What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
WhatsApp Image 2024-10-11 at 2.53.00 PM.jpeg

அத்தியாயம் 16

கடந்த காலம்

அட்சராவின் படுக்கையறை


அமலா மற்றும் மாதவி விஷேசத்திற்கு வந்திருக்க, அவர்களின் முகத்தில் விழிக்க புடிக்கா நாயகியோ, அவர்கள் கிளம்பும் வரை தாய் வீட்டில் தங்கிட முடிவெடுத்தாள்.

அதை முறையே வேதாவிடமும் தெரிவித்து அவன் அம்மாவின் காதிலும் போட்டு வைத்திட சொன்னாள்.

கோபித்துக் கொண்டு வீடு திரும்பிய அங்கணையோ ஒரு குட்டி தூக்கம் போட்டு எழ, அறைக்குள்ளோ கட்டியவன் இருக்க கண்டாள்.

ஏதும் பேசாது குளியல் ஒன்றை போட்டு வந்து மஞ்சம் சரிந்தவள், மங்கிய மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் புழுவாய் நெளிந்துக் கொண்டிருந்தாள் படுத்துறங்காது.

''அட்சரா, என்னாச்சு?! ஏன், முதலிருந்து தூங்காமே புரண்டுக்கிட்டே இருக்கீங்க?!''

அக்கறையாய் அவன் கேட்க,

''ஏன், சொன்னா இப்போ கிழிச்சிடுவியா?!''

வழக்கம் போல் அவனுக்கான மரியாதையை தாரமவள் கொடுக்க,

''முதல்லே சொல்லுங்க?!''

என்றவன் குரலோ எப்போதும் போலவே மென்மையாய் வினவியது துணைவியின் குணமறிந்து.

''ஒன்னும் இல்லே போதுமா!''

என்ற நங்கையோ சிடுசிடுக்க,

''வயிறு வலிக்குதா?! சாப்பிட்டது ஏதும் ஒத்துக்கலையா?!''

திருந்தாதவனோ அரிவை அவள் அடி வயிற்றை பற்றிக்கொண்டு உருண்ட கேட்க,

''ஐயோ! அதெல்லாம் ஒன்னும் இல்லே! லேடிஸ் மேட்டர் போதுமா! பேசாமே படு! படுத்தாதே என்னே!''

சளித்துக் கொண்டவளோ எழுந்தமர்ந்து எரிச்சல் கொள்ள,

''இதுக்காகவே சில டேப்லட்ஸ், ஆயில்மெண்ட் எல்லாம் இருக்குமே. அது எதுவும் உங்கக்கிட்ட இல்லையா?!''

''எதை எப்போ யூஸ் பண்ணணும்னு எனக்கு தெரியும்! நீ மூடிக்கிட்டு படு!''

என்றவளோ தொடர்ந்து அவனை மட்டம் தட்ட, வேதாவின் தலையோ கதமும் வருத்தமும் கொண்ட உணர்வில் தொங்கியது.

அவனை நேராய் பார்த்து வார்த்தைகளை உதிர்த்த வதுகையோ,

''ஏய், மூஞ்சே காமி!''

என்று அதிகாரத்தோரணை கொள்ள, வேதாவோ அவளை ஏறெடுத்து பார்த்தான் இறுகிய வதனத்தோடு.

''என்ன உனக்கு இங்க மட்டும் புதுசா ஒரு வெள்ளை முடி?!''

''ஹ்ம்ம், கல்யாணத்துக்கு முன்னாடி இல்லே! இப்போதான்!''

என்றவனோ காண்டில் சொல்லி, பஞ்சணையில் படுக்க பார்க்க, அவனை முறைத்த பெண்டுவோ,

''அப்போ வா! கல்யாணத்துக்கு அப்பறமா முளைச்சு உன் பேரழகை கெடுக்கறே இந்த முடியே இப்பவே பிடுங்கி எடுத்திடறேன்!''

''இல்லே, இல்லே வேண்டாம்! பிடிங்கினா நிறைய வரும்!''

என்றவனோ சாய்ந்து படுக்க, அவன் முழங்கையை பற்றி உரிமையாய் இழுத்தவளோ,

''அதெல்லாம் வராது! இன்னைக்கு இதை பிடுங்காமே நான் விட மாட்டேன்!''

என்றவளோ வீறுக்கொண்டவளாய் அவனை நெருங்க,

''ஐயோ, அது ரொம்ப குட்டியா இருக்குங்கே! பிடுங்கவும் முடியாது!''

சமாளித்தான் பின்னோக்கியவன், பத்தினியோ அவன் முன் நெற்றி கேசத்தில் விரல்கள் பதிக்க முந்த,

''அப்போ கத்திரிக்கோல் வெச்சு வெட்டிடவா?!''

''அச்சோ! வேணாங்க! விடுங்க! அது பாட்டுக்கு இருக்கட்டுமே!''

''அந்த பேச்சுக்கே இடமில்லே! ஒழுங்கு மரியாதையா கோப்பரேட் பண்ணு! இல்லே, மண்டையே பொளந்திடுவேன்!''

என்றவளோ அவள் கைகளை தட்டிவிட்டு தப்பித்தவனை முன்னோக்கி போய், முட்டிக்கால்கள் இடிக்க அவன் மாரிலேயே பொத்தென விழுந்து, கையில் சிக்கிய அவ்வொற்றை வெள்ளை முடியை பிடித்து இழுக்க, வேதாவோ அதிர்ச்சியில் உறைந்து கிடந்தான்.

''வந்து தொலையேன்!''

என்று முடியை கடிந்துக் கொண்டவளோ, எதார்த்தமாய் கணவனின் முகம் பார்க்க, அவனோ பேயறைந்தவன் கணக்காய் ஏந்திழை அவளையே வெறித்திருந்தான்.

அசைவற்றவனின் பார்வையில் சிலிர்ப்பு கொண்ட சுந்தரியோ, கண்களை நர்த்தனம் ஆட விட்டாள் அவன் மீதிருந்து எழாது.

வேதாவின் மனமோ முதல் முறை அவன் பேச்சை கேளாது நெஞ்சில் கிடந்த தளிரின் யௌவனத்தில் தொலைந்து போக, ஆணவனின் மேனியோ முறுக்கேறியது கட்டுடைக்க.

தகிப்பிலான அனல் மூச்சோ இருவரையும் நிலைகுலைய வைத்தது. சுண்டினாலே ரத்தம் வரும் சிவப்பிலான முற்றிழையின் வதனமோ இளமை காய்ச்சலில் தன்னிச்சையாய் சிவப்பேறியது.

வேதாவோ இனம் புரியா மோகத்தில் கொதித்திருந்த தெரியிழையின் இதழ்களை நெருங்க, சொக்கிய விலோசனங்களையோ மெதுவாய் மூடிக்கொண்டாள் அந்திகை அவள்.

மென்மையாய் அவன் கொடுக்க, அதை ஆர்பாட்டமின்றி வாங்கிக் கொண்டவளின் விரல்களோ அதன் வீரியம் தாளாது அவன் தோள்களை அழுத்த, அம்மணியின் விரல் நகங்கள் பட்டு லேசாய் சிணுங்கியவனோ, அவளை அப்படியே கட்டியணைத்து மல்லாக்க சரித்து அதரங்களுக்கு விடை கொடுத்தான்.

பாலிகைகள் பிரிய மெதுவாய் நேத்திரங்கள் விரித்த விருந்தனையோ,

''நகம் குத்திடுச்சா?!''

என்ற கேள்வியோடு அவன் தோள்களை தொட்டுரச, ஆமாம் என்று தலையை லேசாய் ஆட்டிய நாயகனோ, முன்னேறிடலாமா இல்லை இதோடு நிறுத்திட வேண்டுமா என்றறியாது காத்திருந்தான் கோற்றொடியின் பச்சை கொடிக்காய்.

அவன் சூடேறிய உள்ளங்கை கொண்ட ஆரணங்கின் பின்னந்தலையோ, வேதாவின் நிலையை மங்கை அவளுக்கு எடுத்துரைக்க, மெதுவாய் அவனை விலகி ஒருக்களித்து படுத்தவளோ,

''பீரியட்ஸ்!''

என்றிட,

''சோரி!''

என்ற வேதாவோ மல்லாக்க சரிந்தான் மெத்தையில், முன்னாடியே அவள் சொல்லியிருந்ததை மறந்திருந்தவனாய்.

நிமிடங்கள் கடக்க, இருவரின் கண்களையும் ஒரு பொட்டு தூக்கம் எட்டி பார்த்திடவில்லை.

வேதாவின் பக்கம் திரும்பி படுத்த பெதும்பையோ,

''நான் ஒன்னு கேட்கவா?!''

''ஹ்ம்ம்!''

''அன்னைக்கு என்னே தேடி ஆபிஸ்க்கு வந்திங்களே..''

என்றவள் இழுக்க, அவள் மரியாதையில் நெஞ்சு அடைத்தது புருஷனுக்கு.

டப்பென அவள் பக்கம் திரும்பியவனோ, அவன் முகம் பாராது மெத்தை விரிப்பில் விரல்களால் கோலம் போட்ட பேடையை வெறிக்க,

''நிஜமாவே என் மேலே இருக்கற அக்கறையிலதானா?!''

என்றுக் கேட்டவளாய் வேதாவின் முகத்தை ஏறெடுக்க,

''எப்போ உங்களே எனக்கு பேசி முடிச்சாங்களே அப்பவே நீங்க என் பொறுப்பு! அதுல அலட்சியத்துக்கு நான் எப்போதுமே இடங்கொடுக்க மாட்டேன்!''

என்றவன் பதிலில், மென் முறுவல் கொண்ட பொற்றொடியோ,

''உங்களுக்கு தெரியுமா, எனக்கு உங்க பேர் ரொம்ப புடிக்கும்! அடிக்கடி சொல்லி பார்த்துப்பேன்!''

என்று எங்கோ பார்த்தப்படி ஒரு விதமான நாணம் கொள்ள,

''அப்போ, என்னே?!''

என்றவன் கேள்வியில் விருட்டென அவன் முகம் பார்த்த அரிவையோ,

''கொஞ்சம் விட்டா போதும் தலையிலே ஏறி மிளகாய் அரைச்சிடுவே! ஒழுங்கா படு!''

என்றவளாய் மிடுக்கான குறும்பு சிரிப்போடு திரும்பி படுத்துக்கொள்ள, அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொண்ட வேதாவோ, அதிர்ந்து தலை திருப்பி அவனை கண்டவளிடத்தில்,

''வயிறு இன்னும் வலிக்குதா?! ஒத்தடம் கொடுக்கவா?!''

என்று கேட்க, அவனை சில நொடிகள் இமைக்காது பார்த்த அட்சராவோ, இடை ஊறியவனின் முழங்கை கொண்ட கனலில் விவரிக்க முடியா மயக்கம் கொள்ள,

''இப்போ நடந்தது, நடக்க போறது எல்லாத்தையும் நீங்க காலையிலே மறந்திடணும்!''

என்றவளாய் ரகசிய குரலில் கிறங்க,

''முயற்சி பண்றேன்!''

என்ற வேதாவோ இதழோரம் நமட்டு குறுநகை கொள்ள,

''ஏதாவது பண்ணிட்டு போ!''

என்ற கோமகளோ சொந்தமானவனின் முகத்தை கைகளால் பற்றி அவன் இதழ்களை பட்டா போட்டிட ஆரம்பித்தாள் அம்பகங்களை இறுக மூடியவளாய்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top