நான் எப்படி வாழ்ந்திருந்தாலும் சரி, இனி அது எனக்கு வேண்டாம்!''
என்று தீர்க்கமாய் சொன்ன அந்திகையை யோசனையோடு வேதா நோக்க,
''எனக்கு, இப்போ நான் வாழ்ற வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு வேதா! உங்கக்கூட, ஆண்டிக்கூட இருக்கறதெல்லாம் எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா?! இதுவே போதும்னு தோணுது வேதா!''
என்றவளை சில நொடிகளுக்கு மென்புன்னகை கொண்டு பார்த்த ஆணோ மெதுவாய் தலை திருப்பி சாலையில் கவனத்தை செலுத்தினான்.
ஆடவன் அவன் செவிகளிலோ,
''ச்சை! உன்கூட வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா! உன் முகறையே பார்த்தாலே புடிக்கலே! குமட்டிக்கிட்டு வருது! இதுலே உன் அம்மா வேறே, மகளா பார்க்கறேன், மண்ணாங்கட்டியா பார்க்கறேன்னு ஓவரா சீன் (scene) போட்டுக்கிட்டு! உங்கக்கூடெல்லாம் வாழறது தினம் தினம் நெருப்புலே விழுந்து சாகறதுக்கு சமம்!''
என்று என்றைக்கோ கேட்ட வசனங்கள் ஒலிக்க,
''வேதா..''
என்றவனை மென்மையாய் அழைத்து ஆளனின் கனா கலைத்தாள் காந்தாரியவள்.
''ஹ்ம்ம்..''
''நீங்க தப்பா நினைக்கலன்னா, நான் ஒன்னு கேட்கலாமா?!''
''ஒன்னு என்னே, தாராளமா ஓராயிரம் கூட கேளுங்களேன்!''
என்றவன் நக்கலடிக்க,
''உங்களுக்கு இப்படியெல்லாம் கூட பேச வருமா?!''
''பழகினாதானே ஒருத்தரே பத்தி தெரிஞ்சிக்கவே முடியும்! நீங்களும் நானும் இப்போ கொஞ்ச நாளா அதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்!''
என்றவன் வார்த்தைகளில் அவன் முகத்தையே முகிழ்த்தவளாய் நோக்கிய ஆரணங்கோ ஆமோதித்து தலையாட்டினாள்.
''என்னவோ கேட்கணும் சொன்னீங்க?!''
''உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, நான் உங்க தோள்லே தலை சாட்சிக்கவா?!''
என்றுக் கேட்ட வாசுரையோ வேதாவின் பதிலுக்காய் அவன் முகம் பார்த்து காத்திருக்க, வினாவிற்கான விடை கொடுக்கா ஆணவனோ ஸ்டேரிங்கிலிருந்த (steering) இடக்கரத்தை கீழிறக்கி அவன் தொடையினில் வைத்தான் ஏதும் பேசாது முறுவலித்து.
வாய் மலராது, அலர் முகங்காணாது, வேதா செயலால் சொன்ன பதிலை புரிந்துக் கொண்ட கோற்றொடியோ இதழோரம் நாணம் பிறக்க மெதுவாய் தலை சாய்த்தாள் ஆணவன் முழங்கையை இறுக பற்றி.
யார் நெருங்க யார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.